ஐரோப்பாவின் வரலாற்றுக்கு முற்பட்ட கால ஓவியங்கள்

  • ஐரோப்பிய புராதன வரலாற்றுக் காலச்சித்திரங்கள் கி.மு. 40,000 இற்கும் கி.மு. 10000 இற்கும் இடைப்பட்ட காலத்துக்கு உட்பட்டதாகும்.
  • குகையில் வாழ்ந்த ஆதி மனிதர் அன்றாட வாழ்க்கையில் பெற்ற அனுபவத்தைக் குகைச் சுவர்களில் வரைந்துள்ளனர்.
  • இவற்றிடையே விலங்குகளின் வடிவம், கேத்திரகணித வடிவங்கள், பல்வேறு குறியீடுகளாக உள்ளன.
  • ஐரோப்பிய புராதன வரலாற்றுக் காலச் சித்திரங்கள் உள்ள இடங்களிடையே

♦ பிரான்சில் லஸ்கோ
♦ ஸ்பானியாவில் அல்ராமீராக் குகை
♦ பொண்டிகோம் குகை
♦ கோகுள் குகை

என்பன முக்கிய இடத்தைப் பெறுகின்றன.

  • இச்சித்திரங்களை வரைவதற்கு சில நுட்பமுறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
  • அந்நுட்ப முறைகளுக்கு இணங்க இங்குள்ள சித்திரங்களை முக்கியமான 4 பகுதிகளாகப் பிரிக்கலாம்.
  1. இரேகைச் சித்திரம் (Line drawing)
  2. வர்ண ச் சித்திரம் (Colour painting)
  3. கற்சுவரைக் குடைந்து நிர்மாணித்த உருவங்கள் (Engraving)
  4. அச்சுப்பதித்தல் (Hard prints)
  • சித்திரங்களை வர்ணம் தீட்டுவதற்குச் சுற்றாடலில் இருந்து பெறப்பட்ட பொருட்களான கரி, வெண்களி, பிராணிகளின் இரத்தம், முருகைக்கல், மண் போன்றவை பயன்படுத்தப் பட்டுள்ளதுடன், அவை நீர், பிசின், அல்லது பிராணிகளின் இரத்தத்துடன் கலக்கப்பட்டுள்ளன.
  • அதேபோன்று இச்சித்திரங்களுக்குக் கறுப்பு, இருளான சிவப்பு, கபிலம், சாம்பல், வெள்ளை போன்ற வர்ணங்கள் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
அல்ரமீரா குகைச்சித்திரம்
  • அல்ரமீராக் குகைச் சித்திரங்கள் ஸ்பானியா நாட்டுக்குரியவை.
  • இங்குள்ள சித்திரங்கள் கி.மு. 150000 – 10,000 காலப்பகுதிக்குரியவையாகும்.
  • இக்குகையில் இரேகைச் சித்திரங்கள், வர்ணச் சித்திரங்கள், கற்சுவரைச் சுரண்டி நிர்மாணித்துள்ள வடிவங்கள், கைப்பதிப்பு என நுட்பமுறைகள் பலவற்றைப் பயன்படுத்திய ஆக்கங்களைக் காணக்கூடியதாக உள்ளன.
  • இங்குள்ள சித்திரங்களிடையே இளைப்பாறும் பைசன் (எருது) வடிவம், குதிரை வடிவம், பனிமான், காட்டுப்பன்றி வடிவங்களும் பல்வேறு குறியீடுகளும் கேத்திரகணித வடிவமைப்புக்களும் உள்ளன.
  • இவை யாவற்றிலும் சிவப்பு, கபிலம், கறுப்பு, வெள்ளை வர்ணங்கள் தீட்டப்பட்டு இருப்பதுடன் சில சித்திரங்களுக்குக் கறுப்பு வர்ணத்தால் புறவரைக் கோடு இடப்பட்டுள்ளது.
லஸ்கோ குகைச் சித்திரம்
  • பிரான்சில் மொன்டினாக் நகருக்கு அண்மையில் புராதன வரலாற்றுக் குகைச் சித்திரங்கள் காரணமாக பிரசித்தி பெற்ற லஸ்கோ குகை (Laxcaus) அமைந்துள்ளது.
  • இங்குள்ள சித்திரங்கள் கி.மு. 15000 – 13000 ஆம் காலத்துக்குரியவை.
  • இக்குகையில் இரேகைச் சித்திரம், வர்ணச் சித்திரம், கற்சுவரைச் சுரண்டி நிர்மாணித்த உருவங்கள், கை பதிப்பு ஆகிய நுட்பமுறைகள் பின்பற்றி நிருமாணித்த சித்திரங்கள் சிலவற்றைக் காணலாம்.
  • இங்குள்ள சித்திரங்களுக்கிடையே விலங்கு உருக்கள், மனித உருவங்கள், பல்வேறு குறியீடுகள், கேத்திரகணித வடிவமைப்புக்களும் உள்ளன.
  • இவற்றிடையே பைசன் (எருது) வடிவங்கள் பெரிதாக வரையப்பட்டுள்ளன.
  • லஸ்கோ குகை சித்திரங்களிடையே 17”அடி நீளமுடைய பைசன் எருது வடிவம் உன்னதமான நிர்மாணிப்பாகக் கருதப்படுகின்றது.
  • அம்பு துளைத்த பின்னரும் முன்னால் பாய்ந்து வரும் பைசனின் வடிவமும், நிலத்தில் சாய்ந்து கிடக்கும் மனிதனின் உருவமும் உள்ள சித்திரம் (Hunting Scene) இக் குகையின் மிக முக்கியமான சித்திரம் எனக் கருதப்படுகின்றது.

பயிற்சி வினாக்கள்

1. ஐரோப்பிய குகை ஓவியங்கள் காணப்படும் இடங்களை எழுதுக.
2. ஸ்பானியாவில் வரலாற்றுக்கு முற்பட்ட கால குகை ஓவியங்கள் காணப்படும் குகைகள் மூன்றினை எழுதுக.
3. அல்ராமீராக் குகை ஓவியங்களில்காணப்படும் உருவங்கள் எவை?
4. லஸ்கோ குகை ஓவியங்களில்காணப்படும் உருவங்கள் எவை?
5. “காளைகளின் குகை” என அழைக்கப்படும் குகை எது?
6. 17 அடி நீளமா பைசன் உருவம் காணப்படும் குகை எது?

error: Content is protected !!