எகிப்திய கலைப் படைப்புக்கள்
- நைல் நதிக்கரையில் அமைவு பெற்றிருந்த பண்டைய நாகரிகமாகிய எகிப்திய நாகரிகம் கி.மு. 3000 – 30 வரையான காலத்துக்குரியது.
- எகிப்திய பாராவோ (Pharaoh) மன்னர்களின் புகழைக் கூறும் மாபெரும் பிரமிட்டுகள், கட்டட நிர்மாணங்கள், ஓவியங்கள், சிற்பங்கள், நிர்மாணிக்க மூலகாரணமாக இருந்தது இறப்புக்குப் பின் வாழ்க்கை எனும் எண்ணக்கருவின் நம்பிக்கையே ஆகும்.
- அமர்ணா, கீஸா ஆகிய நகரங்களை அண்டி எகிப்திய நிர்மாணங்கள் பல காணப்படுகின்றன.
ஸ்பின்க்ஸ் (Sphinx)
- கி.மு. 2440 காலப் பகுதிக்குரிய ஸ்பின்க்ஸ் சிற்பம் குபு பிரமிட்டுக்கு முன்னால் 66 அடி உயரமாகவும் 240 அடி அகலத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
- எகிப்தியக் கலையில் பல ஸ்பின்க்ஸ் சிற்பங்கள் காணக்கூடியதாக இருக்கின்றன. இவற்றுள் மாபெரும் ஸ்பின்கஸ் (Great Sphinx) எனும் சிற்பம் முக்கியத்துவம் வாய்ந்தது.
- மனித முகமும் விலங்குடலும் (சிம்மம்) கொண்ட இது எகிப்திய கலைகளினுள் சிறந்த ஒரு சிற்பம் ஆகும்.
- ஸ்பின்க்ஸ் படைப்பானது பாராவோ மன்னனின் வலிமையையும், பாதுகாப்புத் தொடர்பான எண்ணக்கருவையும் காட்டுகின்றது என்பது விமர்சகர்களின் கருத்தாகும்.
ஸ்கிறைப் (எழுதுபவர்) (Scribe)
- எகிப்திய சிற்பங்களில் எழுத்தாளர் அல்லது ஸ்கிறைப் ஒரு முக்கிய பண்டைய காலப் படைப்பு ஆகும்.
- இவ்வாறான பல ஸ்கிறைப் சிற்பங்கள் எகிப்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன ஆயினும், பிரான்ஸ் இல் உள்ள லூவர் நூதனசாலையில் வைக்கப்பட்டிருக்கும் ஸ்கிறைப் சிற்பம் சிறப்பானதாகும்.
- சுண்ணாம்புக் கல்லினால் நிர்மாணிக்கப்பட்டுள்ள 2 அடி உயரமான இது முக்கோண வடிவத்தில் கட்டமைப்பைக் கொண்டது.
- முழுப்புடைப்பு முறையில் மரத்தில் படைக்கப்பட்டுள்ளது.
- பளிங்குக் கல்லினால் கட்குழிகள் நிரப்பப்பட்டுள்ளன.
- வர்ணம் தீட்டப்பட்டுள்ளது.
- கி.மு.2600 – 2350 காலப் பகுதியைச் சேர்ந்தது.
- சகாரா (Sakkara) பிரதேசத்தில் ஒரு கல்லறைக்குள் இது கண்டெடுக்கப்பட்டுள்ளது.
- இது தமது எஜமான் கூறும் எதையோ எழுதுவதற்குத் தயாராக இருப்பவரின் தோற்றத்தைக் குறித்து நிற்கிறது.
நெபிரிற்றி அரசி (Nefertiti)
- எகிப்திய அமர்ணா யுகத்தை அதாவது புதிய இராசதானி காலத்திற் படைக்கப்பட்ட நெபரிற்றி அரசியின் உருவம் தற்போது பேர்லின் அரும்பொருட் காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
- இது பெண் உடலின் மேற்பகுதியைக் காட்டும் முழுப்புடைப்பு நுட்பமுறையில் படைக்கப்பட்டுள்ள சிற்பமாகும்.
- எகிப்தியக் கலைப்படைப்புக்களில் காணப்படும் பாணி சார்ந்த பாரம்பரியத்திலிருந்து விடுபட்டு, இயற்பண்பான பாணியின் இயல்புகள் இச்சிற்பத்தில் காணப்படுகின்றன.
- 20 அங்குல உயரமாகப் படைக்கப்பட்டுள்ள இச்சிற்பம், சுண்ணக்கல் ஊடகத்தில் படைக்கப்பட்டு, வர்ணந்தீட்டப்பட்டுள்ளது.
- எகிப்து பராவோ அரசர்களில் ஒருவரான புதிய இராசதானியின் அக்னேதன் (Akhenaten) அரசனின் அரசியாகக் கருதப்படும் நெபிரிற்றியின் இச்சிற்பம் கி.மு. 1375 காலத்துக்கு உரியது.
- தலையில் அணிந்துள்ள உயரமான மகுடமும், கழுத்தில் அணிந்துள்ள மாலையும் சிற்பத்துக்கு அழகூட்டும் வகையில் அமைந்துள்ளதோடு பேரரசியின் வலிமையையும், பெருமையையும் காட்டி நிற்கின்றன.
எகிப்திய ஓவியப்படைப்புக்கள்
- எகிப்திய ஓவியப்படைப்புக்களை (கல்லறை) பிரமிட்டுக்களிலும், தேவாலயங்களிலும் காணலாம்.
- இரு பரிமாணத்தன்மை, பக்கத்தோற்றம் போன்ற இயல்புகளை இந்த படைப்புகளில் காணலாம்.
- நிறந்தீட்டும் போது பெரும்பாலும் தட்டைத்தன்மை பயன்படுத்தப்பட்டுள்ளது.
- கற்பனையான எண்ணக்கருக்கள், மக்கள் வாழ்க்கையில் பல்வேறு நிகழ்வுகள், அரசர்கள், அரசிகள் தொடர்பான நிகழ்வுகள் போன்றனவற்றை எகிப்திய கட்டட நிர்மாணங்களில் காணலாம்.
- எகிப்திய ஓவியங்களுக்கு இடையே குறிப்பிடப்பட்டுள்ள ஹைரொக்லிபிக்ஸ் (Hieroglyphics) அதாவது உருவ அட்சரங்கள் எழுத்துக்களின் முதலாவது கட்டம் என்ற வகையில் இன்றும் தொல்பொருள் ஆய்வாளர்களின் ஆராய்ச்சிக்கும் அவதானிப்புக்கும் உட்பட்டு வருகின்றது.
மீடம் வாத்துக்கள் (Geese of Meidum)
- கி.மு. 2630 காலத்தைச் சேர்ந்த இந்த ஓவியம், எகிப்திய பண்டைய ஓவியப்படைப்புக்களுள் ஒன்றாகும்.
- மீடம் இல் மஸ்தாபா வகையைச் சேர்ந்த சமாதிக்கூடமொன்றில் காணப்பட்ட இந்த ஓவியத்தின் ஒன்றன் பின் ஒன்றாகச் செல்லும் ஆறு வாத்துக்கள் காணப்படுகின்றன. அந்த ஆறு வாத்துக்களும் மும்மூன்றாக இரண்டு பக்கங்களிலும் ஒன்றன் பின் ஒன்றாகச் செல்வது போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது.
- உருவங்களைத் தளத்தின் மீது சேர்மானஞ் செய்யும்போது, முன்னாலுள்ள வாத்துக்களின் தலை நிலத்தை நோக்கியதாக இருக்குமாறும் உயிரோட்டமான தன்மையுடையதாகவும் அவற்றின் மெய்நிலைகளைப் படி ஒழுங்கு முறையாகக் காட்டுவதற்கும் கலைஞர் முயற்சி செய்துள்ளார்.
- நிறந்தீட்டும் போது கறுப்பு, வெள்ளை, கபில நிறங்களின் வெவ்வேறு சாயல்கள் வெளிப்பட்டுள்ளது.
- கோடுகள் மூலம் நுணுக்கமாகவும், விரிவாகவும் வடிவங்கள் காட்டப்பட்டுள்ளன.
- இந்த இயல்புகள் எகிப்திய மனித உருவ ஓவியங்கள் வரைவதற்காகப் பயன்படுத்தப்படவில்லை அதாவது நிறங்கள், கோடுகள் மூலம் இயற்கையான இயல்புகளுகளோடு முப்பரிமாண இயல்புகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளமையைக் இனங்காணலாம்.
பறவை வேட்டை (Fowling scene)
- பறவை வேட்டை ஓவியம் கி.மு. 1580 – 1350 இற்கும் இடைப்பட்ட காலத்தில் புதிய இராசதானி யுகத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படுகின்றது.
- இது வர்ணந்தீட்டப்பட்ட ஒரு ஓவியமாகும். இது திபஸ் இல் நெபாமுன் (நேடியஅரn) கல்லறையில் இருந்து கிடைத்தது.
- எகிப்திய பிரபுவான நெபாமுன் ஓடமொன்றில் ஏறி நைல் நதியில் தமது கையில் உள்ள வளை தடியைப் (டீழழஅநசநபெ) பயன்படுத்தி பறவை வேட்டையாடும் விதம் இந்த ஓவியத்தில் காட்டப்பட்டுள்ளது.
- அவரது ஒரு கையில் வேட்டையாடிய மூன்று பறவைகள் உள்ளன.
- இந்த ஓவியத்தில் காணப்படும் பெண் உருவங்கள் அவரது புதல்வியும் மனைவியுமாவர் எனக் கருதப்படுகின்றது.
- பைப்பிரஸ் (Pழிலசரள) பற்றைகளுக்கு இடையே பறவைகள் காட்டப்பட்டுள்ளதோடு, அதற்கு அருகே உள்ள வேட்டைப்பூனை, கால்களால் இரண்டு பறவைகளையும் வாயினால் ஒரு பறவையையும் பிடித்துக்கொண்டிருக்கும் விதம் காட்டப்பட்டுள்ளது.
- மனித உருவங்கள் மரபார்ந்த பாணி ரீதியாக பக்கத்தோற்றமாகவும், பிராணிகளும் தாவர இலைகளும் மிக இயல்பான வகையிலும் சித்தரிக்கப்பட்டுள்ளன.
- பட்டிகைச் சித்திரிப்பாகக் குறிப்பிட்டுள்ளது. இச்சித்திரச் சட்டகத்தினுள் பல்வேறு நிகழ்வுகளின் சேர்மானம் காட்டப்பட்டுள்ளதோடு, அதன் மூலம் ஓவியத்தின் தொழிற்பாட்டுத்தன்மை எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.
- இது உலர்ந்த சாந்தின் மீது பிரெஸ்கோ சிக்கோ நுட்ப முறையில் வரையப்பட்ட ஓர் ஓவியமாகும்.
- உருவங்களுக்கு நிறந்தீட்டுவதற்காக மஞ்சள், சிவப்பு, வெள்ளை, கறுப்பு போன்ற நிறங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதோடு, ஓவியங்கள் இருபரிமாணத் தன்மையுடையன.
- ஓவியத்தின் பின்னணியில் ஹைரொக்லிபிக்ஸ் (Hieroglyphics) எமுத்துக்கள் அதாவது உருவ அட்சரங்களைக் காணலாம்.
- தற்போது இது லண்டனில், பிரித்தானிய அரும்பொருட் காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
பயிற்சி வினாக்கள்
1. மனிதமுகமும் சிங்க உடலும் கொண்ட கற்பனை உருவினை எவ்வாறு அழைப்பர்?
2. ஸ்கிறைப் சிற்பம் எவ் ஊடகத்தினாலானது?
3. ஸ்கிறைப் சிற்பம் தற்போது எங்குள்ளது?
4. எகிப்திய புதிய இராசதானி காலத்தில் அமைக்கப்பட சிறந்த படைப்பு யாது?
5. நெபற்றி அரசி எனும் சிற்பம் எவ்வூடகத்தினால் அமைக்கப்பட்டது?
6. மீடமின் வாத்து எங்கு காணப்படுகின்றது?
7. மீடனின் வாத்தில் என்ன வர்ணம் தீட்டப்பட்டுள்ளது?
8. பறவை வேட்டை எனும் ஓவியம் எங்கு காணப்படுகின்றது.
9. பறவை வேட்டை ஓவியத்தில் உள்ள இரு பெண்களும் யார்?
10. இவ் ஓவிய நுட்ப முறையாது?
தரப்பட்டுள்ள ஒளிப்படத்தை ஆதாரமாகக் கொண்டு தரப்பட்டுள்ள வெற்றிடங்களை நிரப்புக.
1. இவ் ஓவியமானது இடெற் என்னும் வம்சத்தவர்களின் பேரோ மன்னர்களின் கல்லறையில் வரையப்பட்ட ………………………………………. என்னும் ஓவியமாகும்.
2. இதில் அக்காலத்து அதிபதியாக விளங்கியவர் தனது கையிலிருக்கும் ஆயுதத்தால் ………………………… மரத்தின் மீது இருக்கும் குருவிகளை வேட்டையாடும் காட்சியுள்ளது.
3. இவ் ஓவியத்தில் காணப்படும் மனித உருவங்கள் பக்கப்பாடாகவும் ………………………….. தன்மையிலும் காணப்படுகின்றது.
4. இவ் ஓவியத்தின் பின்னணியாக …………………………………. எனப்படும் சித்திர எழுத்துக்கள் காணப்படுகின்றன.
5. இவ்வாறான ஓவியங்களை ……………………………………… காலப்பகுதியில் அதிகம் காணலாம்.