நத்தார் விழா
- நத்தார் எனும் சொல் போர்த்துக்கேய மொழிச் சொல்லாகும்
- நத்தார் என்பது பிறப்பு எனப் பொருள்படும்.
- இலத்தீன் மொழியில் நத்தாலிர் எனும் பதத்தின் பொருள் பிறப்பு என்பதாகும்.
- உலகெங்கும் பரந்து வாழும் கிறிஸ்தவர்கள் இயேசுவின் பிறந்ததினத்தை நத்தார் எனக் கொண்டாடுகின்றனர்.
- இயேசு மனிதப்பிறவியெடுத்த தேவ புத்திரன் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கையாகும்.
- இயேசு பிரான் மனிதப் பிறவியெடுத்தப் பிறந்த தினமே நத்தார் எனக் கொண்டாடப்படுகின்றது.
- இயேசு பிரான் சமாதானத்தின் குமாரன் எனவும் அழைக்கப்படுகின்றார்.
- இயேசு பிரானின் தாய் அன்னை மரியாள் ஆவார். பாதுகாவள் பிதா ஜூசே ஆவார்.
- இயேசுப்பிரான் டிசெம்பர் மாதம் 24 ஆந்திகதி இரவு பிறந்ததாக கருதப்படுகின்றது.
- குடிசனக் கணக்கெடுப்பில் பங்குகொள்வதற்காக பெத்லஹேம் வந்தபோது மாட்டுத் தொழுவத்தில் குழந்தையேசு பிறந்ததாக கருதப்படுகின்றது.
- இயேசு பிரான் நிகழ்த்திய போதனைகள், அவர்கள் நடத்திய அற்புதங்கள், சட்டதிட்டங்களை மீறல் போன்ற காரணங்களுக்காக ஜூதர் தலைவர்கள் அவருக்கு எதிராகக் கிளர்ந்தனர்.
- அக்காரணங்களுக்காக இயேசு பிரான் சிலுவையில் தொங்கவிட்டுக் கொல்லப்பட்டார்.
- பிரதி வருடமும் டிசெம்பர் 24 ஆந் திகதி இரவு தேவலாயங்களில் ஒன்று திரளும் கிறிஸ்தவர்கள் நத்தாரை அதாவது இயேசுவின் பிறப்பை கொண்டிடுவர்.
- அன்றைய தினத்தில் ஏழை எளியவர்களுக்கு உணவளிப்பர், ஆடையணி வழங்குவார், பரிசுகளும் வழங்குவர்.
- வீடுகளை அலங்கரிப்பார், மாட்டுத் தொழுவங்கள் அமைப்பார், நத்தார் மரங்களை அலங்கரிப்பார்.
- நத்தார் தினத்தன்று புத்தாடை அணிவித்து அறுசுவை உணவு தயாரிப்பர்.
- நத்தார் வாழ்த்துமடல்களைப் பரிமாறிக் கொள்ளல் விசேடமான ஒரு நிகழ்வாகும். நத்தார் தாத்தா வரும் வரை சிறுவர்கள் எதிர்பார்த்துக் காத்திருப்பர்.
- நத்தார் பாடல்கள், நத்தார் நாடகங்கள், நத்தார் திரைப்படக் காட்சிகள் போன்றவையும் இப்பண்டிகைக் காலத்தில் பரவலாக இடம்பெறும்.
- ஏழை எளியவருக்கு தானமளிப்பதும் சிறுவர்க்குப் பரிசுப் பொருள்கள் வழங்கலும் நத்தார் தின விசேட நிகழ்வுகளாகும்.
- இயேசு பிரானின் சமாதானத்தை தூதுச் செய்தியை உலக மக்கள் அனைவரும் மதித்தல் வேண்டும்.
பயிற்சி வினாக்கள்
1. நத்தார் பண்டிகையைக் கொண்டாடும்; மதத்தினர் யார்?
2. நத்தார் பண்டிகையின் போது பயன்படுத்தப்படும் அலங்கரிப்பு வகைகள் நான்கினைக் குறிப்பிடுக.
3. நத்தார் பண்டிகை கொண்டாடப்படும் நோக்கம் என்ன?
4. இப்பண்டிகைக் காலத்தில் இடம்பெறும் நற்செயல்கள் இரண்டினைக் குறிப்பிடுக.
5. நத்தார் பண்டிகைச் சோடனைகளுக்காகப் பயன்படுத்தும் மூலப்பொருள்கள் ஐந்தினைக் கூறுக.