இலங்கையின் பாரம்பரிய பித்தளைக் கலைக் கைத்தொழில்

  • இலங்கை வாழ் தமிழர்கள், சிங்களவர்கள் மத்தியில் பித்தளைக் கைத்தொழிலும் பிரபல்யம் அடைந்ததொன்றாகக் காணப்படுகிறது.
  • இலங்கையின் அநுராதபுர காலத்திலிருந்தே பித்தளைப் பொருட்கள் நிர்மாணிக்கப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன.
  • அவ்வாறான அதிகளவு பித்தளைப் பொருட்கள் இலங்கையில் பல நூதனசாலைகளில் காணக்கூடியதாக இருக்கின்றன.
  • பித்தளைப் பொருட்களின் நிர்மாணிப்புப்பணி 18 ஆம் நூற்றாண்டுக் காலத்திலேயே பிரபல்யம் அடைந்தது.
  • செம்பு (Copper), நாகம் (Zinc) ஆகிய உலோகங்கள் உரிய விகிதத்தில் சேர்த்து பித்தளை தயாரித்துக் கொள்ளப்படும்.
  • பல்வேறு தேவைகளின் பொருட்டு இந்தப் பித்தளை ஊடகத்தால் பாண்டங்கள் தயாரிக்கப் படுகின்றன.
  1. பயன்பாட்டுப் பாண்டம்
    அடுக்கு விளக்கு , படிக்கம், பாக்குவெட்டி, குடம், செம்பு, கூசா, கெண்டி, தட்டம், தாம்பாளம், நகைப்பெட்டி, மேசைத்தட்டம்.
  2. கட்டட வேலையிலும், வீட்டுப் பாண்டங்களாகவும் பயன்படுத்தும் பொருட்கள்
    ஆணி, திறப்புத்தொளைத்தகடு, திறப்பு, தாழ்ப்பாள்
  3. சமய காரியங்களுக்குத் தேவையான பாண்டம்
    தாதுப் பேளை, சைத்திய மகுடம், தெய்வ – புத்தர் சிலைகள், விளக்கு, தட்டம், பாத்திரம், ஆலவட்டம், மாணி, திருகாணி
  4. அலங்காரப்பாண்டம்
    சுவர் அலங்கரிப்புக்கள், பிராணிகள் வடிவங்கள்.
  • தட்டுதல் வேலை”, “வார்த்தல் வேலை” என முக்கிய இரண்டு முறைகளில் பித்தளைப் பாண்டங்கள் நிர்மாணிக்கப்படும்.
தட்டுதல் வேலை (தகட்டு வேலை)
  • தட்டுதல் வேலை என அறியப்படுவது பித்தளைத் தகட்டைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யும் பாண்டம் ஆகும்.
  • இந்த முறையில் தட்டம், தாம்பளம், வெற்றிலைத்தட்டம், விளக்கு மறைப்பு, திறப்பு தொளைத்தகடு, நகைப்பெட்டி, திருவாசி போன்றவை நிர்மாணிக்கப்படும்.
வார்ப்பு வேலை
  1. பித்தளை வார்ப்பு வேலை
  2. மெழுகு வார்ப்பு / மண் வார்ப்பு வேலை

என இருமுறைகளின் கீழ் செய்யப்படும்.

மெழுகு வார்ப்பு வேலை

  • பித்தளை மெழுகு வார்ப்பு வேலை என்பது, பித்தளையை உருக்கி அச்சினுள் ஊற்றிக் கொள்வதன் மூலம் தயாரித்துக்கொள்ளும் முறையாகும்.
  • இம்முறையில் பித்தளை விளக்கு, தட்டு, பாத்திரம், பூச்சாடி, தட்டம், கெண்டி, குடம், படிக்கம், பிணைச்சல், பாக்குவெட்டி, திறப்பு, திறப்புத் துவாரத்தகடு, தாதுப் பேளை, தாதுகோப கலசம், கதவு, பெட்டிக் கைப்பிடி, சிலைகள் ஆகியன நிர்மாணிக்கப்படும்.
  • முதலில் தேவையான பொருளின் அடிப்படை வடிவம் களிமண்ணால் செய்யப்படும். பின்னர் அதன் மீது மெழுகுவார்த்து வடிவம் பெறப்படும்.
  • அம்மெழுகு அமைப்பை சுற்றி அரை அங்குல தடிப்பத்தில் மெழுகு பூசி அம்மெழுகு மீது தேவையான வடிவங்கள் இடப்படும். இறுதியில் அம்மெழுகுப் பாண்டத்தை மூடும்படியாக இரண்டு அல்லது மூன்று அங்குலத் தடிப்பத்தில் களிமண் கட்டப்படும்.
  • இவ்வாறு அமைக்கப்படும் அச்சு நன்றாக உலர்ந்ததும் அதன் துவாரங்கள் கீழ்நோக்கி இருக்கும் விதத்தில் அதன் மீது தீ இட்டு வெப்பமேற்றி உள்ளேயிருக்கும் மெழுகை உருக்கி, அகற்றி, வெப்பமேற்றிய பித்தளைத் திரவம் அக்களிமண் உறைக்குள் ஊற்றப்படும்.

மண் வார்ப்பு முறை

  • தற்காலக் கலைஞர்களால் பெரும்பாலும் இம்முறையே பயன்படுத்தப்படுகின்றது.
  • இது பாண்டம் தயாரிப்பதன் பொருட்டு பயன்படுத்தப்படும் மிக எளிமையான முறையாகும்.
  • இம்முறையில் பாண்ட வகைகள் சில மட்டும் தயாரிக்கப்படும். விளக்கு, தட்டு, பூச்சாடி போன்றவை அவற்றுள் சிலவாகும்.
  • மண் வார்ப்பு முறைக்குத் தேவையான மண் கலவை மென்மையாகத் தயாரிக்கப்பட்ட கற்றூண்கள், களிமண் தூண்கள் கொண்டு தயாரிக்கப்படும்.
  • சதுரமான மரச்சட்டத்தினுள் மண் இட்டு நன்றாக அழுத்தி அதன் மீது பித்தளைப் பாண்டத்தை வைத்து அழுத்தி, பாண்டத்தில் சரி அரைவாசி அச்சு தயாரித்துக்கொள்ளப்படும்.
  • அந்த அச்சினுள் பித்தளையை உருக்கி ஊற்றி பாண்டத்தின் ஒரு பகுதி தயாரித்துக் கொள்ளப்படுவதுடன் மற்றைய பகுதியும் இம்முறையில் தயாரிக்கப்படும். பின்னர் இருபகுதிளையும் ஒன்றாக இணைத்து ஒட்டிக் கொள்வதன் மூலம் பூரண பாத்திரம் பெறப்படும்.
பித்தளைப் பாண்டங்கள் அலங்கரிப்பு முறை
  • பித்தளைத் தகடு முறையில் நிர்மாணிக்கப்பட்ட பாண்டங்கள் அரம், உளி, கூரான ஆயுதம் போன்ற உபகரணங்களைப் பயன்படுத்தி மெருகிட்டு, செதுக்கு வேலை செய்யப்படும்.
  • அலங்கரிப்பின் பொருட்டு கொடியலங்காரம், அன்னாசிமலர், பேருண்ட பட்சி, அன்னபந்தம், சந்திரன் சூரியன், பூ இதழ் போன்ற அலங்கரிப்பு அலங்காரங்கள் பெரும்பாலும் பயன்படுத்தப்படும்.
  • அலங்கார வேலைப்பாடுகள் இடும்போது இரும்பு, செப்பு, தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களும் தேவைக்கேற்பக் கலக்கப்படுகின்றன.
இலங்கையில் பித்தளைக் கைத்தொழில் நடைபெறும் பிரதேசங்கள்.
  • கண்டி – பமுனுவ, கடலாதெனிய, பிலிமதலாவ, கிரிவவுள,
  • தவுளகல , நத்தரம்பொத்த (கலாபுரம்)
  • மத்தறை – பெலியத்த பிரதேசத்தில் அங்குள்மடுவ
  • யாழ்ப்பாணம் – வண்ணார் பண்ணை
  • மட்டக்களப்பு – பெரிய போரதீவு

பயிற்சி வினாக்கள்

1. பித்தளைக் கைத்தொழிலின் வரலாற்றுப் பின்னணியைக் குறிப்பிடுக.
2. பித்தளையை தயாரிக்க சேர்க்கப்படும் இரு உலோகங்களும் எவை?
3. பித்தளைப் பொருட்கள் தயாரிக்கப்படும் இரு முறைகளும் எவை?
4. வார்ப்பு முறையின் இரு வகைகளையும் குறிப்பிடுக.
5. பித்தளைக் கைத்தொழில் காணப்படும் பிரதேசங்கள் எவை?
6. பித்தளைத் தட்டுதல் வேலை மூலம் செய்யப்படும் பொருட்கள் எவை?
7. பிள்ளளைப் பொருட்களை அலங்கரிக்கும் முறைகளையும் அதற்காக பயன்படுத்தப்படும் அலங்காரங்களையும் குறிப்பிடுக.

error: Content is protected !!