மேம்படுத்தலில் உள்ளது!!!
கொரவக்கல் / செட்டைக்கல்
பௌத்த சமய வழிபாட்டுத் தலங்களில் படிக்கட்டு வரிசையின் இருபுறத்தேயும் அமைந்துள்ள பாதுகாப்பு வேலி போன்ற அமைப்பே செட்டைக்கல் கொரவக்கல் எனப்படுகின்றது. கொரவக்கல்லானது பாதுகாப்பு அமைப்பாக மட்டுமன்றி, கைப்பிடி வரிசையாகவும் இருத்திருக்க இடமுண்டு என அனுமானிக்கப் படுகின்றது. ஆரம்பத்தில் இது செங்கல்லினால் ஆக்கப்பட்டிருந்ததோடு, பின்னர் கருங்கல்லினாலான ஆக்கமாக வளர்ச்சியடைந்துள்ளது. அதன் வளர்ச்சியின் முதலாவது கட்டமாகிய செங்கல்லினாலான எளிய வடிவத்தைக் கொண்டிருந்த செட்டைக்கல் கொரவக்கல் ஆக்கங்கள் தம்புள்ளை சோமாவதி தாதுகோப வாயில் மெதிரிகிரிய வட்டதாகே தாதுகோபம் ஆகியவற்றின் அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ்வாறான செட்டைக்கல் கொரவக்கல் ஆனது படிவரிசை சிதறிப் போகாதவாறு வைத்திருப்பதற்காக தாங்கியாகவும் அமைகின்றது. ஆரம்பத்தில் செதுக்கல் வேலைப்பாடுகளின்றி எளிய வகையில் செங்கல்லினால் ஆக்கப்பட்ட செட்டைக்கல் கொரவக்கல் பின்னர் கருங்கல்லினால் ஆக்கப்பட்டது. இரண்டாம் வளர்ச்சிக் கட்டத்தில் செட்டைக்கல் கொரவக்கல்லுடன் கேத்திரகணித அலங்கரிப்புகள் சேர்க்கப்பட்டன. மூன்றாவது வளர்ச்சிக் கட்டத்தில் செட்டைக்கல் கொரவக்கல்லில் கொடியலங்காரம் சேர்க்கப்பட்டது.
நான்காம் கட்டமாகும்போது கொடியலங்காரத்தின் ஆரம்பத்துடன் மகரவாய் சேர்க்கப்பட்டது. அங்கு மகர வாயிலிருந்து செல்லும் ஒரு நாக்குப்போன்று கொடியலங்காரம் காட்டப்பட்டுள்ளது. மகர உருவத்தின் மூலம் குறியீட்டு ரீதியில் ‘காலம்’ காட்டப்பட்டுள்ளதோடு, மகர வாயுடன் கொடியலங்காரம் சேர்க்கப்பட்டுள்ளமையின் மூலம் அழகிய பொருள்களாயினும் கூடக் காலத்தின் மூலம் அழிக்கப்படும் என்பது குறியீடாகக் காட்டப்பட்டுள்ளது
இலங்கையில் செட்டைக்கல் கொரவக்கல் மீது மூன்று வகையான மகர உருவங்கள் காணப்படுகின்றன. மீன் மகரம், தலையுச்சியில் திமில் கொண்ட மகரம், தலையில் திமில் அற்ற மகரம் ஆகியனவே அவையாகும்.
பொலனறுவைக் காலத்தின் பின்னர், செட்டைக்கல்லின் வளர்ச்சியின்போது மகரத் தலைக்குப் பதிலாக, பிற்காலத்தில் யானைத்தலை சேர்க்கப்பட்டுள்ளது. அவ்வாறான ஒரு செட்டைக்கல் தம்பதெனியா இராஜமகா விகாரையினது தாதுகோப மனையின் (தூப கரவின்) வாயிலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கம்பளைக் காலத்தில் மகர உருவத்துக்குப் பதிலாக ‘கஜசிங்க உருவம் செட்டைக்கல்லில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவற்றின் யானைத் தும்பிக்கை கீழிருந்து மேலாக நீட்டப்படும் வகையில் காட்டப்பட்டுள்ளது. அத்தோடு, செட்டைக்கல்லின் நடுப்பகுதியில் உள்ள செதுக்கல் வேலைப்பாடுகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பூரண கும்பம், யானை உருவங்கள், சிங்க உருவங்கள், திக்குப் பாலகர் உருவங்கள், பைரவ உரவங்கள் ஆகியவற்றின் மூலமும் சில செட்டைக்கற்கள் அழகுப்படுத்தப்பட்டுள்ளன.