இசுறுமுனியா செதுக்கல்கள்
- இசுறுமுனிய விகாரையும் அங்கு காணப்படும் செதுக்கு வேலைப்பாடுகளும் அனுராதபுர காலத்தைச் சேர்ந்தவையாகும்.
- இசுறுமுனிய விகாரை அனுராதபுர திசாவாவியினருகே “ரன் மசு” பூங்காவிற்கு தெற்கில் அமைந்துள்ளது.
- இது இலங்கையில் அமைக்கப்பட்ட முதல் பெளத்த வணக்கத் தலமான விகாரை எனக் கருதப்படுகிறது.
- இது மகிந்த தேரரிடம் குருத்துவம் பெற்ற அரிட்ட குமாரன் முதற் கொண்டு இசுறு குலத்தோர் 500 பேர்கள் வாழ்ந்த இடமெனவும் மகாவம்சம் கூறுகிறது.
- இது கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் தேவநம்பிய தீசன் மன்னனால் கட்டுவிக்கப்பட்டது என மகாவம்சம் கூறுகிறது.
- வணக்கத் தலமாக இருந்தபோதும், இங்கு காணப்படும் கலை நிர்மாணங்கள் சமயச் சார்பற்ற தொனிப்பொருள்களை கொண்டவையே.
- அரைப் புடைப்பு, சிறுபுடைப்பு நுட்ப முறையிலான மனித விலங்கு உருவங்களும் செதுக்கல்களும் இவற்றுக்கு சான்று பகிர்கின்றன.
♦ காதலர் சிற்பம்
♦ அரச குடும்பம் செதுக்கல்
♦ குதிரைத் தலையும் மனித உருவமும்
♦ நீராடும் யானைகள்
- இச்செதுகல் படைப்புக்களில் உருவங்களின் தன்மை, விடயப்பொருள் ஆகியவற்றைக் காட்டுவதற்காக குப்தர் மற்றும் பல்லவர் கால இந்து கலைப் பொருள்களின் செல்வாக்கு பெறப்பட்டுள்ளது என்பது விமர்சகர்களின் கருத்தாகும்.
- இசுறுமுனிய செதுக்கல்கள் இலங்கையின் அருஞ் செல்வங்களாக கருதப்படும் நிலைத்துள்ள நிர்மாணங்களாகின்றன.
இவற்றில் காணப்படும் கலைப் பண்புகள்
- தளத்துக்குப் பொருத்தமாகச் செதுக்கப்பட்டிருத்தல்.
- உணர்வுகள் முகத்தினாலும் மெய்ந்நிலைகளாலும் காட்டப்பட்டிருத்தல்.
- இயற்கையான வடிவங்களும் மெய்ந்நிலைகளும் சந்தத்துடன் வெளிப்பட்டிருத்தல்.
- மென்மையான, ஒப்பமான முழுநிறைவைக் கொண்டிருத்தல்.
அரச குடும்பம் செதுக்கல்
- இசுறுமுனிய செதுக்கல்களுள் அரச குடும்பக் காட்சியை சித்தரிக்கும் செதுக்கல் முக்கியத்துவம் வாய்ந்தது.
- இது 4 அடி நீளமுடைய அரைவட்ட வடிவமான கற் தகட்டில் அரைப்புடைப்பு நுட்ப முறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
- அரை வட்டவடிவ கற் தகட்டில் உருவங்களை சிறப்பாக ஒழுங்கமைத்து நடுவில் அரச தோரணையில் அமர்ந்திருக்கும் உரு உள்ளது.
- வலது புறத்தே கைகளை நெஞ்சு மீது கட்டி அமர்ந்த நிலையில் உள்ள ஓர் ஆணும், அவரின் பின்னால், மத்தியில் உள்ள உருவம் சாமரை வீசும் மற்றொருவரும் (சேவகன்) உள்ள னர்.
- பேராசிரியர் செனரத் பரணவித்தானவின் கருத்துக்கமைய இது துட்டகைமுனு மன்னனின் குடும்பமாகும்.
- அரச ஆடையணிகள் தரித்து மத்தியில் இருக்கும் உருவில் துட்டகைமுனு மன்னனும் , வலது புறத்தே நெஞ்சு மீது கைகளைக் கட்டி நிற்கும் உருவம் குமாரன் சாலியனும் காட்டப்படுவதாக பரணவிதாரன அவர்கள் கருதப்படுகின்றார்.
- அலங்கார ஆடை அணிகலன்களுடன் கூடிய உருவங்கள் லயத்துடன் செதுக்கப்பட் டுள்ளது.
- உணர்வுபூர்வ வெளிப்பாடு முகத்திலும், மெய்நிலைகளிலும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
- மிருதுவாக அரைப்புடைப்பு நுட்ப முறையில் செதுக்கப்பட்ட ஆக்கம்.
காதலர் சிற்பம்
- குப்த சிற்பக் கலை மரபில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
- இது சதுரவடிவ கற் தகட்டில் அரை புடைப்பு சிற்ப நுட்ப முறையில் செதுக்கப்பட்டுள்ளது.
- இந்நிர்மாணிப்புத் தொடர்பாக பல கருத்துக்கள் உள்ளன. பேராசிரியர் செனரத் பரணவித்தான தெரிவித்துள்ள கருத்தே முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இதில் சாலிய குமாரனும் அசோகமாலாவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறுகிறார். இவர்களது காதற் கதையுடன் தொடர்புள்ள ‘ரன் மசு உயன ‘ பூங்கா அண்மையில் அமைந்திருப்பதை அதற்கான காரணமாகக் காட்டியுள்ளார்.
- இந் நிர்மாணிப்பு பற்றிய ஏனையவர்களது கருத்துக்கள் பின்வருமாறு உள்ளன.
♦ சிவ பார்வதி என்பது
♦ மஞ்சுசிறீ போதிசத்துவரின் ஒரு வேடம் என்பது
♦ மஞ்சுசிறீ போதிசத்துவரின் ஒரு வேடம் என்பது
♦ படைவீரனும் அவனது காதலியும் என்பது
- அலங்கார ஆடை அணிகலன்கள், ஆண்மை , சிறந்த தேக லட்சணம், உணர்வு வெளிப்பாடு , காதல் போன்ற பாவ உணர்வுகளுடன் இச்சிற்பம் பொளியப்பட்டுள்ளது.
- மென்மை, ஒப்பமான தன்மை, இயல்பான தளவடிவங்கள், சந்தத்துக்கு இசைவான தன்மையுடன் மெய்ந்நிலை வெளிப்பாடு போன்றவை இச்சிற்பத்தின் சிறப்பியல்பாகும்.
குதிரைத்தலையும் மனித வடிவமும்
- இசுறுமுனிய விகாரைக் குளத்துடன் இணைந்த பாறைச் சுவர் மீது அமர்ந்திருக்கும் மனிதனும், குதிரை ஒன்றின் தலைப்பகுதியும் பொழியப்பட்டுள்ளது.
- மனிதன் கம்பீரமாக அமர்ந்து குளத்தை பார்த்துக் கொண்டு இருக்கும் விதம் காட்சிப் படுத்தப்பட்டிருக்கிறது.
- ‘மகாரஜ’ தோரணையில் அமர்ந்து இருப்பதாகக் கூறப்படுகிறது.
- ஆடையணிகள் மிகக் குறைவாகவும் எளிமையாகவும் காட்டப்பட்டுள்ளன. தலையணி, காதுகளிலும் கைகளிலும் ஆபரணங்கள், இடையில் குறு ஆடை போன்றவை உள்ளன.
- அவரது வலது புயத்தில் மாட்டப்பட்டுள்ள கயிறு குதிரையுடன் இணைந்ததாகும்.
- குதிரையின் தலை மாத்திரம் காட்டப்பட்டுள்ளது.
- பேராசிரியர் செனரத் பரணவிதான அவர்களின் கருத்துப்படி மனிதனும் குதிரைத்தலையும் நீரையும் அக்கினியையும் குறிக்கிறது. மனிதன் மழைக்கு அதிபதி வருணபகவான்vஎனவும், குதிரை மின்னலைக் குறிப்பதாக அவர் கருத்து.
- போர்வீரன் கபில ரிஷி என்னும் வேறு கருத்துக்களும் நிலவுகின்றன.
- பல்லவ சிற்ப மரபைத் தழுவி எளிமையான சுபாவத்தில் கம்பீரமான தோற்றத்துடன்vபொழியப்பட்டிருப்பதும் சிறப்பாகும்.
- இது (அரைப்புடைப்பு) குறைபுடைப்பு நுட்பமுறையில் செதுக்கப்பட்டுள்ளது.
- மென்மையாகவும் மெருகுடனும் பூரணப்படுத்தி அரைப்புடைப்பு நுட்ப முறையில்vபொழியப்பட்டுள்ளது.
நீராடும் யானைகள்
- இசுறுமுனிய விகாரைக் குளத்துடன் இணைந்த பாறைச் சுவரில் இயற்கையான உருவங்களாக செதுக்கப்பட்டுள்ளன.
- இயற்கைக் கற்பாறையில் அரைப்புடைப்பு நுட்ப முறையில் இச்சிற்பம் செதுக்கப் பட்டுள்ளது.
- குளத்தில் இறங்கி நீராடும் யானைகளின் பல்வித மெய்நிலைகளின் காட்சி பாறைச் சுவரில் அரைப்புடைப்பில் செதுக்கப்பட்டுள்ளது.
- யானை உருவங்கள் நேராகவும் பக்கவாட்டிலும் அமைந்துள்ளன.
- யானைகளின் அசைவு , சந்தம் , துடிப்பு என்பன வெளிப்படும் விதத்தில் ஒருங்கிணைத்து செதுக்கப்பட்டுள்ளன.
- பல்லவ சிற்ப மரபில் செதுக்கப்பட்டுள்ளன.
- இந்தியாவின் மாமல்புரத்து கங்காவரோகணச் செதுக்கல்களை ஒத்திருப்பதாக கருதப்படுகிறது.
- இயற்கை வடிவமைப்பில் மிருதுவான தன்மையில் மெய்நிலைகள் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
பயிற்சி வினாக்கள்
தரப்பட்டுள்ள ஒளிப்படத்தை ஆதாரமாகக் கொண்டு வினாக்களிலுள்ள இடைவெளிகளை நிரப்புக.
1. இங்கு காட்டப்பட்டுள்ள அனுராதபுரக்காலத்தில் தேவநம்பியதீச மன்னனால் அமைக்கப்பட்ட ………………………………………… விகாரையாகும்.
2. கலை ஆக்கங்கள் பலவற்றிற்கு உரித்தான இவ்விடத்தில் அமைந்துள்ள கல்லில் இரு சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. ஒன்று மனிதனும் குதிரைத் தலையும் ஆகும். இச்செதுக்கல் …………………………………………………………….. குறியீடாகும்.
3. மேலே குறிப்பிட்ட செதுக்கல்கள் இந்திய …………………………………….. கலை மரபுடன் தொடர்புடையன எனக் கூறப்படுகின்றது.
4. இவ்விடத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட உணர்ச்சி பாவம் நிறைந்ததும் உயர் நேர்த்தியைக் கொண்டதுமான ………………………………………………………………… செதுக்கல் ரன்மசுப் பூங்காவிலிருந்து இங்கு கொண்டுவரப்பட்டதெனக் கருதப்படுகின்றது.
5. இதில் ……………………………………………………………………………………. என்பவர்களின் உருவம் காணப்படுவதாக கலாநிதி பரமவிதான குறிப்பிடுகின்றார்.
1. இலங்கையின் சிறந்த கலைப்படைப்பான இந்த நிர்மாணிப்பு ………………………………………. என்னும் பெயரால் இனங்காணப்படும்.
2. இச் செதுக்கல் அனுராதபுரத்தில் …………………………………………….. விகாரையின் புதிய தொல்பொருட்காட்சிச் சாலையில் காணப்படுகின்றது.
3. காதல் உணர்வை வெளிப்படுத்துகின்ற இதில் …………………………………………………….. சித்தரிக்கப்பட்டு இருப்பதாக கலாநிதி பரணவிதான அவர்கள் கருத்து வெளியிட்டுள்ளார்.
4. தகட்டுச் செதுக்கலான இது ………………………………………. நுட்ப முறையில் செதுக்கப்பட்டுள்ளது.
5. இந்தக் கலை ஆக்கத்தில் இந்திய ……………………………………… கலைப்பாணியின் தாக்கம் காணப்படுவதாக நம்பப்படுகின்றது.
1. இது …………………………………………….. இல் அமைந்துள்ள பாறையில் செதுக்கப்பட்டுள்ள சிற்பம் ஆகும்.
2. இச் சிற்பம் ………………………………………………………… என அழைக்கப்படும்.
3. இது …………………………………………….. கலைநுட்பத்திற்கு அமைவாகச் செதுக்கப்பட்டுள்ளது.
4. இதிலுள்ள மனித உருவினால் …………………………………………….. சித்தரிக்கப்படுவதாக்க கருதப்படுகின்றது.
5. சிற்பத்தில் இந்திய …………………………………………….. கலைப் பண்புகளின் செல்வாக்கு இடம்பெற்றுள்ளதாக கருதப்படுகின்றது.
1. இது இசுறுமுனிய செதுக்கல்களுள் ………………………………………………………. எனும் செதுக்கல் ஆகும்.
2. இது ……………………………………………… காலப்பகுதிக்கு உரியதாகும்.
3. இது ………………………………………………….. நுட்ப முறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
4. பேராசிரியர் செனரத் பரணவித்தானவின் கருத்துக்கமைய இது …………………………………… மன்னனின் குடும்பமாகும்.
5. வலது புறத்தே நெஞ்சு மீது கைகளைக் கட்டி நிற்கும் உருவம் …………………………………………………….. என பரணவிதாரன அவர்கள் கூறுகின்றார்.
6. இது ……………………………………….. ஊடகத்தில் செதுக்கப்பட்டுள்ளது.
1. இது ……………………………………………. விகாரைக் குளத்துடன் இணைந்த பாறைச் சுவரில் செதுக்கப்பட்டுள்ளது.
2. இச்சிற்பம் …………………………………………. நுட்ப முறையில் செதுக்கப்பட்டுள்ளது.
3. இதன் தொனிப்பொருளாக ………………………………………………. காணப்படுகின்றன.
4. இச்செதுக்கல் …………………………………………. சிற்ப மரபில் செதுக்கப்பட்டுள்ளன.
5. இது இந்தியாவின் …………………………………………………………………………… செதுக்கல்களை ஒத்திருப்பதாக கருதப்படுகிறது.
6. இது ……………………………………….. ஊடகத்தில் செதுக்கப்பட்டுள்ளது.