மைக்கல் ஆஞ்சலோ
- மைக்கல் ஆஞ்சலோ கி.பி. 1475 இல் இத்தாலி நாட்டில் புளோரன்ஸ் நகரில் காசல் கப்ரீஸ் எனும் இடத்தில் பிறந்தார்.
- அவர், ஓவியம், சிற்பம், செதுக்குவேலை, கட்டடக்கலை ஆகியவற்றில் இயல்பான திறனைக் கொண்டிருந்தார்.
- மறுமலர்ச்சிக் காலத்திற் தோன்றிய புகழ்பூத்த கலைஞராக இவர் கணிக்கப்படுகின்றார்.
- ஆரம்பத்தில் ஜர்லன்டாயோ, பர்டல்டோ ஆகிய கலைஞர்களிடத்தே கலை பயின்றுள்ளார்.
- தமது 15 வயது தொடக்கம் ஓவியங்கள், சிற்பங்கள் படைப்பதில் திறனைக் காட்டியுள்ளார்.
- இவர் சலவைக் கல்லில் படைத்த மிகச் சிறந்த சிற்பங்கள் :
♦ பியெட்டா
♦ டேவிட்
♦ மோசஸ்
♦ இறக்கும் அடிமை
♦ கலகக்கார அடிமை
♦ 11ஆம் ஜூலியஸ் பாப்பாண்டவரின் கல்லறை
♦ புரூகஸ் அன்னை மரியாள்
ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
- மைக்கல் ஆஞ்சலோ சிஸ்டைன் தேவாலய ஓவியங்களையும், கன்வஸ் மீது எண்ணெய் வர்ணத்தைப் பயன்படுத்தி புனித குடும்பம் எனும் ஓர் ஓவியத்தையும் படைத்துள்ளார்.
பியெட்டா (Pieta)
- சிலுவையில் மரணித்துக் களையப்பட்ட யேசுபிரானின் உயிரற்ற உடலை அன்னை மரியாள் மடியில் வைத்திருக்கும் காட்சியையே மைக்கல் ஆஞ்சலோ இந்தச் சிற்பத்துக்கான கருப்பொருளாகக் கொண்டுள்ளார்.
- சலவைக் கல்லில் செதுக்கப்பட்டுள்ள இந்தச் சிற்பம் ரோமாபுரியில் புனித பீற்றர் தேவாலயத்தில் தற்போது காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
- யேசுபிரானின் உயிரற்ற உடலின் தன்மையும், அன்னை மரியாளின் ஆடைகளும் சந்தத்துக்கமைய இயல்பான வகையில் தத்ரூபமாக சலவைக் கல்லில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
- தாயையும், மகனையும் சம வயதினர்களாக காட்டியுள்ளதனால் இருவரிலும் தேவ லோகத்தன்மையை எடுத்துக்காட்ட முயற்சி செய்யப்பட்டுள்ளது.
- மனிதத்துவம் தொடர்பான பரிவுணர்வு இந்த சிற்பத்தில் காட்டப்படுகின்றது.
டேவிட் (David)
- வலிமை, துணிவு, மானுட இரக்கம், இளமை ஆகிய பண்புகள் இச்சிற்பத்தின் மூலம் நன்கு காட்டப்பட்டுள்ளது.
- சலவைக் கல் ஊடகத்தில் முழுப் புடைப்புச் சிற்பமாக வடிவமைக்கப்பட்டுள்ள இச்சிலை 14 அடி 3 அங்குல உயரமான நிர்வாண ஆண் உருவமாகும்.
- கிரேக்க – உரோம் சிற்பக்கலைப் பாரம்பரியப்படி மனித உடலின் அழகு, எடுப்பான தன்மை, சாந்தம் ஆகியன இயல்பாகவும், தத்ரூபமாகவும் காட்டப்பட்டுள்ளன.
ஆதாமைப் படைத்தல் (The creation of Adam)
- மைக்கல் ஆஞ்சலோவினால், உரோமபுரியில் சிஸ்ரைன் தேவாலயத்தில் பிரெஸ்கோ சிக்கோ நுட்பமுறையில் படைக்கப்பட்டுள்ள விதான ஓவியங்களுள் முக்கியமான ஒன்றாகும்.
- பெரும்பாலான கிறிஸ்தவக் கலைஞர்களால் சித்தரிக்கப்படாததாக கடவுளின் உருவம் இங்கு சாதாரணமான ஒரு மனிதனின் உருவத்தைப் போன்று சித்தரிக்கப்பட்டிருத்தல் இதன் சிறப்பியல்பாகும்.
- வலிமை , துணிவு, மானுட இரக்கம், இளமை ஆகிய பண்புகள் இவ்வோவியத்தின் மூலம் நன்கு காட்டப்பட்டுள்ளது.
- தேவர்களுடன் இருக்கும் கடவுள், ஆதாமின்பால் கையை நீட்டி அவனுக்கு உயிர் கொடுக்கும் விதமும், ஆதாம் கடவுளை நோக்கிக் கையை நீட்டிக் கொண்டிருக்கும் நிலையும் இங்கு சித்தரிக்கப்பட்டுள்ளது.
- கடவுளின் முதுமையும் ஆதாமின் இளமையும் நன்கு காட்டப்பட்டுள்ளது. அவரது சிற்பங்களில் பொதித்துள்ள வலிமையும் உறுதியும் இந்த ஓவியத்திலும் காணப்படுகின்றன.
இறுதித் தீர்ப்பு (Last Judgment)
- உரோமபுரியில் வத்திக்கான் நகர சிஸ்ரைன் தேவாலயத்தின் பலிபீடத்துக்குப் பின்னால் உள்ள சுவரில் இந்த ஓவியம் படைக்கப்பட்டுள்ளது.
- உலகின் மிகப் பெரிய பிரெஸ்கோ சிக்கோ ஓவியமெனக் கருதப்படும் இது, ஏறத்தாழ 48 ஒ 44 அடி அளவைக் கொண்டுள்ளது.
- மைக்கல் ஆஞ்சலோ இந்த ஓவியத்தைப் பிரதானமான 3 பகுதிகளாகப் பிரித்து அவற்றை சுவர்க்கம், மனிதரின் உலகம், மறு உலகம் எனக் குறியீட்டு ரீதியில் சித்தரித்துள்ளார்.
- கலைஞர் தமக்கேயுரிய இயல்பான தத்ரூபமான பாணியின் பண்புகளை உள்ளடக்கி இந்த ஓவியத்தை படைத்துள்ளார்.
- மனித உருவங்களின் உடல் இயல்புகளும், செயற்படு தன்மை இயல்புகளும், உணர்வு வெளிப்பாடுகளும் நன்கு சித்தரிக்கப்பட்டுள்ளன.
பயிற்சி வினாக்கள்
கீழே தரப்பட்டுள்ள கலை ஆக்கத்தை இனங்கண்டு அதன் கலை அம்சங்களை எடுத்துக்காட்டும் வகையில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள உப தலைப்புகளுக்கேற்ப கருத்துள்ள ஐந்து வாக்கியங்கள் எழுதுக.
1. கலைஞர் : .…………………………………………
2. தொனிப்பொருள் : .……………………………
3. காணப்படும் இடம் : .…………………………
4. சிறப்பம்சம் : .………………………………………
5. உணர்வு வெளிப்பாடு : .……………………
1. கலைஞர் : .…………………………………………
2. தொனிப்பொருள் : .……………………………
3. காணப்படும் இடம் : .…………………………
4. ஊடகம் : .………………………………………………
5. உணர்வு வெளிப்பாடு : .……………………
1. தொனிப்பொருள் : .……………………………
2. நுட்பமுறை : ………………………………………….
3. காணப்படும் இடம் : .…………………………
4. சிறப்பம்சம் : .………………………………………
5. ஒழுங்கமைப்பு : : .………………………………
1. இனங்காண்க : ………………………………………
2. கலைஞர் : .…………………………………………
3. கலைஞனின் திறன் : .…………………….
4. ஊடகம் : .……………………………………………
5. உணர்வு வெளிப்பாடு : .……………………