அமராவதி கலைப் படைப்புக்கள்
இந்தியாவில் மௌரிய பேரரசு வீழ்ச்சியடைந்த பின்கு கி.மு. 2 ஆம் நூற்றாண்டளவில் தென்னிந்தியா வின் கிருஷணா மற்றும் கோதாவரி ஆற்றங்கரைகளுக்கு அருகிலுள்ள பிரதேசம் முக்கியமான ஒரு பௌத்த நிலையமாக விளங்கியது. தெலுங்கு மொழியைப் பேசுகின்ற திராவிடர்களான ஆந்திரர்கள் புத்த சமயத்தைத் தழுவிய பௌத்தர்களாக மாறியதோடு ஆந்திர தேசமும் பௌத்த கலை மத்திய நிலையமாக வளர்ச்சி பெற்றது. பண்டைய காலத்தில் சாதவாகனர்கள் ஆந்திரரென அழைக்கப்பட்டனர். அவர்கள் தங்களைச் சாதவாகனர்களெனக் கூறிக் கொண்டனர். இக்காலப் பகுதியிலே ஆந்திரர் அதாவது சாதவாகனர் அரச பரம்பரையினராகப் படிப்படியாக வளர்ச்சியடைந் துள்ளமை தெளிவாகிறது. சாதகவாகனருடைய ஆட்சியின் மத்திய நிலையமாக ஆந்திரப் பிரதேசம் விளங்கியது. தென்னிந்தியாவில் கிருஷ்ணா நதிக் கரைக்கு அருகிலுள்ள சர்வகோலம், தர்மி கொட்டா ஆகிய இரு நகரங்களை முதன்மையாகக் கொண்டு இக் கலைப் பாரம்பரியம் வளர்ச்சி பெற்றுள்ளமை யைக் காண முடிகிறது. கி.மு. 25 இலிருந்து கி.பி. 320 வரையுள்ள காலப்பகுதியிலே அமராவதி கலை வளர்ச்சி பெற்றுள்ளது.
ஆந்திரர்கள் உரோமர், சீனா, இந்துனேசியா, இலங்கை போன்ற நாடுகளுடன் வணிக தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். இதன் விளைவாக கலாசாரத் தொடர்புகளும் வளர்ச்சியடைந்துள்ளது என்பதையும் கலைப்படைப்புக்களை ஆராயும்போது தெளிவாக அறியக்கூடியதாகவுள்ளது. குறிப்பாக இலங்கையில் புத்தர் சிலை நிர்மாணிப்பில் ஆந்திரக்கலை செல்வாக்குச் செலுத்தியிருப்பதை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது. அனுராதபுரம், மகா இலுப்பல்லமைப் பிரதேசத்தில் கிடைக்கப் பெற்ற புத்தர் சிலைகளில் இச்செல்வாக்கினைக் காணக்கூடியதாகவுள்ளது என்ற கருத்தினை பேராசிரியர் செனரத் பரனவிதான குறிப்பிட்டுள்ளார். இதேபோன்று அனுராதபுரத்தில் ருவன்வெலிசாயா வின் முற்றத்தில் கிடைக்கப்பட்ட புத்தர் சிலையிலும் இவ்வாறான பண்புகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அமராவதி பிரதேசம் ஆரம்ப காலத்தில் தேரவாத பௌத்த சமயத்தின் மத்திய நிலையமாகவும் பின்பு மகாயான பௌத்த மத்திய நிலையமாகவும் வளர்ச்சி பெற்றுள்ளதென்று கலை விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர். சிறப்பாக மகாயானத்தின் துறவியான நகார்ஜுனவினது தலைமையில் இந்நிலையம் சமய நிலையமாக வளர்ச்சியடைந்தது என ஜம்புதீப பௌத்தக் கலை எனும் தமது நூலில் ஆனந்த குருகே குறிப்பிட்டுள்ளார். அதற்கேற்ப ஆந்திரப் பிரதேசத்தில் வெள்ளை வர்ணம் பூசப்பட்ட பளபளப்பான பல தாதுகோபங்கள் தோன்றியதோடு அதனுடன் கூடவே சிற்பச் செதுக்கல் களும் புத்தர் சிலைகளும் ஆக்கப்பட்டமை தெரிகின்றது.
அமராவதி பாரம்பரியத்தைச் சேர்ந்த ஆக்கங்கள் அங்குள்ள தாதுகோப அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்டன. இது தாதுகோபம் 19 ஆம் நூற்றாண்டில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் களால் கண்டுபிடிக்கப்பட்டபோது உடைந்து போன நிலையில் கல்வேலியொன்றும் தூண்கள் சிலவும் செங்கற் குவியலொன்றுமே கிடைக்கப் பெற்றன. தொல்பொருளியல் காரணிகளின்படி அமராவதி சைத்தியம் கி.பி. 2 ஆம் நூற்றாண்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதென்பது புலனாகின்றது. இவ்விடத்தில் கிடைக்கப் பெற்று தற்பொழுது சென்னை அரும்பொருள் காட்சியகத்தில் வைக்கப் பட்டுள்ள அமராவதி தாதுகோபச் செதுக்கல் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. இதில் செதுக்கப்பட்டுள்ள அமராவதி சைத்திய மாதிரியைத் தெளிவாகக் காண முடிகின்றது.
அமராவதி தாதுகோபத் தட்டு
மாதிரியும் நுட்பமுறையும்
இத்தகட்டுச் செதுக்கலின்படி சைத்தியத்தின் தாதுகர்ப்பத்தின் மீது புத்த பெருமானின் சரிதை ஜாதக கதைகள் காணப்படுகின்றன. கல் தகட்டுச் செதுக்கல் பொருத்தப்பட்டிருந்த விதம், சைத்தியத்தைச் சுற்றி பல கல்வேலிகளைக் கொண்டு அலங்கரிக்கப்பட்ட தன்மை ஆகியவற்றையும் அறிய முடிகின்றது. சாஞ்சி, பாரூத் சைத்தியங்களில் காணப்படுகின்றவாறான தோரணங்கள் இங்கு காணப்படவில்லை. அதற்குப் பதிலாக அமராவதி சைத்தியத்தில் ஐந்து தூண்கள் காணப்படு கின்றன.
அமராவதி கற்செதுக்கல் இளம் பச்சை நிறத்திலான ஒரு வகைச் சுண்ணக்கல்லினால் ஆக்கப்பட் டுள்ளது. இங்குள்ள செதுக்கல்களின் வடிவங்களாக வட்ட வடிவமான தகட்டுச் செதுக்கல், சதுர வடிவமான தகட்டுச் செதுக்கல், செவ்வக வடிவமான தகட்டுச் செதுக்கல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இக்கற்தகடு பயன்படுத்தப்பட்டதன் விளைவாக இது குறை புடைப்பு செதுக்கல்களாக அமைக்கப் பட்டுள்ளது.
நுட்ப முறையும் கலை இலட்சணங்களும்
அமராவதி கலைஞர்கள் சந்தர்ப்பங்களை எடுத்துக் காட்டுவதற்காக சாஞ்சி, பாரூத் கலைஞர்களை விட வேறுபட்டு இயற்கையான விதமான உணர்வுகளை வெளிப்படுத்தும் தன்மையில் ஆக்கங்களைச் செதுக்கியுள்ளனர். குற்புடைப்பு செதுக்கல்களான போதிலும் ஓர் உருவம் மற்றைய உருவத்தினால் மறைக்கப்படுதல், தூரதரிசனம் என்பவற்றைக் காட்டல், அண்மை – சேய்மையைக் காட்டல், கட்டடங்களின் கட்டடக் கலை அம்சங்களைக் காட்டல் ஆகியன வெற்றிகரமாக எடுத்துக் காட்டப் பட்டுள்ளன. அமராவதி செதுக்கல்களில் மனித உருவங்கள் சாஞ்சி செதுக்கல்களை விட நீளமானவையாகக் காட்டப்பட்டுள்ளன. கால்மட்ட உருவங்களின் ஆடையானது உடலோடு ஒட்டியவிதமாக ஆக்கப்பட்டுள்ளது. ஆபரணங்கள் குறைவாகவே காணப்படுகின்றன. அமராவதி செதுக்கல் மிக உயிரோட்டமாகச் செதுக்கப்பட்டுள்ளன. எல்லா மனித உருவங்களும் இயற்கைத் தன்மையுடையவை. அதில் பாத்திரங்கள் பிரதான நிகழ்வுகளுடன் சம்பந்தப்படுத்தி நாடக வடிவத்தில் காட்ட முயற்சித்திருப்பது கலைஞனின் திறமையைக் காட்டுகின்றது. பல உருவங்களை ஒரு கற்தகட்டுச் செதுக்கலில் காட்டியிருத்தல் அமராவதிக் கலைஞர்களின் தனிச்சிறப்பம்சமாகும். அவ்வுருவங்கள் உயிரோட்டமானவையாக இயக்கத்தன்மையுடன் காட்டப்பட்டிருத்தல் படைப்பாக்கத் திற்கு பாதிப்பேதும் ஏற்படவில்லை .
அமராவதி செதுக்கல் வேலைப்பாடுகளுக்கான விடயப்பொருள்களாக சாதகக் கதைகள், புத்தர் வாழ்க்கை நிகழ்வுகள் போன்றவை அடிப்படையாகக் கொள்ளப்பட்டுள்ளன. சாஞ்சி, பாரூத் செதுக்கல் களில் புத்தரின் உருவம் குறியீட்டு ரீதியில் காட்டப்பட்டுள்ளது. எனினும் அமராவதி செதுக்கல்களில் புத்தர் உருவங்களும் சில சந்தர்ப்பங்களில் குறியீடுகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது செதுக்கல் தளங்களை ஆராயும்போது தெளிவாகின்றது. சாஞ்சி தோரணைச் செதுக்கல் வேலைப்பாடுகள் நேரிய மெய்ந்நிலையுடனும் சிலபோது காட்டுத் தன்மையுடனும் காட்டப்பட்டுள்ளது. எனினும் அமராவதி செதுக்கல்களில் ஒப்பமான தன்மையுடன் லலிதாகும் தன்மை நன்கு வெளிப் படுத்தப்பட்டுள்ளன. உதாரணமாக புத்தரை வழிபடும் பக்தைகள் எனும் செதுக்கலில் பெண்ணின் லலிதத்தையும் பௌத்த பக்தியையும் உச்ச அளவில் காட்டுவதில் கலைஞன் வெற்றி பெற்றுள்ளார்.
“புத்தர் பெருமானை வழிபடும் பக்தையர்” “ராகுல குமாரன் முதுசம் வேண்டுதல்” எனும் செதுக்கல் வட்டவடிவ கற்பாளமொன்றில் ஆக்கப் பட்டுள்ளது. புத்தர் பெருமான் தமது உறவினர்களின் வேண்டுதலின் பேரில் கிம்புள்வத்த புரவுக்கு வருகை தந்தபோது புத்தர் பெருமானின் இல்லற வாழ்க்கையின் கால மகன், புத்தர் பெருமானிடம் ‘முதுசம் தருமாறு வேண்டியவாறு பின்தொடர்ந்து செல்லும் முறையே இதன் விடயப்பொருளாக அமைந்துள்ளது. கற்பாளத்தின் மத்தியில் உள்ள புத்தரின் உருவத்துக்குச் சிறப்பிடம் கிடைக்கும் வகையில் ஆக்கப்பட்டுள்ள இந்த செதுக்கலில் புத்தர் பெருமானின் இரு தோள்களையும் மறைத்துள்ள காவியுடை சரிந்து விழுமாப் போன்று சந்தத்துக்கிசைவாகக் காட்டப்பட்டுள்ளது. ஒளிவட்டம் காட்டப்பட்டிருத்தலும் ஒரு சிறப்பம்சமாகும். புத்தர் உருவத்துக்கு வலது புறத்தே ராகுல குமாரன் செதுக்கப்பட்டுள்ளார். செதுக்கல் பாளத்தின் வெறும் இடங்களை நிரப்புவதற்காகப் புத்தரை வழிபடும் பக்தர்கள் செதுக்கப்பட்டுள்ளனர்.
மகாமாயாதேவி கண்ட கனவு
ராகுல குமாரன் முதுசம்’ தருமாறு வேண்டுதல்
செவ்வக வடிவான கற்பாளமொன்றில் ‘மாயாதேவி கண்ட கனவு’ எனும் செதுக்கல் ஆக்கப்பட்டுள்ளது. நான்கு (சதவவரம்) தேவர்களின் மனைவியர் சித்தார்த்த குமாரனின் தாயாராகிய மகாமாயா தேவியை அனபதப்த குளத்துக்கு அழைத்துச் சென்று, அந்நீரில் நீராட்டும் விதம் இந்த செதுக்கலின் விடயப்பொருளாக அமைந்துள்ளது. மகாமாயாதேவி உருவம் செதுக்கலின் நடுப்பகுதியில் செதுக்கப் பட்டுள்ளது. தேவர்கள் மனைவியர் கையில் குடமேந்தியவாறு தேவியைச் சூழ நிற்பது காட்டப் பட்டுள்ளது. பெண்ணின் அழகு பெரிதும் வெளிப்படுத்தப்படும் வகையில் செதுக்கப்பட்ட இப்பெண் உருவங்களில் சந்தலயத்தை தெளிவாகக் காண முடிகின்றது.
இச்செதுக்கல் அமராவதியில் ஒரு கற்றூணில் உள்ளது. புத்தர் சரிதையின் நான்கு சந்தர்ப்பங்கள் அதில் காட்டப்பட்டுள்ளன. இல்லறம் துறத்தல், புத்தராகுதல், புத்தத்துவத்தின் படியொழுகுதல், பரிநிர்வாணமடைதல் என்பனவே அவையாகும். ‘துறவறம் பூணல்’ எனும் செதுக்கலில் குதிரைக்குக் மேல் பயணம் செய்கின்ற போதிசத்துவருக்கு குடை பிடித்துக் கொண்டிருக்கும் தேவ உருவமொன்று உள்ளது. குதிரையின் குழம்புச் சத்தம் கேட்காதவாறு தேவர்களுடைய கைகளின் மீது குதிரை பயணிப்பது போன்று காட்டப்பட்டுள்ள செதுக்கல் பௌத்த இலக்கியங்களில் வரும் சம்பவங்களை விபரிப்பதாகவுள்ளது. அத்துடன் சமநிலைத் தன்மையிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இல்லறந் துறத்தல் செதுக்கல்
நானாகிரி யானையை அடக்குதல் செதுக்கல்
அமராவதி செதுக்கல்களின் பாவ வெளிப்பாடு மிக சிறப்பானது. நானாகிரியானையை அடக்குதலை இந்தக் கலைஞர் உதாரணமாகக் குறிப்பிட்டாரெனலாம். இரக்கம், கருணை, பக்தி, பயம் போன்றவற்றை ஒன்றாக ஒரே கற்பாளத்தில் செதுக்கலாக நிர்மாணிக்கப்பட்ட விதம் கலைஞரின் திறமையை எடுத்துக் காட்டுகின்றது. வட்டவடிவமான தளத்தில் புத்தர் வரும் வழியில் எதிரே வருதலும், புத்தரின் எதிரே அடங்கிவிடுதலும் காட்டப்பட்டுள்ளது. புத்தர் பெருமான் மனித உருவில் காட்டப் பட்டுள்ளன.
அமராவதி செதுக்கல்களில் காணப்படும் புத்தர் சிலைகள்
அமராவதி கலைப் பாரம்பரியத்தைச் சேர்ந்த புத்தசிலைச் செதுக்கல்கள் பலவற்றைக் கற்பாளச் செதுக்கல்களில் காணக்கூடியதாகவுள்ளது. அவற்றிடையே அமர்ந்த மற்றும் நின்ற நிலை புத்தர் சிலைகள் தனிச் சிறப்புடையவை. இச்செதுக்கல் பாளங்கள் குறைபுடைப்பு முறையில் ஆக்கப்பட் டுள்ளது. அமராவதிச் செதுக்கலில் புத்தராகுதல், புத்தராக வாழுதல் ஆகிய இரண்டு செதுக்கல்களிலும் அமர்ந்திருக்கும் இரண்டு புத்த உருவங்களும் காணப்படுகின்றன.
அமராவதிப் புத்த சிலைகளில் பண்டைய ஆக்கங்களில் கேச அமைப்பு சிறப்பான ஒரு முறையில் அமைக்கப்பட்டுள்ளது. சிறு துருத்தலுடன் கூடிய சுருள் போன்ற ஊஷ்னிசம மறைக்கப்படுமாறு சுருட்டையாக அமைக்கப்பட்டுள்ளது. ஒரு பக்கம் போர்க்கப்பட்டவாறு காணப்படும் காவியுடையும் அவற்றில் அலையமைப்பும் சிறப்பு அம்சங்களாகும்.
அமர்ந்த நிலைப் புத்தர் சிலைகளில் இடது கை முழங்கையில் மடிக்கப்பட்ட இடத்திலிருந்து கீழ் நோக்கிச் சரியுமாப் போன்ற நீளமான காவியுடை ஒரு சிறப்பம்சமாகும். இது மதுரா பாரம்பரியத்தின் இன்னுமொரு வளர்ச்சியாகக் கருதப்படுகின்றது போன்று உடலை ஊடுருவக் காட்டும் தன்மை அமராவதிச் செதுக்கல்களில் அடங்கியுள்ள புத்தர்சிலைகளில் காணப்படுவதில்லை . வலது கரம் அபய முத்திரையைக் காட்டுவதோடு, இடது கரம் காவியுடையைத் தாங்கியுள்ளது. அலங்கார வேலைப்பாடுகளற்ற ஒளிவட்டம் புத்தர் சிலைகளில் காணப்படுகின்றது.