காட்டூன் நிர்மாணிப்புக்கள்
- காட்டூன் நிர்மாணிப்புகளில் பல்வித சித்திரங்களுக்குரிய பண்பைக் காணலாம்.
- பல கலைப்பண்புகளுடன் எளிமையான மற்றும் கருத்து நிலையான வடிவங்களையும் இருபரிமாண, முப்பரிமாண பண்புகளையும் கொண்டுள்ள வர்ண இரேகைகளால் ஆனவை.
- எளிய, அரூப நிலையான வடிவங்களுடன் நிர்மாணிக்கப்பட்ட உருவங்களுக்கு கணினி தொழில் நுட்பம் ஊடாக உயிர்ப்பூட்டி காட்டூன் நிர்மாணிக்கப்படுகின்றன.
- நிர்மாணிப்புகளில் நகைச்சுவை, ஆச்சரியம் என்பனவற்றை வெளிப்படுத்த மெதுவான அல்லது வேகமான அசைவுகள் உபயோகிக்கப்படும்.
- பிள்ளைகளின் மனதுக்கிதமான கவர்ச்சியான தளவடிவங்கள் வர்ணங்கள் உபயோகிக்கப்படுகின்றன.
- எம்மைச் சூழ உள்ள சுற்றாடலில் இருக்கும் எல்லா இயற்கை, செயற்கைப் பொருட்களை உயிர்த்தன்மையுடன் காட்டூன் நிர்மாணிப்புக்களில் காட்டப்படுகின்றன.
- காட்டூன்கள் சிறப்பாக அமைய உரையாடல், பின்னணி இசை, பாடலமைப்பு போன்றவை உதவுகின்றன.
பல கேலிச்சித்திர தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
பயிற்சி வினாக்கள்
1. காட்டூன்கள் எவ்வாறு நிர்மாணிக்கப்படுகின்றன?
2. காட்டூன்களில் நகைச்சுவை, ஆச்சரியம் என்பன எவ்வாறு வெளிப்படுத்தப்படுகின்றது?
3. நமது நாட்டுத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் காட்டூன்களுக்கு உதாரணம் தருக?
4. உமக்கு பிடித்த காட்டூன் கதாப்பாத்திரத்தை வரைந்து வர்ணந் தீட்டுக.