பல்லவர் கலை
பல்லவர் கலை மரபு என்பது தென்னிந்திய கலை மரபை சேர்ந்த ஒன்றாகும். இது கி.பி. 4 ஆம் நூற்றாண்டு தொடக்கம் 9 ஆம் நூற்றாண்டு வரையான காலப் பகுதிக்குரியது. எனினும் கி.பி. 3 ஆம், 4 ஆம் நூற்றாண்டுகளின் பல்லவர் கலை மற்றும் கட்டடக் கலை தொடர்பான சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை . பல்லவர் கலை தொடர்பான சான்றுகள் கி.பி. 6 ஆம் நூற்றாண்டு தொடக்கம் 9 ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியிலே கிடைத்துள்ளன. பல்லவர் இராசதானியின் தலை நகரம் காஞ்சிபுரம் ஆகும். காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு, சிம்ம விஷ்ணு, முதலாம் மகேந்திரவர்மன், முதலாம் நரசிம்மவர்மன் (மாமல்லன்), இரண்டாம் நரசிம்ம வர்மன், ராஜசிங்கன், நந்திவர்மன் ஆகியோர் ஆட்சி செய்துள்ளனர்.