குளோட் மொனே (CLOUDE MONET – 1840-1926)

பிரான்சு தேசத்தவரான இவர் ஒரு மனப்பதிவுவாத ஓவியர் ஆவார். குளோட் மொனே, அசலான மனப்பதிவுவாதக் கலைஞராகக் கருதப்படுகின்றார். ஏனெனில் அவர் வரைந்த சூரியோதயம் – மனப்பதிவு (Sunrise -impression) எனும் ஓவியம் காரணமாகவே அவரும் குழுவைச் சர்ந்த ஏனையோரும் மனப்பதிவு வாதக் கலைஞர்கள் என அழைக்கப்படலாயினர்.

குளோட் மொனோ அவரது இளமைப் பருவத்தில் லே ஹார்வ் (La Hivre) எனும் துறைமுக நகரத்தில் விளக்கப்படம் வரைபவராகச் செயற்பட்டார். அதன் பின்னர், அவரது ஆரம்பகால ஆசிரியராகிய, பூதின் (Boutlin) இனது வழிகாட்டலின் கீழ் திறந்தவெளி நிலத்தோற்றக் காட்சிகளை வரைய முற்பட்டுள்ளார். அதன் பின்னர் பிரான்சில் பரிஸ் நகரில் ‘சூயிஸ்’ கலைக்கல்லூரியில் சேர்ந்தார். அங்கு அவர் ‘கமில் சிகாரோ’ எனும் ஓவியரைச் சந்தித்தார். இரண்டு வருடங்களின் பின்னர் அல்ஜீரியாவில் இராணுவ சேவையில் இணைந்துகொண்ட அவர் மீண்டும் லே ஹார்வ் நகரத்துக்கு வந்து சேர்ந்தார். அங்கு அவர் வெற்றுக் கண்களால் காண்பவற்றை அடிப்படையாகக் கொண்டே உலகைக் கற்றாய்தல் வேண்டும் எனத் தீர்மானித்தார். அதன் பின்னர், 1862 இல் கிளேர் கலைக்கூடத்தை வந்தடைந்த அவர். ஒகஸ்தே ரெனுவா. அல்பிரட் டி சிஸ்லே ஆகியோரைச் சந்தித்ததோடு, இச்சந்திப்பானது, மனப்பதிவுவாத ஓவியர் குழு உருவாக்கப்படுவதற்கு மூல காரணமாகியது.

கலைத்துவப்பாணி / கலை மரபு / கலைச்செல்வாக்கு

க்ளோட் மொனே இனது கலைத்துவப்பாணி, மனப்பதிவுவாதப் பாணியாகும் என்பதை இனங்கண்டு கொள்ளல் வேண்டும். பொருள்களைத் தெளிவாகக் காட்டுவதையும் நேர்கோட்டு தூரதரிசனத்தையும் விடுத்து. சுயாதீனமான தூரிகைத் தடங்களைக் கையாண்டு, கலப்பற்ற வர்ணப்பகுதிகளைக் கொண்ட தொல்சீர் – கலைக்கல்லூரி நியமங்களுக்கு எதிராகச் செயற்படுதலே இப்பாணியின் இயல்பாகும். இப்பாணியினது இயல்புகளின் துணையுடன், யாதேனும் திறந்த வெளியில் உள்ள திட்டவட்டமான வடிவங்களை வர்ண நிலைக்கு மாற்றுவதையே அவர் வலியுறுத்தினார். திறந்த வெளியான நிலத்தோற்றத்துக்கே உரித்தான ஒரு பாணி இருக்க முடியாது என்பதையும் அதன் தோற்றம் ஒவ்வொரு கணத்திலும் வேறுபடும் என்பதையுமே அவர் அதன் மூலம் வலியுறுத்தினார்.

Claude Monet, On the Bank of the Seine, Bennen. 1868. Oil on canvas

சூரியோதயத்தின் மனப்பதிவு (Impression of Sunrise) – 1872

Claude llallet, IMPRs.seim nf Sunrise’. I872. Dil un EuNIVAS, 19 1 2+ MIN’ (4K % 6. cin). Farmerly Musée Marmottan

இது கன்வசு மீது தைல வர்ணத்தினால் வரையப்பட்ட ஓர் ஓவியமாகும். மறுமலர்ச்சிக் காலத்திலிருந்து ஐரோப்பிய ஓவியக்கலையில் ஏற்பட்ட வளர்ச்சியை இவ் ஓவியத்தில் காணலாம். 1874 இல் வரையப்பட்ட இந்த ஓவியத்திற்கான எதிர்மறையான விமர்சனத்தை முதன்மையாகக் கொண்டே மனப்பதிவுவாதம் (Impressionisin) எனும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மிகக் குறுகிய நேரத்துள் இயற்கை ஒளி காட்சியளிக்கும் தன்மையே சூரியோதயம்’ எனும் இந்த ஓவியத்தினால் காட்டப்பட்டுள்ளது, அதாவது பிரான்சில் ஹாவே துறைமுகத்தில் ஒரு கணப்பொழுதில் இயற்கை ஒளி அல்லது காற்றோட்டம் பற்றியதாகும். மற்றுமொரு விதமாகக் கூறுவதாயின், ஒரு கணப்பொழுதில் காற்று அல்லது இயற்கை ஒளியின் தன்மையை ஓவியமாக வரைய முயற்சி செய்யும்போது காலம் எனும் காரணிக்கு ஊடாக ஓவியத்தின் முறைமையான பண்புகள் துண்டிக்கப்படுகின்றது. அதற்கமைய ஓவியக்கலை பயிலுவோருக்கு, இந்த ஓவியத்தின் மூலம் வழங்கப்படும் செய்தி. ஐரோப்பிய ஓவியக்கலை வரலாற்றினது மாதிரியில் ஏற்பட்ட ஒரு புரட்சி பற்றிய கதையாகும். இந்த மாதிரி சார்ந்த மாற்றமானது 20 ஆம் நூற்றாண்டில் உருவாகிய நவீன கலைத்துறைகளின் வளர்ச்சி மீது காத்திரமாகப் பங்களிப்புச் செய்துள்ளது. நவ தொல்சீர்வாத மனோரதியவாதக் கலைப்போக்கு மூலம் உருவாக்கப்பட்ட புதிய கருப்பொருள் சார்ந்த மாற்றத்தை மேலும் விருத்தி செய்தவாறு மரபுரீதியான வரலாற்று மாதிரியிலிருந்தும் உள்ளடக்கங்களிலிருந்தும் விடுபடுதலானது இந்த ஓவியம் காரணமாகவே நிகழ்ந்தது.

ரூஒன் தேவாலயம் – 1894

க்ளோட் மொனே இனது ஓவியக்கலை உத்திகளும் பிரதானமான ஒரு பண்பாக அமைவது. ஓவிய மேற்பரப்பை வர்ணப் பகுதிகளாக அல்லது வர்ண அலகுகளாகத் தீட்டுவதாகும். அதன் விளைவாக ஓவியத்தின் மூலாதாரமான பொருளினது அனுபவிப்பும் மேற்பரப்புத் தன்மை மறைந்துவிடும்.

க்ளோட் மொனே இனது வர்ணங்கள், நேரடியான ஒளியில் நாம் காணும் வர்ணங்களைவிட வேறுபட்டதாகும். அவை வெவ்வேறு வர்ண நிலைமைகளின் கீழ் நாம் காணும் வர்ணங்கள் தொடர்பான ஒரு விவரமாகும். மொனே இனது வர்ணங்கள் நாம் அறிந்துவைத்துள்ள வர்ணங்கள் அல்ல. இவை நாம் காணும் வர்ணங்களாகும். இந்தக் கலைத்துவ உத்தி மிகச் சிறப்பாகவும் நாடக ரீதியிலும் முன்வைக்கப்பட்டுள்ள ஓர் ஓவியமாக, ‘ரூஒன் தேவாலயம்” எனும் ஓவியத்தைக் குறிப்பிடலாம். இந்தத் தேவாலயம் வெவ்வேறு நாள்கள் மற்றும் நாளின் வெவ்வேறு நேரங்கள் வெவ்வேறு கோணங்களில் வரையப்பட்டுள்ளன. மிக வன்மையான கருங்கல் முகப்புக்களைக்கொண்ட இத்தேவாலயம், சூரிய ஒளியில் தோய்ந்திருக்கும்போது வர்ணங்களில் காணப்படும் பௌதிகத் தன்மையை அதே நிலையில் காட்டுவதற்காக மொனே இங்கு பெருமுயற்சி செய்துளாளர். இங்கு தேவாலயத்தின் கட்டடட நிர்மாணத் தகவல்கள், மேற்பரப்பு மீது கையாளப்பட்டுள்ள சில தூரிகைப் ஓட்டங்கள் (Brush Strokes) மூலம் தெளிவற்றதாக்கப்பட்டுள்ளது. ஒருபோது அவர், இருண்ட நிறங்களைப் பிரகாசமான நீல நிறம் மஞ்சள் – சிவப்பு நிறத்தைச் சிந்துவதன் மூலம் நிறத்தடங்களை (Patches) மாற்றி இயற்கையான ஓர் ஓவிய முன்வைப்பாக மாற்றுகின்றார். அதவாது ஒரு வண்ணத் தொகுதியாக மாற்றுகின்றார். அதன் மூலம் ஒரு திட்டவட்டமான தளத்தில் ஒரு கணப்பொழுது பற்றிய உணர்வை அவர் எமக்காகப் பதிவு செய்கின்றனர். அந்தந்தக் கணத்தில் – அந்தந்தச் சந்தர்ப்பத்தில் கண்ணால் காணுகின்ற – மீளப் பிரதி செய்ய முடியாத ஒரு காட்சியை எமக்கு அளிக்கின்றார். இதனூடாக அவர் ஓவியமானது நிலைத்த தன்மை தொடர்பான ஒரு நிலைக்கண்ணாடி அல்ல மாறாக ஒரு நொடிப் பொழுதில் ஒளி – இருள் மூலம் முன்வைக்கப்படும் ஒரு பார்வையாகும் எனும் விடயத்தை அதாவது வாழ்க்கைத் தத்துவத்தை அவர் எடுத்துக்காட்டுகின்றார். இங்கு ஓவியமானது ஓவியத்துக்காக உரித்தான பண்புகளுக்கு வரையறைப்படுகின்றது. இது நவீன ஓவியக்கலைக்கு அடிப்படையான பல கோட்பாடுகளைக் கட்டியெழுப்புவதற்குக் காரணமாகியது.

அல்லிப் பொய்கைக்கு மேலே யப்பானிய பாலம் (1899)

*அல்லிப் பொய்கைக்கு மேலே பாலம் எனும் ஓவியம் 1899 இல் வரையப்பட்டதொன்றாகும். கன்வசு மீது தைல வர்ணத்தினால் இந்த ஓவியம் வரையப்பட்டுள்ளது. வளிமண்டலத்தில் காணப்படும் நடனப் பாங்கான தன்மையையும் பொருள்கள் ஒளி செயற்படும் தன்மையையும் பற்றிய ஒரு பிரதியை கன்வசு மீது கட்டியெழுப்பவே இங்கு மொனே முயற்சி செய்துள்ளார். அதாவது கண நேர அவதானிப்பு மூலம் திட்டவட்டமான ஒரு கட்புலத் தோற்றப்பாட்டைப் பற்றிக்கொள்ள முயற்சித்துள்ளார். யாதேனும் பொருள் சூரிய ஒளியில் தோய்ந்திருக்கும் போது கட்புல ரீதியில் அதன் அடிப்படையான வடிவங்களையும் வர்ணங்களையும் அதே வடிவில் காணமுடியாது. அடிப்படையான வடிவங்களும் அவற்றுக்கேயுரித்தான வர்ணங்களும் வெவ்வேறு ஒளி நிலைமைகளாக மாற்றமடைகின்றன. அதாவது தெளிவான வடிவங்களும் வர்ணங்களும் வர்ணத் தொட்டங்களாக (Partches) மாறுகின்றன. நிழல்கள். கறுப்பு அல்லது கபில நிறமாகவன்றி வர்ணச் சேர்மானங்களாக மாறுகின்றன. இந்த இயற்கையான செயன்முறையை ஓவியமாக வடிப்பதை, அல்லிப் பொய்கைக்கு மேலே யப்பானிய பாலம்” எனும் ஓவியம் மூலம் மொனோ எடுத்துக்காட்டுகின்றார்.

ஒளியைக் காட்டுதல், மேற்பரப்பு மறைந்து போதல் ஆகியவற்றை வர்ணங்கள் மூலம் கட்டியெழுப்புதலானது க்ளோட் மொனே இனது வர்ணந்தீட்டலின் மையப்படுத்தப்பட்ட தன்மையாகும். இவ்வர்ணந் தீட்டல் மூலம் ஓவியம் வரைதலுடன் தொடர்புற்றிருந்த மரபுரீதியான தொல்சீர் முறை மறந்துவிடப்பட்டுள்ளது. ஓவியம் என்பது இன்னமும் இயற்கையை அதே வடிவில் மீளளிப்பதாகும் எனும் மரபுரீதியான கருத்துக்கு இச்செயன்முறை மூலம் அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது. அதாவது ஓவியம் என்பது வர்ணங்களாலான ஒரு வெளிப்பாடு என்பதே இந்த ஓவியம் மூலம் வெளிப்படுத்தப்படுகின்றது. எனவே நவீன ஓவியக் கலையைக் கற்றாய்தலின்போது இந்த ஓவியம் பெரிதும் முக்கியத்துவம் பெறுகின்றது.

error: Content is protected !!