அனுராதபுரக் காலத்தைச் சேர்ந்த புத்தர் சிலைகள்

குறிப்பாக புத்த சமயம் இலங்கையில் தாபித்தமடைந்த பின்னர், பெருந்தொகையான புத்தர் சிலைகள் உருவாக்கப்பட்டன என்பது, அனுராதபுர காலத்தைச் சேர்ந்தவை என இனங்காணப்பட்டுள்ள புத்தர்சிலைகள் மூலம் உறுதியாகின்றது. இவ்வாறாகக் கண்டறியப்பட்டுள்ள பெருந்தொகையான புத்தர்சிலைகள், அவை பற்றிக் கற்றாய்வதை இலகுபடுத்தும் நோக்குடன், நின்ற நிலைச் சிலைகள் மற்றும் அமர்ந்த நிலைச் சிலைகள் என வகைப்படுத்தப்பட்டு, அவை தொடர்பான விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

அனுராதபுரக் காலத்தைச் சேர்ந்த அமர்ந்த நிலைப் புத்தர் சிலைகளும் அவற்றின் அடிப்படை இயல்புகளும்

அனுராதபுரக் காலத்தைச் சேர்ந்த பெரும்பாலான புத்தர் சிலைகள், அமர்ந்த நிலைச் சிலைகளாகும் என்பதும் அவற்றில் இலங்கைக்கே உரித்தான கலைத்துவப் பண்புகளும், இந்தியச்

சிற்பக்கலைப் பண்புகளும் பரவலாக்க காணப்படுகின்றன என்பதும் அச்சிலைகளைக் கற்றாயும்போது தெளிவாகின்றது. இந்தியப் புத்தர் சிலைகளில் காணப்படும் அளவு, உடலுறுப்புக்கள், முத்திரைகள். காவியுடை, சுருட்டை முடி, குடுமி, ஒளி வட்டம் போன்ற மகாபுரட இலட்சணங்களை இலங்கைப் புத்தர் சிலைகளில் காணமுடிவதோடு, ஆசன முறை, காவியுடை போன்றவற்றில் வேறுபாடுகளையும் காணக்கூடியதாக உள்ளது. இந்தியாவின் அமர்ந்தநிலைச் சிலைகள் எல்லாவற்றிலும் கால்களை மடித்துவைத்துள்ள பிரபல்யமான பத்மாசன முறையை அனுராதபுரக்காலப் புத்தர்சிலை எதிலுமே காணமுடிவிதில்லை. பதிலாக இச்சிலைகளில் வீராசன முறையே காணப்படுகின்றது. இந்திய புத்தர்சிலைகளில் காவியுடையினால் இரு தோள்களும் மறைக்கப்பட்டுள்ளதோடு, இலங்கையின் ஆரம்பகாலப் புத்தர்சிலைகளில் ஒரு தோள் மட்டும் மூடிய நிலையே காணப்படுகின்றது. மேலும் இந்திய புத்தர் சிலைகளின் ஆழமான அலைநெளிவுள்ள காவியுடை காணப்படுவதோடு, அனுராதபுர யுகத்தில் உருவாக்கப்பட்ட புத்தர் சிலைகளில் ஆழம் குறைவான குவிவான அல்லது குழிவான ஒரு சீர்த்தன்மையுள்ள மடிப்புக்களுடனோ, மடிப்புக்கள் இன்றியோ காவியுடை காட்டப்பட்டுள்ளது.

மேலும் இலங்கையின் அமர்ந்த நிலைச் சிலைகளில் உடல் நிமிர்ந்த, எனினும் இந்திய சிலைகளில் உடல் சற்று முன்னோக்கி வளைந்த நிலையில் காட்டப்படுகின்றது. இலங்கைச் சிலைகளில் இடது கையின்மீது வல கை மிக நெகிழ்வாக வைக்கப்பட்டுள்ளது. இந்திச் சிலைகளில் கைகள் விறைப்பாக மடிமீது வைக்கப்பட்டுள்ளன. இந்தியச் சிலைகளில் கேசம், தலையணி, ஒளிவட்டம். மயிர்கள், ஆழமான சுருட்டை முடி ஆகியன காட்டப்பட்டுள்ளன. எனினும் இலங்கைப் புத்தர் சிலைகளில் அவை மிக எளிமையான விதத்திலேயே காட்டப்பட்டுள்ளன. அமர்ந்தநிலைச் சிலைகளில் தலையணியும் செறிந்த மயிர்களும் காணப்படுவதில்லை . மிகச் சிறிய தலையணி மாத்திரம் இடப்பட்டுள்ளது. இதற்கமைய இலங்கையின் அமர்ந்த நிலைப்புத்தர்சிலைகளில் புறத்தோற்றத்தை விட ஆன்மீகப் பண்புகளே தெள்ளத்தெளிவாகக் காட்டப்பட்டுள்ளன என்பது தேவேந்திர இனது கருத்தாகும்.

இலங்கையில் கி.பி. 2-4 ஆம் நூற்றாண்டுகளில் (கி.பி.100-300) ஆக்கப்பட்ட சகல அமர்ந்தநிலைப் புத்தர் சிலைகளிலும் தியான முத்திரையும் வீராசன முறையும் பயன்படுத்தப்பட்டுள்ளமையால், முதலிரண்டு நூற்றாண்டுகளிலும் ஆக்கப்பட்ட எல்லாச் சிலைகளிலும் சீல, சமாதி, பிரக்ஞை ஆகிய புத்தரின் பண்புகளை வெளிக்காட்ட முயற்சி செய்யப்பட்டுள்ளது என விஜேசேகர கூறுகிறார். இவ்வாறான பண்புகளைக் கொண்ட முதலாவது அமர்ந்தநிலைப் புத்தர்சிலைக்கான உதாரணமாக, அபயகிரி ஆசன கர (கி.பி. 2-3 ஆம் நூற்றாண்டுகள்), மற்றும் அனுராதபுர தூபாராமய அருகே கண்டுபிடிக்கப்பட்ட சிலைகளைக் குறிப்பிடலாம். இச்சிலைகள் கி.பி. 2-3 நூற்றாண்டுகளுக்குரியவை.

கி.பி. 5ஆம், 6ஆம் நூற்றாண்டுகளுக்கு (கி.பி. 400-500) இடைப்பட்ட காலமளவில் இலங்கையில் பெரிதும் விருத்தியடைந்த அமர்ந்தநிலைப் புத்தர்சிலைகள் பெருமளவில் உருவாக்கப்பட்டிருந்தன. அனுராதபுர தொல்பொருளியல் அரும்பொருட்காட்சியகத்தில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தர்சிலைகள் அதற்குச் சான்றாக உள்ளன. இக்காலத்தைச் சேர்ந்த புத்தர்சிலைகளுள் மகமெவுனாபூங்காச் சமாதி, பூவரசங்குளம் மற்றும் அபயகிரி விகாரை அமர்ந்த புத்தர் சிலைகள் பெரிதும் கவனத்துக் குள்ளாகிறது. தியான முத்திரை, வீராசன முறையில் அமர்ந்திருத்தல், உயரம் குறைவான கழுத்து, சற்றுக் கொழுத்த முகம், வட்டவடிவத் தோள்கள் மெல்லிய இடுப்பு, குறுகிய குடுமி, மடிப்புகளற்ற அல்லது மிக மெல்லிய மடிப்புக்கொண்ட காவியுடை புற அலங்கரிப்புக்கள் அற்ற அடக்கத்தன்மை, முகத்தில் சாத்வீக வெளிப்பாடு போன்றவை இப்புத்தர்சிலைகளில் காணப்படும் சிறப்பியல்புகளாகும். அவற்றுள் பெரும்பாலானவை இந்திய குப்தர் மரபுக்கேயுரிய பண்புகளாதலால் இச்சிலைகள் மீது அம்மரபு செல்வாக்குச் செலுத்தியுள்ளது எனக் கருதப்படுகின்றது. இவற்றுள் மகாமெவுனாப் பூங்காவில் உள்ள புத்தர் சிற்பம் மிக உயரிய பண்புகளைக் காட்டி நிற்கின்றது.

மகமெவுனாப் பூங்கா அமர்ந்த நிலைப் புத்தர் சிலை

அனுராதபுர அபயகிரி விகாரைத் தொகுதியைச் சேர்ந்த மகமெவுனா பூங்காவில் இரட்டைக் குளத்துக்குச் (கூட்டம் பொக்குணை) கிட்டடியதாக இந்த அமர்ந்தநிலைச் சிலை அமைந்துள்ளது. ஷோர்டர். ரோலன்ட் சில்வா, பிரேமதிலக்க ஆகியோர் எடுத்துக்காட்டியுள்ளதற்கிணங்க அதில் காணப்படும் சிலை நிர்மாணிப்புப் பண்புகளின்படி அது 5-6 ஆம் நூற்றாண்டுக் (கி.பி. 400-500 இற்கு இடைப்பட்ட) காலத்தைச் சேர்ந்ததாகும்.

ஒட்டுமொத்தச் சிலையினால் வெளிக்காட்டப்படும் சாந்தத் தன்மையுடன்கூடிய ஆழ்ந்த ஆன்மீக வெளிப்பாடு காரணமாக இது இலங்கையில் உருவாக்கப்பட்டுள்ளவற்றுள் தலை சிறந்த புத்தர்சிலையாகக் கருதப்படுகின்றது. முகத்தினால் காட்டப்படும் ஆழ்ந்த ஆன்மீக வெளிப்பாடு. குறுகிய குடுமி, வலஞ்சுழியான சுருள்கேசம் உடலின் வடிவத்தை எடுத்துக்காட்டும் மெல்லிய அலை வடிவிலான மடிப்புக்களைக்கொண்ட காவியுடை, உயரம் குறைவான கழுத்து போன் மரபுக்கேயுரித்தான பண்புகள் இச்சிலையில் தெளிவாககக் காணப்படுகின்றமையால் இது குப்தர் – மரபின் செல்வாக்கைப் பெற்றுள்ள ஒரு படைப்பாக்கமாகக் கருதப்படுகின்றது. கைகள் தியான முத்திரையில் வைக்கப்பட்டுள்ளதோடு, கால்கள் வீராசன முறையில் அமைந்துள்ளன. இச்சிலை 9 அடி 6 அங்குல உயரமானது. கருங்கல் ஊடகத்தில் முழுப்புடைப்பாகச் செதுக்கப்பட்டுள்ளது. முன்னர் இச்சிலையின் மீது மெல்லிய சுண்ணாம்புச் சாந்துப்படை இட்டு அதன் மீது வர்ணந்தீட்டப்பட்டிருந்தமைக் கான சான்றுகள் உள்ளன. உடைந்த நிலையில் காணப்பட்ட இச்சிலையின் மூக்கு அண்மைக்காலத்தில் திருத்தியமைக்கப்பட்டுள்ளது.

கி.பி. 7-8 ஆம் நூற்றாண்டுகளுக்கு (கி.பி. 600-700) இடைப்பட்ட காலமளவில் அமர்ந்த நிலைச் சிலைகளில் மேற்படி பண்புகளைவிட வேறுபட்ட பண்புகளைக் காணமுடிகின்றது. நீண்ட கழுத்து, நீள்வட்ட வடிவ முகம், புடைப்பற்ற தோள்கள், மெல்லிய இடை, நீண்ட கைகால்களுடன் அதாவது அழகிய உறுப்புக்களுடன் கூடிய உடல், மெல்லிய குடுமி போன்றவை அவ்வாறான சிறப்பியல்புகளாகும். இவ்வாறான பண்புகளைக்கொண்ட அமர்ந்தநிலைப் புத்தர் சிலைகள், தொழுவிலை, பன்குளியை, கோமாரிக்காவெலை, கபடகஸ்வெவை, வவுனிக்குளம். பூவரசங்குளம், திரப்பன்கடவளை, வளஸ்குணுவெவை ஆகிய பிரதேசங்களிலிருந்து கிடைத்துள்ளன. இவற்றுள், பன்குளியைச்சிலை, தொலுவிலைச்சிலை ஆகியன அவற்றின் சிறப்பான பண்புகள் காரணமாகத் தலை சிறந்தவையாக இனங்காணப்பட்டுள்ளன.

பங்குலிய புத்தர் சிலை

அனுராதபுரம் பன்குளியைப் பிரதேச, அசோக்காராமயாவில் இருந்து இச்சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டமையால் பன்குளியை அமர்ந்தநிலைச் சிலை என அழைக்கப்படுகின்றது. இது எக்காலத்தைச் சேர்ந்தது என்பது குறித்து பல்வேறு கருத்துக்கள் உள்ளன. அசோக்காராமயா சிலைமனையினுள் பிரவேசிக்கும் படிக்கட்டில் பல்லவ எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டின்படி இது கி.பி. 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகின்றது. இச்சிலை கி.பி. 7ஆம் நூற்றாண்டுக் குரியது என சோர்டன் குறிப்பிட்டுள்ளார்.

மேலே உயர்த்தி வைக்கப்பட்டுள்ள வலது கை அபய முத்திரையையும் இடது கை கடக ஹஸ்த முத்திரையையும் காட்டுகின்றன. கால்கள் வீராசன முறையில் அமைந்துள்ளன. ஊஷ்ணிசம் மீது சிரசணி காணப்பட்டமைக்கான அறிகுறிகள் உள்ளன. சுண்ணக்கல் சேர்ந்த ஒரு வகைப் பாறையினால் ஆக்கப்பட்டுள்ளமையால், சிலையில் பெரும்பாலான பண்புகள் தேய்வடைந் துள்ளன. தற்போது மீதியாக உள்ள பண்புகளின்படி கருணை, இரக்கம், பிரக்ஞை கலந்த ஆன்மீக வெளிப்பாட்டைக் கொண்டிருந்தமைக்கும் கண்களாக இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்டிருந்தமைக்கும் சான்றுகள் எஞ்சிக் காணப்படுகின்றன. சிலையின் முன்பகுதியில் காவியுடையின் மடிப்புக்கள் தேய்ந்து போயுள்ளனவாயினும் சிலையின் பின் பகுதியில் சீரான, ஆழம் குறைவான மடிப்புக்கள் காணப்படுகின்றன. தொல்பொருளியல் திணைக்கள அறிக்கைகளின்படி, இச்சிலையின் உயரம் 6 அடி 9 அங்குலம் ஆகும்.

தெழுவிலை புத்தர்சிலை

அனுராதபுரம் தொழுவிலைப் பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டமையால் இது தொழுவிலைப் புத்தர் சிற்பம் எனப்படுகின்றது. இச்சிற்பம் இரண்டாம் காசியப்ப (கி.பி. 650-659) மன்னின் காலத்தை , அதாவது கி.பி. 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என பரணவித்தான தெரிவித்துள்ளார். அச்சிற்பம் முதன் முதலில் வைக்கப்பட்டிருந்த தொழுவிலை சிலைமனையில் அவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது என்பதை அவர் அதற்கான காரணமாக எடுத்துக் காட்டியுள்ளார். இது 7ஆம், 8ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தது என சோர்டர் குறிப்பிட்டுள்ளார்.

இச்சிலையின் நீள்வட்டவடிவான முகத்தில், தியானநிலை, கருணை, இரக்கம், சாந்தம் போன்ற பண்புகள் வெளிக்காட்டப்படுகின்றன. கைகள் தியான முத்திரையைக் காட்டுவதோடு கால்கள் வீராசன முறையில் அமைந்துள்ளன. உடலின் ஒரு புறத்தை மாத்திரம் மறைத்திருக்கும் ஆழமடிப்புக்கொண்ட காவியுடை உடலை ஊடுருவிக்காட்டும் வகையில் அமைந்துள்ளது. இது ஒருவகை மஞ்சள் நிறச் சலவைக் கல்லில் (Dolamite marble) செதுக்கப்பட்டுள்ளது. சிரசணி தெளிவாகப் பெரிதாக இடப்பட்டுள்ளது. கீழ்நோக்கிய கண்களுடன் மிகத் தளர்வான மெய்ந்நிலையுடன் அமர்ந்திருக்கும் நிலை காட்டப்பட்டுள்ளது. இது ஏறத்தாழ 1.76 மீற்றர் உயரமானது. தற்போது கொழும்பு தேசிய அரும்பொருட்காட்சிச்சாலையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

அனுராதபுரம் பிற்பட்ட காலம்

கி.பி. 8-9 ஆம் நூற்றாண்டு (கி.பி. 750-800) காலத்தில் முன்னைய காலத்தைவிட வேறுபட்ட இயல்புகளைக் கொண்ட புத்தர் சிற்பங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் பெரும்பாலான புத்தர்சிலைகள் வெண்கலத்தாலானவை. இடை, தோள்கள் உட்பட உடலுறுப்புக்கள் மெல்லியவை,

மிக மெல்லிய காவியுடை மடிப்புக்கள் மூலம் உடலின் வடிவம் ஊடுருவிக்காட்டப்பட்டிருத்தல், வலஞ்சுழியான ஆழமான சுருளிக் கேசச் சுருள்கள் இடப்பட்டிந்ததல், அரச இலை வடிவத்தில் உயரமான அழகான சிரசணி இடப்பட்டிருத்தல், கழுத்தின் மூன்று கோடுகளும் தெளிவாகக் காட்டப்பட்டிருத்தல், நேரான காதுச் சோணைகள் கழுத்திலிருந்து சற்று அப்பால் அமைந்திருத்தல், அமர்ந்த நிலைச் சிலைக்காக உயரமான பத்ம பீடம் அமைக்கப்பட்டிருத்தல் போன்றவை தெள்ளத்தெளிவான இயல்புகளாகும். குறிப்பாக வெகெரகலை அமர்ந்தநிலைப் புத்தர்சிலை ‘ இதற்காக எடுத்துக்காட்டத்தக்க முக்கியமான ஓர் உதாரணமாகும். இது தவிர, இச்சிற்பத்தின் பண்புகளைக் கொண்ட, எனினும் சிரசணியோ ஊஷ்ணிசவோ அற்றவையாக ஆக்கப்பட்ட புத்தர்சிற்பங்களும் இக்காலப்பகுதியில் உருவாக்கப்பட்டுள்ளன. அபயகிரியாவில் கண்டுபிடிக்கப்பட்ட வெண்கலப் புத்தர் சிலை இக்காலப் பகுதியைச் சேர்ந்த புத்தர் சிலைகளுக்கான மற்றுமோர் உதாரணமாகும்.

வெகெரகலை புத்தர்சிலை கி.பி. 9-10 நூற்றாண்டு

கி.பி. 10 ஆம் நூற்றாண்டளவில் (கி.பி. 900) அனுராதபுரக் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட உயரிய பண்புகளைக்கொண்ட புத்தர்சிலைகளுக்குப் பதிலாக வெவ்வேறு மாற்றங்களைக்கொண்ட குறிப்பிடத்தக்க அளவு சிறப்புப் பண்புகளற்ற சிலைகள் உருவாக்கப்பட்டன. அப்புத்தர்சிலைகளில் உடலின் அழகுசார்ந்த பண்புகள் கிடையாது. அச்சிலைகள் சற்றுக்கொழுத்த தன்மை கொண்டவை. உயரம் குறைவான கழுத்து, சற்றுக்கொழுத்த முகம் ஆகியவை அவற்றில் தெள்ளத்தெளிவாகக் காணப்படும் இயல்புகளாகும். பெரும்பாலான சிலைகளில் மடிப்புகளற்ற காவியுடை காணப்படுவதோடு அது உடலை ஊடுருவிக்காட்டுவதில்லை. உயரமான சிரசணி ஒரு முக்கிய பண்பாகும். முகத்தில் பாவ வெளிப்பாடு காணப்படுவதில்லை. இவ்வாறான பண்புகளைக் கொண்ட புத்தர் சிலைகள் திரியாலைய, உடட்டாபொலை, வீரகலை ஆகிய இடங்களிலிருந்து கிடைத்துள்ளன.

தந்திரிமலை

தந்திரிமலைப் புத்தர் சிற்பங்களும் இக்காலப்பகுதியைச் சேர்ந்தவையாயினும் அவற்றின் சிற்பப் பண்புகள் ஓரளவுக்குப் பொலனறுவைக் கல்விகாரைச் சிற்பங்களை ஒத்ததன்மையைக் கொண்டுள்ளன. சிப்பியோட்டு வடிவமுள்ள தலைமுடிச் சுருள்கள், முகத்தின் பாவ வெளிப்பாடும் வடிவமும், ஒளிவட்டம், சிலையின் பின்னால் கல் தளத்தில் உள்ள செதுக்கல் வேலைப்பாடுகள், பயன்படுத்தப்பட்டுள்ள நுட்பமுறைகள் போன்றவை இதற்கான உதாரணங்களாகும்.

அனுராதபுரக் காலத்தைச் சேர்ந்த நின்றநிலை புத்தர் சிற்பங்களும்
அவற்றின் பண்புகளும்

இலங்கையில் நின்ற நிலைப் புத்தர்சிலை நிர்மாணிப்புக்கள் இந்திய அமராவதி மரபின் நேரடிச் செல்வாக்கைப் பெற்றுள்ளன என்பது பெரும்பாலான ஆய்வாளர்களின் கருத்தாகும். சோர்டன். விஜேசேக்கர, பரணவித்தான ஆகிய விற்பன்னர்களின் கருத்து, அமராவதி தேசத்திலிருந்து முதலாவது நின்றநிலைப் புத்தர் சிற்பம் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டிருக்கலாம் என்பதும் இலங்கையில் நின்ற நிலைப் புத்தர் சிலை நிர்மாணிப்புகளுக்கு அமராவதி மரபின் செல்வாக்கு முற்று முழுதாகக் கிடைத்துள்ளது என்பதுமாகும்.

குறிப்பாக, அமராவதி தேசத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட, பிதுரங்கலை விகாரையி லிருந்து அனுராதபுர போதி விருட்சத்துக்கு அண்மையில் இருந்தும் கிடைத்த புத்தர் உருவங்கள் உள்ள செதுக்கல் வேலைப்பாடுகளை நோக்குமிடத்து அமராவதி புத்தர் சிலைகளுக்கேயுரிய இயல்புகள், இலங்கையின் நின்ற நிலைப் புத்தர்சிலைகள் மீதும் செல்வாக்குச் செலுத்தியுள்ளது என்பது தெளிவாகின்றது.

இப்படைப்பாக்கப் பண்புகளின்படி இலங்கையின் சகல நின்றநிலைப் புத்தர்சிற்பங்களிலும் உடலின் மேற்பகுதியில் ஒரு பக்கமாக மாத்திரம் காவியுடை இடப்பட்டுள்ளது. இடது தோளிலிருந்து வீழும் தடித்த காவியுடைப்பகுதி முழங்கையின் வழியே இரு பாதங்கள் வரையிலும் செல்லும் வண்ணம் இடப்பட்டுள்ளது. மேலும் காவியுடையின் அந்தத்தில் இரண்டு பாதங்களுக்கும் அண்மையில் கிடையாக ஏறத்தாழ 6 அங்குல அகலமான காவியுடைக் கரை இடப்பட்டிருப்பதும் ஓர் அத்தியாவசியமான அம்சமாகும். குவிவாகவும் மற்றும் குழிவாகவும் அழகிய காவியுடை மடிப்புக்கள் இடப்பட்டுள்ளன. எனினும் அவற்றின் ஊடாக உடலின் வடிவம் ஊடுருவிக் காட்டப்படவில்லை . உடலின் வடிவம் அழகூட்டப்படவில்லை; உடல் சற்றுக்கொழுத்த தன்மையுடையதாகக் காட்டப்பட்டுள்ளது. பெரும்பாலான புத்தர் சிலைகளில் வலது கை அபய முத்திரையைக் காட்டி நிற்கின்றது. இடது கை இடது தோளின் மீது வைக்கப்பட்டுள்ளது. முகம் சற்று வட்டவடிவானது. அதில் கருணையும் இரக்கமும் சார்ந்த ஆன்மீக வெளிப்பாட்டுத்தன்மையைக் காண முடிகின்றது. மிக மெல்லிய தலைமுடிச் சுருளிகளும் சிறிய குடுமியும் காட்டப்பட்டுள்ளன. மேலும் புத்தர்சிலையின் பீடம் அலங்காரங்களற்றது. உயரமும் குறைவானது, இது இந்திய அமராவதி நின்ற நிலைப் புத்தர்சிற்பங்களின் தனிச்சிறப்புக்களுள் ஒன்றாகும். இலங்கையின் நின்றநிலைப் புத்தர் சிற்பங்கள், அமராவதி மரபின் செல்வாக்கைப் பெற்று நிர்மாணிக்கப்பட்டவையாகும் எனக் கருதலாம். அவ்வாறான பண்புகளை, இலங்கையில் கிடைத்துள்ள ஆரம்பகால நின்ற நிலைச் சிற்பங்களில் பெரும்பாலாகக் காணலாம். அவ்வாறான இயல்புகளைக் கொண்ட இக்காலப்பகுதிக்குரிய ஏறத்தாழ நூறு நின்றநிலைச் சிற்பங்களின் பகுதிகள் அனுராதபுர அரும்பொருட்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. அவை இக்கருத்துக்குச் சான்றாக அமைகின்றன.

அதற்கமைய, அனுராாதபுரக் காலத்தைச் சேர்ந்த கூடவே இலங்கையின் மிக பழைமை வாய்ந்த நின்ற நிலைப் புத்தர் சிற்பங்கள், கி.பி. 3ஆம், 4 ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தவையாகக் கருதப்படுகின்றன. மகா இலுப்பள்ளமை, வவுனிக்குளம், கொக்அபே, கடிகலை நின்ற நிலைப் புத்தர்சிலைகள் அந்நூற்றாண்டுகளைச் சேர்ந்த பெரிதும் கவனத்திற்கு உள்ளான புத்தர் சிலைகளாகக் கருதப்படுகின்றன. இவற்றுள் மகா இலுப்பள்ளமை நின்றநிலைப் புத்தர் சிற்பம் தனிச்சிறப்பிடம் பெறுகின்றது.

மகா இலுப்பல்லம நின்ற நிலை சிலை

மகா இலுப்பள்ளமை நின்றநிலைப் புத்தர்சிற்பம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்க இடமுண்டு எனப் பரணவித்தான கூறியுள்ளார். எனினும் அது 3ஆம் , 4ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தது என சோர்டர் கூறியுள்ளார். அனுராதபுர மகா இலுப்பள்ளமைப் பண்ணை வளாகத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட இச்சிலையைச் செதுக்குவதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ள விசேட பாறை வகை காரணமாக இது தொடர்பாகப் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. சோர்டர், பரணவிதான, விஜேசேக்கர ஆகியோர் இச்சிலை அமராவதி பிரதேசத்திலிருந்து இங்கு கொண்டு வரப்பட்ட ஒன்றாகும் எனக் கூறியுள்ளனர். உடல் மேற்பகுதியில் ஒரு புறத்தை மாத்திரம் மறைத்திருக்கும் காவியுடை, காவியுடையின் அந்தத்தில் அகன்ற கரை, இடது கையின் வழியே கீழ்நோக்கி வீழும் காவியுடைப் பகுதி அழகாக, வலது பாதம் வரையில் இடப்பட்டிருத்தல், சற்றுக் கொழுத்த எனினும் உடலின் தன்மை வெளிக்காட்டப்படாத உடல், வலது உள்ளங்கை முற்றுமுழுதாக முன்னோக்கியிருக்கு மாறு காட்டப்பட்டுள்ள அபய முத்திரை, இடது கை இடது தோளின் மீது வைக்கப்பட்டிருத்தல், சுருள் தலைமயிர் போன்றவை காணப்படுவதால் இச்சிலையின் பண்புகள் முற்றுமுழுதாக இந்திய அமராவதி மரபை நினைவூட்டுவதாக உள்ளது.

மிக நுணுக்கமான அலை மடிப்புக்களைக்கொண்ட காவியுடை காணப்பட்ட போதிலும் அதனூடாக உடலின் வடிவம் ஊடுருவிக்காட்டப்படவில்லை . உடலின் வடிவத்தை வெற்றிகரமாக எடுத்துக்காட்ட முயற்சி செய்யப்படவில்லை . பாதி மூடிய கண்கள் மற்றும் சற்று வட்டவடிவமான நீள்வட்ட வடிவ முகத்தினால் தியான நிலையும் கருணை, இரக்கம் ஆகிய பண்புகளும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. ஏறத்தாழ 6 அடி உயரமான இச்சிலை சற்றுக் கொழுத்த தன்மையுடையது.

இக்காலப் பகுதியைச் சேர்ந்த பெரும்பாலான நின்ற நிலைப் புத்தர் சிற்பங்களில் வலது உள்ளங்கை முற்றுமுழுதாக முன்னே தெரியுமாறு அபய முத்திரையைக் காட்டி நிற்பதும் இடது கை இடது தோளின் மீது வைக்கப்பட்டிருப்பதும் சிறப்பான தன்மைகளாகும். எனினும் பரதுக்க முத்திரையைக் காட்டும் இரண்டு புத்தர்சிலைகள் தோரகல இலிருந்தும் யட்டாள தாதுகோபத்தில் இருந்தும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கி.பி. 5, 6 மற்றும் 8 ஆம் நூற்றாண்டுகளுக்கு (கி.பி. 400-700 இற்கு) இடைப்பட்ட காலத்தில் புத்தர்சிலையில் தெள்ளத்தெளிவாக பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. சாதாரண அளவுள்ள புத்தர் சிலைகளுக்கு மேலாக பாரிய புத்தர் சிலைக்களின் நிர்மாணிப்பும் இக்காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காவியுடையின் அலைமடிப்புக்கள் மிக அழகாகக் காட்டப்பட்டுள்ளன. அம்மெல்லிய காவியுடை மடிப்புக்களின் ஊடாக உடலின் வடிவம் ஊடுருவிக் காட்டப்பட்டுள்ளது. இடை, மார்பு, தொடைகள், ஆகிய உறுப்புக்களோடு, உள்ளாடையும் தெளிவாக ஊடுருவிக் காட்டப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் மிகக் கனதியாகக் காட்டப்பட்டிருந்த காவியுடை பிற்காலத்தில் இலேசாகக் காட்டப்பட்டிருப்பதைக் காணமுடிகின்றது. மேலும் சிலைகளில் அபய முத்திரையைக் காட்டுவதில் செய்யப்பட்டுள்ள வேறுபாடும் மற்றுமாரு விசேட அம்சமாகும். இதுவரையில் வலது கை உள்ளங்கை முற்றுமுழுதாக முன்னே தெரியுமாறு காட்டப்பட்ட அபய முத்திரைகளுக்குப் பதிலாக அபய முத்திரையைக் காட்டும் வலது உள்ளங்கையை இடது கையின்பால் திருப்பி வைத்திருக்கும் வகையில் காட்டுவது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மேற்படி இயல்புகளைக்கொண்ட கி.பி. 400-700 இற்கு இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த புத்தர் சிலைகளை அனுராதபுர சஸ்ஸேருவை, மாளிகாவிலை, ருவான்வெலிசாயா, மெதரிகிரியை, பபலுவெகாரை, புதுருவகலை, மாணிக்விகாரை போன்ற இடங்களில் காணலாம். வெகெரகலை நின்றநிலைச் சிலையை இதற்கான ஒரு முக்கிய உதாரணமாகக் குறிப்பிடலாம். அத்தோடு சிலைகளுக்குரிய இதே பண்புகளுடன் எனினும் சிரசணியோ குடுமியோ அற்ற புத்தர் சிலைகளும் இக்காலப்பகுதியில் ஆக்கப்பட்டுள்ளன.

மாளிகாவிலை
சஸ்ஸேருவை

இக்காலப்பகுதியில் சில சிற்பங்களில் வலது கையினால் காட்டப்படும் அபய முத்திரையானது அதன் விரல்கள் சற்று மடித்த நிலையிலும் கை உடலிலிருந்து சற்று அப்பால் இருக்குமாறும் அமைந்துள்ளது. வெஹெரகல சிரிசங்கபோ விகாரையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட புத்தர் சிற்பமும் வெல்கம் விகாரைப் புத்தர் சிற்பமும் அவ்வாறாக அமைக்கப்பட்ட இரு சிற்பங்களாகும்.

புதுருவகலை

கி.பி. 700-800 இற்கு இடைப்பட்ட காலத்தில் இனங்காணத்தக்க மற்றுமொரு விசேட பண்பு, பாரிய சிலை மனைகளிலுள்ளே அருகருகே மூன்று புத்தர் சிலைகளைத் தாபித்தல் ஆகும். அவ்வாறான சிலைமனைகளை மெதிரிகிரிய, பபலு விகாரை, புதுருவகலை, மெனிக் விகாரை அகிய இடங்களில் காணலாம். இவ்வாறாக அருகருகே மூன்று புத்தர்சிலைகள் தாபிக்கப்பட்டுள்ளமை தொடர்டபாக சோர்டர் இரண்டு கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். இவை தேரவாதத்தினரின் முக்காலப் புத்தர்களான காசியப்ப (முற்கால), சாக்கிய முனி (தற்கால), மைத்திரி (எதிர்கால) ஆகிய மூன்று புத்தர்களைக் குறித்து நிற்கின்றன என்பது அவற்றுள் ஒரு கருத்தாகும். மகாயானத்தினரின் மூவுடல்களான தர்ம உடல் (தர்ம காய), சம்போகி உடல் (சம்போக காய), படைப்பு உடல் (நிர்மாண காய ) அகியவற்றைக் குறிக்கின்றன என்பது மற்றைய கருத்தாகும்.

அவுக்கன புத்தர் சிலை

அனுராதபுரக் காலத்தில் உருவாக்கப்பட்ட தலைசிறந்த நின்ற நிலைப் புத்தர் சிற்பமாகிய அவுக்கனைப் புத்தர் சிற்பம் படைக்கப்பட்ட காலப்பகுதி தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. பரணவித்தான மற்றும் வண. கம்புறுப்பிட்டியே வனரதன ஆகியோரின் கருத்து, சூலவம்சம் எனும் நூலின்படி, இது தாதுசேன மன்னனின் ஆட்சிக்காலமாகிய கி.பி. 455-473 இற்கு இடைப்பட்டது. அதாவது, கி.பி. 5ஆம் நூற்றாண்டுக்கு உரியது என்பதாகும். சோர்டர், நந்தன. சூட்வோங்க்ஸ், ரோலன்ட் சில்வா, பிரேமதிலக்க, சச்திரா விக்கிரமே ஆகியோர் இது கி.பி. 8-9 ஆம் நூற்றாண்டுக்குரியது எனக் குறிப்பிட்டள்ளனர். எனவே இது கி.பி. 500 இற்கும் 700 இற்கும் இடைப்பட்ட காலத்துக்குரியது எனக் கருதுவதே பொருத்தமானதாகும்.

இச்சிலை 36 அடி 10 அங்குல உயரமானது. இச்சிலையின் மூலம் புத்தர் பெருமானின் மகாபுருட இலட்சணங்களையும் பத்துப் பெரும் சக்திகளையும் காட்டுவதற்கு முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இது ‘நவதாள’ (ஒன்பது தாள) முறையில் உருவாக்கப்பட்டிருத்தலும் ஒரு சிறப்பாகும். புத்தர் பெருமானின் மகாபுருட இலட்சணங்கள் 32 இல் பரிபூரணமான உடல், பொலிவான புயங்கள். பொலிவான உள்ளங்கைகள், பொலிவான தோள்கள், வலஞ்சுழியான தலைமயிர்ச் சுருள்கள், நேரிய காதுச் சோணைகள், சிரசணி, மிக நுணுக்கமான குடுமி ஆகியன இச்சிலையில் காட்டப்பட்டுள்ளன. மேலும் சிற்பக்கலைப் பண்புகளின் படி இது அமராவதி மரபைச் சேர்ந்ததாகக் கருதப்படுகின்றது. அதற்கமைய காவவியுடை மடிப்புக்கள் மிக அழகாக லலிதத்துடன் காட்டப்பட்டுள்ளன. சீரான, ஆழமம் குறைவான காவியுடை மடிப்புக்களின் ஊடாக உடலின் வடிவம் ஊடுருவிக் காட்டப்பட்டுள்ளது. இடுப்பு, நெஞ்சு, தொடைகள், காவியுடைக்குக் கீழே அணிந்துள்ள ஆடை ஆகியனவும் ஊடுருவிக் காட்டப்பட்டுள்ளன.

இயல்பான கருங்கற்பாறையொன்றில் அதிபுடைப்பு முறையில் செதுக்கப்பட்டுள்ள இச்சிலை பத்ம (தாமரைப்) பீடமொன்றின்மீது பாதங்கள் இரண்டு மீதும் உடலின் நிறை சமமாகத் தாங்கப்படும் வகையில் உடல் நேராக அமையுமாறு (சமபங்க உடல்நிலையில்) உருவாக்கப்பட்டுள்ளது. வலது கையினால் அபய முத்திரை காட்டப்பட்டுள்ளது. இடது கையினால் இடது தோளின்மீது இருக்கும் காவியுடை பிடிக்கப்பட்டுள்ளது. அது ‘கடக ஹஸ்த” (கடகக் கை) முத்திரையைக் காட்டுகின்றது என்பது சந்திரா விக்கரமகே இனது கருத்தாகும். பாதங்களின் கீழ் அமையுமாறு தாமரை இதழ்களாலான பீடம் அமைந்துள்ளது.

error: Content is protected !!