கிரேக்க ஓவியங்களைக் கொண்ட மட்பாண்டப் படைப்புக்கள்
கிரேக்க ஓவியங்கள் பல மட்பாண்டங்கள் வழியாகவே கிடைத்துள்ளன. அக்காலத்தில் கிரேக்கத்தில் காணப்பட்ட சுவரோவியப் பாணியும். இந்த மட்பாண்ட ஓவியங்களின் இயல்புகளைப் பெருமளவுக்கு ஒத்ததாக இருந்திருக்க இடமுண்டாதலால். கிரேக்க ஓவியக் கலை தொடர்பான விளக்கத்தை இம்மட்பாண்டங்களின் மூலம் பெற முடிகின்றது. இம்மட்பாண்டங்கள் தவிர கிரேக்க ஓவியக்கலை தொடர்பாக மீந்திருக்கும் சில சான்றுகளான ஓவியங்களைக் கட்டடங்களி னுள்ளேயும். மரத்தாலான சட்டகங்களிலும் (Panel) காண முடிகின்றது. மனித உருவங்கள், பூவேலைப்பாடுகள், கேத்திரகணித தளவடிவங்களைக்கொண்ட அமைப்புக்கள் (designs), கற்பனையான தளவடிவங்களைக் கொண்ட வடிவமைப்புக்கள் மற்றும் ஐதீகக் கதைகளையும் இம்மட்பாண்ட ஓவியங்களில் காண முடிகின்றது.
அந்தந்தக் காலப்பகுதிகளில் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகியவாறு உருவாகிய கிரேக்க மட்பாண்டங்களின் வரலாறு கி.மு. 1000 அளவுக்குப் பழமையானது. அக்காலப்பகுதியிலிருந்து கிரேக்கப் மக்கள் மட்பாண்ட உற்பத்தியை ஆரம்பித்துள்ளனர். இம்மட்பாண்ட ஓவியங்கள், அப்போதைய கிரேக்க ஓவியங்கள் தமது தனித்துவத்தைப் பொறுத்து உறுதிப்படுத்திக் காட்டிய உலகின் மிகப் பண்டைய ஆக்கங்களாகவும் கருதப்படுகின்றன.
கிரேக்க மட்பாண்டங்கள் வெவ்வேறு கருமங்களுக்குப் பொருத்தமானவாறாக வெவ்வேறு வடிவங்களிலும் வெவ்வேறு அளவுகளிலும் ஆக்கப்பட்டவையாகும். எனவே இவை அவற்றில் தொழில். அமைப்பு ஆகியவற்றுக்கமைய வெவ்வேறு பெயர்களால் வழங்கப்பட்டுள்ளன. வைன் ஊற்றிவைப்பதற்குப் பயன்படுத்திய மட்பாண்டங்கள் உயரமானவை. அவை அம், போரா (Aimphora) எனப்பட்டன. நீர் ஊற்றி வைப்பதற்கான ஆக்கப்பட்ட மட்பாண்டங்கள் பெரியவை. ஐதிரியா (hydria) என அழைக்கப்பட்டன. மூடியையும் கொண்டவை. கந்தாரொஸ் (Kantharos), கிலோக்ஸ் (kylix/ cyclix), லிசிதொஸ் (l.ceythos) என்பன மற்றும் சில கிரேக்க மட்பாண்ட வகைகளாகும்.
கிரேக்க மட்பாண்ட ஓவிய விடயப் பொருள்கள்
மட்பாண்டங்கள் பயன்பாட்டு ரீதியிலும், கலைத்துவப் பண்புகளிலும் உயர்ந்தவையாகக் காணப்பட்டன. அவற்றை அழகிய அலங்கார வடிவமைப்புக்களைக்கொண்டு அழகுபடுத்துவதில் கிரேக்கர்கள் திறமை மிக்கவர்களாக இருந்துள்ளனர். அம்மட்பாண்டங்களை அழகுபடுத்துவதற்காக ஆரம்பகாலத்தில் கேத்திரகணித தளவடிவங்கள் பெரிதும் பயன்படுத்தப்பட்டமையால் அது கேத்திர கணிதப் பாணி என அழைக்கப்பட்டது. அவ்வாறான ஆரம்பகால வடிவமைப்புக்களில் சமாந்தரக் கோடுகள் சதுரங்கள், செவ்வகங்கள், முக்கோணிகள், வட்டங்கள் போன்ற கேத்திரகணிதக் கோலங்களைக் காண முடிகின்றது. கி.மு. 800 அளவில் அக்கேத்திர கணித வடிவமைப்புக்களுடன் மனித உருவங்களும் விலங்கு உருவங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. எனினும் அவ்வுருவங்களும் கேத்திரகணித தளவடிவங் களையே கொண்டிருந்தன. இதற்கான ஓர் உதாரணமாக எதன்ஸ். டிபிலின் கல்லறையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட கி.மு. 800-750 காலப்பகுதியைச் சேர்ந்த மட்பாண்டத்தைக் குறிப்பிடலாம்.
அதன் பின்னர் கீழைத்தேயப் பாணியில் ஓவியங்கள் வரையப்பட மட்பாண்டங்களிலும் கேத்திர கணிதத் தன்மையிலிருந்து முற்றுமுழுதாக நீங்காத மனித உருவங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காண முடிகின்றது. உதாரணம்: எலொவியல் பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அம், பொரா வகை மட்பாண்டம்.
அதன் பின்னர் மனித உருவங்களைக் கொண்ட மட்பாண்டங்களில் ஐதீகக் கதைகளை ஓவியமாக வரையும் மரபு தோன்றியுள்ளதோடு. அதற்காக வீரகாவியங்களில் விவரிக்கப்பட்டுள்ள தெய்வங்கள், பண்டைப் பெருமைமிக்க வீரர்கள் போன்றோரின் கதைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக அவ்வாறான ஐதீகக் கதைகளில் யுத்தக்காட்சிகள். விளையாட்டுக் காட்சிகள். நடனக் காட்சிகள். பானம் பருகும் காட்சிகள் போன்றவையே பெரிதும் விடயப் பொருளாக அமைந்துள்ளன. யுத்தக் காட்சிகளைக் கொண்ட மட்பாண்டமொன்றுக்கு உதாரணமாகக் குறிப்பிடத்தக்க மெனிலொஸ் – ஹிரக்ளிஸ் போர் (Combat of Menwlari and Heletir)எனும் ஓவியத்தில், கேடயங்களைக் கையிலேந்தி ஈட்டிகளால் போரிடும் இருவரைக் காண முடிகின்றது.
கலைப் பிரயோகங்களும் நுட்பமுறைகளும்
ஆரம்பகால மட்பாண்டங்களில் உருவங்கள் கறுப்பு நிறத்தினாலேயே தீட்டப்பட்டிருந்தன. மேலும் அவை கோடுகளாலேயே காட்டப்பட்டிருந்தன. பின்னர் கருநிற உருப்பாணி எனப்பட்ட ஒரு புதிய பாணியில் கறுப்பு நிறம் பூசப்பட்ட மட்பாண்டங்களின் மேற்பரப்பில் தேவையற்ற பகுதிகைளத் தெரிவு செய்து, கட்ட களியின் நிறமாகிய இருண்ட சிவப்பு நிறப் பின்னணியிலிருந்து வெளிப்படும் வகையில் தீட்டப்பட்டுள்ளது. அதாவது உருவங்கள் யாவும் கறுப்பு நிறத்தில் வெளிப்பட்டுத் தெரியுமாறு பின்னணி உருவாக்கப்பட்டுள்ளது. கறுப்புநிற உருவங்களில் நுணுக்கமான விவரங்கள் கூரிய உபகரண முனையொன்றினால் கீறி வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்மீது வெண்ணிறம், ஊதா நிறம் போன்ற வேறு நிறங்கள் பயன்படுத்தப்பட்ட சந்தர்ப்பங்களையும் அரிதாகக் காண முடிகின்றது. கி.மு. 650-525 இற்கு இடைப்பட்ட பண்டைய யுகத்தில் இக்கருநிறப் பாணியே பயன்படுத்தப்பட்டுள்ளது. இப்பாணியைச் சேர்ந்த ஒரு தலைசிறந்த படைப்பாக கி.மு. 550-530 காலப்பகுதியைச் சேர்ந்த அம். பொரா மட்பாண்டத்தைக் குறிப்பிடலாம். அயஸ், அக்கிலீஸ் ஆகிய இருவரும் தாயக்கட்டை விளையாட்டில் ஈடுபட்டிருக்கும் விதம் இந்த ஓவியத்தில் சித்திரிக்கப்பட்டுள்ளது.
அதற்குப் பிற்பட்ட காலத்தில் புதிய பாணியொன்று உருவாகின்றது. இப்பாணி சிவப்பு நிற உருவப்பாணி எனப்படுகின்றது. இப்புதிய பாணியின்படி, சித்திரத்தின் பின்னணியினைக் கறுப்புநிறமாக இருக்கவிட்டு, சுட்ட களியின் நிறமாகிய இருண்ட சிவப்பு நிறத்தினால் உருக்கள் யாவும் வெளிப்படுத்திக் காட்டப்பட்டுள்ளது. பின்னர் அச்சிவப்பு நிற உருவங்களில் நுணுக்கமான விவரங்கள் சிறிய தூரிகையினால் தீட்டப்பட்டுள்ளது. இப்பாணியானது முன்னர் காணப்பட்ட கறுப்புநிற உருவப்பாணிக்கு எதிரான செயன்முறையாகக் காணப்படுகின்றது. இவ்வகை மட்பாண்டப் படைப்புக்களுள் கி.மு. 490-480 காலத்தைச் சேர்ந்த கைலிஸ் வகைப் பாத்திரத்தை தனிச்சிறப்பான ஒரு படைப்பாகக் குறிப்பிடலாம். இதன் மூலம் இயொஸ் அதாவது அருணோதயத் தேவதையினால் தனது புத்திரனாகிய மெம்னன் இனது பூதவுடல் தூக்கிச் செல்லப்படும் விதம் காட்டப்பட்டுள்ளது.