கனவடிவவாதம் (Cubism)
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பப்பகுதியில் ஐரோப்பியக் கலையில் தோன்றிய புரட்சிகரமான ஒரு கலை இயக்கமாக கனவடிவ வாதத்தை இனங்காணலாம். பிரான்சு நாட்டை முதன்மையாகக் கொண்டு ஆரம்பமாகிய, கனவடிவவாதக் கலை இயக்கமானது. பப்லோ பிக்காசோ, ஜோர்ஜ் பிராக் ஆகிய இருவராலும் கூட்டாக 1907-14 காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. பிரான்சை முதன்மையாகக் கொண்டு கட்டியெழுப்பப்பட்ட கனவடிவவாதமானது உலக மட்ட அதாவது சர்வதேசமட்டக் கலை இயக்கமாக அமைந்தது. இந்தப் பிரயோகமானது முறைமையான கலைத்துவ மொழி வரைபில் வளர்ச்சியடைந்த பயணத்தின்போது போல் செசான் இனது அமைப்பு ரீதியான கட்புல மொழிப்பிரயோகம் பிரதானமாகப் பங்களிப்புச் செய்ததோடு முன்மாதிரியாகவும் அமைந்தது. மேலும், கனவடிவவாதமானது, அருப வாதக்கலையின் முன்னோடிக் கலை இயக்கமும் ஆகும்.
இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆரம்பமாகிய கனவடிவவாதமானது ஓவியத்துறைக்கு மாத்திரம் வரையறைப்பட்டதாக இருக்கவில்லை . கனவடிவக் கருத்துக்களுக்காகவும் உருவச் சிற்பங்களுக்காகவும் அது பயன்படுத்தப்பட்டது. கனவடிவவாதம் பிரதானமாக, இரண்டு வழிகளில் செயற்பட்டது, அதன் முதலாவது வகை, பகுப்பாய்வுக் கனவடிவ வாதம் (Analytical Cubism 1909-11) ஆவதோடு, இரண்டாவது வகை, தொகுப்புக் கனவடிவவாதம் (Synthetic Cubism) 1912-14) ஆகும். தொகுப்புக் கனவடிவவாதத்தின் பிரயோகங்களின் மூலம் கொலாஜ் (Coluge – ஒட்டுச்சித்திரம்) முறை தொகுப்பாக்கம் ( Assemblagc) போன்ற கலை அம்சங்கள் அறிமுகஞ் செய்யப்பட்டதோடு, பகுப்பாய்வுக் கலைவடிவவாதத்தின் வழியே அருபச் சித்திரக் கலையும், அரூபச் சிற்பக்கலையும் உருவாயின. அத்தோடு, கனவடிவக் கலைத்துவப் பிரயோகங்கள் கட்டடட நிர்மாணத்துறையின் வளர்ச்சிக்குக் காரணமாயின.
பப்லோ பிக்காசோ இனால் வரையப்பட்ட ‘அவிக்னோனின் யுவதிகள்’ (Les Dermoisciles d Avihnon .1907) எனும் ஓவியமே கனவடிவவாத ஓவியக்கலை உத்திகளை எடுத்துக்காட்டிய முதலாவது படைப்பாகும். இதற்காக ஆபிரிக்கச் சிற்பங்களின் செல்வாக்குப் பெறப்பட்டுள்ளது, மேலும் செசான் இனது படைப்புக்களின் செல்வாக்கும் பெறப்பட்டுள்ளது. இந்த இரண்டு மூலாதாரங்களும் கனவடிவவாத உருவாக்கத்தின் பிரதானமான இரண்டு திருப்புமுனைகளாகும் எனக் குறிப்பிடலாம்.
1908 இல் ஜோர்ஜ் பிராக் இனால் வரையப்பட்ட நிலத்தோற்றக்காட்சி ஓவியங்கள் சிலவற்றை முதன்மையாகக் கொண்டு, லூவி லொன்சல் என்பவரே கனவடிவவாதம் எனும் பெயரைப் புனைந்தார். பிராக் இனது ஓவியங்களில் இடம்பெற்றுள்ள, ஓர் இயல்பாகிய எந்தவொரு பொருளையும் கேத்திரகணித புறக்கோட்டிலிருந்து கனவடிவம் வரையில் குறைத்துக்காட்டும் தன்மையே இப்பெயர் சூட்டப்பட்டமைக்கு காரணமாகியது. மற்றுமொரு விதமாகக் கூறுவதாயின், ஜோர்ஜ் பிராக் இனால் வரையப்பட்ட நிலத்தோற்றக் காட்சி ஓவியங்களில் உள்ள கனவடிவ இயல்புகளைக் கருத்திற்கொண்டே இப்பெயர் இடப்பட்டுள்ளது. இந்த கனவடிவ ஓவியங்கள், இயற்கை விதிகளுக்கு முரணான ஓவியங்களாகும் என அவர் இனங்கண்டார். எவ்வாறாயினும், 1911 இல் கனவடிவவாதம் (Cubism) எனும் பதப்பிரயோகம் ஆங்கில மொழியுடன் சேர்ந்து கொண்டது.
அதன் பின்னர், பிக்காசோவும் ஜோர்ஜ் பிராக் உம் சேர்ந்து கனவடிவவாத ஓவியம் வரைதல் முறையை மேலும் வினைத்திறனுடையதாக்கினர். இருபதாம் நூற்றாண்டின் நவீன ஓவியக் கலைப் பாங்குகளுள் முதன் முதலாக சர்வதேச மட்டம் வரை வியாபித்த ஒரு கலை இயக்கமாக
கனவடிவவாதத்தைக் குறிப்பிடலாம். கனவடிவவாத கலைப் போக்கானது. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கட்டியெழுப்பப்பட்டுள்ள கலை இயக்கங்களுள் நவீன ஓவியக்கலைத் துறையின் பல்வேறு போக்குகளை உருவாக்குவதற்கு உந்துதலளித்தது. இப்போக்குகளுள் ரஷ்ய கட்டமைப்பு வாதம் (Constructivism), எதிர்கால வாதம் (தற்குறிப்பேற்றக்கலை ) (Futurism}, ஒஃபிசம் (Orphism) ஆகியனவும் அடங்கின. அத்தோடு கனவடிவவாதமானது நவீன கட்டடக்கலையின் வளர்ச்சிக்கும் காரணமாகியது, எவ்வாறாயினும் கனவடிவ வாததமானது நவீன கலைஞனுக்குக் கலையைப் படைப்பதற்குத் தேவையான சுதந்திரத்தை வழங்கியது.
கனவடிவவாதக் கலைஞர்களின் முதன்மையான உத்திகள்/தன்மைகள்
கனவடிவவாதம் எனும் கலை இயக்கமானது ஐரோப்பிய நவீன கலையின் மிகச் சிக்கலான ஒரு தோற்றப்பாடாகும். ஏனைய கலைப்படைப்புக்களிற் போன்றே கனவடிவக் கலையினது பணியும் இயற்கையை (Nature) மீளளித்தலாகும். எனினும் அது வெளிப்பாட்டுவாதக் கலையிற்போன்று, வெளியின்மீது தூரக்காட்சியுடன் காட்டப்படவில்லை. யாதேனும் பொருளின் சகல பக்கங்களையும் ஒரே தளத்திற்குக் கொணர்வதன் மூலமே அது காட்டப்பட்டது. அதற்கமைய யாதேனும் பொருளின் புறவாரியான தன்மையைத் தகர்த்து அதனை ஆக்குவதற்குப் பயன்படுத்திய அமைப்பு சில தளங்களில் காட்டப்பட்டது. மேலும் முன்னணியின் அமைந்த பிரதான உருவங்களுக்கும் பின்னணிக்கும் இடையே துண்டிக்க முடியாத தொடர்பு கட்டியெழுப்பப்பட்டது.
கனவடிவவாதமானது. அது வரையில் இருந்த ஐரோப்பியக் கலையில் காணப்பட்ட, கலை தொடர்பான வெளிசார்ந்த மற்றும் உருவஞ்சார்ந்த நம்பிக்கைகளை முற்றுமுழுதாகத் தலைகீழாகப் புரட்டியது. அதாவது உண்மையிலேயே கனவடிவவாதம் என்பது உலகினைக் கலையினுள் வெளிப்படுத்திக்காட்டும் ஒரு புதிய முறையாகும். அதன் மூலம், ஐரோப்பியக் கலையில் பல நாறு வருடகாலம் இருந்து வந்த அதிகாரத்துவம் அதாவது ஒரு மைய / ஒரு புள்ளித் தூரதரிசனம் புறந் தள்ளப்பட்டது. அதற்குப் பதிலாக பல்மைய தூரக்காட்சி முறை கட்டியெழுப்பப்பட்டது. அதாவது யாதேனும் பொருளில் காணப்படும் வெவ்வேறுபட்ட மற்றும் சிறப்பான வடிவங்கள் மற்றும் பக்கங்களினூடாக இருபரிமாணத்தளத்தில் சித்திரிக்கப்படும். அதன் மூலம் தொல்சீர் ஓவிய மாதிரியும் தகர்க்கப்பட்டது. அதாவது பெரிதும் துண்டிக்கப்பட்ட மேற்பரப்பு உருவாகியது. கனவடிவவாத ஓவியக்கலையில் இடம்பெறும் வடிவத்துண்டிப்பு மற்றும் மீளக்கட்டியெழுப்பலின் விளைவாக பொதுவான கண்ணினால் உலகைக் காணுதல் (கட்புலனாகு யதார்த்தவாம்) தடைப்பட்டது. அதாவது உலகமானது கலையின் மூலம் மீளக்கட்டியெழுப்பப்படுகின்றது. இத்தன்மையே நவீனத்துவக் கலையின் குவிமைய இயல்பாகும். கனவடிவவாதக் கலைப் பிரயோகத்தை அதன் தொழினுட்பப் பயன்பாட்டின்படி இரண்டு பகுதிகளாகப் பிரித்து நோக்கலாம்.
1. பகுப்புக் கனவடிவ வாதம் 2. தொகுப்புக் கனவடிவ வாதம்
பகுப்புக் கனவடிவவாத முறையின்படி, ஓவியம் வரையும் போது ஓவியத்தின் கருப்பொருளாக அமையும் பொருளானது சிறு பகுதிகளாக உடைந்த ஒரு பெரிய அலகாகவே காட்டப்படும். பகுப்புக்கனவடிவ ஓவியங்கள் ஒருதனி வர்ணத்தினாலானது. அதாவது அவை பெரும்பாலும் உஷ்ண நரை நிறத்தை அல்லது மங்கிய கபில நிறத்தைக் கொண்டவையாகும்.
புரொய்ட் வொலெர்ட் இனது உருவப்படங்கள் (ஜோர்ஜ் பிராக்)
கனவடிவாதக் கலை இயக்கத்தின் தொகுப்புக் காலப்பகுதியில் அதற்கான முதன்மையான அடித்தளத்தை இட்டவர் ஜோர்ஜ் பிராக் ஆவார். ஓவியத்தின் மேற்பரப்பின் தன்மையை அதாவது இழையமைப்பை மாற்றுவதே அவரது முதலாவது பரீட்சார்த்த நடவடிக்கையாக அமைந்தது. அதற்காக அவர் மணல், மரத்தூள், வர்ணம் ஆகியவற்றைக் கலந்து சொரசொரப்பான மேற்பரப்பை ஆக்கினார். இச்செயன்முறை, தொகுப்புக் கனவடிவ வாதத்தின் ஆரம்பத் தருணமாகும். அதே ஆண்டின் இறுதிப் பகுதியில் அதாவது 1912 இன் இறுதிப் பகுதியில் பப்லோ பிக்காசோ தொகுப்புக் கனவடிவவாதக் கருத்தை மேலும் விரிவுபடுத்தி, ஒட்டுச்சித்திர (Collagc) முறையில் கலைப்படைப்புக்கள் ஆக்கும் பணியை ஆரம்பித்தார்.
- பப்லோ பிக்காசோ
- ஜோஜஸ் பிராக்