கிரேக்கக் கட்டடக்கலை

கிரேக்கக் கட்டடக் கலையானது மிகச் சிறந்த கட்டடக்கலை நுட்பங்களின் வழியே வளர்ச்சியடைந்துள்ளது. எகிப்தியரின் கட்டடக்கலைப் படைப்பாக்கங்களில் தெள்ளத்தெளிவாகக் காணப்படும் இயல்புகளாகிய தூண் மற்றும் தீராந்தி முறை, கிரேக்கர்களாலும் அதே வடிவில் பின்பற்றப்பட்டுள்ளவையும், அளவில் பெரியவையும் ஆகும். ஆரம்பகால கட்டடப் படைப்புக்கள் மரத்தினால் ஆக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. அவை ஒரு தனி அறையை அல்லது இரண்டு அறைகளைக் கொண்டிருந்தவையெனக் கருதப்படுகின்றது. கட்டடங்கள் ஆரம்பத்தில் மரத்தினால் ஆக்கப்பட்டு, பின்னர் படிப்படியாக கற்களினால் ஆக்கப்பட்டுள்ளன. அக்கட்டடங்கள், அடிப்பகுதி. தூண்களில் நிறுத்தப்பட்ட சாய்வான கூரை ஆகிய அம்சங்களைக் கொண்டமைந்தன. குறிப்பாக ஆரம்ப காலத்தில் இக்கட்டடங்கள் மிக எளிமையானவையாக அமைந்தது. அவை பெரியவையாக அமைக்கப்படவில்லை. கிரேக்க ஆலயங்களின் மாதிரியமைப்பானது, சிலைகள் தாபிக்கப்பட்டுள்ள கர்ப்பக்கிரகம், முன்னால் அமைந்துள்ள மண்டபம் ஆகிய இரண்டு பகுதிகளைக் கொண்டமைந்துள்ளது. பின்னர் முன்புறமாகவுள்ள மண்டபத்தோடு பின்புறமாக மற்றுமொரு மேலதிக மண்ட பமும் சேர்க்கப்பட்டுள்ளது.

கிரேக்க கட்டடக்கலையானது கலைநுட்ப ரீதியிலும் தொழினுட்ப ரீதியிலும் விருத்தியமைடந்த தோடு, அளவில் பெரிய தேவாலயங்கள் உருவாக்கப்பட்டன. இத்தேவாலயங்களை ஆக்குவதற்காக ஏதன்ஸ் நகருக்கு அண்மையில் அமைந்துள்ள ஹிமற்றஸ் மலையிலிருந்து (MountHin:ls ) நீலஞ்சார்ந்த வெண்ணிறமான ஒரு வகைக் கல்லும் பனற்றலிக்கோஸ் மலையிலிருந்து (Mouli IPeniltelliers) மினுமினுப்பான ஒரு வகைக் கல்லும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இக்கற்களின் சிறப்பியல்புகள் காரணமாக அவற்றால் ஆக்கப்பட்ட கட்டடங்கள் ஒருவித ஒளிபொருந்திய தன்மையைக் கொண்டுள்ளன. கட்டடங்களை அழகுபடுத்துவதற்காக சிலபோது யானைத்தந்தம், வெண்கலம் போன்றவற்றையும் பயன்படுத்ததியுள்ளனர்.

பாத்தினொன் தேவாலயம் (Temple of Parthelion)

கிரேக்க கட்டடங்களுள், தொல்சீர் காலத்தில் உருவாக்கப்ட்ட தனிச்சிறப்பான டோரிக் கட்டடமாகக் கருதப்படுவது பாத்தினன் தேவாலயமாகும். அத்தினா தேவதைக்கெனக் கட்டப்பட்டுள்ள இத்தேவாலயம் அக்கோபொலிஸ் பிரதேசத்தில் அழகிய மலைக்குன்றொன்றின் மீது அமைந்துள்ளது. இது பண்டையப் பெருமையும் அழகும் ஒருங்கமைந்த ஒரு ஆக்கமாகும். இது இக்ரினஸ். கலிக்கிரட்டிஎப் ஆகிய இரண்டு கட்டடக்கலைஞர்களால் கி.மு. 467 – கி.மு 432 இற்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டுள்ளது. அக்காலத்தில் எதன்ஸின் ஆட்சியாளராக இருந்த பரிக்லிஸ் இதற்கு அனுரசணையாக இருந்துள்ளார்.

இத்தேவாலயம் இரண்டு அறைகளைக் கொண்டது. விக்கிரகங்கள் வைக்கப்பட்டுள்ள கர்ப்பக்கிரகம். ஆலயத்திற்கு உரித்தான சொத்துக்களை வைப்பதற்கான அறை ஆகியவே அவையாகும். பரிய அறையான கர்ப்பக்கிரகத்தினுள், தங்கத்தினாலும் யானைத்தந்தங்களாலும் அலங்கரிக்கப்பட்ட அத்தீனா தேவதையின் உருவச்சிலை வைக்கப்பட்டுள்ளது. இத்தேவாலயத்தை அமைப்பதற்காக முற்றுமுழுதாக சலவைக்கல் பயன்படுத்தப்பட்டிருப்பதும் ஒரு சிறப்பாகும். இக்கட்டடத்தின் மொத்த நீளம் ஏறத்தாழ 228 அடியும் அகலம் 101 அடியுமாகும். உயரம் 45 அடி ஆகும். அதற்கமைய இது எதன்ஸ் நகரில் அமைக்கப்பட்ட மிகப்பெரிய கட்டமாகக் கருதப்படுகின்றது. மேலும் இக்கட்டிடம் கிரேக்கக் கட்டடக்கலை மரபின் தலைசிறந்த ஒரு சின்னமாகவும் அமைந்துள்ளது. பிற்காலத்தில் இடம்பெற்ற ஆக்கிரமிப்புக்கள் காரணமாக இக்கட்டிடம் பெருமளவுக்குச் சிதைவடைந்துள்ளது.

கிரக்கக் கட்டடத் தூண்கள்

கிரக்கக் கட்டடங்களில் மூன்று வகையான தூண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

  • டொரிக்கு (Daric)
  • அயோனிக்கு (lonic)
  • கொரிந்தியன் (Corinthian)

ஆகிய தூண் வகைகளே அலையாகும்.
இத்தூண் வகைகள் உலகில் வெவ்வேறு கட்டடக்கலை அங்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுவதைக் காணமுடிகின்றது.

டொரிக்கு (Doric)

கி.மு. 600 கால முதலே பயன்பாட்டுக்கு வந்துள்ள டொரிக்குத் தூண்கள் கிரேக்கக் கட்டடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள தூண் வகைகளுள் மிகப் பழைமையானதாகும். இது டொரியர்களின் ஓர் ஆக்கமாக ஆரம்பித்து இத்தாலி உட்பட ஏனைய கிரேக்கக் குடியற்றங்களுக்கும் பரம்பிச் சென்றுள்ளது. பண்டைய டொரிக் தூண்களைக் கொண்ட கட்டடங்கள் அக்கிரொபாலிஸ் பிரதேசத்திலேயே அமைந்துள்ளன. அம்மரபு அப்பிரதேசத்தில் பிரபல்யமடைந்து. பின்னர் ஏஜியானா, ஒலிம்பியா ஆகிய பிரதேசங்களிலும் பரம்பியுள்ளது. இப்பிரதேசங்களில் டொரிக் தூண்களைக் கொண்ட கட்டடங்கள் கணிசமான அளவு காணப்படுகின்றன. ஆரம்ப காலத் தூண்கள் சற்றுக் கரடுமுரடான தன்மையைக் கொண்டிருந்தபோதிலும், பிற்காலத்தில் அமைக்கப்பட்ட தூண்கள் மிருதுவான தன்மையைக் கொண்டுள்ளன. குறிப்பாக, பிரமாண்டமான தேவாலயங்களை அமைப்பதற்காக இவற்றைப் பயன்படுத்துவதில் கிரேக்கர்கள் அதிக முனைப்புக் காட்டியுள்ளனர். டொரிக்கு வகைத் தூண்களது பயன்பாட்டின் உச்சநிலையாக பாத்தினன் தேவாலயக் கட்டடத்தைக் குறிப்பிடலாம்.

அயோனிக்குத் தூண்கள் (Ionic)

அயோனிக்குத் தூண்கள், அண்ணளவாக கி.மு. 450 இன் பின்னரே பரவலாகப் பயன்பாட்டுக்கு வந்தன. சிற்றாசியாவின் மேற்குக் கரையோரத்தில் அமைந்துள்ள அயோனிக்குக் குடியிருப்புக்களில் ஆரம்பித்து அதன் பின்னர் கிரேக்க குடியிருப்புக்கள் வரையில் பரம்பியுள்ளன. அக்குரோபொலிஸ் உட்பட அத்தீனியப் பிரதேசங்களிலேயே அயோனிக்கு மரபு பெரிதும் பிரபல்யமடைந்திருந்தது. அயோனிக்குத் தூண்களின் முகப்பின் இரு புறங்களும் வட்டவடிவத்தில் அமைந்துள்ளன. டோரிக்குத் தூண்களுக்குச் சார்பாக அயோனிக்குத் தூண்கள், மெல்லியவையாக உள்ளன. எனவே அத்தூண்களைக் கொண்ட தேவாலயங்கள், கனதியற்ற இலேசான தன்மையைக் கொண்டுள்ளன. இல்வகைத் தூண்களைக் கொண்ட மிகப் பழைமையான ஒரு கட்டடமாக இரேக்கியூம் தேவாலயத்தைக் குறிப்பிடலாம். அயோனிக்குத் தூண்கள் அதன் அடிப்பாகத்தில் காணப்படும் அலங்கரிப்புக்கள் காரணமாக டொரிக்குத் தூண்களிலிருந்து வேறுபடுகின்றன. அயோனிக்குத் தூணின் தலைப்பகுதி சுருள் வடிவத்தில் தட்டையான மேற்பரப்புடன் இணையுமாறு முடிப்புச் செய்யப்பட்டுள்ளது.

கொரிந்தியன் (Corinthian)

அண்ணளவாக கி.மு. 350 இன் பின்னரே இவ்வகைத் தூண்கள் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. கொரிந்தி எனும் பிரதேசத்திலிருந்தே இந்த மரபு பரம்பியுள்ளது. அக்காலப் பகுதியாகும்போது கிரேக்கத்தில் தொல்சீர் (Classical) மாற்றமடைந்ததோடு, ஏதன்ஸ் இனது செழிப்பும் குன்றிப் போயிருந்தது. ஹெலனித்திக்குக் காலப்பகுதியில் பரம்பிய இத்தூண் வகை டோரிக்கு மற்றும் அயோனிக்குத் தூண்கள் பரவிய அளவுக்குப் பெருமளவில் பரம்பாமைக்கு அது ஒரு பிரதான காரணமாக அமைந்தது. அக்குரோபொலிஸ், ஒலிம்பியன் சியுஸ் தேவாலயத்தில், அயோனிக்கு மரபைச் சேர்ந்த தூண்களைக் காணலாம். மேலும் அக்காலப்பகுதியில் ஓர் கட்டடத்தின் வெவ்வேறு பகுதிகளுக்காக இம்மூன்று வகைத் தூண்களும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. பெரும்பாலும் அவ்வாறான கட்டடங்களில் கொரிந்தியன் மரபைச் சேர்ந்த தூண்களைக் காணலாம். கட்டடத்தின் சுமையைத் தாங்குவதற்காக டோரிக்கு மற்றும் அயோனிக்குத் தூண்கள் பயன்படுத்தப்பட்டபோதிலும், கட்டடங்களை அழகுபடுத்துவதற்கான அலங்கரிப்பு உத்தியாகவே கொரிந்தியன் தூண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. கொரிந்தியன் தூண்கள் உச்சிப்பகுதியானது ஏனைய இரண்டு வகைத் தூண்களின் உச்சிப்பகுதியைவிட கூடுதலான அலங்கரிப்புக்களைக் கொண்டது. குறிப்பாக இத்தூண்கள் கிரேக்கர்களாலன்றி. உரோமர்களினாலே பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளமையையும் அறிய முடிகின்றது. கொரிந்தியன் தூண்கள் மற்றைய இரண்டு வகைத் தூண்களைவிடவும் பெரிதும் வேறுபட்டவையாகும். மேலும் இவ்வகைத் தூண்கள் கிரேக்கத்தில் அதிகம் பிரபல்யம் பெற்றதாகத் தெரியவில்லை. எனினும் இவ்வகைத் தூண்கள் உரோமரது கட்டடக்கலையின் பிரதானமமான ஓர் அங்கமாகக் காணப்படுகின்றது.

ஒலிம்பியா தேவாலயம் (Templeof Olimpir) |

பாத்தினொன் தேவாலயம் (Temple of Parthenon)

error: Content is protected !!