அஜந்தா ஓவியங்கள்
- இந்தியாவில் வடமேற்கில், மகாரஷ்ட்ரப் பிராந்தியத்தில் ஐதராபாத்தில் வகோரா ஆற்று எல்லையில் பரியிலாட வடிவமுள்ள உயரமான ஒரு குன்றில் அஜந்தாக் குகைத் தொடர் அமைந்துள்ளது.
- அஜந்தா குகைகள் 29 உள்ளன. குகைப் படைப்புக்கள் அக்காலத்தைச் சேர்ந்த படைப்புக்கள் அல்லவென்பதும் அவை கி.மு. 2 ஆம் நூற்றாண்டு தொடக்கம் கி.பி. 7 ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தைச் சேர்ந்தவை என்பதும் ஆய்வாளர்களின் கருத்தாகும்.
- கட்டடக் கலைத்துறைக்கு அமைய, அஜந்தா குகைகளை இரண்டு பகுதிகளாக வகைப்படுத்தலாம்.
- சைத்திய மண்டபங்கள்
- ஆச்சிரம மண்டபங்கள்
- இக்குகைகளினுள்ளேயே சுவரோவியங்கள் பெரிதும் காணப்படுகின்றன.
- புத்தரின் சரிதை , ஜாதகக் கதைகள், வரலாற்றுச் சம்பவங்கள் போன்றவையே அஜந்தா ஓவியங்களின் விடயப் பொருள்களாக அமைந்துள்ளன.
அப்சரா உருவங்கள்
- இல. 17 குகையில் காணப்படும் “அப்சரா” வடிவம் அஜந்தா சித்திரங்களிடையே மிகச் சிறந்த சித்திரமாகும்.
- இந்த ஓவியங்கள் சீகிரி அப்சரா உருவங்களை ஒத்த தன்மையைக் கொண்டது என்பது ஆய்வாளரின் கருத்தாகும்.
- சிகிரியா ஓவியங்கள் போன்ற நீண்ட கண்கள், புன்சிரிப்பு, காதணி, கழுத்தணி போன்றவை அப்சரா உருவங்களின் அழகை மேம்படுத்தியுள்ளன.
- இந்த ஓவியங்கள் உலர் சாந்தின் மீது பிரெஸ்கோ சிக்கோ டெம்பரா நுட்பமுறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
- களி, சாணம், உமி, வைக்கோல், விலங்குகளின் தடித்த உரோமங்கள், பிசின் போன்ற வற்றைச் சேர்த்து அரைத்துத் தயாரித்த சாந்தை மெழுகுவதன் மூலம் சுவர்ப்பரப்பு தயார்ப்படுத்தப்பட்டுள்ளது. பின்னர் அதன் மீது வெண்ணிறக் களி (மக்குலுக்களி)யைக் கரைத்துப் பூசி உலரவிட்டு, அதன் மேற்பரப்பின் மீதே ஓவியம் வரைவது ஆரம்பிக்கப்பட் டுள்ளது.
அஜந்தா ஓவியங்களில் காணப்படும் கலைப்பாணிச் சிறப்பியல்புகள் :
- சந்தர்ப்பங்களுக்கு அமைய சமயோசிதமான உணர்வு வெளிப்பாடும் சம்பவத்துக்கு ஒப்பான வகையில் நாடகப்பாங்கில் சந்தர்ப்பங்களைக் காட்டுதலும்.
- மனித உருவங்கள், விலங்கு உருவங்களைப் படைக்கும்போது அவற்றி அசைவு, அளவுத்திட்டம், உயிரோட்டமான தன்மை ஆகியன வெளிப்படுத்தப்பட்டிருத்தல்.
- தொடர்ச்சியான கதை கூறல் முறையில் ஆரம்பம், மத்தி, இறுதி என கதை முன்வைக்கப் பட்டிருத்தல்.
- இயற்கைச்சூழல், நீர்வீழ்ச்சி, மரஞ்செடி கொடிகள் மற்றும் வன விலங்குகளை உள்ளடக்கி அழகாகப் படைக்கப்பட்டிருத்தல்.
- குகைவிதானம், பூங்கொடி வேலைப்பாடுகள் மற்றும் யானை உருவங்கள், மனித உருவங்கள், பறவை உருவங்களின் சேர்மானத்திலான படைப்பாக்கக் கோல அலங்கரிப்புக்கள் மூலம் அழகுப்படுத்தப்பட்டுள்ளது.
- கரும்மண் நிறத்தினால் கோட்டுப் படமாக வரைந்து பின்னர் நிறந்தீட்டப்பட்டிருத்தல்.
- ஓவியங்களுக்கு நிறந் தீட்டுவதற்காக சிவப்பு, மஞ்சள், நீலம், கறுப்பு, பச்சை போன்ற நிறங்கள் பயன்படுத்தப்பட்டிருத்தல். க
- ருப்பொருளை முனைப்புறுத்திக் காட்டுவதற்காக இருண்ட நிறங்களும் பிரகாசமான நிறங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
பத்மபாணி போதிசத்துவர் உருவம்
- அஜந்தா ஓவியங்களுள் 1 ஆம் இலக்கக் குகையில் காணப்படும் பத்மபாணி போதி சத்துவர் உருவமே மிகச் சிறந்த படைப்பாகக் கருதப்படுகின்றது.
- இங்கு சித்தார்த்த குமாரனுடன் இடது புறத்தே யசோதரா தேவியும் காட்டப்பட்டுள்ளன என்பது ஆய்வாளரின் கருத்தாகும். உருவில் உள்ள ஏனையோர் வானில் வீணை இசைக்கும் தெய்வங்களாகும் எனத் தெரிகின்றது. மரங்களின் மேலே சில குரங்குகளும் காட்டப்பட்டுள்ளன.
- மனித உருவத்தை விட பெரியதாகக் காட்டப்பட்டுள்ள போதிசத்துவர் உரு மூவளைவு (திரிவங்க ) வடிவத்தைக் கொண்டது.
- புன்னகை புரியும் முகம், ஆழ்ந்த உணர்வு வெளிப்பாடு , ஆன்மீகப் பண்புகள், இளமை போன்ற இயல்புகள் இப்படைப்பினால் காட்டப்படுகின்றது.
- இங்கு போதிசத்துவர் வலது கையில் நீலோற்பல மலரொன்று தாங்கியுள்ளதோடு, அழகிய ஆடையணிகள் அணிந்துள்ளதாகக் காட்டப்பட்டுள்ளது.
- கழுத்தணி, கைவளையல்கள், நுணுக்கமான செதுக்கல் வேலைப்பாடுகளால் அலங்கரிக் கப்பட்டுள்ள நீளப்பாடான கிரீடம் (தலையணி) போன்ற அணிகலன்கள் சிறப்பானவை.
- பிரதான உருவமாகிய பத்மபாணி உருவம் பிரகாசமான மஞ்சள் நிறத்தினால் வெளிப் படுத்திக் காட்டப்பட்டுள்ளதோடு, ஏனைய பாத்திரங்கள், வடிவங்களும், இருண்ட நிறப் பின்னணியில் வெளிப்படுத்திக் காட்டப்பட்டுள்ளது.
- குப்தர் கலைத்துவப் பண்புகளைக் கொண்டது.
புத்தர் பெருமான் கிம்புள்வத்புரத்துக்கு வருகை தரல்
- கிம்புள்வத்புரத்தில் புத்தர் பெருமான் உணவு இரந்து செல்வதைக் காட்டும் ஓவியம் 17 ஆம் அஜந்தா குகையில் உள்ளது.
- தாமரை மலரின் மீது இருக்கும் புத்தர் பெருமானின் தலைக்கு மேல் ஆலவட்டம் தாங்கியிருக்கும் தெய்வமொன்று காட்டப்பட்டுள்ளது.
- மாளிகையில் இருந்தவாறு யசோதராதேவி, ராகுல் குமாரனுக்கு, அவனது தந்தையை அறிமுகம் செய்யும் விதம் இங்கு காட்டப்பட்டுள்ளது.
- புத்தர் பெருமானின் உருவம் பெரியதாகவும், ஏனைய உருவங்கள் சிறியவையாகவும் காட்டப்பட்டிருத்தலானது, புத்தர் பெருமானின் மேன்மையைக் காட்டுவதற்கான ஒரு முயற்சியாகும்.
- தூரநோக்கு தொடர்பான விசேட கவனஞ் செலுத்தி, இந்த ஓவியம் வரையப்பட்டுள்ளது எனக் கருதப்படுகிறது.
- குப்தர் கலைப் பண்புகளைக் கொண்டது.
பயிற்சி வினாக்கள்
1. அஜந்தாக் குகைத்தொடர் எங்கு காணப்படுகின்றது?
2. இங்கு காணப்படும் குகைகள் எத்தனை?
3. இவை எக்காலப்பகுதியைச் சேர்ந்தவை?
4. அஜந்தாக் குகைகளை எவ்வாறு வகைப்படுத்தலாம்?
5. அஜந்தாக் குகை ஓவியங்களின் கருப்பொருள்கள் எவை?
6. இங்கு 17ம் இலக்கக் குகையில் காணப்படும் ஓவியம் 2ஐ குறிப்பிடுக.
7. இங்கு 1ம் இலக்கக் குகையில் காணப்படும் ஓவியம் ஒன்றைக் குறிப்பிடுக.
கீழே தரப்பட்டுள்ள கலை ஆக்கத்தை இனங்கண்டு கீழே குறிப்பிடப்பட்டுள்ள உப தலைப்புகளுக்கேற்ப கருத்துள்ள வாக்கியங்கள் எழுதுக.
1. இனங்காண்க : ………………………………
2. காணப்படும் இடம் : ……………………
3. நுட்பமுறை : ………………………………….
4. கலை மரபு : ……………………………………
5. உருவ அமைப்பு : …………………………
1. இனங்காண்க : ………………………………
2. காணப்படும் இடம் : ……………………
3. நுட்பமுறை : …………………………………
4. வர்ணப்பயன்பாடு : …………………….
5. ஒழுங்கமைப்பு : …………………………..
6. கலைமரபு : …………………………………….
7. உணர்வு வெளிப்பாடு : ………………
1. இனங்காண்க : ………………………………
2. காணப்படும் இடம் : ……………………
3. கருப்பொருள் : ………………………………
4. ஒழுங்கமைப்பு : ……………………………
5. நுட்பமுறை : ………………………………….