இலங்காதிலக விகாரை
- கம்பளைக் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இலங்காதிலக விகாரை பன்ஹல்கல எனும் கற்பரப்பின் மீது அமைக்கப்பட்டுள்ளது.
- 4ஆம் புவனேகபாகு மன்னன் காலத்தைச் (கி.பி. 1341 – 1351) சேர்ந்தது.
- இது சேனாதிலங்கார அமைச்சரின் ஆலோசனைப்படி இந்தியாவைச் சேர்ந்த ஸ்ரபதிராயர் எனும் கலைஞரால் அமைக்கப்பட்டது.
கட்டடக் கலைப் படைப்புக்கள் – இலங்காதிலக விகாரை
- இக்கட்டட நிர்மாணத்துக்காக செங்கல், சுண்ணச்சாந்து ஆகியன பயன்படுத்தப்பட்டுள்ளன.
- அக்காலத்தில் இது நான்கு மாடிகளைக் கொண்டதாக அமைந்திருந்ததாக நூல்களில் பதிவாகியுள்ளது.
- வெளிப்புற சுவரில் அமைக்கப்பட்டுள்ள யானை உருவங்களும், தூண்களும் விகாரைக்கு அழகு சேர்க்கும் அம்சங்களாகும்.
- சிலை மனையுடன் இணைந்த வகையில், நான்கு திசைகளிலும் விபீஷண, உபுள்வன, (விஷ்ணு) கதிர்காம(முருகன்) கணபதி (பிள்ளையார்) ஆகியோர்க்காக நிர்மாணிக்கப்பட்ட ஐந்து (5) ஆலயங்கள் உள்ளன. அவற்றில் தெய்வச் சிலைகள் காணப்படுகின்றன.
புத்தர் சிலைகள்
- சிலை மனையில் உள்ள அமர்ந்திருக்கும் நிலைப்புத்தர் சிலையின் கண்களிரண்டும் திறந்த நிலையிலும், காவியுடையில் மடிப்புக்கள் அலை வடிவிலும் அமைக்கப்பட்டுள்ளன.
- மேலும் இச்சிலை நிமிர்ந்த நிலையிலும் உள்ளது. வீராசன நிலையில் அமர்ந்த நிலையில் உள்ள இப்புத்தர் சிலை தியான முத்திரையை வெளிக்காட்டுகிறது.
- பூவேலைப்பாடு , கொடி வேலைப்பாடுகள் மூலம் அலங்கரிக்கப்பட்டுள்ள மகரதோரணமொன்று சிலைக்குப் பின்புறமாக அமைக்கப்பட்டுள்ளது.
ஓவியங்கள்
- கண்டிக்கால ஓவியப் பாரம்பரியத்தை ஒத்த இலங்காதிலக விகாரை ஓவியங்களுக்கு இடையே சூவிசி விவரணய (24 புத்தர்), சொளொஸ்மஸ்தானய (16 புனித ஸ்தலங்கள்), சத்சத்திய (ஏழு வாரம்) போன்ற ஓவியங்கள் முக்கிய இடத்தைப் பெறுகின்றன.
- மேலும் கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்க மன்னன், சோனதிலங்கார அமைச்சர் ஆகியோரின் உருவங்களும் சித்தரிக்கப்பட்டுள்ளன.
- இங்கு காணப்படும் நான்கு அன்னங்களின் கூட்டு பல திறனாய்வாளர்களின் கவனத்தை ஈர்ந்துள்ளது. அது விதானத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
- மேலும் மரபு ரீதியான ஓவியங்களுக்கு இடையே அழகிய கொடி அலங்காரங்கள் பெருமளவில் அமைந்துள்ளன.
பயிற்சி வினாக்கள்
1. கம்பளை காலத்தைச் சேர்ந்த இலங்காதிலக விகாரை எம் மன்னன் காலத்தைச் சேர்ந்தது?
2. இவ்விகாரையை அமைத்த இந்தியச்சிற்பியை குறிப்பிடுக?
3. இக்கட்டட நிர்மாணத்துக்காக பயன்படுத்தப்பட்ட ஊடகம் யாது?
4. இலங்கா திலக விகாரை புத்தர் சிலையின் சிறப்பும் பண்புகள் இரண்டு தருக?
5. நான்கு அன்னங்களின் கூட்டு எனும் ஓவியத்தினை எவ்விகாரையில் காணலாம்?
தரப்பட்டுள்ள ஒளிப்படத்தை ஆதாரமாகக் கொண்டு தரப்பட்டுள்ள வெற்றிடங்களை நிரப்புக.
1. இக்கட்டிடம் …………………………………………………………… ஆகும்.
2. இது ………………………………………………….. எனும் கற்பரப்பின் மீது அமைக்கப்பட்டுள்ளது.
3. இது ……………………………………………………… மன்னன் காலத்தில் நிர்மாணிக்கப்பட்டது.
4. சேனாதிலங்கார அமைச்சரின் ஆலோசனைப்படி ……………………………………………… எனும் சிற்பக் கலைஞரால் அமைக்கப்பட்டது.
5. இக்கட்டிடம் ……………………………………………….. ஊடக்கத்தால் நிர்மாணிக்கப்பட்டது.