முதலியார் ஏ.சீ. ஜீ. எஸ் . அமரசேகர (1883-1983)
- கலைஞர் முதலியார் ஏ. சீ. ஜீ. எஸ். அமரசேகர இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இலங்கையில் கலாநிலைய யதார்த்தவாத (Academic Realism) ஓவிய கலை முறைமையில் முன்னோடியாகச் செயற்பட்ட ஒரு சித்திரக் கலைஞர் ஆவார்.
- 1883 மார்ச் 3 ஆந் திகதி காலி மாவட்டத்தின் தொடந்துவை எனும் ஊரில் பிறந்த முதலியார் ஏ. சீ. ஜீ. எஸ். அமரசேகர (ஏப்ரகாம் கிரிஸ்டோபர் கிறக்கறி சூரிய ஆரச்சி அமரசேகர ) கருத்துப்படக் (Cartoon) கலைஞராகவே படைப்பாக்கத் துறையில் பிரவேசித்தார்.
- பிரித்தானிய ஆட்சியாளரின் அனுசரணையின் கீழ், நிறுவப்பட்ட இலங்கைக் கலைக் சங்கத்தின் (Ceylon Society of Art) முன்னோடிக் கலைஞர்களுள் ஒருவராகவும் செயற் பட்டார்.
- இலங்கை ஒரு குடியேற்ற நாடாக இருந்தபோது பிரித்தானியாவில் இருந்து வருகை தந்த கலைஞர்களின் கலைச் செல்வாக்கை , இலங்கைக் கலைச் சங்கத்தைச் சேர்ந்த கலைஞர்களின் படைப்புக்களில் காணலாம்.
- கலைஞர் முதலியார் ஏ. சீ. ஜீ. எஸ். அமரசேகரவினது சித்திரப் படைப்புக்களில் ஐரோப்பிய கலாநிலையக் கலைப்பாணியாகிய யதார்த்தவாத கலைப்பண்புகளைக் காணலாம்.
- உயிரினங்களின் உருவங்கள், யதார்த்தமான நிலத்தோற்றங்கள் போன்றவற்றை வரைவதில் திறமை மிக்கவரான இவர், தமது சித்திரப் படைப்புக்களுக்காக, நீர் வர்ணம், எண்ணெய் (தைல ) வர்ணம் ஆகிய இரண்டு நிற ஊடகங்களையும் பயன்படுத்தியுள்ளார்.
- மனித உருவங்களை உள்ளடக்கிய உருவ ஒழுங்கமைப்புகளுக்கு முதலிடமளித்த இவர், ஐரோப்பிய கலாநிலையக் கலையின் முதன்மையான ஒரு பண்பாகிய தூரநோக்கு முறையைத் தமது சித்திரங்களின் அடிப்படையாகக் கொண்டுள்ளார்.
- முப்பரிமாண இயல்புகளைக் கொண்ட நிறப் பயன்பாட்டுடன், ஒளி, நிழல் தொடர்பாக கலாநிலைய அறிவாகிய ‘கியரஸ்கியுரோ” (Chiaroscuro) கோட்பாட்டை அவரது படைப்புக்களில் காணமுடிகிறது.
- கலைஞர் முதலியார் ஏ. சீ. ஜீ. எஸ். அமரசேகரவினது சித்திரக் கலைப் படைப்புக்கள் சில வருமாறு:
- தொழிலின்மை (Unemployed) / தச்சனின் வீடு
- பூனைக்குட்டி
- பேயோட்டியின் மகள்
- ரீட் மாவத்தை (நீர்வர்ணம்)
- அரச தலைவர்களின் மெய்யுருக்கள் / பிரதிமை ஓவியங்கள் (Portrait)
பேயோட்டியின் மகள்
- தற்போது கொழும்பு, தேசிய கலா பவனத்தில் நிரந்தரமாகக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள ‘பேயோட்டியின் மகள்’ எனும் ஓவியம் கன்வசுத் தளத்தில் எண்ணெய் வர்ணத்தினால் படைக்கப்பட்டுள்ளது.
- இந்த ஓவியத்தில் உள்ள பேயோட்டியின் மகள், சாந்திக் கிரியைகளுக்குரிய உடைகள் அணிந்த நிலையில் உள்ளாள். அக்கணத்தில் அச்சமடைந்துள்ள விதம் இந்த ஓவியத்தில் காட்டப்பட்டுள்ளது.
- மனிதனின் அக உணர்வுகளைக் காட்டும் யதார்த்தப்பாணி மற்றும் கற்பனைப்பாணி இயல்புகளின்படி ஆச்சரிய மற்றும் மறைந்த நிலை கருப்பொருள்களைக் கொண்ட கற்பனையான ஒரு விடயத்தைக் கருவாகக் கொண்டு இக்கலைப்படைப்பின் வெளிப்பாடு உருவாக்கப்பட்டுள்ளது.
- சித்திரத்தில் காட்டப்பட்டுள்ள தீச்சுவாலை, அவளது முகத்தில் காட்டப்படும் உணர்வு களுக்கு ஒப்பிடும் வகையில் சித்திரிக்கப்பட்டுள்ள வேடமுகம், பாரிய அளவுடைய நிழல் ஆகியன மூலம் ஒட்டுமொத்த கலைப்படைப்பின் வெளிப்பாட்டுத்தன்மையையும் நாடகப்பாங்கான தன்மையும் அழுத்தப்பட்டுள்ளது.
- இந்த ஓவியத்தில் இரண்டு தளங்கள் உள்ளன. அத்தளங்களில் உருவங்களும் நிறங்களும் சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
- இந்த ஓவியத்தில் வர்ணப் பயன்பாடு ‘கியுரஸ்கியுரோ’ (Chiaroscuro) முறையில் கையாளப்பட்டுள்ளதும், ஒளியினதும் நிழலினதும் தன்மை நன்கு வெளிப்படுத்திக் காட்டப்பட்டுள்ளது.
- பயன்படுத்தப்பட்டுள்ள வர்ணங்கள் ஒரு தனி நிறப் பண்புகளைக் கொண்ட செவ்வியல் வர்ணங்களாகும்.
- சித்திர உருக்களின் விவரங்கள் (details) முனைப்பாக்கப்படும் (highlight) வகையிலேயே இருண்ட நிறப் பயன்பாட்டினுள் ஒளி கையாளப்பட்டுள்ளது.
தொழிலின்மை / தச்சனின் வீடு (Unemployed)
- கலைஞர் ஏ. சீ. ஜீ. எஸ். அமரசேகர வரைந்த ‘தொழிலின்மை’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஓவியம் ‘தச்சனின் வீடு’ எனும் பெயரிலேயே பிரபல்யமடைந்துள்ளது.
- கன்வசுத் தளத்தில் எண்ணெய் (தைல ) வர்ணத்தினால் சித்தரிக்கப்பட்டுள்ள ‘தச்சனின் வீடு” எனும் இந்த ஓவியம் கொழும்பு, தேசிய கலாபவனத்தில் காட்சிக்கு வைக்கப்பட் டுள்ளது.
- தச்சனின் வீட்டில் நிலவும் வறுமை நிலையைக் காட்டுவதற்காக மிகச் சிறப்பாக மனித உருவங்களும் வர்ணங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
- யன்னலின் ஊடாக வீட்டினுள் புகும் ஒளி மிக இயல்பான வகையில் சித்திரிக்கப்பட்டுள்ளது. அவ்வொளியின் மூலம் தச்சனது வீட்டாரின் முகங்களில் தோன்றும் உணர்வுகள் மிகச் சிறப்பாகக் காட்டப்பட்டுள்ளன.
- யன்னலின் ஊடாகக் காட்டப்படும் ஒளியின் தன்மை ஒட்டுமொத்த படைப்பில் பயன்படுத்தப் பட்டுள்ள நிறங்கள், ‘கியரஸ்கியுரோ’ (Chiaroscuro) கோட்பாட்டின்படி முப்பரிமாண இயல்புகளுடன் காட்டப்பட்டுள்ளது.
- பயன்படுத்தப்பட்டுள்ள வர்ணங்கள், ஒரு தனி நிறப் பண்புகளைக் கொண்ட செவ்வியல் வர்ணங்களாகும்.
- கலாநிலைய இயற்கை வாத, யதார்த்தவாத பாணியைப் பின்பற்றி, மனித உருவின் அழகும் உள்ளுணர்வுகளும் இக்கலைப் படைப்பில் நன்கு வெளிக்காட்டப்பட்டுள்ளன.
- படைப்பாக்க வெளியின் மீது, ஆழத்தைக் காட்டியவாறு, தூரநோக்கு இயல்புகளை உள்ளடக்கி, முன்பகுதி , நடுப்பகுதி, பின்பகுதி ஆகிய தளங்களின் மீது தூரநோக்குப் பண்புக்கமைய வர்ணங்களும் வடிவங்களும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.
பயிற்சி வினாக்கள்
1. கலைஞர் முதலியார் ஏ. சீ. ஜீ. எஸ். அமரசேகரவின் ஓவியப்பாணி யாது?
2. கலைஞர் முதலியார் ஏ. சீ. ஜீ. எஸ். அமரசேகரவினது சித்திரக் கலைப் படைப்புக்கள் எவை?
3. ‘கியரஸ்கியுரோ’ (Chiaroscuro) நுட்ப முறை எனப்படுவது யாது?
கீழே தரப்பட்டுள்ள கலை ஆக்கத்தை இனங்கண்டு அதன் கலை அம்சங்களை எடுத்துக்காட்டும் வகையில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள உப தலைப்புகளுக்கேற்ப கருத்துள்ள ஐந்து வாக்கியங்கள் எழுதுக.
1. இனங்காணுதல் : .…………………………………
2. தொனிப்பொருள் : .……………………………….
3. வர்ண நுட்பம் : .……………………………………….
4. கலைஞரின் திறன் : .……………………………
5. உணர்வு வெளிப்பாடு : ……………………………
6. காணப்படும் இடம் : …………………………………
1. இனங்காணுதல் : .…………………………………
2. தொனிப்பொருள் : .……………………………….
3. வர்ண நுட்பம் : .……………………………………….
4. கலைஞரின் திறன் : .……………………………
5. உணர்வு வெளிப்பாடு : ……………………………
6. காணப்படும் இடம் : …………………………………