தலதா மாளிகை
- இது இலங்கை வாழ் பௌத்த மக்களின் முக்கிய வழிபாட்டிடமாகக் கருதப்படுகிறது. பல புனரமைப்புக்களுக்கு உள்ளாகியுள்ளது. இரண்டாம் விமலதர்மசூரியனால் (கி.பி 1687 – 1707) கட்டியெழுப்பப்பட்டுள்ளது.
- இங்குள்ள தலதா மண்டபம், சபா மண்டபம் (மகுல் மடுவ), எண்கோண மண்டபம் (பத்திரிப்பு), நீராடும் இடம், (உல்பென்கெய) அரசர் ஓய்வு மண்டபம் (தியத்திலக்க), பிரதானிகள் மண்டபம் எனும் பிரிவுகள் வாஸ்து முறைப்படி கட்டப்பட்ட கட்டடங்கள் ஆகும்.
- இதில் எண் கோண மண்டபம் (பத்திரிப்பு) விசேட இடத்தைப் பிடிக்கிறது. இக்கட்டடம் எண்கோண வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
- இப் பத்திரிப்புபை அமைத்த பெருமை தேவேந்திர மூலாச்சாரியைச் சேரும்.
- கட்டடத்தைச் சுற்றி வளைவுகள் காணப்படுவதுடன் யன்னல்கள், தூண்கள், கதிராதிகள் ஒழுங்கு முறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
- தலதா மாளிகையில் கண்டி மரபை நாட்டிய பல ஓவியங்களினைக் காணலாம்.
தாவர இலை, பூ, அலங்காரங்கள், கற்பனை உருவங்கள் இவற்றில் காணக்கூடிய சிறப்பு அம்சங்களாகும். - கண்டிக் காலத்துக்குரிய மிகச் சிறப்பான சந்திரவட்டக்கல் தலதா மாளிகையில் காணப்படுகிறது. முக்கோண அமைப்பை உடைய இச்சந்திர வட்டக் கல்லின் மத்தியில் சற்றுயர்ந்த தாமரை மலரும் இருபுறத்தில் பூங்கொடி அலங்காரங்களும் உள்ளன.
பயிற்சி வினாக்கள்
1. பௌத்தர்களின் முக்கிய வழிபாட்டு இடமான தலதா மாளிகை எந்த மன்னனால் கட்டியெழுப்பப்பட்டது?
2. தலதாமாளிகையில் உள்ள எண்கோண மண்டபத்தை நிர்மானித்த கலைஞர் யார் ?
3. தலதாமாளிகையில் உள்ள ஓவியங்கள் எந்த மரபைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ளன.
4. கண்டிகாலத்திற்குரிய மிகச்சிறந்த சந்திரவட்டக்கல் எங்குள்ளது.
பின்வரும் சொற்களின் கருத்துப் புலப்படும் வகையில் வாக்கியம் அமைக்குக
1. பத்திரிப்பு : ………………………………………………………..
2. உல்பென்கெய : ……………………………………………..
3. தியத்திலக்க : ………………………………………………….
4. மகுல்மடுவ : ……………………………………………………
5, செங்கடகல : ……………………………………………………