இலங்கையின் பண்டைய தாதுகோப நிர்மாணக் கலைப் படைப்புக்கள்

யாதேனும் சமூகத்தின் தனித்துவத்தைப் பிரதிபலிக்கும் முக்கியமான ஒரு பண்பாட்டு அம்சமாக கட்டடக்கலைப் படைப்புக்களை இனங்கண்டு கொள்ளலாம். இவற்றை முதன்மையான சமயம் சார்ந்த கட்டட நிர்மாணிப்புக்கள் எனவும் சமயம் சாராத கட்டட நிர்மாணிப்புக்கள் எனவும் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம். இலங்கையின் மெசாலித்திக்குக்காலக் கல்லறைகள் சார்பாக கி.மு. 03 ஆம் நூற்றாண்டுக்கு முன்னைய குடியேற்றங்கள் பற்றிய சில பல சான்றுகள் கிடைத்துள்ள போதிலும் புத்த சமயத்தின் வருகைக்குப் பின்னர் மேலும் விருத்தியடைந்த கட்டடக்கலைப் பாரம்பரியமொன்றினை இனங்காண முடிகின்றது. எனினும் அக்காலத்தைச் சேர்ந்த கட்டடக் கலைப் படைப்புக்கள் என அறிவது அரிதாகும். அக்கட்டட நிர்மாணிப்புகளுக்காக நீடித்துழைக்கும் மூலப்பொருள்கள் பயன்படுத்தப் படாமையை அதற்கான பிரதானமான ஒரு காரணமாக இனங்கண்டு கொள்ளலாம். கட்டட நிர்மாணிப்புகளுக்கான நீடித்துழைக்கும் தன்மையுள்ள மூலப்பொருள்கள் பயன்படுத்தப்பட்டுள்ளமையே கி.மு. 03 ஆம் நூற்றாண்டின் பின்னர் நிரமாணிக்கப்பட்ட கட்டடங்களில் இடம்பெற்ற பிரதானமான தொழினுட்ப மாற்றமாகும்.

கி.மு. 3 ஆம் நூற்றாண்டு தொடக்கம், நிரந்தரமான மூலப்பொருள்களைப் பயன்படுத்தி, இவ்வகையில் நிர்மாணிக்கப்பட்ட மிகப் பண்டைய கட்டடங்களைச் சமயம் சார்ந்த கட்டடத் தொகுதிகளிலேயே காண முடிகின்றது. அத்தோடு, சமயஞ் சார்ந்தவை அல்லாத அரசர் சார்ந்த கட்டடங்கள், பூங்காக்கள், சிகிரியா போன்ற நிர்மாணிப்புக்களிலும் அப்பண்பைக் காண முடிகின்றது. இலங்கையின் வரலாற்று ரீதியான கட்டடக்கலைப் படைப்புக்களின் தன்மை, பயன்பாடு, மற்றும் கலைத்துவப் பண்புகளின்படி, பின்வரும் பகுதிகளின் கீழ் அவை இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

  • தாதுகோபங்களும் அவை சார்ந்த கட்டட நிர்மாணங்களும்.
  • பௌத்த ஆச்சிரமங்கள் விகாரைகள் சார்ந்த கட்டடங்களும் குளங்களும்.
  • கட்டங்கள் சார்ந்த வாயில் அமைப்புக்கள்.
  • வரலாற்று ரீதியான பொலனறுவைக்கால சமய மற்றும் அரச கட்டடங்கள்.

தாதுகோப நிர்மாணிப்பு

தாதுகோபமானது மகா புருச வழிபாட்டுடன் தொடர்புடைய ஒரு குறியீடாகும். புது. பசேபுது, அர்ஹத், சக்கரவர்த்தி மகாராஜ ஆகிய நான்கு பிரிவுகளையும் சேர்ந்தோரின் தாதுக்களை அடக்கஞ் செய்து, தாதுகோபங்களை அமைப்பதன் மூலம் அவர்களுக்குக் கௌரவமளிப்பது பொருத்தமானது என புத்தர்பெருமான் கூறியதாக ‘பரிநிப்பான சூத்திரத்தில்” குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய பௌத்த தாதுகோப நிர்மாணிப்பு, புத்தரின் காலத்தில் ஆரம்பித்து தொடர்ந்தும் இடம்பெற்று வந்துள்ளது. புத்தர் பெருமான் உயிர்வாழ்ந்த காலத்தில் பரிநிர்வாணமடைந்த சாரிபுத்த, மொக்கல்லான ஆகிய இரண்டு பிக்குச் சீடர்களின் அஸ்தி அடக்கஞ் செய்யப்பட்டு தாதுகோபங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் புத்தரின் பரிநிர்வாணத்துக்கு முற்பட்ட காலத்தில் இலங்கையில் நிர்மாணிக்கப்பட்ட தாதுகோபங்களாக திரியாயை ‘கிரிஹடு’ தாதுகோபம், மகியங்கனைத் தாதுகோபம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். சாஞ்சி தாதுகோபம், சாஞ்சி செதுக்கல் வேலைப்பாடுகள், பாறூத் மற்றும் அமராவதி செதுக்கல் வேலைப்பாடுகள் சார்ந்த வரலாற்றுத் தகவல்கள் மூலம் இந்த பௌத்தத் தாதுகோபங்களின் ஆரம்பகால வடிவத்தை இனங்காணவும் அது தொடர்பான விளக்கத்தைப் பெறவும் முடிகின்றது. அத்தோடு, இலங்கைத் தாதுகோபங்களில் அடக்கஞ் செய்யப்பட்டுள்ள தாதுப் பேழைகளின் மூலமும் அவற்றின் வடிவத்தைக் கண்டறிய முடிகின்றது.

பௌத்த தாதுகோப நிர்மாணிப்புத் தொடர்பான முதன் முதலான கட்புலனான சான்றுகள்
சாஞ்சி செதுக்கல்
அமராவதி தாதுகோபச் செதுக்கல்
பாறூத் செதுக்கல்
பாறூத் செதுக்கல்

இலங்கைத் தாதுகோப மாதிரியும் அதன் அங்கங்களும்

இலங்கைத் தாதுகோபத்தின் மூல வடிவம், இந்திய தாதுகோபத்தின் செல்வாக்குடன் கட்டியெழுப்பப் பட்டுள்ளதொன்றாகும். சாஞ்சி தாதுகோபம் உட்பட அமராவதி செதுக்கு வேலைப்பாடுகளின் ஊடாக அவ்வடிவத்தை இனங்கண்டு கொள்ளலாம். அதற்கமைய இந்தியாவில் நிர்மாணிக்கப்பட்ட மத்திய கால தாதுகோபம் மேதிய, கர்ப்பம், ஹர்மிக்காவ, யஷ்டிய , சத்ர (குடை) ஆகியவற்றைக்கொண்ட ஆக்கமாகும். குறிப்பாக சாஞ்சி தாதுகோபத்தில் அமைக்கப்பட்டுள்ள மேதிய எடை தாதுகோபத்தில் ‘பேசாவளலு’ (பேசா வளையல்கள்) ஆக வளர்ச்சியடைந்துள்ளது. சாஞ்சி தாதுகோபத்தின்படி, அதில் ஒரு மேதிய மாத்திரமே உள்ளதோடு இலங்கைத் தாதுகோபங்களில் மூன்று மாடி மேதிய பேசாவளலு காணப்படுகின்றது. சாஞ்சியின் கர்ப்பத்தின் மீது ஹர்மிக்கா எனும் கல்லினாலான கிராதி வேலி காணப்பட்டதோடு இலங்கைத் தாதுகோபங்களில் அது கர்ப்பத்தின் மீது சதுர வடிவக் கோட்டமாக மாற்றமடைந்துள்ளது. அச்சதுரக் கோட்டமானது செங்கல்லினால் கட்டப்பட்டு, நான்கு பக்கங்களும் கிராதி வேலி போன்று அமைக்கப்பட்டுள்ளது. சாஞ்சிய தூபியில் உள்ள கோல், குடை ஆகியவற்றுக்குப் பதிலாக இலங்கைத் தாதுகோபத்தில் கொத்கரல்ல, கொத்த ஆகிய வடிவங்கள் வரை விருத்தியடைந்துள்ள மையைக் காண முடிகின்றது. அதற்கமைய இற்றைவரையில் பௌத்த தாதுகோபமானது மணிமகுடம் (சிலுமிண). கலசம் (கொத்த), கலசந்தாங்கி (கொத்கரல்ல), தேவதைக் கோட்டம், சதுரக் கோட்டம் (ஹதரஸ் கொட்டுவ), தாது கரப்பம், பேசா வளையல்கள் (பேசாவளலு), பாதம் ஆகிய பிரதான அங்கங்களைக் கொண்டுள்ளது.

பௌத்த சமயம் தாபிதமடைந்ததுடன் கூடவே இலங்கையில் அறிமுகஞ் செய்யப்பட்ட தாதுகோபமானது இந்தியாவின் சாஞ்சி தாதுகோபத்தின் மாதிரி மற்றும் அங்கங்களிலிருந்து சிறிதளவிலேயே வேறுபட்டன. கி.மு. 3ஆம் நூற்றாண்டு தொடக்கம் கி.பி. 4 ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தைச் சேர்ந்த தாதுகோபங்களின் தொன்மையான எச்சங்கள் மூலம் அது உறுதியாகின்றது. குறிப்பாக, தாதுகோப கர்ப்பத்தில் அடக்கப்பட்டுள்ள சிறியது பேழைகள் மூலம், ஆரம்பகால வடிவத்தை இனங்கண்டுகொள்ளலாம்.

இலங்கையில் நிரமாணிக்கப்பட்டுள்ள தாதுகோபங்களின் கட்டடக் கலைக்கட்டுமானத் தொழினுட்பத்தின் படி, கர்ப்பமானது, ஒன்றிலிருந்து ஒன்று படிப்படியாகச் சிறுத்துச் செல்லுமாறு அமைக்கப்பட்ட மூன்று பேசாவளலுகளின் மீது தாபிக்கப்பட்டுள்ளது. கர்ப்பத்தை நிர்மாணிப்பதற்கான பீடமாகவே / அடித்தளமாகவே அவை அமைக்கப்பட்டுள்ளன. தாதுகோபக் கர்ப்பத்தில், தாது அடக்கஞ் செய்வதற்கான ஓர் அறையோ சில அறைகளோ காணப்படும். கர்ப்பக்கிரகமானது, பொதுவாக, இயல்பான தரையிலிருந்து ஆரம்பமாகியுள்ளது என்பது, சில கர்ப்பக்கிரக அகழ்வுகளின் மூலம் அறியப்பட்டுள்ளது. எனினும் தாதுவானது தாதுகோபத்தின் மிக உயரத்தே அமைந்துள்ள போஷாவுக்கு மேலே அமைக்கப்பட்ட பகுதியில் ஒரு பேழையினுள் அடக்கப்பட்டுள்ளது. கண்டுபிடிக்கப்பட்டுள்ள தாதுகர்ப்ப எச்சங்களின்படி இவ்வறைகளின் சுவர்களில் ஓவியங்கள் காணப்பட்டுள்ளன. மேலும் தாது கர்ப்பத்தில், புத்தர்சிலைகள், மகாமேரு மலையின் மாதிரியுரு. யந்திரக்கல் (Amulet stone) பேழை ஆகியன வைக்கப்பட்டிருந்தமை, எச்சங்களிலிருந்து தெளிவாகின்றது.

தாதுகர்ப்பம்
மகாமேரு மலை
தாதுகர்ப்பத்தின் குறுக்குவெட்டு

இலங்கையில் ஆரம்ப காலத்தில் அமைக்கப்பட்ட தாதுகோபங்கள் குடைகளைக் கொண்டிருந்தன என்பது தூபவம்சம், மகாவம்சம் ஆகிய நூல்களில் அடங்கியுள்ள தகவல்கள் மூலம் தெளிவாகின்றது. வெவ்வேறு காலப்பகுதிகளில் செய்யப்பட்ட மறுசீரமைப்புக்கள் காரணமாக, பண்டைய தாதுகோபங்களில் தொடக்கத்தில் காணப்பட்ட தன்மைகளை இப்போது காண முடிவதில்லை. அவ்வாறான பண்டைய தாதுகோபங்களின் மாதிரி தொடர்பான சான்றுகளை, கண்டுபிடிக்கப்பட்டுள்ள சிறிய கலசங்களைக் கொண்டு இனங்காண முடிகின்றது. மிகிந்தலை மலை உச்சியில் அமைந்திருந்த ஒரு தாதுகோபத்திலிருந்து கிடைத்த பேழையும் (உரு:12) கேகாலை மாவட்டத்தில் ரம்புக்கனைக்கு அருகில் தெதிவளையில் இருந்து கிடைத்த தாதுப்பேழையும் (உரு: 13) இலங்கையில் பண்டைய தாதுகோபங்கள் தொடர்பாக விளங்கிக்கொள்வதற்குச் சிறந்த சான்றுகளாகும்.

மிஹிந்தலைப் பேழை
தெதிவளைப் பேழை

தாதுகோப வடிவங்கள்

தானியக்குவியல் வடிவம்
நீர்க்குமிழி வடிவம்
மணி வடிவம்
பத்ம வடிவம்
கட/பானை வடிவம்
நெல்லிக்கனி (ஆமலா) வடிவம்

மேற்குறிப்பிட்ட தாதுகோப வகைகளுள், தானியக்குவியல் வடிவம், நீர்க்குமிழி வடிவம் ஆகிய இரண்டு வடிவங்களில் அமைந்தது தாதுகோபங்களே பெருமளவில் காணப்படுகின்றன. ‘வைஜயந்த’ எனும் நூலின்படி தாதுகோபத்தின் மொத்த உயரமானது அதனை அரைக்கோள வடிவப்பகுதியினது உயரத்தின் மூன்று மடங்காகும். மேலும் தாதுகோபம் 24 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. (உரு:

error: Content is protected !!