ரன்கொத் விகாரை
பொலனறுவைக் காலத்தில் கட்டுவிக்கப்பட்ட தாதுகோபங்களுள் மிகப் பெரிய தாதுகோபம் ரன்கொத் விகாரை (உரு: 30) ஆகும். நிஸ்ஸங்க மல்ல மன்ன ன் (கி.பி. 1187-1196) இத்தாது கோபத்தைக் கட்டுவித்ததாகக் கருதப்படுகின்றது.
எனினும், முதலாம் பராக்கிரமபாகு மன்னனின் அரசியாகிய ரூபாவதி இத்தாதுகோபத்தை முதன்முதலில் கட்டுவித்ததாகவும், பின்னர் நிஸ்ஸங்கமல்ல மன்னனால் அது விசாலமாக்கப்பட்டுப் பூர்த்தி செய்யப்பட்டதாகவும் நம்பப்படுகின்றது. நிஸ்ஸங்கமல்ல மன்னனினால் பொற்கலசமொன்று இத்தாதுகோபத்தில் பொருத்தப்பட்டதாகவும் அது தொடக்கம் இது ரன்கொத் விகாரை (பொற்கலச விகாரை) எனப் பெயர் பெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளது. மேலும் நிஸ்ஸங்கமல்ல மன்னன் இத்தாதுகோபத்துக்காக, அனுராதபுர புனிதத்தாதுகோபமாகிய ருவன்வெலி தாதுகோபத்தின் பெயரைச் சூட்டியதாகவும் கருதப்படுவதோடு, அது இத்தாதுகோப மேடையில் உள்ள கல்வெட்டு மூலம் தெளிவாகின்றது. (EZ,il : 34-137)
தொடக்கத்தில் ரன்கொத் விகாரையின் உயரம் 200 அடிக்கு மேற்பட்டதாகவும் விட்டம் 186 அடி எனவும் கருதப்படுகின்றது. (இலங்கை வரலாறு: பக்கம் 562) இதன் கர்ப்பக்கிரகம் நீர்க்குமிழி வடிவமுடையது. தாதுகோபத்தின் சதுரக்கோட்டத்தில் சந்திர – சூரியக் குறியீடுகளுக்குப் பதிலாக தாமரைப் பூ அடையாளங்கள் காணப்படுகின்றமை ஒரு சிறப்பம்சமாகும். தாதுகோப மேடை இரண்டு மாடிகளைக் கொண்டது. நான்கு வாயில்களைக் கொண்ட, கீழ்மாடி, அதாவது மணல் மாடி, பிரதக்கினைப் பாதையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. சூழப்பட்ட, மேல் சதுர வடிவ சலப்பத்துவ மலுவ மீது தாதுகோபம் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. தாதுகோபத்தினுள் நுழைவதற்காக நான்கு பக்கங்களிலும் நான்கு வயில்கள் உள்ளன. மேலும் முற்றுமுழுதாகச் செங்கல்லினால் அமைக்கப்பட்ட ‘வாகல்கட’ நான்கு உள்ளன. வாகல்கடவுக்குப் பின்னர் உள்ள குழியொன்றினுள், தாதுகோபத்தை வழிபடும் “சதரவரம்” தெய்வங்களின் ஒவ்வோர் உருவம் வீதம் அமைக்கப்பட்டுள்ளது. வாகல்கடவுக்கு இடையே பிரத்திமாகார” (விக்கிரக, மனைகள்) அமைக்கப்பட்டுள்ளன. இந்த உருவச்சிலை மனைகள் “கெடிகே” மரபுக்கமைய நிர்மாணிக்கப் பட்டடுள்ளன. பதினாறு இடங்களிலிருந்து தாதுகோபத்தை வணங்குவதற்காக, தாதுகோபத்தைச் சூழ 16 விகாரை மனைகள் அமைக்கப்பட்டுள்ளன.