சிலை மனைகள்

விக்கிரகங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட மனை என்பதே சிலை மனை எனும் பதத்தின் கருத்தாகும். பௌத்த ஆச்சிர நிர்மாணிப்பில் அடங்கும் பிரதானமான ஒரு கட்டடமாக சிலை மனையைக் குறிப்பிடலாம். புத்தர்சிலைகள் இந்நாட்டில் பரம்பியதுடன் கூடவே சிலை மனைகளும் நிர்மாணிக்கப்பட்டன. கிறித்துவுக்கு முந்திய மூன்று நூற்றாண்டு காலத்துள், ஸ்ரீ மகாபோதி மற்றும் ருவன்வெலிசாயா தாதுகோபம் தொடர்பாக புத்தர்சிலைகள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் சிலை மனைகள் பற்றிய பதிவுகள் கிடையாது. மன்னன் வசபன் காலத்தில் ஸ்ரீ மகாபோதி வளாகத்தில் நான்கு புத்தர்களுக்காக சிலை மனையொன்று செய்விக்கப்பட்டது என்பதே சிலை மனைகள் தொடர்பாக அறியக் கிடைத்துள்ள முதலாவது தகவலாகும். சிலை மனைகள் கி.பி. 4 ஆம் நூற்றாண்டின் பின்னரே தோற்றம் பெற்றன என அனுமானிக்கப்படுகின்றது. தற்போது எமது நாட்டில் காணப்படும் விக்கிரகமனைகள் நான்கு வகைகளைச் சேர்ந்தவையாகும். கந்த குட்டி, பிரசாத, கெடி கெவல், லென் விகாரை ஆகியனவை அவையாகும். பொலனறுவைக் காலத்தில் இச்சிலை மனை வகைகளுள், கந்தகுட்டி, கெடி கெய, லேன் விகாரை ஆகிய மூன்றுவகை விக்கரக மனைகளே பெரிதும் பிரபல்யம் பெற்றிருந்தன.

1. கந்த குட்டி

தற்போது இனங்காணப்பட்டுள்ள மிகப் பழைமை வாய்ந்த சிலை மனை வகை ‘கந்த குட்டிய ஆகும். அது புத்தர் சிலையை வைப்பதற்காக அமைக்கப்பட்ட சதுரவடிவ கர்ப்பக் கிரகத்தையும் சிறிய ஒடுங்கிய மேடையையும் கொண்டதாகும். இதன் அமைப்பு புத்தர் பெருமானின் கந்தக்குட்டியினது அமைப்புக்கு ஒப்பானதாகக் கருதப்படுகின்றது. அனுராதபுர கிரிபத் விகாரை சிலை மனை இப்பண்டைய வகையைச் சேர்ந்ததாகும். சிலை வழிபாடு பிரபல்யமடைந்த பின்னர் அத்திட்டத்தின் விறாந்தையாகக் கட்டப்பட்டிருந்த பகுதிக்கு முன்னே ஒரு மண்டபமும் சேர்க்கப்பட்டது. பன்குளிய மற்றும் தொழுவிலை சிலை மனைகளை இதற்கான உதாரணங்களாகக் குறிப்பிடலாம்.

பொலனறுவைக் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட ‘கந்த குட்டிய’ நிர்மாணிப்புகளுக்கு உதாரணங்களாக அட்டதாகே, ஹட்டதாகே போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

2. பிரசாத

சிலை மனைகளின் இரண்டாவது கட்டம் பிரசாத வகைகளைச் சேர்ந்ததாகும். இக்கட்டத்தில் சிலை மனைகள் மூன்று பகுதிகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளன. கர்ப்பக் கிரகம், அதன் முன்னால் அமைந்த இடைமண்டபம், துவார மண்டபம் ஆகியனவே அவையாகும். இதற்கான பழைமை வாய்ந்த ஓர் உதாரணமாக அனுராதபுர துபாராமை சிலை மனையைக் குறிப்பிடலாம். தியான நிலைப் புத்தர் சிலைகளுக்கு மட்டுமன்றி, நின்ற நிலைப் புத்தர் சிலைகளுக்கும் சயன நிலைப் புத்தர் சிலைகளுக்கும் கூட அனுராதபுரக் காலத்தில் சிலை மனைகள் அமைக்கப்பட்டுள்ள மையைக் காணமுடிகின்றது. பிரதுரங்கலை சயன நிலைப் புத்தர் சிலைக்காக நிர்மாணிக்கப்பட்ட விக்கரக மனையை இவ்வகையைச் சேர்ந்த மிகப் பண்டைய விக்கிர மனைகளுக்கான உதாரணமாகக் செனரத் திசாநாயக்க எடுத்துக்காட்டியுள்ளார்

3. லென் விகாரை (குகை விகாரை)

குகை விகாரை வகை விக்கிரகமனைகள் மூன்று வகையானவை. இயற்கையாகக் காணப்பட்ட குகைகளுக்கு மறைப்பிட்டு, அமைக்கப்பட்ட விக்கிரக மனைகள், கற்குன்றின் முகப்பில் செதுக்கப்பட்ட சிலைக்காக அமைக்கப்பட்ட மறைப்பிட்ட விக்கிரகமனை, கல்லினுள் குடைந்து அமைக்கப்பட்ட சிலை மனை ஆகியனவே அம்மூன்று வகைகளுமாகும். இயற்கையாகக் காணப்பட்ட குகைகளுக்கு மறைப்பிட்டு அமைக்கப்பட்ட விக்கிரக மனைகளுக்கு உதாரணமாக, அனுராதபுரக்கால ரிட்டிகலை மற்றும் கித்துள் பவ்வை குகை விகாரை மனைகளைக் குறிப்பிடலாம். கற்குன்றின் முகப்பில் செதுக்கப்பட்ட விக்கரகங்களுகாக அமைக்கப்பட்ட மறைப்பிட்ட விக்கிரகமனைகளுக்கான உதாரணங்க ளாக அவுக்கனை, சஸ்ஸேருவை, மற்றும் கல்விகாரை நின்றநிலை விக்கிரகங்களுக்காக அமைகக்கப்பட்ட விக்கிரக மனைகளைக் குறிப்பிடலாம். கல்லினுள் குடையப்பட்ட குகை விகாரைகளாக, தந்திரிமலை சயன நிலைப் புத்தர் சிலை, கல்விகாரையின் குகையினுள் அமைந்த சிலை ஆகியவற்றுக்காக அமைக்கப்பட்டுள்ள விக்கிரக மனைகளைக் குறிப்பிடலாம்.

4. ‘கெடி’ மனை

இவ்வகையைச் சேர்ந்த சிலை மனைகள் செங்கல்லினால் அல்லது கருங்கல்லினால் நிர்மாணிக்கப்ட்டவையாகும். ‘கெடிகெய’ எனும் சொல்லுக்குச் சமமான ஒரு சொல்லாக ‘கிஞ்சகாவஸ்த’ எனும் பாளி மொழிச் சொல்லை எடுத்துக்காட்டும் செனரத் பரணவிதான, அதனை வண. புத்தகோஷ * செங்கல்லினாலும் கல்லினாலும் நிர்மாணிக்கப்பட்ட கட்டடம்” என விளக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இது தவிர கி.பி. 8-10 நூற்றாண்டுகளைச் சேர்ந்த ஒரு சிலை மனையாக ‘நாலாந்தா கெடி மனை’ இனைக் குறிப்பிடலாம். பொலனறுவைக் கால கொடிகெய மரபைச் சேர்ந்த சிலை மனைகளாக தூபாராமய, லங்காத்திலக்கய, திவங்க சிலை மனை ஆகியவற்றைக் குறிப்பிடலாம். பொலனறுவைக் காலத்தில் சேர்க்கப்பட்ட ஒரு விசேட பண்பு, கருப்பக்கிரகத்தைச் சூழ வலம்வருவதற்கு ஒடுக்கமான பிரதட்சணைப் பாதை அமைக்கப்பட்டுள்ளமையாகும். (உதாரணம்: திவங்க சிலை மனை). பொலனறுவைக் காலத்தில் பெரிதும் பிரபல்யம் பெற்றிருந்த கெடி மனை மரபைச் சேர்ந்த சிலை மனைகளை கம்பளை மற்றும் கண்டிக் காலங்களிலும் காண முடிகின்றது. கடலாதெனிய விகாரையை அதற்கான ஓர் உதாரணமாகக் குறிப்பிடலாம்.

கெடி மனை மரபைச் சேர்ந்த சிலை மனைகள், பல்லவ, சோழ மரபைச் சேர்ந்த இந்து விக்கிரக மனைகளின் பண்புகளைக் கொண்டுள்ளன. அதற்கமைய சதுர வடிவ கர்ப்பக்கிரகம், முன் மண்டபம், அந்தராமம், துவார மண்டபம் ஆகிய நான்கு பகுதிகளை இது கொண்டுள்ளது. சிலை மனையினுள் பிரவேசிப்பதற்குப் பிரதானமான ஒரு வாயிலும் பக்கமாக ஒரு வாயிலும் உள்ளன. அவற்றுள் முதன்மையான வாயில், கிழக்கிலும் இரண்டாவது வாயில் வடக்கிலும் அமைந்துள்ளன.

கர்ப்பக்கிரகத்தின் மீது சைத்திய வடிவச் சிகரம் காணப்பட்டது. கூரை உட்பட முழுக் கட்டடமும் செங்கல்லினால் ஆக்கப்பட்டுள்ளது. அடிப்பகுதி, கதவு நிலை, யன்னல் நிலை படிக்கட்டுத்தொகுதி ஆகிய எல்லாம் கல்லினால் அமைக்கப்பட்டுள்ளன. இரட்டைப்பாதம் கொண்ட இக்கட்டத்தின் சுவர்கள் தடிப்பானவை. சிலை மனையைப் புறத்தேயிருந்து நோக்குவோருக்கு அது ஒரு மாடிக்கட்டடம் போன்று காட்சியளிக்கும் அளவுக்கு அக்கட்டடம் உயரமானது. பாரிய அளவுள்ள தியான நிலை மற்றும் நின்றநிலைச் சிலைகளை இடுவதற்காகவே இச்சிலை மனைகள் அமைக்ககப்பட்டுள்ளதாகக் கருதலாம். மண்டபத்தின் இரு புறத்தேயும் சுவர்களுடன் இணைக்கப்பட்டுள்ள ஒடுக்கமான படிக்கட்டு வரிசை புத்தரை வழிபடுவதற்காக மேலே ஏறிச் செல்வதற்காக அமைக்கப்பட்ட தாகும்.

அனுராதபுரக் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட சிலை மனைகளைவிட பொலனறுவைக் கால மனைகள் அளவில் பெரியவையாக இருப்பதைக் காண முடிகின்றது. இக்காலப் பகுதியில் புத்தர் விக்கிரகங்களுடன் ஓவியக்கலையும் செதுக்குவேலைக் கலையும், கலைத்துவப் பாங்கிலும் அர்த்தபுஷ்டியாகவும் பயன்பட்டிருப்பதைக் காண முடிகின்றது. பொலனறுவைக் காலத்துக்குப் பிற்பட்ட காலத்தில் புத்தர் சிலை மனைகளில் நான்கு வகை (விஷ்ணு, கதிர்காமர், சமன், விபீஷண) தேவர்களின் விக்கிரகங்களும் சரியோத்த முகலன் ஆகியோரின் விக்கிரகங்களும் இருபத்து நான்கு புத்தர்களின் விக்கிரகங்களும் சிலை மனைகளில் உள்ளடக்கப்பட்டிருப்பதைக் கண்டிக் காலத்திற்குப் பிற்பட்ட காலத்தில் தெளிவாகக் காண முடிகின்றது.

error: Content is protected !!