தூபாராமை சிலை மனை
பொலனறுவைக்கால, இலங்கைக் கட்டடக் கலைஞர்களில் உன்னதமான ஒரு படைப்பு தூபாராமை சிலை மனை ஆகும். செங்கல்லினாலாக்கப்பட்ட குவிவான கூரையுள்ள சிலை மனைகளுள் இதுவரையில் மிக நல்லநிலையில் காணப்படும் சிலை மனை இதுவாகும். இது பொலனறுவையில்
ள்ள மிகப் பழைமைவாய்ந்த சிலை மனையாகக் கருதப்படுகின்றது, தலதா மலுவை எனப்படும் பகுதியில் வலது புற ஓரத்தில் இச்சிலை மனை அமைக்கப்பட்டுள்ளது. தூபாராமை என அழைக்கப்படும் இச்சிலை மனையின் உண்மையான பெயர் யாது என்பது இதுவரையில் கண்டறியப்படவில்லை. இது பராக்கிரமபாகு மன்னனின், மகிந்த எனும் அமைச்சரினால் புனித தந்தத்தை புதைத்து வைப்பதற்காக நிர்மாணிக்கப்பட்டதாக சூழ வம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சிலை மனையாக இருக்கலாம் எனவும் அனுமானிக்கப்படுகின்றது.
தூபாராமை சிலை மனை, மண்டபம், முன் மண்டபம் (விறாந்தை), கர்ப்பக்கிரகம் என மூன்று பகுதிகளைக் கொண்டது. கட்டத்தின் ஒட்டுமொத்த நீளம் 84 அடி 6 அங்குலம் ஆகும். இதன் கர்ப்பக் கிரகம் 51 அடி 7 அங்குலம் நீளமாமனது. மண்டபம் 39 அடி 4 அங்குல நீளமானது: துவார மண்டபம் 19 அடி அகலமானது. சுவர்கள் 7 அடி வரையில் தடிப்பானவை.
சிலை மனையினுள் பிரவேசிப்பதற்குரிய பிரதான வாயில் கிழக்குத் திசையை நோக்கி அமைந்துள்ளது. இடை மண்டபத்தினுள் நுழைவதற்கான சிறியதொரு வாயில், வடக்குச் சுவரில் அமைந்துள்ளது. கர்ப்பக் கிரகத்திற்கு ஒளியும் காற்றோட்டமும் பெறுவதற்காக தெற்கு மற்றும் வடக்குச் சுவர்களில் நான்கு யன்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தூபாராமைக் கர்ப்பக்கிரகத்தின் மீது உயரமான ஒரு சிகரம் அமைந்துள்ளது. அதன் கூரை ஏனைய கெடி மனை சிலை மனைக் கூரைகளைவிடச் சார்பளவில் தட்டையான வடிவத்தில் செங்கல்லும் சாந்தும் கொண்டு அமைக்கப்டப்டுள்ளது. அது பொலனறுவை சிலை மனைகளின் பொதுப் பண்பாகிய குவிவுக் கூரை முறையில் அமைக்கப்பட்டுள்ளது ஆகும். மேலும் இக்கூரை மீது ஓரத்தில் நான்கு புறங்களிலும் சுற்றிவர பெட்டி வடிவத்தில் அமைக்கப்பட்ட ஒரு குறு மதிலும் காணப்படுகின்றது.
செங்கலினாலான இந்த சிலை மனையின் வெளிச்சுவர்கள் விமானங்களுடன் அமைக்கப் பட்டுள்ளதோடு, அவற்றின் மத்தியில் தேவதை உருவங்கள் இடப்பட்டுள்ளன. விமானத்தூண்களின் பக்கங்களில் சிங்கம், யானை, அன்னம், பூங்கொடி ஆகிய அலங்கார வரிசைகளினால் அழகுபடுத்தப்பட்டுள்ளது. அவை செங்கல்லையும் சுதையையும் (Stucco – சாந்து) பயன்படுத்தி அமைக்கப்பட்டுள்ளன. கட்டடத்தின் அத்திவார முகப்பு சிங்க உருவ்ங்களாலும் வாமன (குள்ளர்) உருவங்களினாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
சிலை மனையினுள் உள்ள கர்ப்பக் கிரகத்தில் தியான நிலைப் புத்தர் சிற்பமொன்று வைக்கப்பட்டுள்ளது. தற்போது இப்புத்தர்சிற்பத்தின் மேற்பகுதி சிதைவடைந்துள்ளது. கல்விகாரையில் காணப்படுவதைப் போன்ற மகரதோரணமொன்று செங்கல்லினாலும் சாந்தினாலும் இச்சிற்பத்துடன் இணைக்கப்பட்டிருந்தாக பெல் (Bell) தெரிவித்துள்ளார். மேலும் இச்சிலை மனையின் சுவர்கள் எளிமையானவை, அச்சுவர்களின் மீது ஓவியங்கள் காணப்பட்டமைக்கும் சான்றுகள் கிடைத்துள்ளன.