பொத்குல் விகாரைச் சிலை
- பொலநறுவை பராக்கிரம சமுத்திரத்துக்கு அருகில் உள்ள பொத்குல் விகாரைக்கு முன்னால் இக் கற்சிலை அமைக்கப்பட்டுள்ளது.
- பொலநறுவைக் காலத்தில் கி.பி. 11-12 ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்ததாகக் கருதப் படுகிறது.
- நன்றாக வளர்ந்த உடல் கட்டமைப்பைக் கொண்டுள்ளதுடன், ஒரு காலை ஊன்றி மற்றைய காலை இலேசாக வைத்து மூவளைவு சுபாவத்தில் புடைக்கப்பட்டுள்ளதால் உடலின் சந்தத்தன்மை வெளிக்காட்டப்படுகிறது.
- எடுப்பான மனிதன் சிந்தனை வயப்பட்டிருப்பதோடு கண்களை தமது கைகளில் ஏந்தியுள்ள பொருளின் மீது செலுத்தியுள்ளார்.
- மார்பின் இரு புறங்கள் வரை நீண்டு வளர்ந்துள்ள தாடியும், இரு அந்தங்களிலும் கீழ்நோக்கி வளைந்துள்ள மீசையும் இச்சிலைக்கு சாந்தத் தன்மையை வழங்குவதோடு பெருமிதத் தன்மையைக் காட்டுகிறது.
- வேட்டி போன்ற ஓர் உடையினால் உடலின் கீழ்ப்பகுதி அழகுபடுத்தப்பட்டுள்ளது. இடுப்புப்பட்டி இடுப்பில் இறுக்கமாக அமைந்துள்ளமையால் வயிறு முன்தள்ளப்பட்டுக் காணப்படுகிறது.
- இச்சிலை பொலநறுவைக் காலச் சிற்பக் கலையின் உன்னத கலைப் பண்புகளைக் காட்டி நிற்கிறது.
பொத்குல் விகாரை சிலை தொடர்பான கல்விமான்களின் கருத்துகள்:
- பராக்கிரமபாகு மன்னனின் சிலை என்பது
- பொலநறுவையில் வாழ்ந்த குருளுகோமி எனும் ஞானியுடையது என்பது
- கபிலர் எனும் ரிஷியுடையது என்பது
- கையில் தாங்கியுள்ள பொருள் அரசைக் குறிக்கிறது என்பது செனரத் பரணவித்தான அவர்களின் கருத்தாகும்.
- புலஸ்தி ரிஷியைக் குறிக்கிறது என்பது
பயிற்சி வினாக்கள்
தரப்பட்டுள்ள ஒளிப்படத்தை ஆதாரமாகக் கொண்டு வினாக்களிலுள்ள இடைவெளிகளை நிரப்புக.
1. பராக்கிரம சமுத்திரத்துக்கு அருகில் உள்ள ………………………………… விகாரைக்கு முன்னால் இக் கற்சிலை அமைக்கப்பட்டுள்ளது.
2. கையில் தாங்கியுள்ளபொருள் ………………………………ஐ குறிக்கிறது என்பது செனரத் பரணவித்தான அவர்களின் கருத்தாகும்.
3. இச்சிலை ………………………………….. காலத்திற்குரியது.
4. இச் சிலையின் உடலமைப்பு…………………………………நிலையில் காணப்படுகின்றது.
5. இச்சிலை கற்பாறையில் ………………………………………… நுட்பமுறையில் சிலையாக வடிக்கப்பட்டுள்ளது.