மனப்பதிவுவாதம் (Impressionisin)
மனப்பதிவுவாதக கலை இயக்கமானது பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதிக்குப் பிந்திய காலத்தில் (1860 ஆம் தசாப்தத்தில்) பிரான்சு நாட்டின் பரிஸ் நகரை முதன்மையாகக்கொண்டு தோன்றிய ஓர் ஓவிய இயக்கமாகும். ஐரோப்பியக் கலைத்துறையில் பாரிய அளவில் செல்வாக்குச் செலுத்திய ஒரு கலை இயக்கமாகவும் இதனைக் குறிப்பிடலாம். இப்போக்கானது, ஒரு புறத்தே நவ தொல்சீர்வாதம் (Neocltussicism), அதன் தொடர்ச்சியாகத் தோன்றிய மனோரதியவாதம் (Romanticism) ஆகிய போக்குகளைப் புறக்கணித்து, பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சமூக யதார்த்தவாதத்தின் (Realism)நிழலாகக் கருதப்படும் பிரான்சியப் புரட்சியுடன் வளர்ந்த கலைப் பாரம்பரியங்களின் தொடர்ச்சியாகும்.
பதினெட்டாம் நூற்றாண்டிலும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியிலும் மனப்பதிவு வாதம் தோன்றுவதற்கு ஐரோப்பாவில் குறிப்பாக பிரான்சின் சமூக மற்றும் சிந்தனைச் சூழல் பங்களிப்புச் செய்தது, கைத்தொழில் முதலாளித்துவத்தின் மூலம் கட்டியெழுப்பப்பட்ட பிரான்சின் மத்தியதர வகுப்பினரின் பண்பாட்டு விழுமியத் தொகுதிகள் மூலம், இக்கலை இயக்கம் தோன்றுவதற்கான அடித்தளம் உருவாக்கப்பட்டது. மனிதனது உடலின் ஆற்றல் எனும் திறமையை விட தருக்கத் திறன்களைப் பெரிதாக மதித்து உருவாகிய புதிய தொழில் வாண்மையாளர் வகுப்பொன்று இக்காலப்பகுதியில் தோன்றியமையே இதன் பின்னணியாக அமைந்த காத்திரமான சமூகக் காரணியாகும். இயுஜின் பரன் ஹவுஸ்மன் (Eugeric Buroin ilouisInTanm) இனது நகரத்திட்டமிடலின் மீது கட்டியெழுப்பப்பட்ட புதிய பரிஸ் நகர நடுத்தர வகுப்பினரின் ஓய்வான, களிப்பு நேய சமூகச் சூழலும் மனப்பதிவு ஓவியக்கலை இயக்கம் கட்டியெழுப்பப்படுவதற்குச் செயலூக்கமான பங்களிப்புச் செய்தது.
புதிய சமூகச் சூழலில் தோன்றிய புதிய கையாண்டு பார்த்தல்களைக் கொண்ட, பிரான்சு ஓவியர்களின் படைப்புக்கள் 1863 இல் ‘பரிஸ் அரச சலூன்’ இனால் நடத்தப்பட்ட ஆண்டுக் கண்காட்சியின்போது நிராகரிக்கப்பட்டது. அது, மனப்பதிவு கலைப்போக்கு உருவாவதற்காக அண்மித்த காரணமாக அமைந்தது. அதற்கமைய அவ்வாண்டின் கண்காட்சிக்காக முன்வைக்கப்பட்ட ஓவியங்களுள் பாதிக்கும் அதிகமானவை நிராகரிக்கப்டப்டமையினால் தோன்றிய எதிர்ப்புக்களைத் தவிர்ப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட ஓர் உத்தியாக அவர்களுக்கு தமது ஆக்கங்களைக் காட்சிப்படுத்து வதற்காகத் தனியான ஒரு கண்காட்சியை நடத்தும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இது நிராகரிக்கப்பட்டோரின் சலூன் (The Salon des refuser} எனப் பெயரிடப்பட்டது. 1863 மே மாதம் 15 ஆந் திகதி திறந்து வைக்கப்பட்ட இக்கண்காட்சியானது புதிய கருத்துக்களுக்குரிய ஒரு மைய நிலையமாக அமைந்தது. மேலும். இந்தப் புதிய கருத்துக்களைக் கொண்ட முற்போக்குக் கலைஞர்கள் கூட்டாக நடத்திய ஒரு கண்காட்சியில் முன்வைக்கப்பட்ட படைப்பாக்கங்கள் காரணமாக, அம்முற்போக்குக் கலை இயக்கத்துக்கு, மனப்பதிவியல்வாதம் எனும் பெயர் கிடைத்தது. 1874 இல் நடத்தப்பட்ட கண்காட்சியில் அடங்கியிருந்த க்ளோட் மொனே இனது சூரியோதயத்தின் மனப்பதிவு (Impression of Sunrise) எனும் ஓவியம் தொடர்பாக ஒரு விமர்சகர் வெளியிட்ட கருத்துக்களே அதற்குக் காரணமாகியது.
மனப்பதிவுவாத பிரபல்யமான கலைஞைர்கள்
அக்கடமிக் கலைஞர்கள், முறைமையாகத் திட்டமிட்ட குறிக்கோள்களைக் கொண்டு ஒன்றுதிரண்ட ஓவியக் கலைஞர்களடங்கிய ஒரு குழுவினர் அல்லர். அதாவது தெளிவாக வரையறுத்துக்கூறக்கூடிய குறிக்கோள்களை அவர்கள் கொண்டிருக்கவில்லை. தமது படைப்பாக்கங்களைக் காட்சிப்படுத்தும் நோக்கத்துடன் ஒன்று சேர்ந்த சுயாதீனமான ஓர் அமைப்பாக அவர்களைக் குறிப்பிடலாம். இவ்வாறான செயலூக்கமுள்ள மனப்பதிவுவாத ஓவியக் கலைஞர்களுள், எட்கா டெகா, எடுவாட் மனே, கமில் பிசாரோ, அல்பிரட் சிஸ்லே, ஒகஸ்தே ரெனுவா போன்ற ஆண் ஓவியக் கலைஞர்களும். மேரி கசாற், பர்தே மொரிசோ போன்ற பெண் ஓவியக் கலைஞர்களும் அடங்கியிருந்தனர்.
மனப்பதிவுவாத ஒவியப்படைப்புக்களின் அடிப்படையான தன்மைகள்
அக்கடமிக் வழக்காறுகளுக்கும் வரலாற்று விடயப் பொருள்களுக்கும் எதிராகச் செயற்படுவதே ஆண், பெண் மனப்பதிவுவாத ஓவியக் கலைஞர்களின் குறிக்கோளாக அமைந்தது. அதாவது இயற்கைத் { Nature) தன்மையைச் சிறப்பானவாறு போலச் செய்யும் மரபுரீதியான வழக்காறுகளுக்கு எதிராகச் செயற்படுவதலாகும். இக்கலைஞர்களது படைப்பாக்கங்களின் எதிர்ப்பார்ப்புக்களைப் பிரதானமாக மூன்று பிரிவுகளாக வகுக்கலாம். 1. அதிகாலை darumn), நண்பகல் (daylight}, அந்திமாலை (Iwilight) ஆகிய நாளின் மூன்று
சந்தர்ப்பங்களில் இயற்கை ஒளியின் வேறுபாட்டை ஓவியமாக வரைதல். 2. நடுத்தர வகுப்பினர் மற்றும் அவ்வகுப்பினரின் நகர வாழ்க்கை தொடர்பாகத் தொலைவிலிருந்து
செய்யும் அவதானிப்பு, 3. வீட்டு மற்றும் குடும்ப வாழ்க்கையைக் கற்றாய்தல்.
இவற்றுள் முதலாம் வகையைச் சேர்ந்த ஓவியங்களை. மொனே, ரெனோவா, கமில் பிசாரோ ஆகியோரின் படைப்புக்களின் ஊடாகக் காணலாம். இரண்டாவது வகை ஆக்கங்கள் எடுவாட் மனே இனது ஓவியங்களுக்கு விடயப் பொருள்களாக அமைந்துள்ளன. மூன்றாவது வகையான ஓவியங்களுள் பெரும்பலானவை மனப்பதிவுவாத பெண் ஓவியக் கலைஞர்களால் வரையப்பட்டவையாவதோடு எட்கா டெகா எனும் ஆண் கலைஞரும் சொற்ப அளவில் வரைந்துள்ளார்.
இதற்கமைய, நிலத்தோற்றங்களும் நாளாந்த வாழ்க்கையுமே மனப்பதிவுவாத ஓவியக் கலைஞர்களின் பிரதான கருப்பொருள்களாக அமைந்துள்ளன. எனவே மனப்பதிவாத ஓவியக் கலைஞர்களை யதார்த்தவாத {Realisin) ஓவியக் கலைஞர்களின் ஒரு நீட்டிப்பாகவும் குறிப்பிடலாம். மேலும் மனப்பதிவாத ஓவியக் கலைஞர்கள், மறுமலர்ச்சிக் காலத்திலிருந்து கிடைத்த சமய மற்றும் வரலாற்றுச் செய்திகளை விவரித்து வந்த பிரதான பிரவாகத்திலிருந்து விடுபட்டனர். அதற்கமைய இவர்கள் ஒரு வித முற்போக்குக் கலைக்குழுவினராக அமைந்தனர்.
மனப்பதிவுவாத கலைத்துவ அணுகுமுறைகள்
கலைத்துவப் பிரயோகங்கள் ஏறத்தாழ முற்றுமுழுதாக, மறுமலர்ச்சிக்கால உத்திகளிலிருந்தும் மற்றும் அக்கடமிக் யதார்த்தவாதக் கலைத்துவ உத்திகளிலிருந்தும் விலகிச் சென்றன. மனப்பதிவுவாதக் கலையின் சிறப்பியல்புகளைப் பின்வருமாறு காட்டலாம்.
அக்கடமிக் யதார்த்தவாதக் (Acadimic Realism) கோட்பாடுகளுள் ஒன்றாகிய வர்ணங்களின் நடுச்சாயலைக் கட்டியெழுப்புவதன் மூலம் பொருள்களின் முப்பரிமாண இயல்பை வெளிப்படுத்தும் தொழினுட்ப முறையை மனப்பதிவுவாதிகள் கைவிட்டனர். அலங்கார வர்ணக் கோலங்களிலிருந்து விடுபட்டு, பிரகாசமான தூய வர்ணங்களைப் பயன்படுத்துவதில் முனைப்புக் காட்டினர். இதுவரை காலமும் காணப்பட்ட ஓவிய கூடங்களில் இருந்தவாறு ஓவியம் வரைதல் மற்றும் வர்ணந்தீட்டுதலில் இருந்து விடுபட்ட மனப்பதிவுவாத கலைஞர்கள், இயற்கை ஒளியினது தெறிப்பின் முன்னிலையில் இயற்கையாகத் தோன்றும் ஒளி நிலைமைகளை, வர்ணங்களின் பயன்பாடு மூலம் விளங்கிக்கொள்ள முயற்சித்தனர். கலப்பற்ற, தூய வர்ணங்களை, தூரிகையை சுயாதீனமாகக் கையாண்டு கன்வசுமீது பூசுவதும் இவர்களது பிரதானமான ஓர் உத்தியாகும். இயற்கை ஒளியின் திடீர் மாற்றங்களை வர்ணந்தீட்டுவதில் பெரு விருப்புக்காட்டுவதும் மனப்பதிவுவாத கலைஞர்களின் காத்திரமான ஒரு கலைத்துவ அணுகுமுறையாகும். மறுமலர்ச்சிக் காலத்தில் இருந்து வந்தடைந்த நியமமான, வரைதல் உத்திகளிலிருந்து விடுபட்டு. ஒரே ஓவியத்தில் பொருள்களை ஒழுங்கின்றி வரைதல் அல்லது முறைமையற்ற வகையில் ஓவியத்தை வரைதலிலும் மனப்பதிவுவாதக் கலைஞர்கள் முனைப்புக்காட்டினர்.
இவ்வாறான கலைத்துவ அணுகுமுறைகளுள் நவீனத்துவ ஓவியக் கலையைக் கட்டியெழுப்புவதில் காத்திரமான பங்களிப்பைச் செய்த கருப்பொருள் சார்ந்த மாற்றங்களும் மாதிரி சார்ந்த மாற்றங்களும் மனப்பதிவுவாதக் கலைஞர்களின் படைப்பாக்கங்களின் துணையுடனேயே நிகழ்ந்தன.