2 ஆம் சிவ ஆலயம்
- பொலநறுவையில் காணக்கூடிய 2ம் சிவாலயம் 10 ஆம் நூற்றாண்டில் சோழர் காலத்தில் கட்டுவிக்கப்பட்டது எனக் கருதப்படுகின்றது.
- பொலநறுவைக் காலத்தைச் சேர்ந்த மிகப் பழைய ஆலயம் இதுவாகும்.
- இவ்வாலயம் “வானவன் மாதேவி ஈசுரமுடையார்” என அழைக்கப்பட்டதாக கல்வெட்டு களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இராஜ ராஜ சோழனின் பட்டத்து ராணியை நினைவு கூருவதற்காகக் கட்டப்பட்டது.
- வடிவமைக்கப்பட்ட அடித்தளத்தைக் கொண்ட அதிஸ்டானம் மீது கட்டப்பட்ட இவ்வாலயத்தின் வெளிச்சுவர்கள் ஒன்றிணைந்த தூண்களால் ஆனவை.
- அதன் முகடு 3 அடுக்குகளைக் கொண்டது. கூரை எண்கோண வடிவமுடையது. அத்தூண்களுக்கு மேலாக பிரமிட்டு போன்ற கூரை உள்ளது.
- தென் இந்தியச் சோழர்களின் கட்டட நிர்மாணப் பாணியில் அமைந்துள்ளது. இந்துக் கட்டடக்கலை இயல்புகளான மண்டபம், கர்ப்பக்கிரகம், உள்மண்டபம் போன்றவற்றை இது கொண்டுள்ளது. இவ்வாலயத்தின் கர்ப்பக்கிரகத்துள் கல்லாலான சிவலிங்கம் வைக்கப்பட்டிருக்கிறது.
- இவ்வாலயத்திலிருந்து நடராஜர் சிலை, பார்வதி சிலை என்பனவும் மேலும் பல இந்து சிலைகளும் கண்டெக்கப்பட்டுள்ளன.
- கற்களால் சீராக வெட்டி, ஒன்றுடனொன்று பொருந்துமாறு இணைக்கப்பட்டுள்ளமை இதன் சிறப்பியல்பாகும். கற்களை இணைப்பதற்காக சாந்து பயன்படுத்தப்படவில்லை.
பயிற்சி வினாக்கள்
1. 1ம் சிவாலயம் இக்காலப்பகுதியில் கட்டப்பட்டது?
2. இவ்வாலயம் இக்கால கட்டிட கலைப்பண்புகளைக் கொண்டுள்ளது?
3. இவ்வாலயம் வேறு எவ்வாறு அழைக்கப்படுகின்றது?
4. அவ்வாறு அழைக்கப்பட காரணம் யாது?
5. இவ்வாலயம் அமைக்கப்பட்ட ஊடகம் யாது?
6. இவ்வாலய கர்ப்பகிரகத்தினுள் காணப்படும் மூல மூர்த்தி எது?
7. 1ம் சிவாலய கட்டிட கலைப்பண்புகளை குறிப்பிடுக.