மெதவல விகாரைச் சுவரோவியங்கள்
மெதவல விகாரை மன்னன் கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கனின் அனுசரணை யுடன் நிர்மாணிக்கப்பட்ட ஒரு விகாரை யாகும். கி.பி. 1755-1760 இற்கு இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த இந்த விகாரை கண்டி மாவட்டத்தில் உள்ள ஹாரிஸ்பத்துவையில் மெதவல எனும் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இது தூண்களின் மீது அமைக்கப்பட்டுள்ளது. அதாவது சற்று உயரமான அதாவது 1 அடி 8 அங்குலம் (50 சென்ரி மீற்றர்) உயரமான 34 கற்றூண்களின் மீது இவ்விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 13 அடி 8 அங்குல நீளமும் (4.1 மீற்றர்) 8 அடி 4 அங்குல (2.5 மீற்றர் அகலமும் கொண்ட சிலைமனையும் அதனைச் சூழ வலம்வரும் பகுதியும் அமைந்துள்ளன. சார்பளவில் சிறியதொரு சிலைமனையாகிய ‘மெதவளை தூண் மேல் விகாரையில்” கண்டியப்பாணியின் ஆரம்பகாலப் பண்புகளைக் காட்டும் பல ஓவியங்களைக் காணமுடிகின்றது.
பௌத்த விகாரை என்பது, தனியே ஓவியங்களைக் கொண்ட ஒரு கட்டடம் மாத்திரமன்று, அது ஓவியங்கள், சிற்பங்கள், கட்டடக்கலைக்கூறுகள் ஆகிய மூன்று அம்சங்களையும் உள்ளடக்கிய ஓர் அமைப்பாகும். இப்படைப்புக்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து, பௌத்த அகிலத்தைக் காட்டுகின்றமையைக் காணக்கூடியதாகவுள்ளது. இக்கருத்தை நன்கு உறுதிப்படுத்தும் ஓர் இடமாக மெதவளை சிலைமனைப்படைப்புக்களைக் குறிப்பிடலாம். சிலைமனையின் நடுவே, வஜ்ராசனத்தில் அமர்ந்திருக்கும் புத்தர் உருவம் காட்டப்பட்டுள்ளது. மரத்தில் செதுக்கு வேலைப்பாடுகள் செய்து வர்ணந்தீட்டப்பட்ட ஒரு மகரதோரணத்தின் கீழ் அமர்ந்தநிலைச் சிலை காணப்படுகின்றது. சிலைமனை நுழைவாயிலின் முன்னே காணப்படும் இந்தப் புத்தர் சிலையுடன் இணைந்த மகரதோரணத்தில் மகர வாய்க்கு மேலே குடையும் அரச மரமும் உள்ளன. தோரணத்துக்கு மேலே, ரிசப (எருது), அன்ன, யானை மற்றும் கருட வாகனங்களில் அமர்ந்திருக்கும். சிவன், பிரம்மன், இந்திரன், விஷ்ணு ஆகிய தேவ உருவ வரிசை காணப்படுகின்றது. அதற்கும் மேலே மற்றுமொரு உருவ வரிசை உள்ளது. இந்த தேவ உருவங்கள் மூன்று கைகளுடன் காட்டப்பட்டுள்ளமை ஒரு சிறப்பியல்பாகும். மகரவாயிலின் இரு புறங்களிலும் சாமரை வீசுகின்ற இரண்டு பரிவார தேவ உருவங்கள் காட்டப்பட்டுள்ளன. இதற்கமைய ஒட்டுமொத்த மகரதோரணம் இருபரிமாண-முப்பரிமாணப் படைப்பாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தோரணத்துக்குச் சார்பாக புத்தரின் உலகத்துடன் ஒரு வரிசை அறிவொளி பெற்றோர் (ரஹதுன்களும்), ஜாதகக் கதைகளும் தெய்வங்களின் உலகத்தில் பதினாறு இடங்கள், ஏழு வாரங்கள் ஆகியனவும் காட்டப்பட்டுள்ளன. ஜாதகக் கதைகளாக வெஸ்ஸந்தர ஜாதகமும் ‘உரக ஜாதகமும் மாத்திரமே காணப்படுகின்றன. அதற்கமைய கிழக்குத் திசைச் சுவரில் அறிவொளி பெற்றோர், வெஸ்ஸந்தர, ஏழுவாரங்கள் ஆகியன காட்டப்பட்டுள்ளன. மேற்குத்திசைச் சுவரில் கீழிருந்து மேலாக அறிவொளி பெற்றோர் உரக ஜாதகம், ஏழு வாரங்கள் ஆகியன காட்டப்பட்டுள்ளன.
மெதவலை விகாரையில் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் மத்திய கண்டிக்கால மரபினது தனிச்சிறப்பான பண்புகளைக் காட்டிநிற்கும் படைப்புகளாகக் கருதப்படுகின்றன. இவை தொல்லரு பண்புகளைக் கொண்ட படைப்புக்களாகும். மிகச்சிறிய வெளிக்குப் பொருத்தமானவாறான சிறுசிறு வரிசைகளாகத் தொகுக்கப்பட்டுள்ள இந்த ஓவியங்கள், மிக நுணுக்கமான பண்புகளைக் கொண்டவை யாகும். மனித உருவங்கள் சற்று நீளப்பாடானதாகவும் தனி வர்ணத்தினாலும் காட்டப்பட்டுள்ளன. இடைவெளிகளை நிரப்புவதற்காக, தாமரைப்பூ தாழம்பூ போன்றவற்றாலான அலங்காரிப்புக்கள் பயன்படுத்தப்பட்டுள்ன. உருவங்களைச் சூழத் திட்டவட்டமான புற வரிகளோடு வரையப்பட்டுள்ளதோடு, முப்பரிமாண இயல்பைக் காட்டுவதற்கான முயற்சியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறான பண்புகளைக் காட்டும் படைப்புக்களுள் ஒன்றாக ஏழு வாரங்களைக் (சத் சத்திய) காட்டும் ஓவிய வரிசையில் உள்ள அனிமிசலோச்சன பூசையைக் காட்டும் ஓவியத்தை எடுத்துக் காட்டலாம். அரச மரம், அழகிய வஜ்ராசனத்தின் மீது அமைக்கப்பட்டுள்ளதோடு, அதனை நோக்கி அனிமிசிடுலோச்சன பூசையில் ஈடுபட்டிருக்கும் புத்தர் உருவத்தின் கைகள், கல்விகாரையில் உள்ள நிற்கும் நிலைப் புத்தர் சிலையின் முத்திரையை நினைவூட்டுவதாக அமைந்துள்ளது. இங்கு காட்டப்பட்டுள்ள அரசமரம், அது வைக்கப்பட்டுள்ள அடிப்பகுதி, புத்தர் உருவத்தில் ஒளிவட்டம் ஆகியன மிக நுணுக்கமாகவும் விரிவாகவும் காட்டப்பட்டுள்ளமையானது தொன்மைப் பண்புகளைக் காட்டி நிற்கின்றது. அதற்கான ஓர் உதாரணமாக, புத்தர் பெருமான் அரசமரத்தின் அடிவாரத்தில் அமர்ந்திருக்கும் சந்தர்ப்பத்தில் மாரனின் புதல்வியர்கள், மாலைகளைக் கைகளிலேந்தி நடனமாடும் விதத்தைக் காட்டும் ஓவியத்தைக் குறிப்பிடலாம்.
மெதவளை விகாரை ஓவியங்களில் வெஸ்ஸந்தர ஜாதகக் கதையின் சில நிகழ்வுகள் மிக மிக விரிவாகவும் நுணுக்கமாகவும் வர்ணங்களாலும் கோடுகளாலும் காட்டப்பட்டுள்ளன.
மத்திரீ தேவி பழங்கள் பறிப்பதற்காகச் செல்லும் சந்தர்ப்பத்தைக் காட்டும் ஓவியத்தில் காட்டைக் குறிப்பதற்காக பாணிசார்ந்த மரங்களும் வட்டவடிவப் பாதைகளைக் கொண்ட ”வங்ககிரியும்” காட்டப்பட்டுள்ளன. நதிகள், குளங்கள், சிக்கலான பாதைகள் போன்றவற்றை வரையும்போது ஓவியர் மேலேயிருந்த கீழே பார்க்கும்போது தோன்றும் விதத்தில் அதன் திட்டத்தை அமைந்துள்ளனர். இவ்வாறான பண்புகளை உரக சாதகத்திலும் காணலாம். அதற்கமைய இந்த ஓவிய வரிசையில் மேலிருந்து கீழே பார்க்கும்போது தோற்றும் விதத்திலேயே அதாவது பறவைக் கண் பார்யிைல் (Bird eye viwew) வயல் காட்டப்பட்டுள்ளன.
தொடர்ச்சியான கதை சொல்லல் முறையில் சம்பவங்களைக் காட்டும்போது அந்தந்தப் பாத்திரத்துக்குப் பொருத்தமான ஆடையணியைக் காட்டுதல். சந்தர்ப்பத்துக்குப் பொருத்தமான உடல்நிலைகளைக் (Posturc) காட்டுகின்றது. இடைவெளிகளை நிரப்புவதற்காக மலர்களை இடுதல், மரங்களின் தண்டைக் காட்டுவதற்காக வெள்ளை நிறத்தைப் பயன்படுத்தல் ஆகிய பண்புகள், உருவங்களுக்கும் வர்ணங்களுக்கும் இயிைலான இணக்கப்பாட்டைக் காட்டி நிற்கின்றன எனக் குறிப்பிடலாம்.
மெதவளை விகாரையில் காணப்படும் – பதினாறு இடங்கள் (சொளொஸ்மஸ்தான)” எனும் ஓவியம் அவ்வாறான பண்புகளைக் கொண்ட ஒரு படைப்பாகும். தாதுகோபங்கள் விருட்ச வடிவங்கள், மலர் அலங்கரிப்புக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதோடு, மகியங்கனைத் தாதுகோபம் அவ்வப்போது பெரிதாக்கி அமைக்கப்பட்ட விதமும் இணைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய மகியங்கனை தாதுகோபம் தொடர்பான ஒரு வரலாற்றுத் தகவல் இதன் மூலம் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. அதாவது ஒரு வரலாற்றுச் செய்திக்கு உருவங்கொடுக்கப்பட்டுள்ளது.
‘பதினாறு இடங்கள்’ எனும் ஒவியங்களுள், புத்தர் பெருமான் பகற்கால குகையினுள் இருப்பதைக் காட்டும் ஓவியம் தனிச்சிறப்பான ஒரு படைப்பாகும். கற்குகையொன்றினுள் சயன கொள்வதைப் போன்று புத்தர் பெருமானின் உருவம் வரையப்பட்டுள்ளதோடு, அவ்வாறு துயில்நிலையில் உள்ள புத்தர் உருவத்துக்கு மேலே மெல்லிய வலைபோன்ற ஒரு மறைப்பு தொங்கவிடப்பட்டுள்ளமையும்
காட்டப்பட்டுள்ளது. இந்தக் குகையின் ஒரு புறத்தே சிவனொளிபாத மலையும் அதன் மீது புத்தரின் புனிதபாத அடையாளமும், சிவனொளிபாதக் காடும் காட்டப்பட்டுள்ளன.
மெதவளை விகாரையின் கிழக்குத் திசைச் சுவரில் உள்ள அறிவொளி பெற்றோர்களைக் காட்டும் ஒவிய வரிசை தனிச்சிறப்பானது. சரியுத், முகலன் ஆகிய இருவரையும் முதன்மையாகக் கொண்ட இந்த ரஹத்தன்கள் வலது கையில் மலரொன்றினை ஏந்தியவாறு இடது கையைத் தொங்கவிட்டுள்ளவாறும் வைத்திருப்பது காட்டப்பட்டுள்ளது. இந்த அறிவொளி பெற்றோர் உருவங்களில் முகத்தின் முக்காற்பகுதியளவு (3/4) தெரியும்படி வரையப்பட்டுள்ளது. அத்தோடு, மெதவளை ஓவியங்களுள், பிக்கு உருவமொன்றும் பொதுமனித உருவமொன்றும் உள்ளன. விதானத்தில் உள்ள ஓவியங்களுள் துசித்த தேவலோக விதானம் ஒரு மூன்று மாடிக் கட்டடமாக மிக அழகிய செதுக்கு வேலைப்பாடுகளுடன் கண்டிக்கால கட்டட நிர்மாணப் பண்புகளுடன் வரையப்பட்டுள்ளமையைக் காண முடிகின்றது.