தம்புள்ள விகாரை
- கி.பி. முதலாம் நூற்றாண்டில் வலகம்பா மன்னரால் (வட்டகாமினி அபய) இவ் விகாரை கட்டுவிக்கப்பட்டுள்ளது.
- இது ஐந்து பெரும் கற்குகைகளைக் கொண்டது.
- இவ்விகாரையில் உன்னத படைப்புகளான பல ஓவியங்களும், சிலைகளும் காணப்படுகிறன.
♦ தேவ ராஜ குகை
♦ மகா ராஜ குகை
♦ மகா புதிய விகாரை
♦ பின்விகாரை
♦ இரண்டாம் புதிய விகாரை
- மகாராஜ குகையில் புத்தரின் சிலைகளும், அரசர்களின் சிலைகளும் உள்ளன.
- தம்புள்ள விகாரை ஓவியங்களின் பண்புகள் கண்டிக் காலத்துக்கு உரியவை, அனுராதபுர காலத்துக்குரியவை எனக் கருதப்படும் ஓவியங்களையும் இங்கு காணலாம்.
- தம்புள்ள விகாரை ஓவியங்களை வரைந்த பெருமை நீலகம் பரம்பரையைச் சார்ந்த துறவிகளையே சாரும்.
- தம்புள்ள விகாரை ஓவியங்களைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
போதிசத்துவரின் வாழ்க்கைக் கட்டங்கள்.
♦ இருபத்தெட்டு விவரணங்கள் (சூவிசி விவரணய)
♦ ஜாதகக் கதைகள்
புத்தரின் வாழ்க்கைக் கட்டங்கள்.
♦மாறனைத் தோற்கடித்தல் (மாறமராஜய )
♦பொற்காசுகள் பரப்பி ஜேதவனத்தை பூசையாக வழங்குதல்.
வரலாற்று நிகழ்வுகள்.
♦ விஜயன் வருகை
♦ மகிந்தரின் வருகை
♦ ஸ்ரீ மகாபோதிக்கிளை (வெள்ளரசுக் கிளை) கொண்டு வருதல்.
♦ எல்லாளன் – துட்டகைமுனு யுத்தம்.
ஓவியப் படைப்புக்களின் சிறப்பியல்புகள்.
- பக்கத்தோற்ற உருவங்கள்.
- இருபரிமாண இயல்புகளுடன் தட்டையான வர்ணப் பயன்பாடு.
- மஞ்சள், பச்சை, சிவப்பு, கறுப்பு, வெள்ளை போன்ற நிறங்களின் பயன்பாடு.
- உலர் சாந்தின் மீது சுவரோவியங்கள் வரையும் பிரெஸ்கோ சிக்கோ நுட்பமுறை பயன்பாடு.
- உருவங்களைச் சூழ நிறைவைக் காட்டுவதற்கு சிறப்பான நுணுக்கமான கோடுகள் இடப்பட்டுள்ளன.
- பின்னணி வெளிகளை நிரப்புவதற்காக வெவ்வேறு அலங்கார வடிவமைப்புக்கள் பயன்படுத்தப் பட்டுள்ளமை.
- ஒட்டுமொத்த படைப்பாக்கத்தில் அளவுத்திட்டம், தூரதரிசன விதிமுறைகள் கவனத்திற் கொள்ளப்படாமை.
- மாறனைத் தோற்கடித்தல் (மாறபராஜய) ஓவியத்தில் புத்தர் பூமி பரிச முத்திரை நிலையோடு காணப்படுகிறார்.
- இவ்வேளை பூமித் தாய் புத்தர் நிலையை உறுதிப்படுத்தும் விதத்தில் எழும் காட்சி காட்டப்பட்டுள்ளது.
- ஒரு புறத்தே மாறனின் புதல்விகளின் மூவரும் மாறனின் சேனை காட்டப்பட்டுள்ள விதம் சிறப்பானது.
பயிற்சி வினாக்கள்
1. தம்புள்ள குகை விகாரை, எந்த மன்னன் காலத்தில் கட்டப்பட்டது?
2. தம்புள்ள குகை விகாரை எத்தனை குகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது? அவை எவை!
3. இக்குகை விகாரை ஓவியங்களின் கருப்பொருள்கள் யாது?
4. தம்புள்ள குகை விகாரை ஓவியங்கள் யாரால் வரையப்பட்டது?
5. மாறனைத் தோற்கடித்தல் என்ற ஓவியத்தில் புத்த பெருமான் வெளிப்படுத்தும் முத்திரையாது?
தரப்பட்டுள்ள ஒளிப்படத்தை ஆதாரமாகக் கொண்டு தரப்பட்டுள்ள வெற்றிடங்களை நிரப்புக.
1. இவ் ஓவியம் ………………………………………. விகாரையில் காணப்படுகின்றது.
2. இவ் ஓவியம் ……………………………………………………. எனும் ஓவியத்தின் ஒரு பகுதியாகும்.
3. இவ் ஓவியத்தை வரைந்தவர்கள் …………………………………………………………………. ஆவர்.
4. இது ……………………………………… காலத்திற்குரிய ஓவியமாகும்.
5. இவ் ஓவியத்தில் புத்தர் ………………………………….. முத்திரையுடன் காணப்படுகின்றார்.
கீழே தரப்பட்டுள்ள கலை ஆக்கத்தை இனங்கண்டு கீழே குறிப்பிடப்பட்டுள்ள உப தலைப்புகளுக்கேற்ப கருத்துள்ள ஐந்து வாக்கியங்கள் எழுதுக.
1. இடமும் காலமும் : .………………………………
2. தொனிப்பொருள் : ………………………………………
3. ஒழுங்கமைப்பு : .………………………………………
4. வர்ணப்பயன்பாடு : .…………………………………
5. உணர்வு வெளிப்பாடு : .…………………………..