வின்சன்ட் வன்கோ (1853-90)

வின்சன்ட் வன்கோ நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஓர் ஓவியக் கலைஞர் மட்டுமன்றி, திட்டமிடற் கலைஞருமாவார். அவர் பிரான்சிலேயே ஓவியக் கலைஞராகச் செயற்பட்டார். அக்காலப் பகுதியில் ஓர் ஓவியக்கலைஞராக வன்கோ உருவாவதில் போல் செசான், போல் கொகான் ஆகியோரின் செல்வாக்கு காத்திரமானதாகும். வின்சன்ட் வங்கோ தமது ஓவியக்கலை மொழியைக் கட்டியெழுப்புவதற்காக மனப்பதிவு வாத ஓவியர்களின் வர்ணப்பயன்பாட்டுச் செறிவு. மற்றும் யப்பானிய அச்சுப் பதிப்புகள் ஆகியவற்றைப் பயன் படுத்தியுள்ளார்.

வின்சன்ட் வன்கோ புரட்டஸ்தாந்து கிறித்தவ சமயப் பின்னணியைக் கொண்ட ஒருவராவர். அவரது தந்தை புரட்டஸ்தாந்து கிறித்தவ தேவாலயத்தைச் சேர்ந்த ஒரு பாதிரியார் ஆவார். வங்கோவும் ஒரு பாதிரியாராக வரும் நோக்குடன் பயிற்சி பெற்ற போதிலும் பின்னர் அதனைக் கைவிட்டார். அதன் பின்னர் அவர் 1878 இல் பெல்ஜியம் நாட்டில் சுரங்கத் தொழிலாளருக்குச் சமய போதனை வழங்கியும் உரைகள் ஆற்றியும் கற்பித்தும் தாம் எதிர்பார்த்த உலகத்தைக் கட்டியெழுப்பிக்கொள்ள முடியாது என்பதை விளங்கிய அவர், இறுதியில் தாம் தேடும் உலகத்தை விளங்கிக்கொள்வதற்காகச் ஓவியக் கலையை நாடினர்.

கலைப்பாணியும் / கலைமரபும் கலைச் செல்வாக்கும்

வின்சன்ட் வன்கோ இனது கலைப்பாணி வெளிப்பாட்டுவாதப் பாணியாகும். அதாவது இயற்கையான வடிவங்களை திரிபுபடுத்தி வரையும் பாணியாகும். வர்ணங்களையும் வடிவங்களையும் திரிபுபடுத்தி சித்திரத்தின் ஆழம். இணக்கப்பாடு தொடர்பான மரபுரீதியான நம்பிக்கைகளைத் தகர்ப்பதன் மூலமே அவர் வெளிப்பாட்டு வாதப் பாணியைக் கட்டியெழுப்பியுள்ளார்.

வின்சன்ட் வன்கோ உள்ளடங்கும் அல்லது அவர் மீது செல்வாக்குச் செலுத்திய இரண்டு ஓவியக் கலை மரபுகள் உள்ளன. யதார்த்தவாதமும் மனப்பதிவுவாதமுமே அவையாகும். அதாவது யதார்த்தவாத கலைப்பிரயோகத்தில் அடங்கும் ”காண்பவற்றை வரைதல்” மற்றும் மனப்பதிவுவாதப் பிரயோகத்தில் அடங்கும் வர்ணங்களின் செறிவின் வழியே இயற்கை ஒளியின் வேறுபாடுகளைத் தேடியறிதல்” ஆகியனவாகும். அதற்கமைய குஸ்டச் குர்பே, குளோட் மோனே, அல்பிரட் சிஸ்லே போன்ற கலைஞர்களே வன்கோ இனது முன்னோடிகள் ஆவர். எனினும் வன்கோ, இந்த இரண்டு மரபுகள் மீதும் காலூன்றித் தமது உள் மன வெளிப்பாடுகளை எடுத்துக்காட்டும் நோக்குடன் மேற்படி இரண்டு மரபுகளினதும் கலை உத்திகளைப் பிரயோக ரீதியிலான வெளிப்பாடுகள் வரை இட்டுச் சென்றனர். |

விடயப் பொருளும் நுட்பமுறைகளும்

பிரதானமாக, நிலத்தோற்றக் காட்சிகள், வீட்டு உட்புறக்காட்சிகள். சுய உருவப்படம் ஆகியனவே. இவரது ஓவியங்களின் விடயப்பொருள்களாகும். கோதுமை வயல்வெளியும் சைப்பிரசு மரமும் , *நட்சத்திர இரவு, இராப்போசன சாலை. ஓவியனின் கூடம் போன்றவையும் அவரது சுய உருவப் படங்களும் இதற்கு உதாரணங்களாகும்

கன்வசு மீது தைல வர்ணந்தீட்டுவதே வின்சன்ட் வன்கோ இனது நுட்பமுறையாகும். எனினும் கியரொஸ்கியுரே மற்றும் சசுமோடோ போன்ற தொல்சீர் முறைகளை அவர் பயன்படுத்தவில்லை. வர்ணப்பயன்பாட்டில் அவரது முல முன்னோடி வெலாஸ்குவா ஆவார். எனினும் அவரது அண்மித்த முன்னொடி குளோட் மொனே ஆவார். கலப்பற்ற வர்ணத்தைத் தூரிகையிலெடுத்து வேகத்தை உணர்ந்தும் வகையில் கன்வசு மீது பூசுவதே அவரது வர்ணம் தீட்டும் முறையாகும்.

உருளைக்கிழங்கு புசிப்போர் (The potato Eaters)

Mincent antiers. The Purate later. INR5.oil en raasas Vincent van Gogh Foundation an Gogh Museum, Amsterdam

கன்வசு மீது தைல வர்ணத்தினால் தீட்டப்பட்டுள்ள இந்த ஓவியம் நெதர்லாந்து நாட்டில் அம்ஸ்டர்டாம் நகரில் வன்கோ அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த ஓவியத்தின் வர்ணந்தீட்டலில் தொல்சீர் தனி வர்ண, வர்ணக் கோலத்தையே காண முடிகின்றது. இந்த ஓவியத்தின் மூலம் மற்றொருவரின் துன்பம், துரதிஷ்டம் அல்லது அவதியுறல் தொடர்பான மனோரதியலாத வெளிப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது. எனினும் வர்ணங்களின் முக்கியத்துவத்தை வன்கோ விளங்கிய கால கட்டத்தில், பெரும்பாலான ஓவியங்களில் உள்ளக்கிடக்கைகளை வர்ணங்கள் மற்றும் தூரிகைகயைக் கையாள்வதன் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

மிக மங்கிய விளக்கொளியில் வீடோன்றினுள் ஐந்துபோர் உருளைக்கிழங்கு புசிக்கும் சந்தர்ப்பமே இந்த ஓவியத்தில் காட்டப்பட்டுள்ளது. அவர்களுள் நால்வரின் முகங்கள் தெரியும் வகையிலும் ஒருவரின் முதுகுப்புறம் தெரியும் வகையிலும் வரையப்பட்டுள்ளது. அழகிய ஒப்பமான முகங்களுக்குப் பதிலாக, கஷ்டமான சூழலில் உடலை வருத்தி வேலை செய்தோரின் விகாரமான களைத்துப்போன முகங்களே இந்த ஓவியத்தின் விடயப்பொருளாக அமைந்துள்ளது. இருள்மயமான சூழலானது அவர்களது துன்பகரமான வாழக்கையைக் குறித்து நிற்கின்றது.

நட்சத்திர இரவு (The starry night – 1889)

Vincent van Gogh, Surry ligir, IAN9, (ilm cumvas, MUSEUR of Maritrn Art, New York.

இந்த ஓவியம் கன்வசு மீது தைல வர்ணத்தினால் தீட்டப்பட்டுள்ளது. இந்த ஓவியத்தின் முன்னணியில் வளைந்து நெளிந்தும் மேல் நோக்கியும் பாயும் சைப்பிரசு மரமொன்று காட்டப்பட்டுள்ளது. இடையணியில் பள்ளத்தாக்கொன்றின் அமைந்துள்ள கிராமியச் சூழலும் அங்கு உள்ள புகைபோக்கியுடன்கூடிய வீடும் காட்டப்பட்டுள்ளது, தீவிரமாக நடந்துகொள்ளும் நட்சத்திரங்கள் நிரம்பிய வானம் பின்னணியில் காட்டப்பட்டுள்ளது. இந்த தீவிரத் தன்மையைக் காட்டும் வானம் நீல நிறமானது. முன்னணியும் இடையணியும் கூட நீலநிறமானவை. ஒரே இணக்கப்பாட்டுடன் முன்னணியில் உள்ள சைப்பிரசு மரமும் பின்னணியில் உள்ள வானமும் தீவிரத்துடன் அசைகின்றமை காட்டப்பட்டுள்ளது. பள்ளத்தாக்கில் உள்ள கிராமியப் பிரதேசம் இவை இரண்டுக்கும் இடைப்பட்டுக் காணப்படுகின்றது. வன்கோ இந்த ஓவியத்தைத் தனக்காகவே வரைந்தார் எனக் கூறலாம்.

தனது உள்ள மனத் துன்பங்களையே இந்த ஓவியத்தின் மூலம் வன்கோ வெளிப்படுத்தியுள்ளார். அதன் ஓவிய மொழி வெளிப்பாட்டுவாதமாகும். இயற்கையைத் திரிபுபடுத்தி உள்ளார்ந்த பாவ நிலைமைகளை வெளிப்படுத்தும் வகையிலான வெளிப்பாட்டுவாதக் கலைப்போக்கு இந்த ஓவியத்தில் அடங்கியுள்ளது.

வின்சன்ட் வன்கோ இனது கதிரையும் அவரது சுங்கானும் (Pipe)

வின்சன்ட் வன்கோ இனது ஓவியங்களுள் மிகவும் பிரசித்தி பெற்ற ஓவியமாக ”கதிரை” எனும் ஓவியத்தை இனங்காணலாம். கிறித்தவ சமயக் கருப்பொருள்கள் மற்றும் வரலாற்றுச் சம்பவங்களுடன் தொடர்புடையதாக மனிதர்களைக் காட்டுவதைத் தவிர்க்கும் இந்த ஓவியம் ஒருபோது குறியீட்டு ரீதியாகவும், மற்றொருபோது பெரிதும் வெளிப்பாட்டு வாதத்தன்மையுடனும் வரையப்பட்டுள்ளது. மறுமலர்ச்சிக்காலம் முதல் ஓவியக்கலையுடன் உள்ளுர இணைந்த தொல்சீர்க் கருப்பொருள்கள் மற்றும் தொல்சீர் வர்ணந்தீட்டலிலிருந்து விடுபட்டுள்ள இந்த ஓவியம், ஓவியரின் சுய ஆன்ம வெளிப்பாடாகும் எனக் கருதலாம். அதாவது இந்த ஓவியத்தை வன்கோ தொடர்பான குறியீட்டு ரீதியான உருவப்படங்களடங்கிய ஓர் ஆக்கமாக இனங்கண்டு கொள்ளலாம்.

ஒருபோது இந்த ஓவியம், கதிரை, அதன் மீது வைக்கப்பட்டுள்ள சுங்கான், புகையிலை, புகையிலை சுற்றும் கடதாசி ஆகியவற்றைக் காட்டி நிற்கின்றது. கீழிருந்து மேல் நோக்கிச் செல்லும் கோணத்தில் வரையப்பட்டுள்ளது. ஆரம்ப கால மறுமலர்ச்சிக் காலம் முதலே இருந்துவரும் காத்திரமான தூரதரிசன விதிகள் தொடர்பாக நம்பிக்கை வைக்கப்பட்டுள்ளது. வெப்ப மற்றும் குளிர் வர்ணங்கள மூலம் ஓவியம் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கூடவே கடுமையான ஓர் உஷ்ண வர்ணமாகிய மஞ்சள் நிறத்தைக் கொண்டு கதிரையை வர்ணந்தீட்டுவதன் மூலம் மீண்டும் ஓவியம் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது.

இந்த ஓவியம் அசையாது. நிலைத்த ஒரு பொருள் தொடர்பான ஓவியம் அல்ல. அதாவது இது வன்கோ இனது வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் குறியீட்டு ரீதியான ஓர் மெய்யுரு ஓவியமாகும். 1888 இல் வரையப்பட்ட இந்த கன்வசு மீது தைலவர்ணத்திலான ஓவியம், லண்டன் தேசிய கலைக்கூடத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!