வாகல்கடம்
- தாதுகோபத்துடன் இணைந்து அதன் நாற்றிசையிலும் அமைக்கப்பட்ட சிறப்புவாய்ந்த கட்டட நிர்மாணிப்பென இதனைக் குறிப்பிடலாம்.
- வாகல் கடம் “ஆயக்க”, “ஆயிக்க” எனும் பெயர்களாலும் அழைக்கப்படுகின்றன.
- வாகல்கடம் மூலம் தாதுகோபத்துக்கு வலிமை, அழகு என்பன தோற்றுவிக்கப்படுகின்றதெனக் கருதலாம்.
- தாதுகோபத்தின் நாற்றிசைகளிலும் மலராசனத்துடன் இணைந்து இது நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
- வாகல்கடத்தின் அடித்தளம் கல்லால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
- மேற்பகுதியில் காணப்படும் விமானங்கள் செங்கல்லினால் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
- கல்லால் அமைக்கப்பட்ட கீழ் பகுதியில் மணியுருக்கட்டு (பொரதம்) எனப்படும் பகுதிகள் பல உள்ளன.
- யானை, மகரம், முயலகன்கள், அன்னம் ஆகிய விலங்குருக்களால் இவை அலங்கரிக்கப்பட்டுள்ளன.
- செங்கல்லால் அமைக்கப்பட்ட சில வாகல் கடங்களில் மூன்று விமானங்கள் காணப்படுகின்றன.
- அவற்றுள் புத்தரின் உருவம், தெய்வ உருவம் என்பன வைக்கப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.
- வாகல் கடத்தின் இருபுறத்தில் விசித்தரமான செதுக்கல்களாலான கற்றூண்கள் காணப்படுகின்றன.
- இவை கல்பலதா, ஜீவன விருட்சம், சுயாதீனமான விலங்கு அலங்கராங்களைக் கொண்டுள்ளன.
- அக் கற்றூண்கள் மீது யானை, குதிரை, எருது, சிங்கம் எனும் உருவங்கள் உள்ளன. இவை நான்கு திசைகளையும் குறிப்பதாக நம்பப்படுகிறது.
- இந்திய சாஞ்சி தூபியில் வாகல்கடத்திற்கு பதிலாக தோரணவாயில் எனும் அமைப்பு காணப்படுகின்றது.
- பல காலங்களுக்குரிய உயர் பண்புகளைக் கொண்ட வாகல்கடங்கள்
அநுராதபுர காலம்
மிகிந்தலை கண்டக சைத்தியத்தின் வாகல்கடம்
பொலனறுவைக் காலம்
ரன்கொத் விகாரையின் வாகல்கடம்
பயிற்சி வினாக்கள்
தரப்பட்டுள்ள ஒளிப்படத்தை ஆதாரமாகக் கொண்டு 1 தொடக்கம் 5 வரை தரப்பட்டுள்ள வெற்றிடங்களை நிரப்புக.
1. இவ் ஒளிப்படத்தில் காணப்படும் வாகல்கடம் ………………… ……………………….சைத்தியத்தில் காணப்படுகின்றது.
2. இது ……………………… காலத்திற்குரிய வாகல்கடமாகும்.
3. வாகல்கடமானது ……………………. என்னும் மறுபெயராலும் அழைக்கப்படுகின்றது.
4. வாகல்கடத்தின் கல்லால் அமைக்கப்பட்ட கீழ்ப்பகுதி ……………………. என அழைக்கப்படும்.
5. இந்திய சாஞ்சி தூபியில் வாகல்கடத்திற்குப் பதிலாக ………………………… எனும் அமைப்புக் காணப்படுகின்றது.