ஹங்குராங்கெத்தை பொத்குல் விகாரை தாதுகோபம்

ஒரு வகைத் தாதுகோபக் கர்ப்பக்கிரகமாகிய வட்டதாகே இற்குப் பிற்பட்ட காலத்தில் பயன்படுத்தப் பட்ட தாதுகோபக் கர்ப்பக் கிரகம் களுதாகெய ஆகும். அளவில் சிறிய தாதுகோபங்களை நிர்மாணிப்பதே இது கொண்டுள்ள பண்பாகும். ரோலன்ட் சில்வா கூறுவதற்கிணங்க நிஸ்ஸங்கலதா மண்டபமும் ஒரு ‘களுதாகெய’ ஆகக் கருதப்படுகின்றது. (Thupa, Roland Silva. p. 97)

இந்த களுதாகே நிர்மாணிப்புக்கள் ஆரம்பக் காலங்களில் தந்ததாது காட்சிப்படுத்தும் சந்தர்ப்பங்களில் பயன்படுத்துவதற்காக அமைக்கப்பட்டன என ரோலன்ட் சில்வா எடுத்துக்காட்டுகிறார். (Thupa, Roland Silva, p. 98) தம்பதெனியா, புதுமத்தாவைப் போன்ற பல இடங்களில் ‘களுதாகே நிர்மாணிப்புக்கள் காணப்படுகின்றன. அரசியல் உறுதிப்பாடின்மை, பொருளாதாரப் பின்னடைவு ஆகியன காரணமாக, பெரிய தாதுகோபங்களுக்குப் பதிலாக சிறிய தாதுகோபங்கள் அமைப்பதில் முனைப்புக் காட்டப்பட்டமை இதற்கான மற்றுமொரு காரணமாகும் எனவும் அவர் எடுத்துக்காட்டுகின்றார். இந்தச் சிறிய தாதுகோபங்கள் தொடக்கத்தில் சதுர மேடையொன்றின் மீது நிர்மாணிக்கப்பட்டு, நான்கு தூண்களின் மீது கூரை அமைத்து ஆக்கப்பட்டவையாகும். அநுராதபுரக் காலத்தில் இறுதிப்பகுதி யாகும்போது இந்த சிறிய தாதுகோபங்கள் தாதுகோப மனையினுள் கொண்டுவரப்பட்டமைக்குச் சான்றுகள் உள்ளன. கண்டிக்காலத்தைச் சேர்ந்த தம்புள்ளை விகாரை, ரிதீ விகாரை ஆகியவற்றில் காணப்பட்ட தாதுகோபங்கள் உதாரணங்களாகும்.

தாதுகோப மனையுடன் இணைந்தாக அமைக்கப்பட்டுள்ள தாதுகோபங்களுள் சித்திரிப்பு மூலம் அழகுபடுத்தப்பட்டுள்ள ஒரு தாதுகோபமாக, ஹங்குராங்கெத்தை விகாரைத் தாதுகோபத்தைக் குறிப்பிடலாம். 24 அடி 5 அங்குல விட்டமும் கலசம் உட்பட 11 அடி 10 அங்குல உயரமுமுள்ள இது மிக அழகானதொரு சிறிய தாதுகோபமாகும். இந்தச் சிறிய தாதுகோபம் முற்றுமுழுதாக வடிவமைப்புக் கோலங்களால் சித்திரிக்கப்பட்டுள்ளது.

சதுரப் பீடமொன்றின் மீது சிறிய வட்டவடிவ மேடையொன்றுடன் மூன்று பேசா’ வளையங்கள் உள்ளன. அதன்மீது அமைந்துள்ள கர்ப்பத்தின் மீது சதுரக்கோட்ட, கலசந்தாங்கி, கலசம் ஆகிய சகல தாதுகோப அங்கங்களாலும் அழகுபடுத்தப்பட்டுள்ளது. இத்தாதுகோபம், வெள்ளை , சிவப்பு, மஞ்சள் ஆகிய வர்ணங்களைக்கொண்டு பல்வேறு இதழ்களாலும் கர்ப்பக்கிரகம் 7 நிரைகளால் அரச இலை போன்ற கோலங்களினாலும் சதுரக்கோட்டமும் கலசமும் மலர் அலங்கரிப்புக்கள் மூலமும் மேற்பரப்பின் தன்மைக்கேற்ப அழகுபடுத்தப்பட்டிருப்பதைக் காணலாம்.

error: Content is protected !!