1 ஆம் சிவ ஆலயம்

- 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஓர் இந்து ஆலயமாகக் கருதப்பட்ட இவ்வாலயம் தென்னிந்திய கட்டட நிர்மாண பாணியைக் கொண்டுள்ளது என்பது ஆய்வாளரின் கருத்தாகும்.
- இந்துக் கட்டடக்கலை இயல்புகளான மண்டபம், கர்ப்பக்கிரகம், உள் மண்டபம் போன்றவற்றை இது கொண்டுள்ளது.
- இது பாண்டவர் கட்டடக்கலை பண்புகளை கொண்டுள்ளது.
- கற்களை சீராக வெட்டி, ஒன்றுடனொன்று பொருந்துமாறு இணைக்கப்பட்டுள்ளமை இதன் சிறப்பியல்பாகும். கற்களை இணைப்பதற்காக சாந்து பயன்படுத்தப்படவில்லை.
- சுவர் வெளித்தள்ளிய விதத்தில் கருங்கல்லை செதுக்கி நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் அவற்றில் வெளித்தள்ளிய பகுதிகளையும், வெளித்தள்ளிய அமைப்பில் தூண்களையும் விமானங்களையும் காணலாம். தூண் தலைகளில் தாமரை மலர் அமைப்பையும் கொண்டிருக்கும்.
- சிகரம் செங்கற்களால் ஆக்கப்பட்டிருந்தது என்பதை இன்று மீதியாக உள்ள காரணங்கள் மூலம் அறிய முடிகின்றது.
- சிவன் வழிபாட்டின் பொருட்டு நிருமாணிக்கப்பட்ட வெங்கலச் சிலைகள் பல இந்த சிவாலயத்திலிருந்து கிடைத்துள்ளன.


பயிற்சி வினாக்கள்
தரப்பட்டுள்ள ஒளிப்படத்தை ஆதாரமாகக் கொண்டு வினாக்களிலுள்ள இடைவெளிகளை நிரப்புக.

1. இக் கட்டட நிர்மாணம் ……………………………………………. ஆகும்.
2. இது ………………………………. நூற்றாண்டில் கட்டப்பட்ட ஓர் கட்டடம் ஆகும்.
3. இதில் இந்து கட்டடக்கலை இயல்பான மண்டபம், …………………………………….., உள் மண்டபம் போன்றவற்றை கொண்டுள்ளது.
4. இது …………………………………….. கட்டடக்கலை பண்புகளை கொண்டுள்ளது.
5. இதன் சுவர்கள் …………………………… ஊடகமாகக் கொண்டுள்ளது.