வைத்தீஸ்வரன் சிவசுப்பிரமணியம் (ரமணி) (1942)

  • 1942 இல் யாழ்ப்பாணம், அளவெட்டியில் பிறந்த சிவசுப்பிரமணியம், 1961 இல் யாழ்ப்பாண ”விடுமுறைக் கால ஓவியக் கழகத்தில் ” அடிப்படை ஓவியக் கல்வி பெற்று, அரச கலைக் கல்லூரியில் ஓவியக் கலையில் உயர்கல்வி பயின்றார்.
  • அரச கலைக் கல்லூரியில் வரைதல், ஓவியம் தீட்டல் தொடர்பாக மேலும் பயின்று, பிற்காலத்தில் அழகியற்கல்விப் பிரதிப் பணிப்பாளர் பதவியையும் வகித்தார்.
  • இவர் ஓவியங்களை மட்டுமன்றி பல சிற்பங்களையும் வடித்துள்ளார்.
  • இயற்கைவாத பாணியுடன் நவீன நுட்ப முறைகளையும் கலந்து தமக்கே உரித்தான பாணியில் அவர் ஆக்கம் படைத்துள்ளார்.
  • ‘ராதா’ எனும் செய்தித்தாளுக்காக முதன் முதலாக விளக்கப்படமொன்றினைப் படைத்தார். பின்னர் பல தமிழ்ச் செய்தித்தாள்களுக்கும் சித்திரங்கள் படைத்துள்ளார்.
  • புத்தக அட்டை வடிவமைப்பில் புதிய சோதனைகளைச் செய்த அவர் தமிழ் புத்தகங் களுக்கு புத்தக அட்டையை வடிவமைத்தார். பின்னர் கல்வி அமைச்சின், கல்வி வெளியீட்டுத் திணைக்களப் பாடநூல்கள் உட்பட பல்வேறு நூல்களுக்கு அட்டைகளை வடிவமைத்துள்ளார்.
  • இவரது படைப்புக்கள் தமக்கே உரிய தனித்துவமான பாணியில் படைக்கப்பட்டுள்ளவை யாகும்.

நான்காந்தர தமிழ்மொழிப் பாடநூலொன்றுக்காக அவர் ஆக்கிய புத்தக அட்டை

‘பாட்டுத் திறத்தாலே’ எனும் நூலுக்கு அவர் ஆக்கிய அட்டை

பயிற்சி வினாக்கள்

1. புத்தக அட்டை மட்டுமன்றி சிற்பங்கள் செய்வதிலும் பிரசித்தி பெற்ற ஓவியர் யார்?
2. ஓவியர் வைத்தீஸ்வரன் சிவசுப்பிரமணியம் அவர்களின் ஓவியப் பாணி பற்றி குறிப்பிடுக?
3. ஓவியர் ரமணி முதன்முதலாக விளக்கப்படம் வரைந்த செய்தித்தாள் எது?
4. இவர் வடிவமைத்த புத்தக அட்டைகளுக்கு உதாரணம் தருக

error: Content is protected !!