சமயம் சாராத கட்டடங்கள் / அரச மாளிகைகள்

இலங்கையின் பண்டைய கட்டடங்களுள் சமயம் சாராத கட்டடங்கள் பற்றிய சான்றுகள் அரிதாகவே காணப்படுகின்றன. பதினோராம், பன்னிரண்டாம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த சமயம் சாராத கட்டடங்களுள் அரச மாளிகைகள் மற்றும் இராச மண்டபங்களாக நல்ல நிலையில் காணப்படும் கட்டடங்கள் எண்ணிக்கை சார்பளவில் உயர்வானது. இக்காலப்பகுதியைச் சேர்ந்த ஆறு அரச மாளிகைளின் இடிபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. அனுராதபுரத்தில் 1 ஆம் விஜயபாகு மன்னனால் கட்டுவிக்கப்பட்டதாகக் கருதப்படும் விஜயபாகு மாளிகை, பராக்கிரமபாகு மன்னன், பண்டுவஸ் நுவரையில் கட்டுவித்த பண்டுவஸ்நுவரை அரச மாளிகை, பாக்கிரமபாகு பொலனறுவையில் கட்டுவித்த அரச மாளிகை (வைஜயந்தி மாளிகை), பராக்கிரமபாகு மன்னன், பராக்கிரம சமுத்திரத்தில் கரையில் அமைந்த ஒரு தீவில் கட்டுவித்த குளு குளு மாளிகை . பொலனறுவையில் தோப்பாவெவைக் குளத்துக்கு அண்மையில் புதிய வாடிவீட்டுக்கு அருகே நிஸ்ஸங்கமல்ல மன்னனால் கட்டுவிக்கப்பட்ட அரச மாளிகை, பொலனறுவை மன்னர் காலத்தில் பராக்கிரமபாகு மன்னனுக்கு எதிராகப் போரிட்ட தக்ஷிண அரச பரம்பரைக்குரித்தான பலாகலபத்தை அரசமாளிகை ஆகியனவே அவையாகும்.

வைஜயந்தி மாளிகை (பராக்கிரமபாகு அரச மாளிகை)

ஏழு மாடி மாளிகை என வம்சக்கதைகளில் வர்ணிக்கப்படும் பொலனறுவை பராக்கிரமபாகு மன்னனின் மாளிகை, பொலனறுவையில் காணப்படும் சமயம் சாாராத கட்டடங்களுக்கான ஒரு சிறந்த உதாரணமாகும். மேலும் இலங்கை யின் பண்டைய இராசமாளிகை இடிபாடுகளுள் பராக்கிரமபாகு மன்னனின் அரச மாளிகையே சிறப்பிடம் பெறுகின்றது. பொலனறுவைப் புதிய நகரத்தில் அமைந்துள்ள இம்மாளிகை பராக்கிரம பாகு மன்னன் மாமன்னனாக இருந்த காலத்தில் செய்விக்கப்பட்டதாக சூலவம்சம் எனும் நூலில் விவரிக்கப்பட்டுள்ள மாளிகையேவைஜயந்தி

மாளிகையாகும் என இனங்காணப்பட்டுள்ளது. வைதிகத் தெய்வமாகிய இந்திரனின் பெயரைத் தழுவி, பராக்கிரமபாகு மன்னன் தனது மாளிகைக்கு வைஜயந்தி மாளிகை எனப் பெயரிட்டதாக சூலவம்சம் எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. சூல வம்சத்திற்கமைய இம்மாளிகை 1000 அறைகளைக் கொண்ட ஓர் ஏழுமாடிக் கட்டடமாகும்.

பராக்கிரமபாகு மன்னனின் அரசமாளிகை கல்லினாலும் செங்கல்லினாலும் நிர்மாணிக்கப்பட்ட ஒரு மாடிக்கட்டடமாகும். இது ஒரு பல்மாடிக் கட்டடம் என்பதை எஞ்சிக்காணப்படும் படிக்கட்டுகளைக் கொண்டு அனுமானிக்க முடிகிறது. தற்போதுகூட மூன்று மாடிகளின் எச்சப்பகுதிகளைக் காண முடிகின்றது, செங்கற் சுவர்களுக்கு வலுவூட்டுவதற்காக மரத்தூண்கள் ஆழ நடப்பட்டிருந்தன. மாளிகை நடுப்பகுதியில் சுவர்கள் ஏறத்தாழ 10 அடி உயரமானவை. மீதியாக உள்ள சில சுவர்கள் 30 அடி உயரமானவை. மண்டபத்தின் மிகப் பெரிய கூரையைத் தாங்குவதற்காக 36 தூண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பிரதான மண்டபம் தவிர்ந்தவிடத்து. மற்றைய அறைகளைச் சூழ இரண்டு, அல்லது மூன்று வரிசைகளிலமைந்த ஐம்பதுக்கு மேற்பட்ட சிறிய அறைகள் கீழ்மாடியில் அமைந்துள்ளன. ஒட்டுமொத்தக் கட்டடத்தின் அமைப்புப் பற்றிய விளக்கத்தைப் பெறுவது கடினமானது. எனினும், பிரதான மாளிகை உட்பட கட்டிடத் தொகுதியினுள் வெளிப்புற மதில், நிலத்திலமைந்த அறைகள், அரச மண்டபம், மகுள் மண்டபம், படிக்கட்டு வரிசையை உள்ளடக்கிய உள்மண்டபம் ஆகிய பகுதிகளைத் தற்போது காணப்படும் இடிபாடுகளுள் இனங்காண முடிகின்றது.

இந்த இடிபாடுகளுள், அமைச்சர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், ஊழியர்கள் போன்றோருக்காக அமைக்கப்பட்ட கட்டடங்களாகக் கருதத்தக்க மனைகளும் காணப்படுவதாக அனுமானிக்கப்படுகின்றது. இம்மாளிகையில் நாடக அரங்கு, சித்திரக்கூடம் போன்றவையும் காணப்பட்டதாக சூலவம்சம் எனும் நூல் கூறுகின்றது.

error: Content is protected !!