ஜன்தா கர
நோய்களிலிருந்து நிவாரணமளித்து, பிக்குகளின் ஆரோக்கியத்தை வளர்ப்பதற்காக அமைக்கப்பட்ட கட்டடங்கள் இவையாகும். சூடான நீராவி மூலம் வியர்வை வெளிப்படச் செய்து, பிக்குகளின் ஆரோக்கியத்தைப் பேணுவதற்காக இம்மனை வகை பயன்படுத்தப்பட்டது. பல “ஜன்தாகர” கட்டடங்களின் இடிபாட்டு மீதிகள் ராஜாங்கனை, ஹத்திக்குச்சி, மகாதிவுள்வவை, அரன்கலே போன்ற பல இடங்களில் காணப்படுகின்றன. உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது பிக்குகளுக்கு ஏற்றதல்லாததாலும் உணவு உட்கொண்டு ஓர் இடத்தில் வாழ்வதாலும் பிக்குகள் நோய்வாய்ப்படுகின்ற மையால் அதற்கான ஒரு பரிகாரமாக சூடான நீராவிக் குளிப்பு மூலம் வியர்வையை வெளியேற்றிக் கொள்வதற்காகவே இக்கட்டட வகை அமைக்கப்பட்டுள்ளது.
இது தற்போதைய கொதிநீராவிக் குளிப்பு (Steam Bath) எனும் கருத்துக்கு ஒப்பான ஒன்றாகும். பெரும்பாலும் ‘ஜன்தாகர’ இனுள்ளே நடுப்பகுதியில் கற்கள் பதிக்கப்பட்ட ஆழம் குறைவான ஒரு தடாகமாகும். நீரைக் கொதிக்க வைப்பதற்கான இடமும் மருந்து அல்லது மருந்துநீர் தயாரிப்பதற்கான ஓர் இடமும் நீரைக் கொண்டு செல்லும் வழிகளும் இருந்திருக்க வேண்டும். குளிப்புக்கு முன்னர் உடலில் பூசிக்கொள்வதற்காக பல்வேறு ஔடத வகைகளை அரைப்பதற்காகப் பயன்படுத்திய ஆட்டுக் கற்களும் ஔடத வகைகளை அரைத்தமையால் ஒப்பமாமன தன்மையுள்ள மேற்பரப்பைக் கொண்ட கற்பாளங்களும் சன்தா கர அருகில் காணப்பட்டுள்ளன. மகிந்த தேரர் மகாவிகாரையில் சங்கத்தினரின் தீக்கற்குளம் (கினிகல் பொக்குண) எனும் பெயரில் சன்தா கரவுக்காக ஒரு நிலப்பகுதியை வேறாக்கியதாகக் கூறப்பட்டுள்ளது. (மகாவம்சம், ப: 15-31)