வாகல்கட

அனுராதபுரக் காலத்தில் (கி.பி. முதலாம் நூற்றாண்டளவில்) இலங்கைத் தாதுகோபத்துடன் சேர்ந்த புதிய கட்டடக்கலை அங்கமாக வாகல்கட’ இனைக் குறிப்பிடலாம். தாதுகோபத்தின் ‘பேசா வளையல்களுக்கு அணித்தாக நான்கு திசைகளையும் நோக்கியவாறு அமைக்கப்பட்டுள்ள இந்த *வாகல்கட” அமைப்பு கல்லேடுகளில் ‘ஆயக்க’ எனவும் ‘மகாவம்சம்’ எனும் நூலில் ‘ஆதிமுக எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தாதுகோபத்தை மகா மேரு பருவதமாகக் கருதும்போது அதன் வாகல்கட இனை மகாமேரு பருவதத்தின் முகப்ப்பாகக் கொள்ளலாம் என கலை வரலாற்றாசியரான நேஜாமன் ரோலன்ட் குறிப்பிடுகிறார். எனினும் தாதுகோபங்கள் எல்லாவற்றிலுமே ‘வாகல்கட’ அமைப்புக்கள் உள்ளன எனக் கூறிவிட முடியாது. அனுராதபுரத்தில் ருவன்வெலி, மிரிசவட்டிய, அபகிரியில் ஜேத்தவன, மிகிந்தலை கண்டக்க, தீகவாவி, மாகம யட்டாள போன்ற பெரிய தாதுகோபங்களில் வாகல்கட அமைப்புக்கள் உள்ளன.

வாகல்கட நிர்மாணிப்பின்போது அதன் ஒட்டுமொத்த அகலத்தின் ஏறத்தாழ மூன்றில் ஒரு (13) பகுதியை உள்ளடக்கிய நடுப்பகுதி வெளிப்புடைப்பு போன்று அமைக்கப்பட்டுள்ளது. அனுராதபுரக் காலத்தில் வாகல்கட அமைக்கும்போது செதுக்கு வேலைப்பாடுகளைக் கொண்ட கீழ்ப்பகுதி சுண்ணாம்பு மற்றும் கல்லினாலும் மேற்பகுதி செங்கல்லினாலும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இங்கு மாதிரிக்கு அமைவாக பாதத்திலிருந்து அதாவது அடிப்பகுதியிலிருந்து மேல்நோக்கி கிடையான செதுக்கு வேலைப்பாடுகளைக் கொண்ட வெளித்தள்ளிய வரிசைகள் உள்ளன. செங்கல்லினாலான மேற்பகுதி 03 விமானங்களைக் கொண்டது. நடுவே உள்ள விமானம் பெரியதாகவும் அதன் இருபுறத்தேயும் உள்ள விமானங்கள் சிறியவையாகவம் ஆக்கப்பட்டுள்ளன. அவற்றினுள் சிறிய தெய்வ உருவங்கள் இருந்திருக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது. கீழ்ப்பகுதியின் செதுக்கல் வேலைப்பாட்டுத் வெளித்தள்ளிய வரிசைகள் தாதுகோபத்தினது மேல் பேசா வளையத்தின் மேற்பகுதியிலிருந்து ஆரம்பித்துள்ளது. வாகல்கட இனது இருபுறத்தேயும் நிலைக்குத்தாகப் பரம்பி செதுக்கல் வேலைப் பாடுகளைக் கொண்ட உயரமான இரண்டு கற்றூண்கள் உள்ளன. உயரமான தூண்களுக்கு அருகிலேயே உயரம் குறைவான இரண்டு தூண்களும் உள்ளன.

வாகல்கட ஆக்கங்களுள் கலைத்துவம் சார்பாக மிக உயரிய ஒரு படைப்பாக மிகிந்தலை “கண்டக்கத்தாதுகோப வாகல்கட” கருதப்படுகிறது. இந்த வாகல்கட அமைப்பானது, செதுக்கல் வேலைப்பாடுகளாலும் ஓவியங்களாலும் அழகுப்படுத்தப்பட்டிருந்தமையை இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எச்சங்களிலிருந்து அறியமுடிகின்றது. இங்கு காணப்படும் கிடைத்தளங்களில் செதுக்கப்பட்டுள்ள வெளித்தள்ளிய வரிசைகள், செதுக்கல்கள், மகரத்தலைகள், யானைத் தலைகள் – முகங்கள், அன்ன உருவங்கள், குள்ளர் (வாமனர்) உருவங்கள் ஆகியவை வரிசைகளில் அமைந்துள்ளன.

வாகல்கடத்தின் இருபுறங்களிலும் நிலைக்குத்தாக இரண்டு கற்றூண்கள் உள்ளன. அவற்றுள் பெரிய கற்றூணின் முன்னே நிறைகுடத்துடன் கற்பக தருவும் சீவிய தருவும் செதக்கப்பட்டுள்ளன. கற்பகத்தருவானது நிறைகுடத்தில் ஆரம்பித்து மேல் நோக்கிச் செல்லும் ஒரு பூங்கொடி போன்று காட்டப்பட்டுள்ளது.

வாழ்க்கை விருட்சமானது (ஜீவன வ்ருக்ஷய) நிறைகுடமொன்றில் ஆரம்பித்து, பூங்கொடி யொன்றுடன் பொருத்தியமைத்த மனித, சிங்க, எருது, பறவை போன்ற உருவங்களின் சேர்மானமாகச் செதுக்கப்பட்டுள்ளது. சிறிய தூண் செதுக்கல்களில் நாக உருவங்களும் செதுக்கு வேலைப்பாடுகள் மூலம் அழகுபடுத்தப்பட்டுள்ளன. கற்பக தருவின் அந்தத்தில் பௌத்தக் குறியீடாகிய மும்மணி இலச்சினை உள்ளது. கற்றூண்களின் மேற்பரப்பில் உள்ள கற்பகத்தருச் செதுக்கல் வேலைப்பாடுகளுக்கு மேலதிகமாக குஞ்சுகளுடன் இருக்கும் மயில் உருவங்கள், யானை உருவங்கள், பூங்கொடிகளைக் கெணர்ட செதுக்கல் சட்டகங்களும் உள்ளன. இத்தூணின் தலைமீது கல்லினால் செய்த யானை, குதிரை, எருது, சிங்க உருவங்கள் 4 உள்ளன. இந்த நான்கு விலங்கு உருவங்கள் மூலம் நான்கு திசைகள் காட்டப்படுகின்றன. அதாவது யானை உருவத்தில் – கிழக்குத் திசையும், குதிரை உருவத்தில் – மேற்குத்திசையும், சிங்க உருவத்தில் – வடக்குத் திசையும், எருது உருவத்தில் – தெற்குத் திசையும் காட்டப்படுகின்றது.

error: Content is protected !!