எம். சார்ளிஸ் (1880 – 1955)
பௌத்த பாரம்பரிய சித்திரக்கலையின் உருவவியல், வர்ண இயல்புகளுக்கு முற்று முழுதாக வேறுபட்ட கலைப்பாணியை ஏற்படுத்திய முதன்மைக் கலைஞராக எம். சார்ளிஸ் அவர்கள் கருதப்படுகிறார். இவர் சித்திரக் கலையின் முன்னோடியாக இருந்ததுடன் பௌத்த சித்திரக் கலையின் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவரும் ஆவார். 1880ம் ஆண்டு யூன் மாதம் 25ம் திகதி அம்பலாங்கொடையில் பிறந்த மாலிகாவகே சார்ளிஸ் எனும் இவர், சிறு வயதிலிருந்து சித்திரக்கலையில் திறமை காட்டினார். பிறவியிலேயே சித்திரக்கலையில் திறமை காட்டிய இவர் மேலதிகமாக கற்பதற்காக றிச்சட் ஹென்றிக்கஸ் அவர் களின் உதவியை நாடினார். ஐரோப்பியரான றிச்சட் ஹென்றிக்கஸ் மேற்கத்தேய பாணியில் இயற்பண்புவாதத்துடன் இலங்கை டவர்கோல் அரங்குத் திரைகளில் சித்திரங்களை வரைந்தவராவார்.
அவரது நிர்மாணிப்புகள் கிறிஸ்தவ மதப் பின்னணியைக் கொண்டவையாக இருந்ததுடன் அவரிடம் கலை பயின்ற எம். சார்ளிஸ் அவர்களின் நிர்மாணிப்புகளும் அவ்வாறான தன்மை கொண்டதாகக் காணப்பட்டன. அதாவது அக்கடமிக் யதார்த்தமாக ஓவியக் கலையின் கலைப்பாணி அவரது நிர்மாணிப்புகள் மீது செல்வாக்கு செலுத்தியது. இவ்வாறு ஓவியக் கலைக்குப் பெரும் பங்காற்றிய எம். சார்ளிஸ் அவர்கள் 1955ம் ஆண்டு நவம்பர் மாதம் 21ம் திகதி இவ்வுலகை நீத்தார். இவர் பௌத்த சித்திரக் கலையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய புகழ்பூத்த ஒரு கலைஞராவார்.
சார்ளிஸ் அவர்களின் பௌத்த ஓவியங்கள் முக்கியமாக இரு வகைப்படும்.
(1) விகாரை ஓவியங்கள் (சுவரோவியங்கள் – Wall paintings)
(2) லிதோ அச்சுப் படங்கள்
விகாரை ஓவியங்கள்
விகாரை சித்திரக் கலைக்காக பெரும் பங்காற்றிய கலைஞனான எம், சார்ளிஸ் அவர்களின் நிர்மாணிப்புகளின் கலைப்பாணி இலங்கை பௌத்த சித்திரக்கலையின் பரம்பரையொன்றை உருவாக்கியது. அவ்வாறான விகாரை ஓவியங்கள் காணக்கூடிய பௌத்த விகாரைகள் சில கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.
- கொழும்பு மாளிகாகந்த விகாரை
- இந்துருவே யாலகம விகாரை
- மத்துகம பாந்திய ஸ்ரீமங்கல விகாரை
- பொத்துப்பிட்டிய பூஜாராமய விகாரை
- இசிபத்தனராமய
- அசோக்காராமய
லிதோ அச்சுப் படங்கள்
இலங்கையில் பௌத்த மக்களின் வீடுகளை அலங்கரிப்பதற்காகப் பௌத்த ஓவியத்தாள்களை ஆக்கும் பணியிலும் எம். சார்ளிஸ் ஈடுபட்டார். வெள்ளையர்களின் ஆட்சிக் காலத்தில் இலங்கையில் பெரும்பாலான சிங்கள பௌத்த வீடுகளில் பிரித்தானிய மகாராணியின் உருவமும், அரச குடும்பத்தை சித்தரிக்கும் படங்களும் காணப்பட்டன. கிறிஸ்தவர்களுடைய வீடுகளில் அச்சமயத்துடன் தொடர்புபட்ட சித்திரங்கள் காணப்பட்டன. இக்காலப் பகுதியில் உண்டான பௌத்த மத மறுமலர்ச்சியுடன் பௌத்த மதத்தைச் சார்ந்த சித்திரங்கள் பிரபல்யமடைய வழியமைத்தவர் எம். சார்ளிஸ் அவர்களே. அவரால் வரையப்பட்ட பல பௌத்த மதச் சித்திரங்கள் 1923ம் ஆண்டு ஜேர்மனிக்கு அனுப்பப்பட்டு லிதோ அச்சு முறையில் பிரதிகள் பெறப்பட்டன. அவ்வாறு பெறப்பட்ட 36 படங்கள் உள்ளன. அவைகளுள் சில கீழே குறிக்கப்பட்டுள்ளன.
எம். சார்ளிஸ் அவர்களின் ஓவியங்களில் காணப்படும் கலைப் பண்புகள்
எம். சார்ளிஸ் அவர்களின் விகாரை ஓவியங்கள் அல்லது லிதோ அச்சுப் படங்களில் பின்வரும் கலைப் பண்புகளைக் காணலாம்.
- தளத்தின் மீது சரியான ஒழுங்கமைப்பு
- தூர தரிசனப் பண்புகள்
- ஒளி, நிழல் காட்டியிருத்தல், முப்பரிமாணத் தன்மை
- பிரகாசமான நிறப்பிரயோகம்
- பல்வேறு அலங்கரிப்புகள்
- ஐரோப்பிய இயற்பண்புவாதக் கலை மரபின் தாக்கம்
மேற்கத்தேய இயற்கைச் சித்திரங்கள் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட கருப்பொருளை மையமாகக் கொண்டவை. சித்திரங்கள் முன்னணி, பின்னணி, இடையணி என்பவற்றைக் கருதி ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. இங்கே முன்னணியில் முக்கிய கதாபாத்திரங்கள் அமைக்கப்பட்டிருப்பதுடன் ஏனைய கதாபாத்திரங்கள் முன்னணி, இடையணி என்பவற்றில் உள்ளடக்கப்பட்டுள்ளன. சம்பவம் நிகழும் இடத்தைத் தீவிரமாகக் காட்டப் பின்னணி உபயோகிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தளத்தில் உருவங்களையும் வர்ணங்களையும் உபயோகித்துச் சித்திரத்தின் ஆழத்தன்மையும், முப்பரிமாணத்தன்மையும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. சித்திரங்கள் முப்பரிமாணத் தன்மையுடன் ஒழுங்கிணைக்கப்பட்டுள்ளன. பாரம்பரிய சித்திரங்களில் உள்ள இரேகைகளுக்குப் பதிலாக முப்பரிமாணத் தன்மை வெளிப்படும் விதத்தில் நுட்பமான வர்ண பேதங்கள் உபயோகித்துள்ளமையை இந்த இயற்கையான அதாவது இயல் காட்சிச் சித்திர நிர்மாணிப்புகளில் காணலாம். அதாவது இயற்கையை பிரதியிட்ட தன்மையை இங்கே காணலாம். இவ்வாறான ஐரோப்பிய இயற்பண்பு ஓவியக் கலையின் பண்புகளை கலைஞர் எம். சார்ளிஸ் அவர்களின் சித்திரங் களிலும் காணலாம்.
இப்பண்புகளைத் தவிர கீழைத்தேய பண்புகளும் இவரது ஓவியங்களில் காணப்படுகின்றன. அதாவது டவர் மண்டப ‘நூர்த்தி நிர்மாணிப்புகளுக்கு அடிப்படையாக அமைந்த ஆடை அணிகளில் தென் இந்திய ஆடை அணிகளின் இயல்புகளையும் காணலாம். இதனைத் தவிர ‘நூர்த்தி திரைச்சேலைகளுக்காக உபயோகிக்கப்படும் பின்னணிக் கட்டடங்கள், பூங்கா அமைப்புகளும் சார்ளிஸ் அவர்களின் நிர்மாணிப்புகளுக்கு அடிப்படையாக அமைந்தன.
மகாமாயாதேவி கண்ட கனவு (1911-1920)
ஓவியக் கலைஞர் எம். சார்ளிஸ் வரைந்த ”மகாமாய தேவி கண்ட கனவு” எனும் ஓவியம், நவீன பௌத்த ஓவிய வகையில் அடங்குகின்றது. உள்ளார்ந்த ஒரு நிகழ்வாகச் சித்திரிக்கப்பட்டிருக்கும் இந்த ஓவியத்தின் உருவ வெளிப்பாடுகள் இரண்டு வகையானவை. அவற்றள் ஒரு வகையாக மிகத் தெளிவானக் கட்புலனாகுமாறு தகவல்கள் முன்வைக்கப்பட்டிருத்தலை இனங்காண முடிகின்றது. உருவங்களை நிழல்போன்று காட்டியிருப்பது மற்றயை வகையாகும். இந்த இரண்டு வகையான வெளிப்பாடுகளும் ஒரு பாணியை மோடியைச் சேர்ந்தவையாகும். இயற்கைவாத அணுகுமுறையே அதுவாகும். இரண்டாவது மனையின் உட்புறக்காட்சிகள். மாயாதேவி ஆகிய உருவங்கள் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளன. கனவு தொடர்பான உருவங்கள் நிழல்போன்று சித்திரிக்கப்பட்டுள்ளது. அதாவது வெள்ளை யானைக் குட்டியும் நான்கு வகைத் தெய்வங்களும் கட்புலனாதலுக்கும் கட்புலனாகாமைக்கும் இடைப்பட்டதாகச் சித்திரிக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் நனவுநிலை, நனவிழி நிலை ஆகிய இரண்டு தோற்றப்பாடுகளையும் ஒன்றுடனொன்று சேர்த்து முன்வைக்க முயற்சி செய்யப்பட்டுள்ளது. அதாவது கதைக்கு அமைவாகச் சம்பவங்களை முன்வைப்பதை விடுத்து கதையை உயிரோட்டமான வகையில் முன்வைக்க முயற்சி செய்யப்பட்டுள்ளது.
ஓவியத்தின் ஒட்டுமொத்த செவ்வகவடிவ அமைப்பினுள் சதுரவடிவ எல்லையொன்று உருவாக்கப் பட்டுள்ளதோடு, அது பெரிதும் தூய புண்ணிய வெளியாகக் காட்டப்பட்டுள்ளது. அத்தோடு, மாளிகையின். விசாலமான தன்மை பற்றிய உணர்வை ஏற்படுத்தி, கனவைக் குறிக்கும் வெளியை வேறுபடுத்திக் காட்டுவதாக அமைந்துள்ளது.
தூரதரிசனத்தைக் காட்டுதல், முப்பரிமாணப் பண்பைக் காட்டுதல் போன்றவை இந்த ஓவியத்தின் சிறப்பியல்புகளாகும். திரைச்சீலைகளும் ஆடைகளும் இயற்பண்புவாத இயல்புகளைக் காட்டிநிற்கின்றன. ஒட்டுமொத்தமாக நோக்குகையில் “மகாமாயா தேவி கண்ட கனவு” எனும் இந்த ஓவியத்தில் ஒன்றின்மீது ஒன்றாக நனவு உலகமும் கனவு உலகமும் சித்திரிக்கப்பட்டுள்ளன. ஒரே கலைப்பாணியைப் பயன்படுத்தி, கனவும் அக்கனவைக் காண்பவரும் சித்திரிக்கப்பட்டுள்ளன. அதாவது இயற்கையான தோற்றம் பற்றிய நம்பிக்கையுடனேயே இந்தப்பாணி கட்டியெழுப்பப்பட்டுள்ளது.