கலைஞர் எச். ஏ. கருணாரத்ன

  • இலங்கைச் ஓவியக் கலையில் புதிய மரபை உருவாக்குவதில் முன்னோடியாகச் செயற்பட்ட ஒரு தலைசிறந்த ஓவியக்கலைஞராக எச். ஏ. கருணாரத்ன இனங்காணப் படுகிறார்.
  • உள்நாட்டிலும், சருவதேச ரீதியிலும் புகழ் பரப்பியுள்ள எச். ஏ. கருணாரத்ன, 1929 இல் களுத்துறைப் பிரதேச பண்டாரகமைக் கிராமத்தில் பிறந்தார்.
  • 1952 இல் அரச நுண்கலைக் கல்லூரியில் சித்திரக் கலையைப் பயின்ற எச். ஏ. கருணாரத்ன, பிற்காலத்தில் அக்கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றி உள்ளார்.
  • அவரது படைப்பாக்கங்களில் அவர் யப்பானிலும், அமெரிக்காவிலும் பெற்ற சித்திரக் கலைக் கல்வி பெரிதும் செல்வாக்குச் செலுத்தியுள்ளது.
  • இலங்கையில் தற்காலக் கலைகளின் வெளிப்பாட்டு ஒழுங்கமைப்புக்குப் பதிலாக
  • அமெரிக்க ஓவியக் கலைப் போக்குக்களில் ஒன்றான அரூப கலை (Abstract) கருத்து நிலை சித்திரக் கலைப்பாணிக்கு அமைவாக புதிய சித்திரப் பாஷையை உருவாக்கிய கலைஞர் ஆவார்.
  • அவரது படைப்பாக்கக் கலைப்பாணியில், மையநிலை, ஒழுங்கமைப்பு கிடையாது. தளம் முழுதும் வடிவமைப்புக்கள் சிதறி அமைக்கும் ஒழுங்கமைப்பைக் கொண்டது.
  • எச். ஏ. கருணாரத்ன கலைஞர் பெரும்பாலும் தமது படைப்புக்களுக்காக கருப்பொருட் களெதையும் வழங்குவதில்லை. மேலும் படைப்புக்கள் மூலம் எதனையும் தெளிவாகக் கூறுவதோ , கூறாமலிருப்பதோ இல்லை.
  • எனவே அவரது படைப்புக்கள் மறைந்த நிலைக்குட்பட்டு பார்ப்போரின் சிந்தனைக்கு இடமளித்துள்ளார்.
  • தொடக்கத்தில் அவரது படைப்புக்கள் எண்ணெய் (தைல ) வர்ண கன்வஸ் படைப்புக் களாயினும் அவரது பிற்காலப்பட்ட படைப்புக்கள் மூலம் ஒன்றுக்கொன்று வேறுபட்ட வெவ்வேறு பொருள்கள் இருபரிமாணத் தளத்தில் காட்டப்படுவதைக் காணலாம்.
  • ஆணிகள், காட்போட் , நூல், துணித்துண்டுகள் போன்ற பல்வகைப் பொருட்களைப் படைப்பாக்க ஊடகமாகப் பயன்படுத்தி உள்ளதுடன், அவற்றின் ஊடாக எதிர்மாறான மேற்பரப்பு இயல்பை (texture) பல்வேறு இரசனையில் வெளிப்படுத்திக் காட்டியுள்ளார்.
  • அவர் படைத்த ஓவியங்கள்,
    ♦ சந்திர காந்தக்கல்
    ♦ மலர் மணம்
    ♦ வெண்முகில்
    ♦ சந்திரோதயம்
    ♦ ஒரு மலரின் மணம்
    ♦ அறுவடை

சந்திரோதயம்

  • எச். ஏ. கருணாரத்ன அவர்களால் 1980 களில் ஆக்கப்பட்ட ஒரு படைப்பாக ”சந்திரோதயம்” காணப்படுகிறது.
  • எண்ணெய் (தைல ) வர்ண ஊடக , கன்வசு ஓவியமான இது அவரது ஆரம்ப காலப் படைப்புக்களுள் ஒன்றாகும்.
  • இந்த ஓவியத்தின் மத்தியில் ஒழுங்கமைப்பு காட்டப்படாததுடன், தளம் முழுவதும் வடிவங்களைப் பரப்பி ஒழுங்கமைப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
  • அரூப நிலையான (Abstract) வெளிப்பாட்டுக் கலைப்பாணி இயல்புகள் அவரது இந்தப் படைப்புக்கும் அடிப்படையாக அமைந்துள்ளது.
  • இயற்கையின் திட்டவட்டமான ஒரு சந்தர்ப்பத்தைச் சித்திர வெளிப்பாட்டுக்கான கருப் பொருளாகக் கொள்வதை இது காட்டுகின்றது.
  • இக்கலைப்பாணியின்படி வர்ண இரேகைகள், தள வடிவங்கள் ஆகியவற்றின் ஒழுங்கமைவு வழியே ‘சந்திரோதயம்’ எனும் கருத்து வெளிப்படுத்தப்படுகின்றது.
  • வானத்தில் உதித்த சந்திரன், அச்சந்திர ஒளி விழுந்த தளங்களின் அழகு என்பன இப்படைப்பின் வர்ணம், இரேகைகள், தள வடிவங்கள் மூலம் காட்டப்பட்டுள்ளது.
  • இந்த ஆக்கத்தில் சமய உணர்வுடன் கூடிய சாந்தமான ரசனையை உருவாக்குகின்றதாக விமர்சகர்கள் கருத்து வெளியிடுகின்றனர்.

பெயரிடாத ஆக்கம் (Untitled)

  • எச். ஏ. கருணாரத்ன (2008) அவர்களால் ஆக்கப்பட்ட இப்படைப்பு ஒரு பெயரிடாத ஆக்கமாகும்.
  • இது சிலையின் இயல்பைக் கொண்ட , ஒருங்கு சேர்ப்பு நுட்ப முறையில் நிர்மாணிக்கப் பட்ட படைப்பாகும்.
  • அதற்காக உலோகத்தகடுகள், கம்பி, ஆணி போன்றவை பயன்படுத்தப்பட்டுள்ளது.
  • கரடான, சொரசொரப்பான மூலப்பொருள்களைப் பயன்படுத்தி இருத்தல் இப்படைப்பின் விசேட தன்மையாகும்.
  • அவரது படைப்பாக்க கருத்துநிலை, கலைப்பாணி (Abstract) இயல்புகளை இப்படைப்பில் காணலாம்.
  • கலைஞரினால் இப்படைப்புக்காக, விவரங்கள் குறைவான , யோக நிலையைக் காட்டு கின்ற , அடிப்படைப் பண்புகளைக் கொண்ட, வடிவங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
  • எளிமையான, குறியீட்டு ரீதியான தன்மை வெளிக்காட்டப்பட்டுள்ள ஒரு படைப்பாகும்.
பயிற்சி வினாக்கள்

கீழே தரப்பட்டுள்ள கலை ஆக்கத்தை இனங்கண்டு கீழே குறிப்பிடப்பட்டுள்ள உப தலைப்புகளுக்கேற்ப கருத்துள்ள வாக்கியங்கள் எழுதுக.

1. தொனிப்பொருள் : …………………………………………
2. கலைஞர் : …………………………………………………………
3. உருவங்களின் ஒழுங்கமைப்பு : …………….
4. வர்ணப்பயன்பாடு : ……………………………………….
5. கலைப்பாணி : …………………………………………………
6. உணர்வு வெளிப்பாடு : ………………………………..

தரப்பட்டுள்ள ஒளிப்படத்தை ஆதாரமாகக் கொண்டு வினாக்களிலுள்ள இடைவெளிகளை நிரப்புக.

1. இச்சிலை ……………………………… கலைஞரின் ஒரு படைப்பாகும்.
2. இதில் ………………………… நிலையைக் காட்டுகின்ற அடிப்படைப் பண்புகளைக் காணலாம்.
3. இவ ஆக்கத்தைப் படைப்பதற்காக ……………………, கம்பி, ஆணி போன்றவை பயன்படுத்தப்பட்டுள்ளன.
4. இதில் ………………………. கலை இயல்புகள் வெளிப்படுகின்றன.
5. இச்சிலை ………………………… நுட்பமுறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!