இந்து சிற்பங்களின் ஆசனங்கள், ஆசன முறைகள், முத்திரைகள்

ஆசன வகைகள்

  • சிலை வீற்றிருக்கும் பீடம் ஆசனம் எனப்படும். பத்மாசனம், பத்திராசனம் எனும் ஆசனங்கள் இந்து சிற்பங்களில் அதிகளவு காணப்படும் ஆசன வகைகளாகும்.

பத்மாசனம்

  • தாமரை மலரிதழ்களால் அலங்கரிக்கப்பட்ட நீள்வட்ட வடிவமுடையதாக பத்மாசனம் அமைக்கப்பட்டுள்ளது.

பத்ராசனம்

  • இது செவ்வக வடிவமுடைய நிர்மாணிப்பாகும்.

ஆசன முறைகள்
  • கால்கள் அமைந்திருக்கும் ஒழுங்கே ஆசன முறையாகும். இந்து சிற்பங்களில் அதிகமாகக் காணப்படும் ஆசன முறைகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.
  1. லலிதாசனம்
  2. இராஜலீலாசனம்
  3. பரியங்க ஆசனம்
லலிதாசனம்
  • பீடத்தின் மீது அமர்ந்து இருக்கும் நிலையைக் குறிக்கும். ஒரு பாதம் மடிக்கப்பட்டு மற்றைய பாதம் கீழே தொங்கவிடப்பட்ட நிலை இதனைக் குறிக்கிறது. பார்வதி, சரஸ்வதி தேவி ஆகியன இம்முறையியல் அமைக்கப்பட்டுள்ளன.
இராஜலீலாசனம்
  • இடக்கால் கிடையாக மடிக்கப்பட்டு, வலக்கால் செங்குத்தான நிலையில் மடிக்கப்பட்டு, அதன் மீது வலக்கையின் முழங்கை வலக்காலை ஸ்பரிசம் செய்யும் முறை இதனைக் குறிக்கிறது.
பரியங்க ஆசனம்
  • கதிரையொன்றில் அமர்ந்திருக்கும் நிலையைக் குறிப்பதுடன் பாதங்கள் மடித்து கீழே ஸ்பரிசம் செய்யும் முறையில் அமைக்கப்டப்டுள்ளது.

முத்திரைகள்
  • சிற்பத்தின் கைகள் குறிக்கும் நிலை முத்திரையாகும்.
  • இவற்றுக்கேற்ப முத்திரைகள் பெயரிடப்படும். அவை குறியீட்டு வடிவில் அமைந்திருப்பதுடன் பல அர்த்தங்களை வெளிப்படுத்துகின்றன.
  • சிற்பமொன்றின் பாவ வெளிப்பாடும், ஒட்டுமொத்தச் சிற்பத்தின் குண இயல்பும் முத்திரைகள் மூலமே குறிக்கப்படுகின்றன. இந்து சிற்பங்களில் இவ்வாறான பல முத்திரைகளை நாம் அவதானிக்கலாம்.
  1. அபய முத்திரை
  2. கஜஹஸ்த முத்திரை
  3. நமஸ்கார முத்திரை
  4. வரத முத்திரை
  5. விதர்க முத்திரை
  6. கடகஹஸ்த முத்திரை
  7. டோல ஹஸ்த முத்திரை / லோல ஹஸ்த முத்திரை
அபய முத்திரை
  • அபயம் அல்லது காப்பாற்றுதல் இதனைக் குறிக்கிறது. இது முழங்கை மடிக்கப்பட்டு முன்னோக்கிக் காட்டப்பட்ட முறையாகும்.
கஜஹஸ்த முத்திரை
  • யானையின் தும்பிக்கை வடிவில் உள்ளங்கைகளும் விரல்களும் கீழ் நோக்கி நீட்டப்பட்டுள்ளன. தடைகள் நீக்கப்பட்டு விடுதலை அளிப்பதைக் குறிக்கிறது.
நமஸ்கார முத்திரை
  • வேண்டுதல் அல்லது பிரார்த்தனை வணங்குதல் இதனைக் குறிக்கிறது. கைகளின் முழங்கை மடிக்கப்பட்டு, மார்புக்கு நேராக உள்ளங்கைகளையும் விரல்களையும் ஒன்றாக இணைத்துக் காண்பிக்கும் முறை இதுவாகும்.
வரத முத்திரை
  • வரமளித்தல் இதனைக் குறிக்கிறது. கீழ்நோக்கித் தொங்கவிடப்பட்ட கையின் உள்ளங்கையும் விரல்களும் முன்னோக்கிய வண்ணம் உள்ளன.
விதர்க முத்திரை
  • உள்ளங்கை முன்னோக்கியிருப்பதுடன் பெருவிரல் மீது ஆட்காட்டி விரலை வைத்திருக்கும் நிலை இதுவாகும். பிரச்சனை ஒன்றைத் தீர்க்கும் நிலையை இம்முத்திரை குறிக்கிறது.
    உதாரணம் : பத்தினித் தெய்வம்
கடகஹஸ்த முத்திரை
  • பொருளொன்றை பிடித்திருக்கும்போது விரல்கள் அமைந்திருக்கும் நிலை இதனைக் குறிக்கிறது.
டோல ஹஸ்த முத்திரை / லோல ஹஸ்த முத்திரை
  • பெண் தெய்வங்களில் அதிகம் காணலாம். கீழே தொங்கவிடப்பட்ட கையின் உள்ளங்கையும் விரல்களும் இலயத்துடன் பூமியை நோக்கியிருப்பதைக் குறிக்கும். இது அமைதியைக் குறிக்கிறது.

பயிற்சி வினாக்கள்

1. இந்து சிற்பங்களின் ஆசன வகைகளை வரைந்து குறிப்பிடுக.
2. இந்து சிற்பங்களின் முத்திரை வகைகளை வரைந்து குறிப்பிடுக.
3. இந்து சிற்பங்களின் முத்திரைகளின் அர்த்தத்தை விபரிக்குக.
4. பலவித ஆசனங்கள், ஆசன முறைகள் வரைந்து விபரிக்குக.
5. பின்வரும் ஆசன முறைகள், முத்திரைகளை இனங்கண்டு எழுதுக

error: Content is protected !!