றபாயெல் சன்சியோ
- றாபாயெல் சன்சியோ மறுமலர்ச்சிக் காலத்தில் வாழ்ந்த சிறந்த ஓவியக் கலைஞராவார்.
- இவர் 1483ஆம் ஆண்டு ஊர்பினோ எனும் இடத்தில் பிறந்தார்.
- உச்ச மறுமலர்ச்சிக் காலத்தில் (ர்iபா சுநயெளைளயnஉந) உலகளாவிய ரீதியில் ஓவியக்கலைக்கு றபாயெல் சன்சியோ பெரும் பணியாற்றினார் என்றால் மிகையாகாது.
எதென்ஸ் பள்ளி (School of Athens)
- எதென்ஸ் நகர பள்ளி என்னும் ஓவியத்தை ஸ்டென்ஸாடெலா சிக்னா நசுரா (ளுவயணெய னநடடய ளயபயெவரசய) எனும் கட்டடத்தில் வரைந்தார்.
- ஓவியத்தில் காட்டப்பட்டுள்ள கட்டட நிர்மாணம் றபாயெல் சன்சியோ கலைஞரின் திறைமையையும் உள்ளுணர்வையும் வெளிப்படுத்துகின்றதென ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
- தத்துவஞானிகளான அரிஸ்டோடல், பிளேட்டோ, பைதகரஸ் போன்றவர்கள் இங்கு காணப்படுகின்றனர்.
- தத்துவம் பற்றி விவாதிக்கும் ஒரு காட்சி என அதைப் பற்றி ஆய்வு செய்தி ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
- ஓருங்கிணைப்பை நோக்கும் போது எதென்ஸ் நகர பள்ளியைச் சித்தரிக்கும் ஓவியம் உன்னத நிலையில் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- கண்ணைக் கவரக் கூடிய வர்ணங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளன. கபில வர்ணத்தின் வெவ்வேறு தன்மை, இருளான மஞ்சள் வர்ணத்தின் வெவ்வேறு தன்மை, வெள்ளை வர்ணங்களின் உபயோகம் இவ்ஓவியத்தில் காணலாம்.
மடோனா ஓவியங்கள்
- ரபாயலினது படைப்புக்களுள் முக்கியமான கருப்பொருளாகக் காணப்படுவது மடோனா அதாவது கன்னி மரியாளையும் இயேசு பாலகனையும் சித்தரிக்கும் படைப்புக்களாகும்.
- மறுமலர்ச்சிக்கால ஏனைய கலைஞர்களின் மடோனா ஓவியப்படைப்புக்களைவிட றபாயலினால் சித்தரிக்கப்பட்ட மடோனா ஓவியங்கள் சிறப்பான படைப்புகளாகக் கருதப்படுகின்றன.
- இந்த ஓவியங்கள் எண்ணெய் வர்ண ஊடகத்தைக் கொண்டு கன்வஸ் துணியில் வரையப்பட்டுள்ளன.
- முக்கோண மாதிரியொன்றின் மீது, உணர்வு வெளிபாட்டுடன் உருவங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளமை இந்த ஓவியங்களின் சிறப்பியல்புகளுள் ஒன்றாகும்.
புல்வெளியில் மடோனா (Madonna of the Meadows)
- தூரக்காட்சி இயல்புகளுடனான தரைத்தோற்றக் காட்சியில் தாவரங்கள், மலர்களைக் கொண்ட கிராமியப் பின்னணியில் சாதாரணமான ஒரு பெண் போன்றுசித்தரிக்கப்பட்டிருப்பது இந்த ஓவியத்தின் சிறப்பாகும்.
- அன்னை மரியாளைப் பூரித்த உடலுடனும், மென்மையும் இரக்கமும் ததும்பும்முகத்துடனும் உணர்வுகளைக் காட்டும் வகையிலும் சித்தரிக்க கலைஞர்முயற்சித்துள்ளார்.
- மரப்பலகை மீது எண்ணெய் வர்ணத்தினால் தீட்டப்பட்டுள்ள ஓர் ஓவியமாகும்.
- இந்த ஓவியம் தற்போது வியன்னா நகரில் கலை அரும்பொருட்காட்சியத்தில்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
மடோனா டெலா சேதியா (Madonna Della Sedia)
- வட்ட வடிவத் தளத்தின் மீது வரையப்பட்டுள்ள இந்த ஓவியம், அன்னை மரியாளுடன் அணைக்கப்பட்ட நிலையில் உள்ள இயேசு பாலகனையும் அவர்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் யோன் பப்ரிஸ் பாலகனையும் காட்டுகின்றது.
- மூன்று உருவங்களும் அண்மைக் காட்சியாக ஒரே தளத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளன.
- மனித உடலின் மேனியழகும் ஆடைகளின் விரிவான இயல்புகளும் நன்கு சித்தரிக்கப்பட்டுள்ளன.
- அன்னை மரியாளின் கருணையும் இரக்கமும் பாலகர்களின் மென்மையான செல்லமான வனப்பான இயல்புகள் யதார்த்த பூர்வமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன.
- றபாயெலின் ஏனைய மடோனா ஓவியங்களில் காணப்படும் விரிவான பின்னணி தரைத்தோற்றக் காட்சிகளுக்குப் பதிலாக இந்த ஓவியத்தின் பின்னணி ஆழமாகக் காட்டப்படவில்லை. மாறாக இருண்ட வர்ணத்தில் காட்டப்பட்டுள்ளது.
பயிற்சி வினாக்கள்
கீழே தரப்பட்டுள்ள கலை ஆக்கத்தை இனங்கண்டு அதன் கலை அம்சங்களை எடுத்துக்காட்டும் வகையில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள உப தலைப்புகளுக்கேற்ப கருத்துள்ள ஐந்து வாக்கியங்கள் எழுதுக.
1. இனங்காண்க : ………………………………………
2. கலைஞர் : ……………………………………………….
3. காணப்படும் இடம் : ……………………………
4. கருப்பொருள் : ………………………………………
5. வர்ணப்பயன்பாடு : ……………………………..
1. இனங்காண்க : ………………………………………
2. ஊடகம் : ……………………………………………….
3. காணப்படும் இடம் : ……………………………
4. கருப்பொருள் : ………………………………………
5. உணர்வு வெளிப்பாடு : ……………………….
1. இனங்காண்க : ………………………………………
2. ஒழுங்கமைப்பு : ……………………………………
3. வர்ணப்பயன்பாடு : ……………………………..
4. கருப்பொருள் : ………………………………………
5. உணர்வு வெளிப்பாடு : ……………………….