மேம்படுத்தலில் உள்ளது!!!

வட்டதாகே

சைத்திய வழிபாடு, ஆரம்ப காலத்தில் திறந்தவெளி வழிபாட்டு முறையாகக் காணப்பட்டதோடு காலக்கிரமத்தில் காற்று, மழை, வெய்யில் போன்றவற்றிலிருந்து பாதுகாக்கப்படுதல் வேண்டும் எனும் எண்ணக்கரு தோன்றியது. கி.மு. இரண்டாம் நூற்றாண்டாகும்போது இந்தியாவில் நிர்மாணிக்கப்பட்டிருந்த தாதுகோபங்கள் சார்ந்த காணப்பட்ட சைத்திய மண்டபங்கள் மூலம் இதனை இனங்கண்டு கொள்ளலாம். இந்தியாவில் மேற்கு ‘கடீஸ்’ மலைத்தொடரில் அமைந்துள்ள அஜந்தா, பாஜா, கார்லா, நாசிக் போன்ற இடங்களில் காணப்படும் சைத்திய மண்டபங்கள் ஊடாக இது உறுதியாகின்றது. (பஸ்நாயக்க, 2001:82)

கார்லா இலங்கையில் அவ்வாறான கல்லில் செதுக்கிய சைத்திய மண்டப மரபு காணப்படவில்லை யாயினும் சைத்தியத்துக்கான ஒரு மறைப்பு அமைப்பை இனங்காண முடிகின்றது. வட்டதாகே அமைக்கும் பணிகள் வசப மன்னன் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டதாக மகாவம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையின் முதலாவது வரலாற்றுத் தாதுகோபமாகிய தூபாராமையைச் சூழ அமைக்கப்பட்ட வட்டதாகேயே இலங்கையின் முதலாவது வட்டதாகே ஆகும். மன்னர் வசபனால் (கி.பி. 67-111) மரத்தினால் கட்டுவிக்கப்பட்ட அது கோட்டாபய மன்னனினால் (கி.பி. 249-262) புனரமைக்கப்பட்டது. அனுராதபுரக் காலத்தைச் சேர்ந்த வட்டதாகேக்களாக, அனுராதபுர வங்காராமய, மிகிந்தலையின் அம்பஸ் பலய, ராஜாங்கனையின் ஹத்திகுச்சி விகாரை, திரியாயை மற்றும் மதிரிகிரியை வட்டதாகேக்களைக் குறிப்பிடலாம். இவ்வட்டதாகேக்களின் கீழ்ப்பகுதி கல்லினால் நிர்மாணக்கப் பட்டுள்ளதோடு முதல் அரைவாசியும் மரத்தூண்களாலும் மிகுதியில் கற்றூண்களும் பயன்படுத்தப் பட்டுள்ளது.

பொலன்னறுவைக் கால வட்டதாகே அழகுபடுத்துவதற்காகச் செய்யப்பட்ட ஒரு கட்டடக்கலை ஆக்கமாக அமைந்தது. பொலனறுவை உள் நகர தலதா மண்டபம் அதன்மீது கட்டியெழப்பப்பட்ட கட்டடங்களைக் கொண்ட வட்டதாகேயும் இதற்கு நல்லதோர் உதாரணமாகும். கண்டிக்காலத்தை அடையும்போது விக்கிரக மனைகளுடன் இணைந்து நிர்மாணிக்கப்பட்ட தாதுகோபங்கள் மற்றும் தூண்களாலான வட்டதாகேக்களைக் காண முடிகின்றது.

மெதிரிகிரிய வட்டதாகே

பொலன்னறுவை வட்டதாகே

தம்பதெனிய – களுதாகெய

கடலாதெனிய – விஜயோத்பாய

தம்புள்ளைத் தாதுகோபம்

ஹங்குராங்கெத்தைத் தாதுகோபம்

திரியாயை வட்டதாகெய

திரியாயைத் தாதுகோபம் (உரு. 36) கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்தில் கட்டுக் குளம் பத்துவில், யான் ஓயா கடலில் கலக்கும் கல்லராயர் (கல்ராய ) கிராமத்தில் மலைக் குன்றொன்றின் மீது அமைந்துள்ளது. இந்த இடம் தமிழ் மக்களால் கந்தசாமிமலை எனவும் பௌத்தர்களால் ‘நித்துபத்பான’ எனவும் அழைக்கப்படுகின்றது. ‘கிரிகண்டி என மற்றுமொரு பெயரும் இதற்கு உண்டு.

திரியாயை, கிரிகண்டி தாதுகோபம் தொடர்பான கல்வெட்டு 1930 இல் தொல்பொருளியல் திணைக்களத்தினால் கண்டுபிடிக்கப்பட்டதுடன் கூடவே. அது தொடர்பான

னால் கண்டுபிடிக்கப்பட்டதுடன் கூடவே, அது தொடர்பான அகழ்வு வேலைகள் ஆரம்பமாயின. திரியாயைத் தாதுகோபத்தின் விட்டம் 32 அடி 6 அங்குலம் ஆகும். இத்தாதுகோபம் 79 அடி விட்டமுள்ள வட்டவடிவ மண்டபமொன்றினுள் அமைக்கப்பட்டுள்ளது. வட்டதாகேயைச் சூழ இரண்டு வரிசைகளில் தூண்கள் உள்ளன. அவற்றுள் பெரும்பாலானவை சிதைவடைந்துள்ளன. வட்டதாகே மேடையினுள் பிரவேசிப்பதற்கு நான்கு வாயில்கள் உள்ளன. அப்பிரவச வாயிலில் கல்லினாலான கதவு நிலை காணப்பட்டமைக்குச் சான்றுகள் உள்ளன. வட்டதாகேயின் கதவுகளை மூடி, தாதுகோபம் பாதுகாப்பாகப் பேணப்பட்டமை இதிலிருந்து தெரிகிறது. இந்த வட்டதாகையில் எளிமையான படிக்கட்டு வரிசைகள் உள்ளன. அவை சந்திரவட்டக்கல், மகர தோரணம், செட்டைக்கல், நாகக் காவற்கல் ஆகியவற்றைக் கொண்டவை.

மேடையைச் சூழ 10 அடி 3 அங்குல உயரமான குறுமதில் காணப்படுகின்றது. இதில் பல்லவ கட்டடக்கலையின் செல்வாக்குக் காணப்படுவதாக பேராசிரியர் பரணவித்தான கூறுகின்றார்.

மெதிரிகிரிய வட்டதாகே

ஹிங்குராக்கொடையிலிருந்து 20 கிலோமீற்றர் (12 மைல்) களுக்கு அப்பால், தமன்கடுவை பிரதேச செயலாளர் பிரிவில், மெதரிகிரியா வட்டதாகே அமைந்துள்ளது, பண்டைக் காலத்தில், “மண்டலகிரிய”, *மண்டிலிகிரிய” எனும் பெயர்களாலும் வழங்கப்பட்ட, மெதிரிகிரிய கி.மு. 13 ஆம் நூற்றாண்டு காலம் முதலே ஒரு பௌத்த தலமாகக் காணப்பட்டதாக தொல் பொருளியல் சான்றுகள் மூலம் அறியப்பட்டுள்ளது. நான்காம் அக்ரபோதி (கி.பி. 667-685) மன்னன் காலத்தில் மலாய மன்னன் எனும் ஒருவரால் இந்த இடத்தில் தூபியொன்று (உரு: 37) கட்டுவிக் கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

மெதிரிகரிய அகழ்வாய்வுகளின்போது 91 அடி விட்டமுள்ள வட்டவடிவ, மண்டபத்தின் மையத்தில் 26 அடி வட்டமுள்ள சிறிய தாதுகோபமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் சில செங்கற்களில் சிற்பங்களின் குறியீடுகளாக இடப்பட்டுள்ள பிராஹ்மி எழுத்துக்களின்படி இத்தாதுகோபம் மிகப் பழைமையானது என்பது உறுதியாகியுள்ளது. அதற்கமைய முதலில் அமைக்கப்பட்ட தாதுகோபத்துடன், பிற்காலத்தில் வட்டதாகே அமைக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகின்றது. காணப்பட்ட சூழல் நிபந்தனைகளுடன் இசைவாகுமாறு கட்டடக்கலை அம்சங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ள மெதிரிகிரிய வட்டதாகேயானது இலங்கைக் கட்டடக்கலைத் துறையில் நிர்மாணிக்கப்பட்ட மிக அழகான ஒரு கட்டடமாகக் கருதப்படுகின்றது. இயல்பாகக் காணப்பட்ட ஒரு கற்பரப்பிலேயே மெதிரிகிரிய வட்டதாகே நிர்மாணிக்கப்பட்டுள்ளது. நிலமட்டத்திலிருந்து கற்பரப்பை அடைவதற்காக அழகிய படிக்கட்டு வரிசையொன்று அமைக்கப்பட்டுள்ளது. வடக்குத் திசையில் அமைந்துள்ள இப்பிரவேசவாயிலில் கல்லினாலாக்கப்பட்ட மிக அழகிய கல் நிலையொன்று (Door framc) காணப்படுகின்றது. மேலும் 27 படிகளைக்கொண்ட படிக்கட்டு வரிசையானது இடைநடுவே சமதளமான ஒரு வெளியுடன் கூடியதாக அமைந்துள்ளது. படிக்கட்டு வரிசையின் அடிவாரத்தில் எளிய சந்திரவட்டக்கல்லொன்று காணப்படுகின்றது.

கல்லினாலான நிலையைக் கொண்ட வாயில் மற்றும் படிக்கட்டு வரிசை

91 விட்டமுள்ள வட்டவடிவ மண்டபத்தின் மத்தியில் 26 அடி விட்டமுள்ள சிறிய தாதுகோபம்

மெதிரிகிரிய வட்டதாகையின் வட்டவடிவில் அமைந்த தூண்கள் மூன்று வரிசைகளில் அமைந்துள்ளன. உட்புறத்தூண் வரிசையில் 126 தூண்களும் இடையில் உள்ள தூண் வரிசையில் 20 தூண்களும் இறுதியான அதாவது வெளித்தூண்வரிசையில் 32 தூண்களும் அமைந்துள்ளன. வட்டதாகேயைச் சூழ செங்கல்லினாலான மதில் அமைந்துள்ளது. மேலும் உட்பிரவேசிப்பதற்காக பிரதானமாக நான்கு திசைகளிலும் நான்கு பிரவேச வாயில்கள் உள்ளன. இடையே உள்ள தூண் வரிசையின் பாதை வழியே செல்லும் கருங்கல்லினாலான குறு மதிலொன்று உள்ளது. இச்சுவர் பௌத்த கிராதி வேலியின் (Buddhist Railling) அமைப்பில் ஆக்கப்பட்டுள்ளது. இக்குறுகிய சுவரின் அடிவாரத்திலும் தூண்களின் அடிப்பகுதியிலும் தாமரை இதழ் வேலைப்பாடு காணப்படுகின்றது. மெதிரிகிரிய வட்தாகேயில் ஆய்வு நடத்திய மாகஸ் பெர்னாந்து, வட்டதாகேயில் இரு சாய்வுக் கூரையொன்று இருந்ததாக எடுத்துக்காட்டுகின்றார். இடை மற்றும் வெளிப்புற தூண் வரிசை வட்டங்களுக்கு இடையே உள்ள செங்கல் சுவரினால் அது உறுதிப்படுத்தப்படுகின்றது என அவர் எடுத்துக்காட்டுகிறார். மேலும் மெதிரிகிரிய வட்டதாகேயில் காணப்படும் தூண்களின் தலைப்பகுதியானது, அனுராதபுரத்தில் ஏனைய இடங்களில் காணப்படும் தூண் தலைகளைப் போன்றே எண்கோண (எட்டுப்பக்க) வடிவத்தைக் கொண்டுள்ளது. வட்டதாகே தாதுகோபத்தைச் சுற்றிவர பிரதான திசைகள் நான்கிலும் தாதுகோபத்துக்கு முதுகுகாட்டியவாறு மேடையில் அமர்ந்த நிலையில் உள்ள சுண்ணக்கல்லால் செய்யப்பட்ட, தியான முத்திரைகளைக் காட்டி நிற்கும் சிலைகள் காணப்பட்டமைக்குச் சான்றுகள் உள்ளன. மேலும் தாதுகோபத்தைச் சூழ அமர்ந்த நிலைச் சிலைகளுக்கு இடையே செங்கல்லினாலான நான்கு மேடைகளின் இடிபாடுகள் காணப்படுகின்றன. அவை எந்த நோக்கத்துக்காக அமைக்கப்பட்டன என்பது திட்டவட்டமாக அறியப்படவில்லை .

பொலனறுவை வட்டதாகே

பொலனறுவை வட்டதா கே மண்டபத்தைச் சூழவுள்ள வட்டதாகே யானது மகாபாரக்கிரமபாகு மன்னனால் கட்டுவிக்கப்பட்டதாகக் கருதப்படுகின்றது. பிற்காலத்தில் நிஸ்ஸங்கமல்லன் எனும் மன்னனால் இந்த வட்டதாகே புனர் நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது. இது 1820 இல் பிரித்தானிய இராணுவத்தின் கட்டளை அதிகாரி எச்.எம். ஃபகர்ன் (H.M.Fagern) இனால் கண்டுபிடிக்கப்பட்டு, கி.பி. 1903 இல் தொல்பொருளியல் திணைக்களத்தி னால் தற்போதைய நிலைக்கு புனரமைக் கப்பட்டது.

தாதுகோப மண்டபத்தினுள் பிரவேசித்தவுடன் இடது புறத்தே காணப்படும் வட்டதாகையானது இலங்கையின் பண்டைய வட்டதாகேக்களின் சிறப்பான ஓர் ஆக்கமாகக் கருதப்படுகின்றது. பாலி மொழியில் ‘தாத்து கேஹ’ எனவும் சிங்கள மொழியில் ‘வட்டதாகே’ எனவும் அழைக்கப்படும் இந்த கட்டட நிர்மாணம் புத்தர்பெருமானின் தாதுவை அடக்கஞ் செய்து அமைக்கப்பட்ட தூபியை அதாவது தாதுகோபத்தைச் சூழ அமைக்கப்பட்டதாகையால் ‘தூப கர’ எனவும் ‘சேத்திய கர” எனவும் அழைக்கப்படுகின்றது.

இக்கட்டடக் கலை ஆக்கத்தின் ஒட்டுமொத்த திட்ட அமைப்பு வட்டவடிவமானது. அது பிரதானமாக, இரண்டு மேடைகளைக் கொண்டது. இலங்கையின் ஏனைய வட்டதாகேக்களுடன் ஒப்பிடுகையில் இது தனிச்சிறப்பான ஒரு வேறுபாடாகும். இவ்வட்டதாகேயில் அமைந்துள்ள கீழ் மண்டபத்தின் விட்டம் 120 அடியும் உயரம் 04 அடி 6 அங்குலமும் ஆகும். துவார மண்டபமானது பிரதான மேடையில் ஏறுவதற்குரிய படிக்கட்டு வரிசையை நோக்கியவாறு அமைந்துள்ளது. கட்டடத்தினுள் பிரவேசிப்பதற்குரிய வாசல்கள் மிக அழகாக இரு புறங்களிலும் காவற்கற்களினாலும் சந்திர வட்டக்கல்லினாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளன. மண்டபத்தைச் சூழ சிங்க உருவங்களும் குள்ளர் (வாமனர்) உருவங்களும் அடங்கிய செதுக்கல் வேலைப்பாடுகளைக்கொண்ட சுவர் அமைந்துள்ளது. மண்டபத்தின் மேற்பரப்பில் ஒழுங்கின்றிப் பரப்பப்பட்ட கற்படையொன்று காணப்படுகின்றது. இம்மேடையைச் சூழச் சுற்றுப்பிரகாரம் அமைந்துள்ளது. மாரி காலத்தில் மண்டபத்தில் ஒன்றுசேரும் நீர் வழிந்தோடுவதற்காக நான்கு திசைகளிலும் அமைக்கப்பட்டுள்ள சிங்கவாயில்களில் முடிவடையும் நான்கு வடிகால்களை இங்கு காண முடிகிறது.

முதலாவது மண்டபத்தினுள் பிரவேசிப்பதற்காக ஒரு வாயிலும், இரண்டாவது மண்டபத்தினுள் பிரவேசிப்பதற்காக நான்கு வாயில்களும் உள்ளன. இவ்வொவ்வொரு வாயிலும் கைப்பிடி வரிசைக்கல், சந்திரவட்டக்கல், காவற்கல், படிக்கட்டு வரிசை ஆகியவற்றினைக்கொண்ட அழகிய துவார மண்டபங்கள் மூலம் ஆக்கப்பட்டுள்ளன. பொலனறுவைக்காலத்தில் ஆக்கப்பட்ட அழகிய கலைத்துவமிக்க சந்திரவட்டக்கல்லையும் நாகராஜ உருவத்தையும் கொண்ட காவற்கல்லானது. மேல் மண்டபத்துள் பிரவேசிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள, வட்டதாகேயின் வடக்கு வாசலில் காணப்படுகின்றது.

வட்டதாகே ஆக்க அம்சங்களுள் கல் தூண்கள் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. வட்டதாகேயினது கூரையைத் தாங்கியிருப்பதற்காக ஒருமையக் கல் தூண் வரிசைகள் 5 உள்ளன. அவற்றுள் மூன்று வரிசைகள் வட்டவடிவ கிருகத்தின் சுவர்கட்டைச் சூழ அமைந்துள்ளன. இதன் மூன்றாவது கல் தூண் வரிசையானது நான்கு இதழ்கள் கொண்ட “பினர” மலர்க் கோலத்தைக் கொண்ட கல் பாளங்களுள் அமைந்துள்ளது. மேலும் மூன்றாம், நான்காம் கல் தூண் வரிசைகள் கீழ் மாடியில் அமைந்துள்ளன. மேலும் தாதுகோபத்தின் அருகே மண்டபத்தின் உட்புறத்தே ஐந்தாவது கல் தூண் வரிசையைக் காணலாம்.

error: Content is protected !!