றமழான் விழா (ஈகைத்திருநாள்)
- றமழான் பண்டிகை (ஈதுல்ஃபித்ர் – ஈகைத் திருநாள் ) இஸ்லாமியர்களின் முக்கியமான ஒரு பண்டிகையாகும்.
- இஸ்லாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமாகிய றமழான் மாதத்தில் இளம்பிறை காட்சியளித்தது தொடக்கம் பத்தாம் மாதமாகிய ~வ்வால் மாதத்தின் இளம்பிறை காட்சியளிப்பது வரையிலான 29 அல்லது 30 நாட்களில் பகற் காலத்தில் உபவாசம் செய்து முடித்து (நோன்பிருந்து) ~வ்வால் மாதம் முதலாம் நாளிலேயே இப்பண்டிகை கொண்டாடப்படும்.
- றமழான் உபவாச காலத்தில் உலகெங்கிலுமுள்ள முஸ்லிம்கள் அதிக பத்தி சிரத்தையுடன் மாதம் முழுவதும் நோன்பிருப்பர்.
- உபவாசம் / நோன்பு என்பது அரபு மொழியில் “ஸவம்” எனப்படும்.
- உபவாசத்தின் போது, அதிகாலத் தொழுகைக்குரிய நேரம் ஆரம்பிப்பதற்கு சற்று முன்னரிலிருந்து சூரியன் மறையும் வரையிலான காலத்தில் உண்ணாமலும் பருகாமலும், நோன்பை முறிக்கும் எந்தக் காரியத்தையும் செய்யாமலும் இருப்பது அவசியமாகும்.
- நோன்பிருக்கும் காலத்தில் பசியின் தாக்கம் உணரப்படுகின்றிமையால் வறியோருக்கு உதவும் மனப்பாங்கு விருத்தியடையும். எனவே அவ்வாறானோருக்கு உதவ முன்வருவர்.
- இக்காலத்தில் முஸ்லிம்கள் அதிக தானங் செய்வர். இது அரபியில் “ஸதகா” எனப்படும்.
- இது தவிர பொதுவாக வசதிபடைத்தோர் தமது கட்டாயக் கடமையான ஸகாத் வரியையும் இக்காலத்தில் கணக்கிட்டு வழங்குவதுமுண்டு.
- நோன்பிருப்பதால் மனதைக் கட்டுப்படுத்தி வாழும் பயிற்சியும் கிடைக்கும். பொறுமையுடன் வாழும் தன்மையும் விருத்தியடையும். கூடவே நற்பண்புகளும் கட்டுப்பாடும் ஒழுக்கமும் விருத்தியடையும்.
- பத்து வருடங்களுக்கு மேற்பட்ட வயதுடைய சித்த சுயாதீனமுள்ள முஸ்லிம்களான ஆண் பெண் இருபாலாரும் நோன்பிருப்பது கட்டாயக் கடமையாகும்.
- நோயாளிகள், வயோதிபர்கள், கருப்பிணித்தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள் போன்றோருக்கு விதிவிலக்கு உண்டு.
- முஸ்லிம்கள் நோன்பிருக்கும் காலத்தில் பகலிலும் குறிப்பாக இரவிலும் அதிகமதிகமாக தொழுகை, குர்ஆன் ஓதுதல் போன்ற வணக்கங்களில் ஈபடுவார். அதன் மூலம் அதிகமதிகமாக நன்மைகளைப் பெறலாம் என்பது அவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையாகும்.
- நோன்பு மாதம் முதல் அடுத்த மாதம் தலைப்பிறை வானில் தென்பட்ட மறுநாள் காலையில் பள்ளிவாசலுக்குச் சென்று தொழுகையில் ஈட்டுவது வரை முஸ்லிம்களின் பிரதானமான செயல்களுள் ஒன்றாகும்.
- றமழான் பெருநாள் தினத்தன்று ஷஸக்காத்துல் பித்ரா| கொடுப்பது அவசியமாகும்.
- தமது குடும்பத்தில் உள்ள உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் தலா இரண்டு கிலோகிராம் அரிசி வீதம் கணக்கிட்டு அவ்வரிசியை ஏழைகளுக்குக் கொடுத்தல் “ஷஸக்காத்துல் பித்ரா” எனப்படும்.
- இதனை பெருநாள் தலைபிறை கண்ட நேரம் முதல் மறுநாள் காலையில் பெருநாள் தொழுகை முடிவடைதல் வரையிலான காலப்பகுதியில் கொடுப்பர்.
பயிற்சி வினாக்கள்
1. இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கியமான விழா எது?
2. ரமழான் பண்டிகை எப்போது கொண்டாடப்படுகிறது?
3. நோன்பு என்ற சொல் அரபுச் சொல் அரபு மொழியில் எவ்வாறு அழைக்கப்படும்?
4. நோன்புகாலத்தில் விதிவிலக்கு வழங்கப்பட்ட மக்களைக் கூறுக?
5. நோன்புக்காலத்தில விருத்தியடையும் நற்பண்புகள் கூறுக?
6. ரமழான் தினத்தில் வழங்கப்படும் தானம் எது?