கண்டிக் காலத்தைச் சேர்ந்த புத்தர் சிலைகள்
கண்டிக்காலத்தைச் சேர்ந்த புத்தர் சிற்பங்களும் அவற்றின் இயல்புகளும்
கி.பி. 1600-1800 வரையிலான காலப்பகுதியில் புத்தர் சிலைக் கலையின்மீது பல்வேறு கலை மரபுகள் செல்வாக்குச் செலுத்தியுள்ளன. பொலனறுவைக் காலத்தில் ஏற்பட்ட சோழரின் செல்வாக்குகள் கம்பளைக் காலத்தின் ஊடாக கண்டிக்காலப் புத்தர்சிலைகளிலும் பெரிதும் செல்வாக்குச் செலுத்தியுள்ளதோடு, கம்பளைக் காலச் சிலைகளின் பண்புகள், கண்டிக்கால சிலைகளின் மீதும் செல்வாக்குச் செலுத்தியுள்ளன. கம்பளைக் காலத்தில் புத்தர்சிலைகளுடன் சேர்ந்தவையான, உயரமான சிரசணி, அலைபோன்ற மற்றும் நீரலை போன்ற காவியுடை மடிப்புக்கள், நீளம் குறைவான வட்டவடிவ அகன்ற முகம், ஒடுங்கிய நெற்றி, பெரிய கண்கள் போன்றவை கண்டிக்காலப்புத்தர் சிலைகளில் தெள்ளத் தெளிவாகக் காணப்படும் பண்புகளாகும். முற்பட்ட காலங்களைச் சேர்ந்த சிலைகளின் பண்புகள் இச்சிலைகள் மீது செல்வாக்குச் செலுத்தியுள்ளமை தெளிவு. இக்ாகலத்தில் புத்தர்சிலைகளுடன் புதிதாகச் சேர்ந்த அம்சங்களும் உள்ளன. புத்தரின் உடலெங்கும் பரம்புமாறு இடப்பட்டுள்ள ஒளிவட்டத்தை இக்காலப்பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட எல்லாப் புத்தர்சிலைகளிலும் காணலாம்.
இக்காலத்தில் உருவாக்கப்பட்டுள்ள புத்தர்சிலைகளின் தெள்ளத்தெளிவான ஒரு பண்பு, வெளிப்பாட்டுத்தன்மை குறைவாகக் காணப்படுதலாகும். குறிப்பாக புத்தர் ஒருவரின் முகத்தினால் வெளிக்காட்டப்பட வேண்டிய கருணை, இரக்கம் போன்றவற்றைக் கொண்ட ஆன்மீகத்தன்மை வெளிப்பாட்டை இச்சிலைகளிலும் பெரிதும் காணமுடிவதில்லை . நீளம் குறைவான வட்டவடிவ முகம், ஒடுங்கிய நெற்றி, பெரிய உதடுகள், பெரிய கண்கள், நீளம் குறைவான நாடி போன்ற பண்புகள் சிலையின் அழகையும் தியான நிலையையும் பெரிதும் பாதித்துள்ளன.
நின்றநிலை, அமர்ந்தநிலை, சயன நிலை ஆகிய எல்லா உடல்நிலைகளையும்
கள் எல்லாவற்றிலும் உயரமான சிரசணி இடப்பட்டுள்ளது. வலஞ்சுழியான தலைமுடிச்சுருள்கள் மூலம் தலை அழகுபடுத்தப்பட்டுள்ளது. இக்காலத்தைச் சேர்ந்த புத்தர் சில தெள்ளத்தெளிவாகக் காணப்படும் மற்றைய சிறப்பியல்பு, பெரிய ஒளிவட்டம் இருத்தல் ஆகும். நிற்கும் நிலைச் சிலைகள், அமர்ந்த நிலைச் சிலைகள். சயன நிலைச் சிலைகள் ஆகிய எல்லாவற்றிலும் இப்பண்பைக் காணலாம். சிலையைச் சூழ ஏறத்தாழ ஓர் அடி அகலமான அழகிய அலங்கரிப்பாக இது இடப்பட்டுள்ளது. ஒளிவட்டம் சில நிரைகளாகப் பிரிக்கப்பட்டுத் தாமரை இதழ் அலங்காரம், தீச்சுடர் அலங்காரம் போன்றவற்றின் மூலம் அழகுபடுத்தப்பட்டுள்ளது.
அலை போன்ற மற்றும் நீரைைல போன்ற கனதியான காவியுடையே இக்காலப்புத்தர்சிலைகளில் பெரிதும் காட்டப்பட்டுள்ளது. முற்பட்ட காலங்களிற்போன்று மெல்லிய காவியுடையின் ஊடாக உடல் ஊடுருவிக் காட்டப்படவில்லை. மாறாக அது தடித்த போர்வை போன்றே காட்டப்பட்டுள்ளது. சிலை மனைகளினுள்ளேயே சிலைகள் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு புத்தர்சிலையுடனும் மகரதோரணம் இடப்பட்டிருத்தலையும் காணலாம். சிலைமனையினுள் வேறு பல சிலைகளும் காணப்பட்டன. மேலும் மகர தோரணம் உட்பட சகல சிலைகளும் வர்ணந்தீட்டப்பட்டுள்ளன.
இக்காலத்தைச் சேர்ந்த புத்தர் சிலைகளுள் தம்புள்ளை ரஜமாக விகாரை, தெகல்தொறுவை, சங்காராமை, சூரியகொட ரிதீவிகாரை, தந்துரை, முல்கிரிகலை, வாரணை, மாதன்வலை, அரத்தனை ஆகிய விகாரைகளில் காணப்படும் சிலைகள் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன.
தம்புள்ளை ரஜமகா விகாரைச் சிலைகள்
கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்க மன்னனின் (கி.பி. 1747 – 1784) விசேட அரச அரைசணையுடன் புதுமலர்ச்சி பெற்ற தம்புள்ளை ரஜமகா விகாரை, இக்காலத்தைச் சேர்ந்த புத்தர்சிலை நிர்மாணிப்பில் முக்கிய இடத்தைப் பெறுகின்றது. இலங்கை ஒரு தனி விகாரையில் உள்ள பெருந்தொகையான புத்தர்சிலைகளையும், இக்காலத்தைச் சேர்ந்த பெருந்தொகையான புத்தர்சிலைகளையும் இங்கு காணலாம். ஒட்டுமொத்தக் குகை விகாரையில் 119 புத்தர் சிலைகள் காணப்படுகின்றன. இங்கு உள்ள மிகப்பெரிய குகையினுள் (மகா ராஜ குகையினுள்) நின்ற நிலைச் சிலைகள் 40 உம் அமர்ந்த நிலைச்சிலைகள் 16 உம் ஒரு மிகப்பெரிய சயனநிலைப் புத்தர்சிலையும் உள்ளன. அடுத்ததாகப் பெரிய குகையினுள் (அலுத்விகாரை) நின்ற நிலைச் சிலைகள் 42 உம், அமர்ந்த நிலைச் சிலைகள் 15 உமாக மொத்தம் 57 புத்தர்சிலைகள் உள்ளன. இரண்டாம் அலுத்விகாரையில் அமர்ந்த நிலைச்சிலைகள் 11 உள்ளன. இந்த எல்லாப் புத்தர்சிலைகளதும் முகத்தின் வெளிப்பாடு கம்பளைக்காலச் சிலைகளை விட இதமானது. பென்னாம் பெரிய கண்களுக்குப் பதிலாக சற்றுப் பெரிய கண்கள் காட்டப்பட்டுள்ளன. சிலைகளில் அளவு விகித முறை அனுசரிக்கப்பட்டுள்ளமையால் இச்சிலைகளில் இயல்பை மீறிய பண்புகள் காட்டப்படுவதில்லை. எல்லாச் சிலைகளிலும் வலஞ்சுழியான தலைமயிர்ச் சுருளிகளும் உயரமான சிரசணியும் உள்ளன.
பெரும்பாலான சிலைகள் மரக்குற்றிகளால் ஆக்கப்பட்டு அவற்றின் மீது சுண்ணாம்புச்சாந்து பூசி வர்ணந்தீட்டப்பட்டுள்ளது. ஏனைய சிலைகள் செங்கல் மற்றும் சுண்ணாம்புச் சாரத்தினால் ஆக்கப்பட்டுள்ன.