சிவ தட்சணா மூர்த்திச் சிற்பம்

சிவ தட்சணாமூர்த்திச் சிற்பம்
கி.பி. 900-1000 குரங்கநாதர் ஆலயம்

சிவபெருமான் சகல அறிவுகளுக்கெல்லாம் குருவானவர் எல்லாவற்றுக்கும் தலைவன் எனும் உருவ அர்த்தம் சிவ தட்சணா மூர்த்திச் சிற்பத்தின் மூலம் காட்டப்படுகின்றது. அதாவது இந்த உருவ அர்த்தத்தின் மூலம் சிவனின் பரமஞானம், அறிவு, விளக்கம் போன்ற உலக யதார்த்தத்துக்கு அப்பாற்பட்ட நிலைமைகளின் உருவமாக முன்வைத்தலாகும். ‘சிவ தட்சணா மூர்த்தி’ என்பதன் (சமஸ்கிருதச்) சொற்பொருள் ‘தெற்கை நோக்கி இருத்தல்’ என்பதாகும்.

சிவ தட்சணாமூர்த்திச் சிற்பம் தொடர்பாக விளக்கமளிக்கும் இந்து இலக்கியங்களில், “சிவபெருமான் லலிதாசன உடல்நிலையில் ஆல மரத்தின் கீழ் அமர்ந்து சாஸ்த்திரம் போதிப்பதாகும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது சாஸ்த்திரம் போதித்தல், இசை, ஞானம் போன்ற அம்சங்களில் சிவ பெருமான் அறிவைப் பரப்புதலே இதன் மூலம் காட்டப்படுகின்றது. எனவே சிவ தட்சணாமூர்த்திச் சிற்பத்தை வழிபடுவதால் ஞானப்பேறு கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.

சிவ தட்சணாமூர்த்திச் சிற்பச் செதுக்கலில் பொதுவாக சிவபெருமான் நான்கு கைகளுடன் ஆலமர மொன்றின் கீழ் அமர்ந்திருக்கும் உடல்நிலை காட்டப்படுகின்றது. சிவபெருமான் தென்திசை நோக்கி அமர்ந்துள்ளார். சிவபெருமான் ஒரு காலை மடித்து கீழாக வைத்திருப்பதோடு, மற்றைய காலைக் கிடையாக மடித்து வலது பாதத்தின் தொடை மீது வைத்துள்ளதாகக் காட்டப்பட்டுள்ளது. மான் ஆசனமொன்றின் (Deer throne) மீது அமர்ந்திருப்பதோடு, ரிசிகளுக்கு அறிவைப் போதிக்கும் விதம் காட்டப்பட்டுள்ளது. ரிசிகளுக்கு மேலதிகமாக வன விலங்குகளும் சிவபெருமானைச் சூழ நிற்பது காட்டப்பட்டுள்ளது. சிவபெருமானின் மேலே உள்ள இரண்டு கைகளினாலும் ஒரு பாம்பையும் தீச்சுவாலையையும் பிடித்திருப்பது காட்டப்பட்டுள்ளது. கீழே அமைந்துள்ள ஒரு கையினால் விதர்க்க முத்திரை காட்டப்பட்டுள்ள தோடு மற்றைய கை பூமியை நோக்கித் திருப்பி வைக்கப்பட்டுள்ளது.

‘சிவதட்சணாமூர்த்தி’ எனும் இச்சிற்பம் சோழர் காலத்தில் அமைக்கப்பட்ட குரங்கநாத ஆலயத்தில் காணப்படுகின்றது. முதலாம் ஆதித்யனின் அல்லது முதலாம் பரந்தகனின் காலத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இந்த ஆலயம் தமிழ்நாட்டில் ஸ்ரீநிவாச நல்லூரில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் தெற்காக அமைந்துள்ள பிரதான அறையினுள் சிவ தட்சணாமூர்த்திச் சிற்பம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கும், பிராணிகளுக்கும் நடுவே சிவபெருமான் ஓர் ஆலமரத்தின் கீழ் லலிதாசன உடல்நிலையில் ‘மான் ஆசனத்தின்’ மீது அமர்ந்திருக்கும் விதம் இதில் காட்டப்பட்டுள்ளது. இதன் இரு புறத்தேயும் உள்ள இரண்டு அறைகளிலும் இரண்டு பெரிய ஆண் உருவங்கள் உள்ளன. இங்கு ஆலமரம் முற்றுமுழுதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சிவனின் உருவம் இயற்பண்பு வாதப் பாணியில் முன்வைக்கப்பட் டுள்ளது. பல்லவர் கலையில் காணப்படும் இயற்பண்பு வாதப் பண்புகள் இதன் மூலம் முன்வைக்கப்படாமல் விறைப்பான பாணியில் முன்வைக்கப்பட்டுள்ளது.

சற்று சிதைந்து இருந்தாலும், முற்றிலுமாக அழிக்கப்படாமல் இருப்பது நம்மை மகிழச் செய்கிறது.  அவரும் அவரைச் சுற்றியிருக்கும் சிற்பங்களும் உயிரோட்டமாக உள்ளன. தட்சிணாமூர்த்தியின் அடியை கவனிப்போம். சிதைக்கும் எண்ணம் கொண்டவர்களால் சிதைக்க முடியாத பாதங்கள் மட்டும் அந்தரத்தில் இருந்து முயலகனின் மேல் இருக்கின்றன. இந்து சமயத்தவர்களின் குறியீட்டு சின்னம் முயலகன். அறிவே வடிவான ஞானமூர்த்தி, அஞ்ஞானத்தினை காலடியிட்டு இட்டு மிதிக்கிறார் என்ற கருத்துருவின் வடிவு. முலகனை உற்று நோக்கினோல் அவன் தட்சிணாமூர்த்தியின் அழுத்ததால் ஆ.. வென கதறுவது தெரியும். சோழச் சிற்பியின் திறம்.

குரங்கநாதர் ஆலயம்
error: Content is protected !!