கிரேக்கக்கலை

வரலாற்றுப் பின்னணி

நவீன மேற்கத்தேய பண்பாட்டுக்கு அடித்தளமிட்ட, கிரேக்கர்கள் விஞ்ஞானம், கலை ஆகிய இரண்டு துறைகளிலும் பாரிய பங்களிப்பைச் செய்துள்ளனர். தேடல், சிந்தனை. விளையாட்டு, கைத்திறன் கலைகள் போன்றவற்றின் முதன்மையான பின்னணி கிரேக்கர்களினாலேயே அமைக்கப்பட்டது. மனித உடலின் இயற்கை அழகு, கட்டடக்கலையின் ஒழுங்கு, மட்பாண்டங்களின் அழகு போன்றவற்றின் ஊடாக கிரேக்கர்கள், உலகுக்கு பல அரிய எண்ணக்கருக்களை உருவாக்கியளித்துள்ளனர். இயக்கத்தன்மை, இலயத்துக்கு அமைவான தன்மை, அளவிடைக்கு அமைவான தன்மை போன்ற எல்லாச் சிறப்புப் பண்புகளையும் அவர்களது கலைப்படைப்புக்களில் தாராளமாகக் காண முடிகின்றது. நுண்மதி, அறிவுப்புலமை, அவதானிப்பு போன்ற பண்புகளை உள்ளடக்கிய மேலைத்தேயத் தத்துவத்தையும் அறிவுஞானத்தையும் உலகுக்களித்தவர்கள் கிரேக்க நாகரிகத்தின் மூலமே தோன்றினர். சோக்கிரட்டிஸ், பிளேட்டோ, அரிஸ்டோட்டல் ஆகிய தத்துவஞானியரும் தெலெசு. ஆக்கிமிடிக, தொலமி, பைத்தகரசு போன்ற ஞானியரும் அவர்களுள் முக்கியமான சிலராவர்.

ஐரோப்பாவின் தென்கிழக்கில் அமைந்துள்ள கிரேக்கம், ஈஜியன் கடலினால் சிற்றாசியாவில் (அண்மிய கீழைத்தேயத்தில்) இருந்து. வேறாகி உள்ளது. எகிப்திய நாகரிகம் காணப்பட்ட காலப்பகுதியில் கட்டியெழுப்பப்பட்ட ஈஜியன் (Acrgian) தீவுகளைச் சார்ந்து காணப்பட்ட நாகரிகங்களின் சேர்மானத்தினால் கிரேக்க நாகரிகம் தோன்றியுள்ளது. அதற்கமைய கிரேக்க நாகரிகமானது. கிரேக்கத் தீபகற்பத்திலிருந்து ஈஜியன் தீவுகளின் வழியே சிற்றாசியா வரை பரம்பியதொன்றாகும். மத்தியதரைக் கடலினாலும் ஈஜியன் கடலினாலும் சூழப்பட்ட கிரீட்டுத் தீவுகள், சைக்லசிக் தீவுக் கூட்டம், கிரேக்க தீபகற்பம் ஆகியன கிரேக்கப் பண்பாட்டு நிலத்தோற்றங்களாகும். கிரேக்கர்கள், தமது குடியிருப்புக்களை அமைத்துக்கொண்ட இப்பிரதேசங்கள், மெசப்பொத்தேமிய மற்றும் எகிப்திய நதிகள் சார்ந்த நாகரிகங்களைப் போன்று செழிப்பானதாகக் காணப்படவில்லை. செழிப்பற்ற இந்நிலப்பிரசேத்தில் சுபீட்சமான நாகரிகமொன்றினைக் கட்டியெழுப்புவதற்கு கிரேக்கர்கள் நீண்டகாலம் உழைக்க நேரிட்டது. மேலும் கிரேக்கர்களின், மூதாதையர்களான ஈஜியர்களோடு. கிரேக்கத்தை முற்றுகையிட்ட பொரிக்கு (Doric), அயோனிக்கு (lonic) போன்ற கோத்திரத்தைச் சேர்ந்தோர் காரணமாக, கிரேக்கம் ஒரு கலப்பினமாக உருவாகிய நாகரிகத்துக்கு உரித்துடையதாகும்.

கி.மு. 800 அளவில் வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த கிரேக்க மக்கட் குழுக்கள் ஆங்காங்கே நகரங்களை மையமாகக் கொண்டு சிறிய அரசுகள் பலவற்றைத் தாபித்திருந்தனர். சகல திசைகளிலும் பரம்பிச் சென்ற கரடுமுரடான மலைத்தொடர்கள் பல காணப்பட்ட ஒரு நிலப்பகுதியாக இருந்தமையால், கிரேக்கமானது புவியியல் ரீதியிலும் பிரிந்து காணப்பட்டது, சகல கோத்திரங்களையும் ஒரே நாட்டவராக ஒன்று திரட்டுவதில் இந்தப்பூகோளக் காரணி தடையாக அமைந்துள்ளது. அத்தோடு, அது கிரேக்கத்தில் சிறுசிறு நகர அரசுகள் தோன்றுவதற்கும் காரணமாகியது. இதற்கமையப் புவியியல் ரீதியிலும் அரசியல் ரீதியிலும் தோன்றிய நகர அரசுகள் காணப்பட்டமை கிரேக்கத்தின் முக்கிய இயல்பாகும். கிரேக்க நாகரிகத்தின் சிறிய நகர அரசுகள் ஒன்று சேர்வதால் ஆரம்பக் காலகட்டத்தில் கிரேக்கத் தீபகற்பம் உருவாகியது. கிரேக்க நாகரிகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய சிறிய நகர அரசுகளுள் எதன்ஸ் (Athens), ஸ்பார்டா (Sparta), கொரிந்தியன் (Cariuntiyain), தீபசு (Thebeus) போன்றவை முதன்மையானவை.

கிரேக்க கலைப்படைப்புக்களின் காலங்கள்

1. கேத்திரகணிதப் பாணி (Geornetric Style) கி.மு. 900-700
2. கீழைத்தேயப் பாணி (Orientalizing Style) கி.மு. 700-600
3. தொன்மைக் பாணி (Archaic Style) கி.மு. 600-480
4. தொல்சீர்க் பாணி (Ceassical Style) கி.மு. 480-323
5. கெலனிஎரிக் பாணி (Hellenistic Style) கி.மு. 323-30

ஆரம்பகாலக் கிரேக்கக் கலைப்படைப்புக்களுக்காக எகிப்திய அல்லது மெசப்பத்தேமிய செல்வாக்கு கிடைத்த போதிலும், பிற்காலத்தில் சுயாதீனக் கலைநுட்ப முறைகளின்படி தமக்கே உரித்தான பண்புகளைக் கொண்ட கலைப்படைப்பாக்கங்களை உருவாக்கினர். கிரேக்க கட்டிடக்கலையில் ஆரம்ப காலத்தில் எகிப்திய தேவாலயத் தூண்களின் மாதிரியமைப்பு முன்மாதிரியாகக் கொள்ளப்பட்டுள்ளது. தேவாலயங்களில் செதுக்கல் வேலைப்பாடுகளுக்காக அசிரியக் கலையின் இயல்புகள் முன்மாதிரியாகக் கொள்ளப்பட்டுள்ளன.

கேத்திரகணிதக் காலம் மற்றும் தொன்மைக்காலம் எனக் குறிப்பிடப்படும் காலகட்டத்தைச் சேர்ந்த கிரேக்கக் கலைப்படைப்பாக்கங்களில் எகிப்திய கலைப் படைபாக்கங்களின் இயல்புகளைக் காண முடிகின்றது. குறிப்பாக, கி.மு. 700-460 இற்கு இடைப்பட்ட காலக் கலைப்படைப்புக்களில், கிரேக்க சிற்பக்கலைப்படைப்புக்களின் இயல்புகளைக் காண முடிகின்றது.

கி.மு. ஐந்தாம் மற்றும் நான்காம் நூற்றாண்டுகளில் கிரேக்கத்தில் அறிவாற்றல் மற்றும் கலைப்படைப்பாற்றல் உச்சகட்டத்தை அடைந்தது. குறிப்பாக கி.மு. 480 இன் பின்னர் கிரேக்க கலையானது புதுத்தோற்றம் பெற்றது. அதற்கமைய கி.மு. 480-323 இற்கு இடைப்பட்ட காலமானது கிரேக்கத்தின் தொல்சீர் காலம் எனப்படுகின்றது. பேர் சியம் யுத்தம் தொடக்கம் மகா அலெக்சாந்தரின் இறப்பு வரையிலான காலமாகிய கி.மு. நான்காம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியே தொல்சீர் காலம் எனப்படுகின்றது. இக்காலத்தில் சிற்பக்கலைஞர்களும் கட்டடக் கலைஞர்களும் ஒரேயடியாகத் தமது கலையின் மூலம் கட்புலச் சேர்மானம், கதைப் பிரமாணம் ஆகியவற்றை முன்வைத்தனர். மேலும் மனித உடலை முன்வைக்கும்போது இயற்கைவாத இயல்புகளை உறுதிப் இக்காலப்பகுதிகளில் உருவாக்கப்பட்ட மட்பாண்டங்கள், கட்டடக்கலைப் படைப்புக்கள், சிற்பங்கள் போன்றவற்றில் அத்தொல்சீர் பண்புகளைக் காண முடிகின்றது.

கி.மு. 323 இல் மசிடோனியாவில் இரண்டாம் பிலிப்பு மன்னனின் மகனாகிய மன்னன் மகா அலெக்ஸ்சாந்தரினது நகர அரசு எனும் சட்டகத்திலிருந்து வெளியே வந்து, உலகை நோக்கும் அணுகுமுறையின் விளைவாக கலைப்படைப்புக்களிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டன. அது தொடக்கம் கிரேக்க உரோமர்களின் கட்டுப்பாட்டுக்குள் வரும் வரையிலான காலப்பகுதி கிரேக்கப் பண்பாட்டுக் காலம் எனப்படுகின்றது.

error: Content is protected !!