கலைஞர் திஸ்ஸ ரணசிங்ஹ
- இருபதாம் நூற்றாண்டில் இலங்கை சிற்பக் கலையில் புதியதொரு மரபைத் தோற்றுவிப்ப தில் முன்னின்ற ஒரு சிறந்த கலைஞராக திஸ்ஸ ரணசிங்ஹ இனங்காணப்பட்டுள்ளார்.
- உள்நாட்டிலும், சருவதேச ரீதியிலும் புகழ் பரப்பியுள்ள திஸ்ஸ ரணசிங்ஹ, 1925 இல் நீர்கொழும்பு நகரையண்டிய யோகியானா எனும் கிராமத்தில் பிறந்தார்.
- மருதானைத் தொழினுட்பக் கல்லூரியில், ஜே டீ . ஏ. பெரேரா இன் கீழ்ச் சித்திரக் கலை பயின்ற அவர் இங்கிலாந்து சென்று செல்சியா கலைக் கல்லூரியிலும் (Chelsea School of Art), 1961 இல் றோயல் கலைக் கல்லூரியிலும் (Royal College of Art) சிற்பக் கலையைப் பயின்றார்.
- அக்கலைக் கல்லூரிகளில் பெற்ற கல்வி மற்றும் ஐரோப்பாவின் புதிய கலைப் படைப்புக் களின் செல்வாக்கினூடு திஸ்ஸ ரணசிங்ஹ தமக்கேயுரித்தான சிற்பக் கலைப் பாணியொன்றினை உருவாக்கிக் கொண்டார்.
- சிற்பக் கலைப் படைப்புக்களில் பொதுவாகக் காணப்படும் இயற்கையாக, இயல்பான வடிவங்களை விட வேறுபட்ட கருத்துநிலையான உருவங்களின் சேர்மானத்தாலான உருவங்களே அவரது படைப்புக்களுக்கு அடிப்படையாக அமைந்தன.
- இலங்கைச் சிற்பக் கலையின் பாரம்பரியமாக ஊடகங்களை மாற்றியமைத்து, வெண்கல ஊடகத்தையும் வார்ப்பு முறையையும் அறிமுகஞ் செய்தார்.
- இலங்கைக் கலைஞர் ஒருவர் பெற்ற மிக உயர்வான சருவதேச விருது, 1963 இல் பிறேசில் நாட்டில் நடைபெற்ற ‘சாவோபோலோ ‘ கண்காட்சிக்காக முன்வைத்த ” குற்றப் பரிகாரம் ” (Penance) எனும் உலோகத்தாலாக்கப்பட்ட சிற்பத்துக்குக் கிடைத்தது.
- திஸ்ஸ ரணசிங்ஹ கலைஞன் படைப்புக்களுள் அடிப்படையாக அமைந்த கருப் பொருள்கள் பின்வரும் வெவ்வேறு பரப்புகளைச் சேர்ந்தவையாகும்.
♦ பிரமுகர்களின் பிரதிமைச் சிற்பங்கள் – பரணவித்தான சிற்பம்
♦ சமய எண்ணக்கருக்களைக் காட்டும் சிற்பங்கள் (பெளத்த, இந்து )
♦ கடினச் செயலைக் காட்டும் சிற்பம், குற்றப்பரிகாரம் , கணேஷ சிற்பம்
♦ வரலாற்றைக் காட்டும் படைப்புக்கள்
♦ கொழும்பு றோயல் கல்லூரி ‘நவரங்கஹல ‘ மண்டபத்தின் குறைபுடைப்புச் செதுக்கல் வேலைப்பாடு
- இலங்கைச் சிற்பக் கலையில் நவீன அணுகுமுறையில் திஸ்ஸ ரணசிங்ஹ தாபித்த சிற்பக் கலைப்பாணியானது தற்கால சிற்பக் கலைஞரின் படைப்பாக்கங்கள் மீது செல்வாக்குச் செலுத்தியுள்ளமையைக் காண முடிகிறது.
கடினச் செயல் (துஷ்கர கிரியா )
- கடினச் செயல் எனும் இச்சிற்பம் திஸ்ஸ ரணசிங்ஹ கலைஞரது மிகச் சிறந்த ஒரு படைப்பாகப் போற்றப்படுகின்றது.
- சித்தார்த்த போதிசத்துவரின் கடினச் செயலைக் காட்டும் இச்சிற்பத்தின் மூலம் அக் கருத்தைக் காட்டுவதற்காக, கரைந்து தேய்ந்து போன சதைப்பகுதிகளைக் கொண்ட உடலின் எலும்புத் தொகுதி நன்கு உருவாக்கப்பட்டுள்ளது.
- இயற்கையான மனித உருவத்தின் அக, புற கட்டமைப்பை விட மேலாக உள்ளுணர்வு களைக் காட்டத்தக்கவாறான யதார்த்த பாணியிலான வடிவமைப்புக்கள் இச்சிற்பத்தில் அடங்கியுள்ளன.
- இயற்கைவாத கலைப்பிரயோகம் இக்கலைப் படைப்பில் பயன்படுத்தப்படவில்லை.
- இக்கலைப் படைப்பு மீது கருத்துநிலை / அருவ கலைப் பண்புகள் செல்வாக்குச் செலுத்தியுள்ளமைக் காண முடிகின்றது.
- இவ்வடிவங்கள் குறை கருத்து நிலையான (Semi- ABSTRACT) மற்றும் குறைவெளிப்பாட்டு வடிவங்களின் சேர்மானத்தினாலானவை என்பது கலை விமர்சகர்களின் கருத்தாகும்.
- நவீன கலைப் பிரயோகங்களைக் காட்டும் இச்சிற்பப் படைப்பு வெண்கல ஊடகத்தில் வடிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு றோயல் கல்லூரி – குறை புடைப்புப் படைப்பாக்கம்
- கொழும்பு றோயல் கல்லூரி ‘நவரங்கஹல ‘ மண்டபத்தில் உள்ள இப்படைப்பு , புடைப்புச் சிற்பக் கலையில் புதுப்பரிமாணத்தை ஏற்படுத்திய ஒரு படைப்பாகும்.
- ரெறாகொட்டா முறையில் உருவாக்கப்பட்டுள்ள இப்படைப்பின் கருப்பொருள் “இலங்கையில் நாடகக் கலையின் வரலாறு” ஆகும்.
- நாடகக் கலை வரலாற்றின் நான்கு கட்டங்கள் இங்கு சேர்மானஞ் செய்யப்பட்டுள்ளது.
- கனவுருக் கலைத்துவப் பண்புகள் இப்படைப்பின் மீது செல்வாக்குச் செலுத்தியுள்ளது என்பது விமர்சகர்களின் கருத்தாகும்.
- கருத்து நிலையான கனவுருவவாத தளவடிவங்களோடு, பாணி சார்ந்த தளவடிவங்களும் இப்படைப்பில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
- இந்த ரெறாகொட்டா படைப்புக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ள நிறங்கள் படைப்பின் அழகையும் கருத்து வெளிப்பாட்டுத் திறனையும் கனவுருவவாத முனைப்புறுத்தியுள்ளது.
பயிற்சி வினாக்கள்
1. இலங்கைச் சிற்பக்கலையில் புதியதொரு மரபைத் தோற்றுவித்த கலைஞர் யார்?
2. திஸ்ஸ ரணசிங்ஹ பெற்ற மிக உயர்வான சர்வதேச விருது எது?
3. இவரது படைப்புகளுக்கு அடிப்படையாக அமைந்த கருப்பொருட்கள் எவை?
4. இவரது படைப்புகளுக்கு உதாரணம் தருக.
5. இவர் சிற்பங்களை நிர்மாணிக்கப் பயன்படுத்திய ஊடகம் மற்றும் நுட்பமுறை யாது?
தரப்பட்டுள்ள ஒளிப்படத்தை ஆதாரமாகக் கொண்டு வினாக்களிலுள்ள இடைவெளிகளை நிரப்புக.
1. இங்கு காட்டப்படுவது கொழும்பு …………………………………………………………… மண்டபத்தில் முன்பக்கத்துச் சுவரில் காணப்படும் உன்னத கலைப்படைப்பாகும்.
2. இப்படைப்பானது இலங்கையின் தலைசிறந்த சிற்பியான …………………………………… ஆல் உருவாக்கப்பட்டது.
3. இதன் கருப்பொருளாக ………………………………………………………… காணப்படுகின்றது.
4. இது ………………………………… ஊடகத்தினால் ஆக்கப்பட்ட செதுக்கலில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு பகுதியாகும்.
5. இது ………………………………… சிற்ப முறைப்படி உருவாக்கப்பட்டுள்ளது.
கீழே தரப்பட்டுள்ள கலை ஆக்கத்தை இனங்கண்டு கீழே குறிப்பிடப்பட்டுள்ள உப தலைப்புகளுக்கேற்ப கருத்துள்ள வாக்கியங்கள் எழுதுக.
1. இனங்காண்க : ………………………………
2. கலைஞர் : ……………………………………….
3. கருப்பொருள் : ………………………………
4 கலைப் பண்பு : ………………………………
5. ஊடகம் : …………………………………………..
6. நுட்பமுறை : ………………………………….
7. உணர்வு வெளிப்பாடு : ………………