கே. கனகசபாபதி

  • கலைஞர் கே. கனகசபாபதி இருபதாம் நூற்றாண்டு நடுப் பகுதியைச் சேர்ந்த இலங்கையின் நவீன சித்திரக் கலைத்துறையில் முன்னோடியாகச் செயற்பட்ட ஒரு சித்திரக் கலைஞர் ஆவார்.
  • 1915 யாழ்ப்பாணம், உரும்பிராய்க் கிராமத்தில் பிறந்த கனகசபாபதி முதலில் பலாலி ஆசிரியர் கல்லூரியில் சித்திரக் கலை தொடர்பான துறைசார் கல்வியைப் பெற்றார்.
  • இவர் பலாலி ஆசிரியர் கல்லூரியில் சித்திரக்கலை விரிவுரையாளராகவும் கடமையாற்றி யுள்ளார்.
  • அவர் சித்திரக் கலைத்துறையில் மேலும் ஈடுபடுவதற்காக பிற்காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் இயங்கிய வின்சர் சித்திரக் கலைகழகத்தில் இணைந்து கொண்டார். மீண்டும் மேலதிக கல்வியின் பொருட்டு கொழும்பு தொழினுட்பக் கல்லூரியில் சித்திரக் கலைத்துறையில் கல்வி பயின்றார்.
  • அவரது ஆரம்ப காலச் சித்திரங்களில் ஐரோப்பிய அக்கடமிக் சித்திரக் கலையின் யதார்த்தவாத கலை ஆக்கங்களின் செல்வாக்கு காணப்பட்டதாயினும், அவரது பிற்காலப் படைப்புக்களில் கனவடிவவாத கலைப்பாங்கின் செல்வாக்குகளைக் காணமுடிகின்றது.
  • கனவடிவவாத கலைத்துவப் பண்புகளைக் கொண்ட , தமக்கேயுரித்தான ஒரு பாணியை உருவாக்கிய கே. கனகசபாபதி, 43 குழுவின் கண்காட்சிகளில் பங்குபற்றிய ஒரு சித்திரக் கலைஞர் ஆவார்.
  • 1995 இல் இவ்வுலகை நீத்த கலைஞர் கே. கனகசபாபதியின்

♦ வாசிக்கும் பிள்ளை
♦ சேவற்சண்டை
♦ ஓய்வெடுத்தல்
♦ நிலத்தோற்றம் (Landscape)

போன்ற சித்திரங்கள், சிறந்த கலைப்படைப்புக்களாக மதிக்கப்படுகின்றன.

வாசிக்கும் பிள்ளை

  • கலைஞர் கே. கனகசபாபதியினால் படைக்கப்பட்ட ‘வாசிக்கும் பிள்ளை ‘ எனும் ஓவியம், கன்வஸ் மீது எண்ணெய் (தைல ) வர்ணத்தினால் வரையப்பட்டுள்ளது.
  • மரபுரீதியான இயல்புகளுடன் கனவடிவவாதக் கலைப்பாங்கின் செல்வாக்கைப் பெற்று இப்படைப்பு ஆக்கப்பட்டுள்ளது.
  • கனவடிவ வாதக் கலைப்பண்புகளின்படி ஓவியத்தின் பின்னணியானது, கோடுகளாலான ஒரு தளமாகக் காட்டப்பட்டுள்ளது.
  • ஒன்றுக்கொன்று வேறுபட்ட வடிவங்களும் வெவ்வேறு திசைமுகங் கொண்ட முகங்களும் ஒரு தனி வர்ணப் பின்னணியில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
  • இவ்வோவியத்தில் ஆழமும் முப்பரிமாணத் தன்மையும் கோடுகள் மற்றும் வர்ணந் தீட்டல் நுட்ப முறையில் காட்டப்பட்டுள்ளது.
  • ஓவியத்தின் பிரதான உருவை விட, பின்னணியானது கனவடிவவாத கலைச் செல்வாக் குடன் துண்டுகளாக்கப்பட்டுள்ளது.
  • ஓவியத்தில் காட்டப்பட்டுள்ள பிள்ளை பெரும்பாலும் பாணி சார்ந்த வடிவங்களைக் கொண்டு காட்டப்பட்டுள்ளது.
  • இவ் ஓவியத்தில் பச்சை நிறமே பெருமளவுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளதோடு பச்சை நிறப்பேதங்களுடன் கபில நிறமும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
  • தடிப்பான, ஆழமான கோடுகளும், நிறங்களும், தாளமும் சிறப்பாகப் பயன்படுத்தப் பட்டுள்ளதோடு, அதன் மூலம் கருப்பொருளை மேலும் முனைப்பாகவும் உணர்வுபூர்வ மாகவும் காட்ட முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

சேவற்சண்டை

  • கலைஞர் கே. கனகசபாபதி படைத்த இந்த ஓவியத்தின் கருப்பொருள் ‘சேவற்சண்டை ஆகும்.
  • இச்சித்திரமானது கன்வஸ் மீது எண்ணெய் (தைல) வர்ணத்தினால் ஆக்கப்பட்டுள்ள கனவடிவ வாதப்பாணியைக் காட்டும் ஒரு படைப்பாகும்.
  • சேவல்களைக் காட்டுவதற்காக இருபரிமாண தளவுருவங்களே பயன்படுத்தப்பட்டுள்ள போதிலும் முப்பரிமாண இயல்புகள் வெளிப்படுமாறு வர்ணந் தீட்டப்பட்டுள்ளது.
  • ஓவியத்தின் உருவங்களைச் சூழவும், பின்னணியிலும் இடப்பட்டுள்ள கோடுகளின் தடிப்பான, ஆழமான தன்மைக்கேற்ப, சேவற்சண்டையின் துரிதமும், சந்தமும் வெளிக்காட்டப் படுகின்றன.
  • அச்சித்திரப் பண்புகள் ஓவியத்தின் வெளிப்பாட்டுத் தன்மையை வலுப் படுத்துவதோடு, மேலும் பொருளுள்ளதாகவும் ஆக்குகின்றன.
  • கனவடிவவாத ஓவியப்பாணியின் செல்வாக்குடன் கேத்திரகணித தளவடிவங்கள் பிராணி உருவங்களிலும் பின்னணியிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
  • பிரதானமாக கபிலநிறம் பயன்படுத்தப்பட்டுள்ளதோடு, அந்நிறத்தின் பேதங்களை வெளிப் படுத்துமாறு இந்த ஓவியத்தில் நிறங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
  • சித்திர ஊடகத்தில் சேவல்களைக் காட்டுவதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ள கோடுகளையும் தளவுருவங்களையும் ஒத்த கோடுகளும் தளவுருவங்களும் பின்னணியிலும் பயன் படுத்தப்பட்டுள்ளமையால், சித்திரத்தின் முன்னணியும், பின்னணியும் ஒத்திசையச் செய்யப் பட்டுள்ளமையைக் காணமுடிகிறது.
பயிற்சி வினாக்கள்

கீழே தரப்பட்டுள்ள கலை ஆக்கத்தை இனங்கண்டு கீழே குறிப்பிடப்பட்டுள்ள உப தலைப்புகளுக்கேற்ப கருத்துள்ள ஐந்து வாக்கியங்கள் எழுதுக.

1. இனங்காணுதல் : .……………………………………
2. வர்ண நுட்பம் : .…………………………………………
3. ஒழுங்கமைப்பு : .………………………………………
4. கலைப்பாணி : .…………………………………………
5. இரேகைப் பயன்பாடு : .………………………………

1. இனங்காணுதல் : .……………………………………
2. வர்ண நுட்பம் : .…………………………………………
3. ஒழுங்கமைப்பு : .………………………………………
4. கலைப்பாணி : .…………………………………………
5. இரேகைப் பயன்பாடு : .………………………………

error: Content is protected !!