சுமன திசாநாயக்க (1922 – 1995)
- இவர் 1922 இல் மாத்தறை, கம்புறுப்பிட்டிக் கிராமத்தில் பிறந்தார்.
- கொழும்பு தொழினுட்பக் கல்லூரியில் கலை பயின்று, இங்கிலாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகளிலும் சித்திரக் கலைப் பயிற்சி பெற்றுள்ளார்.
- கல்வித்திணைக்களத்தில் சித்திரக் கலைப் பரிசோதகராகவும், நூல் வெளியீட்டுச் சபையில் சித்திரக் கலைப் பணிப்பாளராகவும் சேவையாற்றினார்.
- சிறுவர் நூல்களுக்காகப் புதியதொரு பாணியில் சித்திரங்களைப் படைத்த ஒரு கலைஞராக இவர் சிறப்புப் பெறுகின்றார்.
- எண்ணெய் (தைல் ) வர்ணம், நீர் வர்ணம், அக்கிரலிக்கு போன்ற வெவ்வேறு ஊடகங் களைப் பயன்படுத்தி ஆக்கங்கள் படைத்துள்ளார்.
- இவரது ஆக்கங்கள் இரண்டு வகை :
- எண்ணெய் வர்ணச் சித்திரம்
- கதைக் காட்சிச் சித்திரம்
- எளிமையான, நவீன வடிவங்களைக் கொண்ட பற்ரிக் (Batik) ஆக்கங்களுக்கான ஆரம்ப கால முன்னோடியும் ஆவார்.
- அவர் படைப்பாக்கத்தின் போது எளிய, அரூப நிலையான தளவுருவங்களையும், நிறங்களையும் மிகவும் ஆக்கபூர்வமான வகையில் பயன்படுத்தியுள்ளார்.
- இவ்வுலகு சாராத எண்ணக்கருக்களை அடிப்படையாகக் கொண்டு, தத்ரூபமான உணர்வு களை வெளிப்படுத்தும் வகையிலும், நயப்புக்கு வழிகோலும் வகையிலும் இவரது படைப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
- புத்தக அட்டைகள், கதைக் காட்சிச் சித்திரங்கள், சிறுவர் நூல்கள், சஞ்சிகைகள் போன்றவற்றுக்காக எளிய தளவடிவங்களைக் கொண்டு சித்திரங்கள் படைத்துள்ளமை யைக் காண முடிகின்றது.
பயிற்சி வினாக்கள்
1. எளிமையான நவீன வடிவங்களை கொண்ட பற்ரிக் ஆக்கங்களை உருவாக்கிய முன்னோடி கலைஞர் யார்?
2. சுமண திசாநாயக்கா கலைஞரின் ஓவிய கலை பண்புகளை சுருக்கமாக குறிப்பிடுக?
3. இவர் ஓவியங்களுக்காக பயன்படுத்திய ஊடகம் யாது?
4. இவரது ஓவியங்கள் பிரசித்தி பெற காரணமான சித்திர ஆக்கம் எது?
5. சிறுவர் நூல்களுக்காகப் புதியதொரு பாணியில் சித்திரங்களைப் படைத்த கலைஞர் யார்?