சிற்ப ஆக்கங்கள் (கல், உலோகச் சிலைகள்)
சிந்து நதிக்கரை நாகரிகத்தில் மனித உருவங்களைக் கொண்ட சிலைக்கு மிக அரிதாகவே கிடைக்கப்பட்டுள்ளன. மொஹன்ஜதாரோ எகிப்திய நாகரிகங்களைப் போன்ற ஞாபகார்த்த சிலைகள் இந்நாகரிகத்தில் கண்டுபிடிக்கப்படவில்லை. சமய வழிபாட்டு தலங்கள் என இனங்காணப்பட்ட இடங்களில் பாரிய சிலைகளின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்படவில்லை. அவை நிர்மாணிக்கப்பட்டிருக்கு மாயின் அழிந்து விடும் மூலப்பொருட்களான மரம் அல்லது விரைவில் அழிந்து விடக்கூடிய மூலப்பொருட்களால் ஆக்கப்பட்டவையாக இருந்திருக்கலாம் என அனுமானிக்கப்படுகின்றது. சிறிய அளவிலான சிலைகள் சில கிடைத்துள்ளன. அவை வெவ்வேறு கலைப்பாணிகளுடன் நிர்மாணிக்கப் பட்டுள்ளன. சிந்து நதிக்கரை நாகரிகத்தில் இருந்து பெறப்பட்ட சில சிற்பப் படைப்பாக்கங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.
- பூசகர் உருவம் – மொஹன்ஜதாரோ
- செஞ்சுண்ணக்கல்லில் செதுக்கப்பட்ட முண்ட (கவந்த) உருவம்
- சாம்பல் நிறச் சுண்ணக்கல்லில் செதுக்கப்பட்ட நடனப்பாங்கைக் கொண்ட முண்ட (கவந்த) உருவம்
- நடனமாது உருவம் (வெண்கலம்)
இந்த ஆக்கங்கள் சிந்து நதிக்கரை நாகரிகத்தில் காணப்பட்ட சிறப்பான படைப்பாக்கங்களாகக் கருதப்படுகின்றன. மேற்குறிப்பிட்ட சிற்பப் படைப்பாக்கங்களுக்கு மேலதிகமாக தாய்த்தேவதை உருவங்களும் பரவலாகக் கிடைத்துள்ளன. இவை மிகச் சிறிய அளவுடைய சுடுமட்சிலை (Terracotta), ஆக்கங்களாக இருப்பதோடு, ஆரம்ப நிலைப் பண்புகளைக் காட்டுகின்றன. குறிப்பாக இந்த உருவங்கள் தாய்மொழியை உணர்த்துவதற்காக அகன்ற இடுப்பு, மார்பகங்கள் போன்ற அங்கங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளன. மலர்க்கொடி அலங்காரங்கள் மூலம் அழகுபடுத்தப்பட்ட தலையணிகள், கழுத்தணிகள், இடையணிகள் போன்றவையும் இந்த ஆக்கங்களுள் சிறப்பிடம் பெறுகின்றன.
தாய்த்தேவதை உருவங்கள்
பூசகர் உருவம் – தாடி உள்ள மனிதன் (Beard Man)
மொஹன்ஜதாரோ நகரத்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட பூசகர் உருவம் கல்லில் செதுக்கப்பட்ட சிற்பங்களுள் முக்கிய இடத்தைப் பெறுகிறது. உடலின் மேற்குப்பகுதியைக் காட்டும் இச்சிற்பம் ஏறத்தாழ 7 அங்குலம் (17.5 சென்ரிமீற்றர்) உயரமுடையது. வெண்ணிறச் சுண்ணக்கல்லினால் செய்து சிவப்பு நிறம் பூசப்பட்டுள்ளது.
மோடிப்படுத்தப்பட்ட நெற்றி ஒடுக்கமானது கொளுக்கியுடனான நெற்றிப்பட்டம் ஒன்று நெற்றியில் காணப்படுகிறது. சீராக அமைந்த தாடியும் உண்டு. உடலின் ஒரு பக்கத்தை மறைத்துள்ள சால்வை முழுவதிலும் மூன்று இதழ்களைக் கொண்ட மலர்கள் அல்லது இலைகளாலான கோலம் உள்ளது. இது கிரேக்க, பபிலோனிய மற்றும் கிரீற் பண்பாடுகளில் காணப்படும் ஒரு வடிவமைப்பாகும். இக்குறியீட்டில் தெய்வீகத் தன்மை மறைந்திருப்பதாகக் கருதலாம். உடலின் ஒரு பக்கத்தை மட்டும் மறைக்கும் சால்வை, பாதி மூடிய விழிகள், பாதிமழிக்கப்பட்ட தலை ஆகிய பண்புகளைக் கொண்டிருப்பதால் இச்சிற்பத்தை தியான நிலையில் உள்ள ஒரு பூசகர் எனக் குறிப்பிடுவதற்குக் காரணமாக அமைகின்றது. இயல்பான தன்மைகளின்றி மோடிப்படுத்தப்பட்ட பாரம்பரிய இயல்புகளைக் கொண்ட வடிவங்களே இதில் காணப்படுகின்றன. அத்துடன் சாந்தம், தியான உணர்வு ஆகிய தன்மைகளை இது வெளிப்படுத்துகிறது. இது மொங்கோலிய வகைக்குரிய மனிதனொருவ னென பஷாம் தெரிவிக்கிறார். இவ்வகை மனிதர்கள் சிந்து நதிக்கரையில் வாழ்ந்தமைக்கான சான்றுகள் மொஹன்ஜதாரோவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மண்டையோட்டின் மூலம் அறியப்பட் டுள்ளது. எவ்வாறாயினும் இந்த ஆக்கம் மொசப்பொத்தேமியச் சிற்பக்கலை ஆக்கங்களை ஒத்ததாகக் காணப்படுகின்றது. உருவத்தைக் காட்டுவதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ள விறைப்பான தன்மையை சுமேரியச் சிற்பங்களில் காணலாம்.
நடன மாது
தற்போது புதுடில்லி தேசிய அரும்பொருட் காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள இச்சிற்பம் மொஹன்ஜதாரோவில் கண்டெடுக்கப்பட்டது. இந்து நதிக்கரை மக்கள் உலோக வார்ப்புத் தொழினுட்பத்தில் மேம்பட்டிருந்தமைக்கு உலோகத்தாலான இந்த நடனமாதுச் சிற்பம் ஒரு நல்ல சான்றாகும். முழுப் புடைப்பு முறையில் உலோகத்தால் வார்க்கப்பட்ட இச்சிலை 4 1/2 அங்குலம் உயரமுடையது.
பெண்ணுடலின் நளினம் நன்றாகப் புலப்படும் விதத்தில் நிர்மாணிக்கப்பட்ட ஒரு வெண்கலச் சிற்ப மாகும். இது மோடிப்படுத்தப்பட்ட பண்புகளை வெளிப்படுத்துகின்றது. மெல்லிய உடலமைப்பைக் கொண்ட வெறும் மேனிச் சிற்பமாகும். கை நிரம்பிய வளையல்களும் கழுத்தில் தாலியுடனான மாலையும் ஆபரணங்களாகக் கொண்டுள்ளது. இது சமகாலப் பண்பாட்டில் பெண்களின் ஆபரணங்கள் தொடர்பான ஒரு கருத்தைத் தருகின்றது.
இப்பெண் நேரிய உடல்நிலையுடன் காணப்படுகிறார். ஒரு கை இடுப்பில் வைக்கப்பட்டுள்ளது. மற்றைய கை சற்று மடிக்கப்பட்டுள்ள காலின் மீது வைக்கப்பட்டுள்ளது. உடல் சற்று முன்னோக்கி வளைந்துள்ள நிலையில் காட்டப்பட்டுள்ளது. இந்நிலை நடனத்தில் ஈடுபட்டுள்ள நிலையொன்றைக் குறிப்பதாக உள்ளது. தலைமயிர் கலைந்த தன்மையுடன் அல்லது சுருட்டையாக பின்னிய தன்மையைக் கொண்டிருக்கிறது. இக்கேசத்தின் இயல்புகள், மூன்று மணிகளைக் கொண்ட மாலை என்பன ”குல்லி” பண்பாட்டுப் பெண்களின் பண்புகளை வெளிப்படுத்துகின்றன என்பது விமர்சகர்களது கருத்தாகும். கற்சிற்பங்களைப் போலவே இந்நடனமாதுச் சிற்பமும் சமநிலைத் தன்மையை வெளிப்படுத்துகிறது. அவை உயிர்ப்புடனும் காணப்படுகின்றன. வேறு பெண் தெய்வங்களைக் குறிக்கும் சிற்ப நிர்மாணிப்புகளில் புலப்படும் பெண் இயல்புகளில் இருந்து மாறுபட்ட மெல்லிய உடலமைப்பும் உயிரோட்டமான நிலைகளையும் வெளிப்படுத்துவதாக அமைந் துள்ளது.
இந்நடனமாது சமகால மத்திய கிழக்குப் பகுதிகளிலும் அத்துடன் இந்துப் பண்பாட்டு இயல்புகளிலும் காணப்படும் ஆலய நடன மங்கை, விலைமாது அல்லது அதற்கொத்த ஒரு உருவமென பல கருத்துகள் நிலவுகின்றன.
செம்மணற் கல்லினாற் செய்த முண்ட (கவந்த) மனித உருவம்
புதுடில்லி அரும்பொருட்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும், செந்நிற சுண்ணாம்புக் கல்லினால் செய்யப்பட்ட இவ்வுருவம் ஹரப்பா பிரதேசத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. இது 9 உயரமுடையது. மானிட உடலின் அழகுமிகு நுணுக்கமாக காண்பிக்கப்பட்டுள்ளது. இது தத்துரூபமாகக் கண்கவர் விதத்தில் உள்ளதென பஷாம் தெரிவித்துள்ளார். சிலை நன்கு ஒப்புரவாக்கி நிர்மாணிக்கப்பட்டுள்ளதால் தசைகளின் இயற்கைத் தன்மை நன்றாகப் புலப்படுகிறது. பிற்காலத்தில் உருவான கிரேக்க கேத்திரகணித வடிவிலான சிலை நிர்மாணிப்புகளை ஒத்த பண்புகளுடன் காணப்படும் இச்சிலை இந்திய நிர்மாணிப்பாக பெஞ்சமின் ரோலன்ட் குறிப்பிடுகின்றார். வாட்ட சாட்டமான உடலமைப்புடன் காணப்படும் இந்த வெறும் மேனி உருவம் சிவனைக் குறிக்கிறது எனவும் கருதப்படுகிறது. அதற்கான காரணம் நான்கு கைகளைக் கொண்டிருப்பதாகும். கைகளும் தலையும் வெவ்வேறாக இதற்குப் பொருத்தப்பட்டுள்ளது என்பதற்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அதாவது இம்முண்ட உருவத்தில் இவற்றைப் பொருத்துவதற்காக உபயோகித்த துளைகள் காணப்படுகின்றன. இருந்தபோதும் தலையும் நான்கு கைகளும் கால்களும் இவ்வுருவில் காணப்பட வில்லை .
நரை நிறச் சுண்ணக்கல்லில் பொளியப்பட்ட நடனபாங்கான முண்ட (கவந்த) உருவம்
நரை நிறச் சுண்ணக்கல்லில் செதுக்கப்பட்ட இம்முண்ட (கவந்த) உருவம் ஹரப்பாவில் கண்டெடுக்கப் பட்டதாகும். இது முழுப் புடைப்பு முறையில் செதுக்கப்பட்டுள்ளது. உயரம் 4 அங்குலமாகும். (10 மில்லிமீற்றர்). இதுவும் பிற்காலப் பகுதியில் உருவான கிரேக்க உரோம பாரம்பரிய சிற்பக் கலை நிர்மாணிப்புகளில் காணப்படும் பண்புகளுக்கு ஒத்த பண்புகளைக் கொண்ட இந்திய நிர்மாணிப்பொன்று எனக் கருதப்படுகிறது. இடக்கால் சற்று மேலே உயர்த்தி நிற்கும் நிலை நடன பாங்கை நினைவூட்டுவதாக உள்ளது. மானிட உடலின் நளினமான தன்மை இதில் நன்கு புலப்படுகின்றது.