சிந்து நதிக்கரை நாகரித்துக்குரிய கலைப் படைப்புக்கள்

வரலாற்றுப் பின்னணி

காலப் பகுதிகள்

சிந்துநதிக் கரை நாகரிகம் சிந்து நதிக்கரையில் உருவாகிய மிகவும் பழைமை வாய்ந்த ஒரு நாகரிகமாகும். பரந்த பிரதேசத்தைக் கொண்ட சிந்து நதிக்கரை நாகரிகம் மொசப்பொத்தேமியா மற்றும் எகிப்திய நாகரிகங்களைப் போன்று மிகவும் பழைமை வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது. இது கி.மு. 3250 – 2750 காலப் பகுதிக்குரியதென தொல்பொருள் ஆராய்ச்சியாளரான ஜோன் மார்ஷல் கருத்துத் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் தொழினுட்ப முறைகளை உபயோகித்த திரு. மோட்டிமர் விலர் இது கி.மு. 2500 இல் ஆரம்பித்தது என முடிவு செய்துள்ளார் எனவும் கி.மு. 1500 இல் அழிந்தது எனவும் தீர்மானித்துள்ளார். கி.பி. அக்ரவால் கி.மு. 2300 – 1750 எனும் காலப்பகுதிக்குரியது என ரேடியம் காபன் கால நிர்ணயத்திற்கு இணங்க தெரிவித்துள்ளார். தற்போது இக்கால எல்லையானது கி.மு. 2150 – 1750 இற்குரியதென முறைமையான ரேடியம் காபன் கால நிர்ணயிப்புகளின்படி கருதப்படுகின்றது.

மொஹன்ஜதாரோ, ஹரப்பா எனும் இரு நகரங்களை அடிப்படையாகக் கொண்டு இந்நாகரிகம் உருவானது. எனவே இந்த நாகரிகம் மொஹன்ஜதாரோ (மாண்டோர் மண்மேடு) எனவும் அழைக்கப் படுகின்றது. அத்துடன் இந்நாகரிகம் ஹரப்பா பண்பாடு அல்லது கலாசாரம் எனவும் அழைக்கப் படுகின்றது. முதன் முதலில் தொல்பொருள் இடிபாடுகள் கண்டெடுத்த இடம் ஹரப்பா ஆதலால் விஞ்ஞான ரீதியான மரபுப்படி இந்நாகரிகம் ஹரப்பா நாகரிகம் எனப்படுகின்றது.

அமைவும் வளர்ச்சியும்

சிந்து நதிக்கரை நாகரிகம் தெற்காசிய உபகண்டத்தின் வடமேற்குப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. பாகிஸ்தானின் இந்து நதிக்கரையில் அருகருகே அமைந்த பட்டினங்களையும் நகரங்களையும் மையமாகக் கொண்டு உருவாகிய சிந்து நதிக்கரை நாகரிகமானது 500 ஆயிரம் சதுர மைல் நிலப்பரப்பில் பரம்பியிருந்ததற்கு சான்றுகள் உள்ளன.

முதன்முதலாக 1921 இல் ஆய்வுகள் ஆரம்பித்த ஹரப்பா நகரம் தற்போதைய பாகிஸ்தானில் மேற்குப் பஞ்சாபில் மொண்டிகோமர் மாவட்டத்தில் ரவீ நதிக்கரைக்கருகிலும் மொஹன்ஜராரோ நகரம் தற்போதைய பாகிஸ்தானின் சிந்தீ இல் லர்கானா மாவட்டத்திலும் அமைந்துள்ளது.

இந்தியாவின் மேற்குப் புறமாக அமைந்த சிந்து நதியை மையமாகக் கொண்ட சிந்து நதி சமவெளியானது இமயமலை அடிவாரத்தில் இந்து சமுத்திரம் வரை 1600 கிலோ மீற்றர் (1000 மைல்) தூரமான பிரதேசத்தில் பரம்பியிருந்தது. இது எகிப்து நாகரிக நிலப்பரப்பின் இரு மடங்காகும். மேலே தரப்பட்ட தேசப்படத்துக்கமைய இது 500 ஆயிரம் சதுர மைல் பரப்பளவைக் கொண்டது. வடக்கில் ஜும்னா நதியின் உக்லின, தெற்கில் காதிவார் பிரதேசம், காம்பே கழிமுகம் (நர்மதா மற்றும் தப்தி நதிக் கழிமுகம்) சிம்லா மலைத் தொடரிலமைந்த ரூபாரில் இருந்து அரபுக் கடற்கரையின் கக்னஜேன்தோர் வரை 1000 மைல்களும், புதுடில்லியிலிருந்து 28 மைல் தென்மேற்கில் அமைந்த யமுனா நதிக்கரையின் ஆலம்கிர்பூர் வரையிலும் இந்நிலப்பரப்பு பரம்பியிருந்தது.

ஹரப்பா, மொஹன்ஜதாரோ நகரங்களை அண்மித்து தொன்மையான மேலும் பல நகரங்கள் உள்ளன. ஹரப்பா அண்மித்து 14 சிறு நகரங்களும் (பட்டினங்களும்) மொஹன்ஜதாரோவை அண்மித்து 17 நகரங்களும் இருந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது. சன்ஹுதாரோ, கலிபங்கன், லோதால் எனும் நகரங்களும் சிந்து நதிக்கரைக்கு அப்பால் ஸுக்தஜேந்தாரோவும் அவற்றில் சிலவாகும்.

சிந்துநதிக்கரை நாகரிகத்தின் தோற்றமும் வளர்ச்சியும்

சிந்துநதிக்கரை நாகரிகம் அல்லது ஹரப்பா நாகரிகத்தின் தோற்றம், வளர்ச்சி, வீழ்ச்சி தொடர்பாக அறிஞர்கள் வெவ்வேறு கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

  • சிந்து நதிக்கரை நாகரிகம் இந்தியாவிலேயே தோற்றம் பெற்றது என்பது
  • எகிப்திய நாகரிகத்திலிருந்து தோன்றியது என்பது
  • சுமேரிய நாகரிகத்திலிருந்து தோன்றிய ஒரு கிளை நாகரிகம் என்பது
  • மத்திய ஆசியாவில் வியாபித்து இந்து நதிக்கரை வரை விரிவடைந்தது என்பது
  • க்வேடா மற்றும் ஷோப் (தற்போது பாகிஸ்தானுக்குரிய) போன்ற கிராமிய பண்புகளை கொண்ட பண்பாடுகளின் வழியே உருவானதொன்று என்பது

முன்வைக்கப்பட்டுள்ள கருத்துக்களுள் இந்நாகரிகம் இந்தியாவிலே தோன்றியதென்பதே இந்திய உண்ணாட்டு அறிஞர்கள் ஏற்றுக்கொண்ட கருத்தாகும். அவர்கள் இதற்கு அடித்தளமாக அமைந்த தனித்துவமான இயல்புகள் சிலவற்றை இவ்வாறு முன்வைத்துள்ளனர்.

(1) ஒருமைப்பாடும் தனிமைப்பட்டிருத்தலும்
(2) பேரரசு மட்ட ஆட்சி அமைப்பைக் கொண்டிருத்தல்.
(3) மட்பாண்டத் தொழில் உயரிய நிலையில் காணப்பட்டமை. (சிந்து நதிக்கரை நாகரிகத்திற்கே உரித்தான பண்புகளைக் கொண்ட ஒன்றையொன்று ஊடறுக்கும் வட்டக் கோலங்களையும் அரசமரத்துடனான அலங்கார வடிவமைப்புகளையும் கொண்டிருத்தல்.)
(4) முத்திரையைக் கொண்ட திமிலுடனான காளை மாடு, யானை. ரைனோசிரஸ் (காண்டாமிருகம்) எனும் விலங்குக் குறியீடுகள் ஏனைய நாகரிகங்களில் காணப்படாமை.
(5) திட்டமிடப்பட்ட நகர அமைப்புக் காணப்படல்.
(6) மேற்காசிய எழுத்தமைப்பு முறையுடன் நேரடியாகத் தொடர்புறாத எழுத்தமைப்பு முறையொன்று காணப்படல்.

இப்பண்புகளுடன் ஒப்பிடுகையில் இந்த நாகரிகம் உயர்வான நிலையை அடைந்து திடீரென அழிந்து போனமைக்கான தன்மைகளைக் காட்டுவதாக தொல்பொருள் ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

சிந்து நதிக்கரை கலாசாரமானது பல்லின மக்கள் வாழ்ந்த சமூகப் பின்னணியைக் கொண்டிருந்த தென கருதப்படுகின்றது. அகழ்வாராய்ச்சிகளின்போது பெற்ற என்புகள், மண்டையோடுகளை ஆதாரமாகக் கொண்டு பெற்ற விஞ்ஞானபூர்வ தகவல்களுக்கமைய இந்நாகரிகத்தில் ஒசுத்திரோலொயிட்டு, மத்திய தரையினர், மொங்கோலொயிட்டு, அல்பைன் போன்ற வெவ்வேறு மக்கட் பிரிவினர் வாழ்ந்ததாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

கலைப் படைப்புக்கள்

சிந்து நதிக்கரையோர நாகரிகத்தின் கலைப் படைப்புக்கள் பயன்பாட்டுப் பெறுமானமுள்ளவையாகக் காணப்பட்டன. அவை உயரிய கலை நுட்பங்களையும் தொழினுட்பத் திறன்களையும் உள்ளடக்கியன வாக இருந்தன. மொஹன்ஜதாரோ – ஹரப்பா நாகரிகத்துக்குரிய மக்கள் உயர்வான கலையாற்றல் களை கொண்டிருந்தனர் என்பது அகழ்வாராய்ச்சிகளின்போது கண்டெடுத்த பொருள்கள் மற்றும் கருவிகள் மூலம் தெளிவாகின்றது. இக்கலைப் படைப்புக்களைப் பின்வருமாறு இனங்காணலாம்.

  • கட்டடக் கலை நிர்மாணங்கள்
  • கற்சிற்பங்கள், உலோகச் சிற்பங்கள் – முத்திரைகள்
  • ஆபரணங்கள், கருவிகள்
  • விளையாட்டுப் பொருள்கள்
  • மட்பாண்டங்கள்
error: Content is protected !!